Saturday, August 05, 2006

இதனால எல்லாத்துக்க்கும் தெரிவிச்சுக்குறது என்னன்னா...

'ம்க்கும்! நாட்டுக்கு ரொம்ப முக்கியமான செய்தியாக்கும்!' என யாரும் அடிக்க வரவேண்டாம் மக்களே! 'இப்ப இல்லாட்டி எப்போ' என மீடியாக்களால் வதந்தியாகப் பரப்பப்பட்ட சூரயா - ஜோதிகா கல்யாணம் வருகிற செப்டம்பர் மாதம் பதினொன்றாம் தேதி நடக்கப் போகிறது நிஜமாகவே. சூர்யாவின் அப்பா சிவகுமாரின் அதிகாரபூரவமான அறிவிப்பு இது...

10 comments:

பொன்ஸ்~~Poorna said...

அட... !!

ஒண்ணும் ஏமாத்து வேலை இல்லையே?!!!

நிலா said...

ஆஹா.. காப்பாத்தினீங்க...
இந்த வாரம் நிலாச்சாரல்ல 'கன்னித் தீவு' போல சூர்யா- ஜோதிகா கதை இழுக்குதேன்னு ஒரு வரி போட இருந்தோம். மறக்காம அதைத் தூக்கணும் :-)

G Gowtham said...

மெய்யாலுமேதேன்! நாங்கள்லாம் ஏப்ரல்ல கூட ஏமாத்த மாட்டோம்ல!

முத்துகுமரன் said...

நல்ல சேதி சொன்ன மவராசன் நீங்க நல்லா இருக்கணும்.

சூர்யா-ஜோ தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்...

என் விடுமுறை காலத்தில் திருமணத்தை வைத்த சிவக்குமாருக்கு எனது நன்றி.... :-))

உங்கள் நண்பன் said...

ஓ ஒங்களுக்கும் பத்திரிக்கை வந்திச்சா..?

டைரக்டர் தெவு-க்கும் அவரின் அசோசியேட்டும் புகழ்பெற்ற உதவி டைரக்டருமானா சரவணனுக்கும் மட்டுமே அனுப்பப் பட்டதுனு நினைத்தேன்.சரி பரவாயில்லை,

சூர்யா-ஜோ தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்...

அப்படினு எழுதுரதோட மட்டும் நிப்பாடிடாதீங்க, நானும் டைரக்டரும் கல்யாணத்துக்கு போவோம் எனவே உங்களுடைய பரிசு பெருட்களையும் மொய்ப் பணத்தையும், டைரட்டர் வசம் ஒப்படைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்,

அன்புடன்...
சரவணன்.

கப்பி பய said...

கெளதம்,
இதைத்தான் அன்றே முற்போக்கு பார்வையோடு சொன்னேன்...யாரும் நம்பல ;)

http://kappiguys.blogspot.com/2006/05/blog-post_24.html

எனிவே..கடமையைச் செய்வோம்...
தம்பதியருக்கு வாழ்த்துக்களைச் சொல்வோம்...

(துபாய்) ராஜா said...

சூர்யா-ஜோ தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்...

Boston Bala said...

வாவ்... வாழ்த்துகள்

தமிழ் பாட்காஸ்டர் said...

சூர்யா - ஜோதிகா வுக்கு என் வாழ்த்துக்கள். இதோ திருமணப் பரிசு:


http://tamilpodcaster.blogspot.com/2006/08/blog-post_03.html

Venkataramani said...

பத்திரிகைகள்ல கூட இன்னும் செய்தி வரலை போலிருக்கு. வலைப்பதிவுலகத்துக்கு சூட்டோட சூடா வெளியிட்டாச்சா?