Tuesday, September 12, 2006

சாமி போட்ட முடிச்சு / எப்படி? எதற்கு? ஏன்?


“சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!" - தயங்கித் தயங்கி, ஆனால் கறாராகவே கேட்டான் அந்தப் பையன்.

சொற்பொழிவை முடித்துவிட்டு புறப்படவிருந்த நவீன சாமியார் தலை திருப்பிப் பார்த்தார். அரைக்கால் சட்டை அணிந்திருந்த பையனைக் கண்டதும் ஆச்சர்யப் புன்னகையோடு கவனித்தார்.

“சொல்லுப்பா என்ன தெரிஞ்சாகணும் உனக்கு?”

தூரத்தில் இருந்து தன்னைப்பார்த்துவிட்டு ஓடிவரும் பெற்றோரை ஒரு கணம் மிரட்சியோடு பார்த்தான் பையன். சாமியாரிடம் வேகமாகச் சொன்னான்.. “ஸ்கூல்ல நா எந்தப் போட்டியில கலந்துக்கிட்டாலும் என்னால முதல் பரிசு வாங்க முடியல. பெரும்பாலும் ஆறுதல் பரிசுதான் கிடைக்குது.ரொம்ப ஃபீலிங்கா இருக்கு. நா முதல் பரிசு வாங்கவே முடியாதா?”

பையன் கேட்டு முடிக்கவும், பெற்றோர் ஓடிவந்து சேரவும் சரியாக இருந்தது. ஏதாவது அதிகப்பிரசங்கித்தனம் செய்திருப்பானோ என்ற சந்தேகத்தில் பையனை அதட்ட முயன்றாள் அம்மா. தடுத்து நிறுத்திவிட்டு பையனை கனிவோடு அருகே அழைத்துக் கொண்டார் சாமி.

டேபிள் மீது பாதி குடிக்கப்பட்டு மீதி தண்ணீரோடு இருந்த கண்ணாடி டம்ளரைக் காட்டினார் பையனிடம்.. “இதைப்பார்த்ததும் என்ன தெரிகிறது?”

“பாதி டம்ளர் தண்ணி இல்லாம காலியா இருக்கு” என்றான் பையன்.

“அதுதான் தம்பி உன் பிரச்னை” என்ற சாமி தொடர்ந்து டம்ளர் தண்ணீருக்கும் பையனின் பிரச்னைக்கும் ஒரு முடிச்சுப் போட்டார். அதை அவன் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துரைத்தார்.

சாமி போட்ட முடிச்சு என்ன தெரிகிறதா?

?

?

?

?

?

?

“பாதி டம்ளரில் தண்ணீர் இருக்கிறது. ஆனால் காலியாக இருக்கும் மீதி டம்ளர் மட்டுமே உன் கவனத்துக்குப் படுகிறது! அதனால்தான் உனக்கு வருத்தமாக இருக்கிறது. கிடைக்காததை எண்ணிக் கவலைப்படாதே. அந்த மகிழ்ச்சியே கிடைக்காததையும் கிடைக்கச் செய்யும்!”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள்: இங்கே

7 comments:

நாமக்கல் சிபி said...

உண்மைதான் கௌதம்ஜி!

கார்த்திக் பிரபு said...

sir thirumbi vandhuteengala...nala irundhadhu karuthum kadhaiyum

நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள கருத்துக்களையும் சொல்லுங்க

Thirumozhian said...

கௌதம் அவர்களே

எனக்கென்னமோ நவீனச்சாமியார் அந்தப் பையனிடம் சொன்னது தப்புன்னு தோணுது. முதல் பரிசு வாங்கணும்ன்னு நினைக்கிறது அந்த வயசுல சகஜம். ஆறுதல் பரிசுடன் ஆறுதல் பட்டுக்கன்னு அவனோட ஆர்வத்த சாமியார் அடக்கி வச்சுட்டார்.

உன்னாலும் ஒருநாள் சாதிக்க முடியும்ன்னு அவங்கிட்ட சொல்லியிருக்கலாம். பாதி டம்ளர் நிறைஞ்சிருக்குறத பாருன்னு சொல்றது எதுக்கெடுத்தாலும் வெறுமனே குத்தம் சொல்றவங்களுக்குச் சொல்றது.சாமியாரின் இந்தப் பதில் பையனோட தன்னம்பிக்கையைக் குறைக்கிற பதில்ன்னு நான் நினைக்கிறேன்.

திருமொழியான்.

Mouls said...

திருமொழியான் கருத்தை திருமொழிகிறேன், சாரி, வழிமொழிகிறேன்....

ILA(a)இளா said...

எதோ என்னைய இந்த கதையை எழுதினா மாதிரி இருக்குங்களே. நான் தான் இரண்டுமுறை தேன்கூடு போட்டியில கலந்துகிட்டு இரண்டு முறையும் ஆறுதல் பரிசு வாங்கி இருக்கேன். எனக்காக எழுதின கதைன்னு நினைச்சுகிட்டு ஒரு நன்றிய சொல்லிக்கிறா இந்த விவசாயி

செந்தில் குமரன் said...

சொல்ல வந்தக் கருத்து நல்லா இருக்கு ஆனா சொல்ல எடுத்துக்கிட்ட கதை தான் சொதப்பீடுச்சோன்னு தோணுது

நாமக்கல் சிபி said...

காலி டம்ப்ளரை பார்க்காமல், நிரம்பியிருக்கும் இன்னொரு பாதியைப் பார்த்து, இவ்வளவு நிரப்பியாயிற்று, இன்னும் கொஞ்சம் ஊற்றினால்
விரைவில் நிரம்பி விடும்.

ஆறுதல் பரிசு வரை வந்த உனக்கு முதல் பரிசு வாங்கும் தகுதியும் இருக்கிறது, முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து பாடுபடு என்பதுதான் இந்தக் கதையின் நீதி. ஆறுதல் பரிசோடு நிறுத்தி ஆனந்தப்பட்டுக் கொள் என்பதல்ல!