Tuesday, August 29, 2006

படம் பார்த்து அதைச் சொல்லவும்!


நல்ல படம் கிடைத்தது. நான்கு வரிகளில் (கண்டிப்பாக!) 'நச்' என்று ஏதாவது எழுதுங்களேன் நண்பர்களே!

26 comments:

Muthu said...

நந்தவனத்தில் ஒரு ஆண்டி

அவன் நாலாறு மாதமா குயவனை வேண்டி

கொண்டு வந்தானொரு தோண்டி

அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி

நாமக்கல் சிபி said...

ம்.புரிகிறது.

:(

நாமக்கல் சிபி said...

மனதைத் திறந்தால்
உடைந்துவிடுமோவென்று
திறக்காமலேயே வைத்திருந்தும்
நொறுங்கித்தான் போனது
இதயம்!

இலவசக்கொத்தனார் said...

கடந்தது நேரம்
விழுந்தது இடி
நொறுங்க்கியது இதயம்
நானும் பொறுக்கியானேன்.

ALIF AHAMED said...

என்னத்த சொல்ல

நீங்க தான் காதலிக்க சொல்லுரீங்க.

இப்ப உடைத்து விட்டு கதை சொல்ல சொல்லுரீங்க..!!!!!!

இருந்தாலும்
நாலு வரி என்னா ஒரு வரில சும்மா "நச்"

அங்க புட்டுகிச்சா....!!!

பொன்ஸ்~~Poorna said...

உடைந்து போன
ஒரு இதயத்தை
ஒட்டவைக்க எண்ணி,
எனக்குள் சிறை வைத்திருந்தேன்..

என்னை மீறி
விடுபட்ட போது தான்
தெரிந்தது
உடைந்ததற்குக்
காரணமே
நான் என...

நாமக்கல் சிபி said...

4 வரிகள் கேட்டால் டாலரன்ஸொடு 5/6 வரிகள் எழுதலாம்.

11 வரிகளெல்லாம் எழுதும் விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

//11 வரிகளெல்லாம் எழுதும் விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். //

குழந்தாய்(?!) சிபி,
உடைந்து போன இதயங்களைப் பற்றிய கவிதையை, எந்த வரியில் உடைத்துப் போடுவது?

- இப்படிக்கு ஸ்வாமி பித்தானந்தாவின் பிரதம சிஷ்யை :)

வலைஞன் said...

இதயத்தில் உனை வைத்தேன்...
மனக்கதவை திறந்தவேளை
உடைத்தெறிந்து ஓடிவிட்டாய்.
ஒட்டுமா இதயமென்று
ஏக்கத்தில் நானிருந்தேன்...

நிலா said...

கௌதம்,
படம் அருமை

சிபி,
கவிதை கலக்கல்


(ஹி...ஹி... நாலுவரி கவிதை)

SP.VR. SUBBIAH said...

திறக்கத் தெரியாமல் திறந்தால்
எழுதத் தெரியாமல் எழுதினால்
பேசக்கூடாத இடத்தில் பேசினால்
பார்க்கக்கூடாததை எட்டிப் பார்த்தால்
இல்லை ஒரு விதிவிலக்கு
இறைவன் படைப்பில் ஏதுவிலக்கு?
இதயம் மட்டுமா உடையும் -
எல்லாம் உடைந்து போகும்!

மாயவரத்தான் said...

அடச்சே..இந்த முத்து (தமிழினி) ரொம்ப மோசம். படத்தை பார்த்த அடுத்த நொடி எனக்கு 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' தான் நியாபகத்துக்கு வந்தது. பின்னூட்டமிட ஓடி வந்தால் ஏற்கனவே என்னுடைய எண்ணத்தை 'திருடி' விட்டார்.

இராம்/Raam said...

கொண்டிருந்த உந்தன் காதலின் இதயம்
நொடிப்பொழுதுகளில் உடைந்தே நொறுங்கியது
காரணங்கள் பரஸ்பரதாபங்களா உன்னின் மறுத்தளிப்பா....!
விடையறிய சேகரித்து கலங்குகிறேன்.... :(

நவீன் ப்ரகாஷ் said...

தவறும் நொறுங்கும்
கண்ணடி பட்டால்...
தவழும் தழுவும்
மீண்டும் நீ தொட்டால்..

Jazeela said...

இதயம் ஒரு கண்ணாடி
கையாளுங்கள்
கவனமாக

மஞ்சூர் ராசா said...

உன் நிராகரிப்பின்
வேதனையில்
நம் காதலை
சுக்கு நூறாக்கினேன்
இருந்தும்
மீண்டும் சேர
துடிக்கிறது
இதயம்.

ALIF AHAMED said...

/./
11 வரிகளெல்லாம் எழுதும் விஷமத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்
/./

தள நல்லா பாருங்க...
10 வரிதான் இருக்கு..::)))))))

மா.கலை அரசன் said...

சேமித்து வைத்த உன் நினைவுகளை
உடைத்து சிதறவிட்டுச் செல்கின்றாய்
மீண்டும் சேமிக்கின்றேன்-உடைக்க வருகின்றாயா பார்ப்போம்.

ராம்குமார் அமுதன் said...

நங்கையின் நினைவால்
உடைந்து இருந்ததை
ஒட்ட வைக்க நினைத்தேன்
அது உதிர்ந்தே போனது
என் ஹார்ட்டு....

மேற்சொன்ன வரிகளை வாசிக்கும் நேரத்தில் ஹார்ட்டு இல்லங்க, உங்கள் உதடுகள் கூட ஒட்டியிருக்காதே. இன்னோருக்கா வாசிக்கீறிங்களா??? இங்கிட்டு சொல்லுங்க.... அட சரிதான்....

மனசு,இதயம்,உள்ளம் இந்த சொற்களிலே எல்லாம் மகரம் வருவதால் உதடுகள் ஒட்டி விடும். அதற்காகவே ஹார்ட்டு என்ற ஆங்கிலச் சொல்லை பயன்படுதினேன். மனசு,இதயம்,உள்ளம் இதே பொருள் தரும் வேறு சொல் தமிழில் இருந்தால் சொல்லுங்களேன். ஆனால் அந்த சொல்லில் மகரமோ பகரமோ இருத்தல் கூடாது

ராம்குமார் அமுதன் said...
This comment has been removed by a blog administrator.
ராம்குமார் அமுதன் said...

நங்கையின் நினைவால்
உடைந்து இருந்ததை
ஒட்ட வைக்க நினைத்தேன்
அது உதிர்ந்தே விழுந்தது
என் ஹார்ட்டு....

//போனது// இதுக்கு பதிலா விழுந்தது போடுக்கங்க.... டெக்னிக்கல் பால்ட்டு.... மன்னிக்கவும்

Anu said...

God Came to Earth
To Check for Peace
Depressed on what he saw
His heart broke to Pieces

;)

லொடுக்கு said...

எல்லாரும் பொறுக்கியாவதற்கு இதயமே காரணம் என்பது என் வாதம்!!!

Anonymous said...

// தவறும் நொறுங்கும்
கண்ணடி பட்டால்...
தவழும் தழுவும்
மீண்டும் நீ தொட்டால்.. //

vaaw!!!...

ecr said...

மிக அழகாய்ச் செய்த பானைக்கு
சுட்டால் வலிக்குமென்று நெஞ்சோடு
சேர்த்தே வைத்திருந்தான் தாங்காமல்
விழுந்து நொறுங்கியது இதயம்!

இலவசக்கொத்தனார் said...

சரி. போட்டி முடிவுகளைச் சீக்கிரம் சொல்லுங்க.

என்னாது... போட்டி... இல்லையா? (நம்ம கைப்பு ஸ்டைலில் இழுத்து இழுத்துப் படிக்கவும்) அப்புறம் என்னாத்துக்கு படத்தைப் போட்டு கவுஜ கேட்ட?

ஏன்யா, போட்டின்னு சொல்லிக் கேட்டவனுக்கே 30 கவுஜதான் வருது. உனக்கு இவ்வளோ வந்திடுச்சே. அதான் இந்த ஆட்டமா? நடக்கட்டும். நடக்கட்டும். இதெல்லாம் பாத்துக்கிட்டு மருதகாரய்ங்க நாங்க சும்மாவா இருப்போம்?

(அந்த பக்கமாய் ஒரு போலீஸ்கார் வர) பைட்? நோ பைட். வீ ப்ரெண்ட்ஸ். டாக்கிங். எஸ். எஸ். யூ கோ. ப்ளீஸ். ஹிஹி.....