இரை தேடி நீர்ப்பரப்பை விட்டு வெளியேறின ஐந்து தவளைகள். வெயிலுக்கு வந்து வெகுநேரமானதால் தோல் வறண்டுபோய், அவஸ்தைப்பட ஆரம்பித்தன.
வழியில் ஒரு ஆழமான கிணறு எதிர்ப்பட்டது. உடலை ஈரப்படுத்திக் கொள்வதற்காக கிணற்றுக்குள் குதித்து, கொஞ்ச நேரம் நீச்சலடிக்க முடிவு செய்தன தவளைகள் ஐந்தும்.
எதிரே இருந்த மணிக்கூண்டு கடிகாரத்தில் பத்து மணிகள் அடித்ததும் கிணற்றுக்குள் பாய்வதாகத் திட்டம். தயார் நிலையில் தவளைகள் காத்திருக்க... கடிகாரத்தில் பத்து மணிகள் ஒலித்து ஓய்ந்தன.
மறுநிமிடம் கிணற்றுக்குள் எத்தனை தவளைகள் நீச்சலடிக்கும்?
?
?
?
?
?
திட்டமிட்டபடி கிணற்றுக்குள் குதித்த இரண்டு தவளைகள் மட்டுமே நீந்திக் கொண்டிருந்தன. எஞ்சியிருந்த மூன்று தவளைகளும் கிணற்றின் ஆழம் காரணமாக கடைசி விநாடியில் தயங்கியதால் சுவரிலேயே 'தேமே' என உட்கார்ந்திருந்தன!
முடிவெடுப்பதால் மட்டுமே கிடைத்துவிடாது வெற்றி. முடிவுகளின்படி முயற்சி செய்பவர்களே ஜெயிக்கிறார்கள்!
7 comments:
வருக வருக , புதிய பதிவர் கவுதம் அவர்களே,
வாழ்த்துக்கள், கலக்குங்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி பாலசந்தர் கணேசன் அவர்களே!
இனிமேக்கா.. ஒரு கதையை ஒரே பதிவா போடுங்க.. ஆமா அண்ணாத்தே...
தினமும்னு போட்டு இருக்கே... அப்படியும் ஏன் ஆப்செண்ட்!
கரீக்ட்.. நானும் அததான் நினைச்சேன், ஆனா செய்யல! இனிமே கரீக்ட் பண்ணிக்குறேன் தல!
'தினமும்'ங்கிறத மாத்திட்டேனே பாக்கலியா?
நமக்கு இந்த பதிவுகளும் கம்ப்யூட்டர்ல தமிழும் புதுசு வாத்தியரே.
ஆசை இருக்கு 'தினமும்' பண்ண,
ஆனா அதுக்கு கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கிறேனே!
நல்லாருக்கே!!
அன்புடன்
தம்பி
நிறைய எழுத முயற்சிக்கிறேன் abcdEDWARD(?)z!
வரவேற்புக்கு நன்றி யோகன் பாரிஸ்.
தம்பிக்கும் நிறைய நன்றிகள்.
அழியா அன்புடன்.. ஜி கௌதம்
hi goutham..idhu oru sms..numma aatkal ippo idhai than anupuraanga
adhan original vadivam ingey
"once 5 frogs deicid to jump in to a big well.now tel me how many frogs in the wall of the well now?
ans: still five frogs.. becoz there are lot of diffrence between the word decide and done(happening).
welcome goutham..appdiye numma pakkam vaanga vandu padichuttu sollunga..
Post a Comment