ஒவ்வொருவராக நேர்முகம் நடக்கும் அறைக்குள் பயபக்தியுடன் போய், சஸ்பென்ஸ் முகத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தனர். அடுத்ததாக அவன் முறை.
மிடுக்கோடு உள்ளே சென்றான். உட்காரச் சொன்னார்கள். உட்கார்ந்தான்.
அவனது கோப்பினை பொறுமையாகப் பார்த்தார் எதிரே இருந்த அதிகாரி. தான் தேடிய ஆளைக் கண்டு கொண்ட திருப்தி தெரிந்தது அவர் விழிகளில். ஆனால் ஒரு சிக்கல்!
பல துறைகளில் அனுபவம் பெற்றிருந்தான் அவன். ஆழ அகலமான அறிவு அவனுக்கிருப்பதாக உணர்ந்தார் அதிகாரி. எந்தப் பணி கொடுத்தால் அவனது திறமையை முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதை அவனிடமே கேட்க முடிவெடுத்தார். கேட்டார்.
“அப்ளிகேஷன் ஃபார் சூடபிள் ஜாப். இதை என் கவரிங் லெட்டர்லயே குறிப்பிட்டிருக்கிறேனே. என் திறமைக்கும் தகுதியான வேலையை நீங்களே தீர்மானிக்கலாம்” என்றான் அவன்.
அதிகாரி கேட்டார்.. “உங்களை உங்களுக்கு எத்தனை வருடங்களாகத் தெரியும்?”
“இருபத்தி மூன்று வருடங்களாக” என்றான் அவன். அது அவனது வயது.
“இருபத்தி மூன்று வருடங்களாக உங்களை உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படியும் உங்களுக்குப் பொருத்தமான வேலை என்னவென உங்களால் குறிப்பாகச் சொல்லமுடியவில்லை எனும்போது, ஒரு சில நிமிடங்களில் மட்டுமே உங்களைத் தெரிந்து கொண்டு என்னால் என்ன கூறிவிட முடியும்?!” - தீர்க்கமாகச் சொன்னார் அதிகாரி.
அதுவரை புரியாத கோணம் இப்போது அவனுக்குப் புரிந்தது. அது என்ன?
?
?
?
?
?
?
?
அதைத்தான் தலைப்பிலேயே சொல்லியாச்சே! ‘உற்றுப்பார்.. நீ யார்?’
3 comments:
வழக்கம் போலவே கதையோட முடிவை எங்ககிட்ட விட்டுட்டீங்களே. சரி என்னோட முடிவு இதுதான் "பல இடங்களில் திறமையுடன் வேலை செய்த நாயகன், இங்கும் திறமையுடன் வேலை செய்யமுடியும்"
கெளதம்,
இன்னிக்கு உங்க குதிரையே மாத்தலையா.... :-)
சும்மா நச்சுன்னு இருக்குது... இது கதையல்ல, நிஜம். காசா, பதவியான்னு தீர்மானிக்க முடியாம நிறைய பேரு தொங்கிட்டு இருக்காங்க...
Post a Comment