Tuesday, September 12, 2006
ஆனா ஆவன்னா... / தேன்கூடு போட்டிக்காக
நான்கு பேர் நாங்கள்
ஒன்றாகக் கூடினோம்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து
ஒன்றாகப் படித்தவர்கள்
கல்லூரிக் காலம்தான் எங்கள்
திசைகளைப் பிரித்தது.
திசைகள் வெவ்வேறென்றாலும் எங்கள்
விசைகள் ஒன்றே,
அது தமிழ்!
நான் பத்திரிகையாளன்,
தமிழில் போராட்டம்.
அடுத்தவன் திரைப்பாடலாசிரியன்,
தமிழில் கிச்சுமுச்சுக்காரன்.
இன்னொருவன் மெகாசீரியல் வசனகர்த்தா,
தமிழ்ப் பெண்களின் கண்ணீர் விரும்பி.
இன்னுமொருவன் எழுத்தாளன்,
தமிழே இவன் மூச்சு.
எல்லோருக்கும் தொழில்
எழுத்தே!
சோறு போடுவது
தமிழே!
சோறு மட்டுமா,
கையும் பையும் வழியவழிய
காசு பணமும் போடுகிறது
எங்கள் தமிழ்.
ஆனால், எங்களுக்கெல்லாம்
'அ' னா 'ஆ'வன்னாவென தமிழை
அறிமுகப்படுத்திய கண்ணாடி வாத்தியார்
சொற்ப சம்பளத்திலேயே
கடைசிவரை வாழ்ந்து
செத்தும் போனார்!
உயரம் தூக்கிகள்
உயரம் அனுபவிக்குமா என்ன?!
போட்டிக்கான இன்னொரு படைப்பு: இங்கே
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஏறிய வழியே
திரும்பிப் பார்த்தேன்
அதே இடத்தில
திடமாய் நின்று
என்னைப்பார்த்து சிரித்தது
ஏணி!
friends katha padikka nalla irukuthu.vathiar matter "the way home" padam mathery rummba sukama irukuthu gowtham sir.
-pl.muthiah
dindigul.
என் தந்தையும் ஒரு ஆசிரியர்தான். ஓய்வு பெற்றுவிட்டார்.
இங்கே வலைப்பூ உலகில் வேறு யாரேனும் வாத்தியார் வீட்டுப் பிள்ளை இருக்கிறீர்களா?
//வாத்தியார் வீட்டுப் பிள்ளை இருக்கிறீர்களா?//
உள்ளேன் ஐயா.
அம்மா அப்பா ரெண்டுபேருமே.
இன்றைய ஆசிரியர்கள் வியாபாரிகளாக மாரிவிட்டார்கள் கௌதம் சார். நிறைய சம்பாதிக்கின்றார்கள்.
gowtham keep it up!!!
WOW JUST read it
too good.
கௌதம், கவிதை வாசித்தேன். அருமை.
ஒற்றை வரியில் சொல்வதானால், இங்கே...
Post a Comment