"நாட்டாமை தீர்ப்பை தெளிவாச் சொல்லு!''
- அண்ணன், தம்பி இருவரும் ஒரே குரலில் சத்தமாகச் சொன்னார்கள். ஊரே கூடி நிற்க, பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்தது.
வேடிக்கை என்னவென்றால், ஒரே குரல் கொடுத்த அந்த அண்ணனுக்கும், தம்பிக்கும்தான் தகராறு!
"இவர் வயதில் மூத்தவராக இருக்கலாம். அதற்காக நல்ல விஷயங்களை நான் சொன்னால்கூட வயதைக் காரணம் காட்டி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்'' என்றான் தம்பி.
"இவனுக்கு அனுபவம் போதாது. நான் நல்லது எதைச் சொன்னாலும் இந்தக் காதில் வாங்கி அந்தக் காது வழியாக வெளியே விட்டுவிடுகிறான்'' என்றான் அண்ணன்.
இருவரையும் புரிந்துகொண்ட நாட்டாமை ஒரு மண் பானை, ஒரு தட்டு, ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் மூன்றையும் கொண்டு வரச் சொன்னார்.
அண்ணனை அருகே அழைத்தார். பானையைத் தட்டினால் மூடிவைத்து, டம்ளர் தண்ணீரை பானைக்குள் ஊற்றச் சொன்னார்.
"அதெப்படிங்க! மூடியிருக்கும் பானைக்குள் தண்ணீர் ஊற்ற முடியாதே'' ஊன்றான் கேலிச் சிரிப்புடன் அண்ணன்காரன்.
பானையின் அடிப்பாகத்தில் பெரிதாக ஒரு ஓட்டை போட்டார் நாட்டாமை. தம்பியை அழைத்தார். டம்ளர் தண்ணீரை பானைக்குள் ஊற்றச் சொன்னார்.
கிண்டலாகச் சிரித்தான் அவனும்.
"ஓட்டைப் பானைக்குள் எதை ஊற்றினாலும் தங்காதே'' என்றான்.
அப்புறம் என்ன?
கதையை நீங்களே முடிச்சு வையுங்கள் நண்பர்களே?!
9 comments:
சின்ன செயலில் ஒரு பெரிய நீதி விளக்கம்.
அருமையாக இருக்கிறது.
நன்றி
:-)
ஜயராமன்,
நன்றி!
நன்மனம்,
:-))
அப்புறம்.. யாராச்சும் கடைசி பாராவை எழுதி முடிச்சு வைங்கப்பா!
so the moral of the story is
you can neither fill a pot which is closed
nor which is open both sides.
;)
so the moral of the story is
you can neither fill a pot which is closed
nor which is open both sides.
;)
//last para//
theriyala thalaiva neengalaey sollungalen
சரி கார்த்திக்,
கதையின் கடைசிப் பாரா..
'தம்பி சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அண்ணனே மூடிய பானை. அண்ணன் சொல்வதை மனதில் கொள்ளாத தம்பி ஓட்டைப்பானை. இரண்டு பானைகளும் ஒன்றையொன்று புரிந்துகொண்டு திருந்தியதால் பஞ்சாயத்து சுபம்!
என்னங்க நீதி போதனையா? ;)
நம்ம ஊர் ஜட்ஜெல்லாம் இத மாதிரி பானைய வச்சு தீர்ப்பு சொல்றமாதிரி கற்பனை பண்ணிப் பார்த்தேன்ன்...
:))
Post a Comment