Thursday, August 10, 2006

வலைப்பயணிகளின் கனிவான கவனத்துக்கு...

மூன்று விஷயங்கள்.

முதல்..
இந்த வார(13.08.2006) குங்குமம் வார இதழில் படைப்புப் பங்களித்திருக்கும் வலை நண்பர்கள் கவனத்துக்கு. முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! வாய்ப்புக்கு வழிவகுத்த யெஸ்.பாலபாரதிக்கும், அன்புடன் குழுமத்துக்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்!

அடுத்ததாக..
உங்கள் படைப்புக்கு சன்மானமாக பொன்னையே அள்ளிக் கொடுக்கலாம் என்றாலும் எங்கள் (குங்குமம்) குல வழக்கப்படி கொஞ்சம் பூவையாவது கொடுக்க வேண்டாமா?! எந்தப் பெயருக்கு காசோலை எடுக்கப்பட வேண்டும்?
எந்த முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்?

நண்பர்கள் (நிலவுநண்பன், ஜொள்ளுப் பாண்டி, விழியன், பொன்ஸ், ஜெஸிலா, நிலா, அனிதா பவன்குமார், ராசுகுட்டி) தங்கள் பெயரையும் முகவரியையும் kungumambest@gmail.com என்ற மெய்ல் முகவரிக்கு அனுப்பி வைத்து உதவவும்.
'மனசோசை'யில் தோழி சந்திரவதனா //ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது. ஒரு படைப்பாளி தனது ஆக்கம் வெளிவந்ததா இல்லையா என்பதைப் பத்திரிகையை வாங்கிப் பார்த்தே அறிந்து கொள்கிறான். // இப்படிக்
குறிப்பிட்டிருக்கிறார். நியாயமான ஆதங்கமே! ஆக்வே நண்பர்கள் தங்கள் முகவரியை அனுப்பினால் என் செலவிலேயே படைப்பு பிரசுரமான இதழை அனுப்பி வைக்க ஆசைப்படுகிறேன்.

மூன்றாவதாக
ஒரு முன் அறிவிப்பு! அடுத்த வாரம் கடைக்கு வரும் (20.08.2006 தேதியிட்ட) இதழில் வலைப்பூவாளி பகுதிக்காக தேர்வாகி இருக்கும் படைப்புகளுக்குச் சொந்தக்கார வலை நண்பர்கள்.. மயூரேசன், தமிழ்சிறுவன், கஸ்தூரிப்பெண், காழியன்,ஜொள்ளுப்பாண்டி மற்றும் கவிதா கெஜானன். வாழ்த்துக்கள்.

இதழ் தயாரிப்பில் இருக்கிறது.

நன்றி!

24 comments:

We The People said...

சார் நான் ஒரு மேட்டர் தரட்டுமா?

பூனைக்குட்டி said...

Gautam,

You are doing a very good work, but let your viewers know this kinds of articles stories are available in blogs. That is the must. Because before I came to this blog world I dont know such thing is existing in internet at all.

Once again thanks for letting our bloggers reach the world of Print Media.

Thanks and Regards
Mohandoss.

இராம்/Raam said...

கெளதம்,

எப்போ குதிரை வாங்கினிங்க... சொல்லவே இல்ல...

நாகை சிவா said...

இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது தான், இருந்தாலும் கேட்கின்றேன்.
இந்த குதிரையை இன்சால்மெண்ட்ல வாங்குனீங்களா.
புரொபைல் படத்த பத்தி கேட்குறேன்

இராம்/Raam said...

//இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது தான், இருந்தாலும் கேட்கின்றேன்.//

ஏ புலி உறுமிறதே அப்புறம் குதிரை பயத்திறும்...

//இந்த குதிரையை இன்சால்மெண்ட்ல வாங்குனீங்களா.
புரொபைல் படத்த பத்தி கேட்குறேன் //


எனக்கும் அதே டவுட்'தான்...! எங்க வாங்கினிக்குன்னு சொன்னா நல்லா இருக்கும் கெளதம்... :-)

Chandravathanaa said...

கௌதம்
நன்றி.
எனது பதிவு உங்கள் கவனத்தைக் கவர்ந்ததில் மகிழ்ச்சி.
அது படைப்பாளிகளைக் கௌரவிப்பதாய் அமைந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

G Gowtham said...

we the people,
தாராளமா. editorgowtham@gmail.com என்ற எனது முகவரிக்கே அனுப்பி வைக்கலாம். ஆனால் அனுப்புவதற்கு முன் சில விஷயங்களைக் கவனிக்கவும்
1. அது இதுவரை வேறு எதிலும் (உங்கள் வலைப்பூ உட்பட) பிரசுரமாகாத படைப்பாக இருக்கட்டும். (வலைப்பூவில் பிரசுரமான பகுதிகளைத் தொகுத்து 'வலைப்பூவாளி' வெளியிடுவது குங்குமம் ஆசிரியர் குழுவே. அதற்காக நீங்கள் உங்களுடைய பழைய படைப்புகளை அனுப்பிவைக்க வேண்டாமே, ப்ளீஸ்!)
2.ஒன்றுக்கு மூன்று முறை self edit செய்தபிறகே அனுப்பவும்.
3. வலைப்பூவில் பக்க நெருக்கடி இல்லை என்பதால் நிறைய எழுதிப் பழகியிருக்கலாம் உங்களில் பலர். வள வளா பண்ணாமல் சிக் என ட்ரிம் செய்து (மட்டுமே) அனுப்பி வைக்கவும்.
4. கதை, கவிதை என ஒரே வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்காமல் விதம் விதமாக முயற்சி செய்யலாம்.
5. முக்கியமாக ஒரு விஷயம். குங்குமம் ஒரு light reading magazine மட்டுமே. அதனால் உங்கள் படைப்பு பிரசுரத்துக்குத் தேர்வாகவில்லை என்றால் அது உங்கள் படைப்பின் தரநிர்ணயம் என தப்பர்த்தம் செய்து கொள்ளவெண்டாம். உங்கள் படைப்பு குங்குமத்துக்கு பொருத்தமாக இருக்காது என்பதால்கூட பிரசுரிக்கப்படாமல் போகலாம்.
நன்றி

G Gowtham said...

mohandoss,
I am trying for that only. Hope we will bring the best.
Thanks for the Wish

ராம்,
இது பாலா வாங்கிக்கொடுத்த குருத!
திடுதிப்னு நடந்துடுச்சு இந்தச் சம்பவம்!
ஊருக்குள்ள யாருக்கும் சொல்லியனுப்ப முடியல!!

விழியன்,
நன்றிக்கு நன்றி!

புலி சிவா,
ஓசியில வாங்குனதுப்பா
மக்கா நவரவே மாட்டேங்குது!

chandravathanaa,
எனக்கும் மகிழ்ச்சியே!

ரவி said...

நல்ல முயற்ச்சி - வரவேற்க்கிறேன் கவுதம்.

ரவி said...

லக்கிலூக் பதிவுகளை படித்ததில்லையா - சுரங்கம் போல் வந்துகொண்டிருக்கும்..

http://madippakkam.blogspot.com/

இங்கே சற்று செல்லுங்கள்

பினாத்தல் சுரேஷ் said...

nammathellaam kanle padarathilliya sami?

penathal.blogspot.com

காழியன் said...

நன்றி கௌதம், உண்மையில் தகவலை உங்கள் மூலமாக மட்டுமே தெரிந்துக்கொண்டேன்

G Gowtham said...

ரவி, சுரேஷ்
இங்கே ஒருத்தரையும் விட்டு வைக்கப் போவதில்லை நான்!
என்ன.. வழக்கமா எல்லாரும் (நிறைய பேர்?!) சொல்லிக்கற மாதிரி நானும் ஒரு lazy blogger என்பதால் ஒவ்வொரு கதவாகத் திறந்து பார்த்து ஒவ்வொரு சந்திரமுகியையும் வெளியே அழைத்து வர கொஞ்சம் நாளாகும். ஆனால் முயற்சிப்பேன் நிச்சயமாக.

G Gowtham said...

நாகை சிவா, ராம்
அந்த இன்ஸ்டால்மென்ட் குருதய விரட்டிட்டேன். போதுமா?!
பொம்மையாப் பார்த்தப்ப இது சூப்பர் வேகத்துல பறந்துச்சு. இங்க வந்து பார்த்தாக்க தேமேனு காத்துல நிக்கி!!
நம்ம ப்ளாக் இன்ஞினியரு பாலா நாளைக்கு வந்து பறக்க வைச்சுடுவாரு!

இராம்/Raam said...

//நாகை சிவா, ராம்
அந்த இன்ஸ்டால்மென்ட் குருதய விரட்டிட்டேன். போதுமா?!//

போதாது... இன்னும் நல்ல பெருசா காட்டுங்க...:-)

//பொம்மையாப் பார்த்தப்ப இது சூப்பர் வேகத்துல பறந்துச்சு. இங்க வந்து பார்த்தாக்க தேமேனு காத்துல நிக்கி!!//

நிக்கக்கூடாதே.... யாருப்பா அந்த குதிரையோட ஜாக்கி...?

//நம்ம ப்ளாக் இன்ஞினியரு பாலா நாளைக்கு வந்து பறக்க வைச்சுடுவாரு! //

:-)

நவீன பாரதி said...

நல்லதொரு பணியே! தொடர்ந்து செய்க!

பொன்ஸ்~~Poorna said...

//ப்ளாக் இன்ஞினியரு பாலா //
என்னய்யா நடக்குது சென்னைல?!! பாலா, என்சினியரு ஆகிட்டீங்களா!!! சொல்லவே இல்லை?!!

கௌதம், இந்த ஐடிக்கு மடல் அனுப்பினா புரிஞ்சிக்குவாங்களா நான் தான்னு?

Prabu Raja said...

aaga moththam, kungumam valai pathivaalargalai valarkka pogirathu.

miga nalla vishayam.

nanRigaL.

சுபமூகா said...

>>'மனசோசை'யில் தோழி சந்திரவதனா //ஒரு படைப்பாளிக்கு அவன் படைப்பு வெளியாகும் >>பத்திரிகை கூட இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது மிகமிக அரிது

கல்கி இதழில் கதை வருவது மிக அரிதான விஷயம். மிக அருமையான கதை என்று புளகாங்கிதம் அடைந்து அனுப்பும் கதையும் திரும்பி விடும்.

நான் அனுப்பிய ஒரு நகைச்சுவைக் கதை சிறப்பு பரிசு பெற்ற கதையாக கல்கியில் பிரசுரமானால் என் மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா? வானத்திலேயே இருந்தேன்! :-)

தடாரென்று கீழே விழுந்தேன்.

'சுபமூகா எழுதிய இதே கதை ஏற்கனவே வந்த கதை. அங்கும் அவரே தான் எழுதியிருக்கிறார்' என்று ஒரு வாசகர் கடிதம் அனுப்ப, ராஜேந்திரன் அவர்களின் மோதிரக் கையில் 'ணங்'கென்று தலையில் குட்டு விழுந்தது.

நான் அனுப்பிய கதைக்கு அன்பளிப்பு/சன்மானம் அனுப்ப வேண்டாம். கதை வெளியான இதழையாவது அனுப்பியிருந்தால் நான் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டேன்.

அடுத்த இதழில் என் மன்னிப்பு கடிதத்தையும் கல்கி பிரசுரித்தது.

நிறைய வாசகர்கள் பாராட்டிய கதை!
இரண்டு முறை வெளியான கதை! [முதல் முறை வெளியான பிரதியை இன்று வரை காணக் கொடுப்பினை இல்லை :-)]
இரண்டு முறை வெளியானாலும் கூட அன்பளிப்பு/சன்மானம் கிடைக்கப் பெறாத கதை! ;-)
முக்கியமாக, கல்கி இதழ் அளித்த பரிசைப் பெற்றுக் கொள்ள முடியாமல் செய்த கதை!

அது மறக்க முடியாத கதை!

பழைய நினைவைக் கிளற வைத்த பதிவு!

G Gowtham said...

ஹே ராம்!,
இன்ஞினியரை இன்னும் கோனோமேய்யா! அவரக் கண்டாக்க வரச்சொல்லுங்க!!

நன்றி ஐயா நவீன முண்டாசே!

ஹாய் பொன்ஸ்,
//கௌதம், இந்த ஐடிக்கு மடல் அனுப்பினா புரிஞ்சிக்குவாங்களா நான் தான்னு?//
உங்களப்பத்தியும் நம்ம மக்கள்பத்தியும் 'நல்லவங்க, வல்லவங்க, நல்லா பெண்டு நிமித்துவாங்க, ஆல் இன் ஆல் அழகு ஆளுங்க'னு நிறைய எடுத்துவிட்ருக்கேன். எதுக்கும் ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுக்க பேனாவோட போங்க!

உற்சாகப்படுத்திய பிரபு ராஜாவுக்கும்
பழசை அசை போட்ட சுபமூகவுக்கும் நன்றிகள் உரித்தாகுக.

கவிதா | Kavitha said...

Gowtham,

Am sorry for going out from blog, really I dont know my writing is also to be published in kunkumam. Thanks for it. I convey my thanks to bala also.

I will send my email address and home address to the mail

kavitha

Jay said...

என்பதிவுகள் குங்கும் இதழிலா?????
நம்பவே முடியவில்லை! நன்றி நன்றி என்முகவரியை அனுப்புகின்றேன்!

கார்த்திக் பிரபு said...

Hi sir can i send my articles?

கஸ்தூரிப்பெண் said...

கௌதம், இன்ப அதிர்ச்சின்னு கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், அதன் அர்த்தமும், தாக்கமும் இப்பதான் புரிந்தது. உங்கள் முயற்ச்சிக்கு நன்றி.