Monday, August 07, 2006

கககபோ!


பெரியார் வேடம் கட்டியிருக்கும் சத்தியராஜை ‘கககபோ’ (கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொண்டாய் போ! நன்றி: இம்சை அரசன் 23ம் புலிகேசி) செய்துவிட்ட என் இனிய வலை மக்களே... முகத்தில் (என்னால்) பேண்டேஜ் போடப்பட்ட இந்த பிரபலம் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

அதாவது யார் வேடத்துல யாரு? அவங்களுக்கு என்ன பேரு?

ஒரு க்ளு: நாடு, மதம் கடந்து யோசியுங்கள் மக்கா!

12 comments:

நன்மனம் said...

ஆக்ஷன் கிங் அர்ஜுன்?

ஹி....ஹி... இண்டியன் ஏர்போர்ஸ் உடை மாதிரி தெரியுது(?) இண்டர்நேசனல் லெவல்ல இண்டியன் ஏர்போர்ஸ் உடை யாரு போட்டிருப்பாங்கனு ஒரு நம்பிக்கை தான்....(கெளதம் அது இண்டியன் ஏர்போர்ஸ் உடை தான?)

G Gowtham said...

நன்மனம்,
அப்படியும் இருக்கலாம்
அப்படி இல்லாமலும் இருக்கலாம்?!

நன்மனம் said...

//அப்படியும் இருக்கலாம்
அப்படி இல்லாமலும் இருக்கலாம்?! //

அட.... நம்ம வேலைய நீங்க எடுத்துக்கிட்டீங்க போல... அதான் தெளிவா குழப்பறது :-)

Vignesh said...

Kamal Hassan in Dasavatharam as Hitlar ??

Just a wild guess ;)

நாகை சிவா said...

கமல்
கமல்
கமல்

ஹிட்லர் ஹிட்லர் ஹிட்லர்

ஆனாலும் சைட்ல சத்தியராஜ் போலவும் தெரியுது

இராம் said...

கெளதம் எங்களை வச்சி காமெடி..கீமடி ஏதும் பண்ணலையே...?

இது கண்டிப்பா கமல்தான்.....!

உங்கள் நண்பன் said...

சூப்பர் ஆக்டர், பத்மஸ்ரீ, ஆஸ்கார், உலக நாயகன் கமலஹாசன்,அன்புடன்...
சரவணன்.

கப்பி பய said...

தசாவதாரத்தில் ஹிட்லர் ஒரு அவதாரமா??

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//கமல்
கமல்
கமல்

ஹிட்லர் ஹிட்லர் ஹிட்லர்
//
எங்க தளபதி சொன்னதை நானும் வழி மொழிகிறேன்...
சரிதானே...

லிவிங் ஸ்மைல் said...

முசோலினி (எல்லாம் ஒரு சேஞ்ஜுக்குத்தான்...)..

கமல் (தலைவர விட்டா வேற யார் இருக்கா....)

G Gowtham said...

நான் அப்பவே சொல்லல,
நம்ம வலைப்பூ மக்கள் ஒவ்வொருத்தரும் ஆயிரம் வாசகருக்குச் சமம்!
கண்டுபிடிக்க கஷ்டப்படுவீங்கன்னு பார்த்தா பொளந்து கட்டிட்டீங்களே மக்காளே!
கமல்தான் அவர்! இந்த வார குங்குமத்தில் நான் எழுதிய மினி கட்டுரை இதோ...
//தசாவதாரத்தில் கமலவதாரம்!

அமர்க்களமாக படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டது கமலின் ‘தசாவதாரம்’.

பத்து கெட்-அப்புகளையும் முடிவு செய்து, ஒவ்வொன்றுக்கும் அரிதாரம் பூசிப்பார்த்து, ‘சரியா தப்பா’ என செக் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்! கூடிய சீக்கிரம் ஷூட்டிங்குக்கு ஜூட்டிங்!

அப்ப ‘வேட்டையாடு விளையாடு’ என்னாச்சு?!’ என்கிறீர்களா?

இந்த வருட சுதந்திர தினத்தையொட்டி அந்தப் படத்துக்கும் சுதந்திரம் கிடைக்கப் போகிறது.

தயாரிப்பாளர் ‘செவன்த் சேனல்’ நாராயணனிடம் பேசினோம்.

“ட்ரைலர் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒரு வாரத்துக்குள் ரிலீஸாகிவிடும். படத்தை ஆகஸ்ட் பதினெட்டாம் தேதியன்று ரிலீஸ் பண்ண முயற்சி செய்கிறோம். அது முடியாவிட்டால் எப்படியும் இருபத்தைந்தாம் தேதி நிச்சயம் வெளியாகிவிடும் என நம்புகிறேன்” என்று சொன்னார் ‘சுருக்’காக.

அவர் சொல்லாத - நாம் கேள்விப்பட்ட இன்னொரு தகவல்... சுமார் நான்கு கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் படத்தை வெளியிடப் போகிறாராம் நாராயணன்.

சரி, தசாவதாரத்துக்கு வருவோம்... படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் என்றாலும் கமலின் பங்களிப்பு எல்லாவகையிலும் படத்தில் இருக்கும் என்கிறார்கள். சும்மாவா, பத்து கமலாச்சே!

இங்கே வெளியாகி இருப்பது மும்பையின் பிரபல புகைப்பட நிபுணரான அதுல் காஸ்பெர்கர் தசாவதாரத்துக்காக எடுத்த டெஸ்ட் போட்டோ என சந்தேகிக்கப் படுகிறது. அதுலின் இணையதளத்திலும் (அவர் எடுத்த நூற்றுக்கணக்கான பிரபலங்களின் படங்களோடு ஒற்றைப்படமாக) இப்படம் வெளியாகியுள்ளது.

கமாண்டோ கெட்-அப்பில் தொங்கிப்போன வாயுடன் கும்மென்று இருக்கிறார் கமல்.

இது ‘தசாவதாரம்’ படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்தானா என அதுல் காஸ்பெர்கருக்கு மெய்ல் அனுப்பிக் கேட்டு உறுதி செய்ய முயன்றபோது பதில் இல்லை! கோடம்பாக்கத்தில் விசாரித்தபோது, ‘படத்தில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் சாயலோடு ஒரு வேடம் செய்கிறார் கமல். இது அதற்காக எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம்’ என்றார்கள்.

நல்லாவே இருக்கார் பாகிஸ்தான் கமல்!//

Krishna said...

Gowtham,

Though VV suffered losses before release, we hear that the profits earned in first 3 days of release is close to 12 crores. Chennai, Coimbatore, Chengalpet matrum sila 'A' centregalilum, Kerala,Karnataka, US&Singaporilum padam bayangara vetriyaame? Unmaya? Konjam thelivu paduthungalen!