"வாழப்பிடிக்கவில்லை. துயரங்களையும் பிரச்னைகளையுமே நான் அடிக்கடி சந்திக்கிறேன்'' என்றான் ஒருவன்.
"ரிலாக்ஸ். வேலைக்கு லீவு போட்டுட்டு எங்காவது உல்லாசப் பயணம் போய் வா'' என்று அட்வைஸ் சொன்னான் நண்பன்.
அவ்வாறே ஒரு அழகான தீவுக்குப் பயணமானான் வாழப் பிடிக்காதவன்.
அங்குதான் அந்த அதிசயம் கண்டான். குட்டிப் படகில் தீவை தனி மனிதனாக வலம் வந்தபோது கற்பனைக் கதைகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த கடல் கன்னியை நேரில் பார்த்தான்!
அவன் திகைப்பில் சிரிக்க, அவள் விரும்பிச் சிரித்தாள்.
"நான் சாகா வரம் பெற்றவள்'' என அவள் பேச்சோடு பேச்சாகச் சொன்ன போது 'ப்ச்'சுக் கொட்டினான் அவன்.
"ச்சே! என் வாழ்க்கையெல்லாம் சுத்தமா வேஸ்ட். ஐவ்வொரு முறை பிரச்னை வரும்போதும் செத்து செத்துப் பிழைக்கிறேன்'' என்றான்.
அதைக்கேட்ட கடற்கன்னி சொன்னதைக் கேட்டதும், "வாழப் பிடிக்கிறது'' என்றான் அவன். அப்படி என்ன சொல்லியிருப்பாள் அந்தக் க.க.?
?
?
?
?
?
?
?
கடற்கன்னி சொன்னது:
"எது நடந்தாலும் எனக்கு மரணமில்லை என்பதால் என் வாழ்வில் சுவாரசியங்கள் கிடையாது. மனிதனான உன் வாழ்வில் அப்படியல்ல. மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்பதால் வாழும் ஒவ்வொரு நாளும் சுவாரசியமும் சவாலும் கொண்டது. வரையறுக்கப்பட்ட வாழ்க்கை என்பதால் ஒவ்வொரு கணமும் வாழப் பிடித்தமானது!''
1 comment:
மலருக்கு நன்றி!
உங்க வலைப்பூ பக்கம் போனேன், இடுகை ஒன்றும் காணோமே!
Post a Comment