Thursday, August 17, 2006

பழம் நீயப்பா! / எதற்கு? ஏன்?எப்படி?

வியாபாரத்தில் பெருத்த லாபம். ‘ஆஹா ஓஹோ’ என தொட்டதெல்லாம் பொன்னானது அந்த வியாபாரிக்கு!

வெற்றிமேல் வெற்றிகளாக தனக்கு வந்து குவியும் அதிசயத்தைச் சொல்லி மகிழ்வதற்காக தான் மதிக்கும் மகான் ஒருவரைக் காணச் சென்றான் அவர்.

அங்கே அவருக்கு முன்னால் இன்னொரு நபரும் மகானுக்காகக் காத்திருந்தார். தொழிலில் கொழுத்த நஷ்டத்தைச் சந்தித்த சோகத்தைப் புலம்பித் தீர்த்துக்கொள்வதற்காக வந்திருந்தார் அவர்!

பூஜை முடித்து பார்வையாளர்களைச் சந்தித்தார் மகான்.

“எல்லையில்லா சந்தோஷத்தில் இருக்கிறேன் நான். இப்போது என்னிடம் இருக்கும் செல்வத்தால் இந்த ஊரைக்கூட என்னால் விலைக்கு வாங்க முடியும்” என்று குதூகலித்தார் ‘வெற்றி’ வியாபாரி.

“ஐயோ.. வேதனையைத் தாள முடியவில்லை. சாகலாம் போலிருக்கிறது” என அழுது புலம்பினார் ‘தோல்வி’ மனிதர்.

இருவரையும் ஊடுருவிப்பார்த்த மகான் இருவருக்க்கும் ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து ஆசிர்வதித்தார்.

ஏன் எனத் தெரிகிறதா?

?

?

?

?

?

?

?

காயாக இருக்கும்போது சரி, பழமாக மாறும்போதும் சரி.. ஒரே சுவையைத் தருவது எலுமிச்சம்பழம். அதுபோல துன்பத்தால் துவளாமலும், இன்பம் கண்டு குதிக்காமலும் இருக்கக் கற்றுக் கொள்வதே வாழச் சிறந்தது!

7 comments:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்லா இருக்குங்க கதை

சீமாச்சு.. said...

//காயாக இருக்கும்போது சரி, பழமாக மாறும்போதும் சரி.. ஒரே சுவையைத் தருவது எலுமிச்சம்பழம்//

நல்ல கருத்துங்க.. இத்தனை நாள் இந்தக் கோணத்துலயே யோசிச்ச்தில்ல நான்..
புதுசா இருந்தது.
வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்,
அன்புடன்,
சீமாச்சு..

ரவி said...

நல்ல கதி..சொல்ப ஜோரா ஓகித்தே..

இராம்/Raam said...

//நல்ல கதி..சொல்ப ஜோரா ஓகித்தே.. //

யாரு நீவு.. ஓ ரவின்னா, நிம்க்கு கல்சா ஆகித்தாறீ.... :-)

நிம்க்கு ஒந்து கொத்தா.. நல்ல கதி இல்லா அதூ... சென்னா கதின்னு ஏழீ..

நன்கு சிக்கு கல்சா இதூ.. பர்த்தினி..

Anonymous said...

Manchi Mattandi -Story saala paaga unnathandi.Thanks for the postingandi

G.Ragavan said...

நல்ல கருத்து. நல்ல கதை. இந்தப் பக்குவம் அனைவருக்கும் இருந்தால் உலகம் அன்புமயமாகும்...ஆனால் எல்லாராலும் அந்த நிலையை அடைய முடியாது என்றே நினைக்கிறேன்.

Anonymous said...

Chinna kathaya irunthalum life iku usefullana kathai.

ennamathrai short film produceriku runba thenbu tharuthu unka intha kathai.

thiukural kathaikalum loveliya irukku.antha kulikura kataya film panrathuku anumathi kedaikumma?

-PL.Muthiah B.B.A
short film producer
Dindigul.
TAMIL NADU.
CEL: 94430 70924