Thursday, September 14, 2006

அடுத்த தடாலடி பரிசுப்போட்டி!


மகா ஜனங்களே!

'அடுத்த தடாலடி எப்போ?' என
என்னிடம் விசாரித்த
உங்களில் சிலரது ஆசையை
நிறைவேற்றுவதற்காகவும்,
மற்ற பலரது எழுத்துக்களைப்
படித்துப் பார்க்கும் ஆர்வத்துடனும்
இதோ நான் தரும் அடுத்த தடாலடிப் போட்டி!

போனமுறை போலில்லாமல்
கொஞ்சமேனும் அவகாசம் கொடுத்து
உங்களில் பலரையும் எழுதவைக்க
விருப்பம்.

ஆகவே தோழர்களே..
போட்டிக்கான இறுதி நாள்: 16.09.2006, சனிக்கிழமை
கெடு நேரம்: மாலை மணி நான்கு (இந்திய நேரப்படி)

என அறிவித்திருந்ததில் சிறு மாற்றம்!
தோழர் விவசாயி (பார்க்க பின்னூட்டம் எண்: 106) அவர்களின் வேண்டுகோளை ஏற்று கெடுவை 17.09.2006, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கிறேன்.

முடிவுகள் அறிவிக்கப் படுவது: 18.09.2006 திங்கட்கிழமை பகல் ஒரு மணிக்குள்
பரிசு: மூன்று சாய்ஸ் தருகிறேன், எது வேண்டுமோ வெற்றியாளரே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

முதல் சாய்ஸ்: யுவன் இசையில், ரவி கிருஷ்ணா-தமனா-இலியானா நடிப்பில், ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகப் போகும் 'கேடி' திரைப்படத்தைப் பார்க்க வாய்ப்பு!
இரண்டாம் சாய்ஸ்: எழுத்தாளனிடம் என்ன கிடைக்கும், எழுத்தைத் தவிர. நான் எழுதி, கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கும் 'பத்து கட்டளைகள்' புத்தகம்!
மூன்றாம் சாய்ஸ்: சென்னையில் ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்டில் அழகான ட்ரீட்!

மிக முக்கியமான விஷயம்.. போன போட்டியில் சொன்னமாதிரி வெளியூர் / வெளிநாட்டு நண்பர்களின் கவனத்துக்கு!! நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் சார்பாக இங்கே சென்னையில் பரிசைப் பெற்றுக் கொள்ள வேறு யாரேனும் ஒரு வலைப்பதிவாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்! (அல்லது தபால் செலவு கட்டுபடிக்குள் இருக்குமானால் இரண்டாம் சாய்ஸை நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்)

போட்டி இதுதான்..
'சின்னப் பையன் சின்னப் பெண்ணின் காதில் என்ன சொல்கிறான்?'

ஜாலியா யோசிங்க மக்களே!
ஆல் தி பெஸ்ட்!!

போட்டி முடிவுகள் : இங்கே

முந்தைய போட்டிக்கு இங்கே சொடுக்கவும்.

127 comments:

நாமக்கல் சிபி said...

இங்க பாரு நிறையா லூசுப் பசங்க நான் உன்கிட்ட பேசறதப் பத்தி பந்தியம் எல்லாம் வெக்கறானுங்க ;)

நாமக்கல் சிபி said...

ஐயய்யோ...
அதுல எதுவும் உள்குத்து எல்லாம் இல்லைங்க... போட்டிக்கான பதில்தான் ;)

குறும்பன் said...

ஜில்லுன்னு ஒரு கூட்டு பதிவு போடலாமா.

நிலாரசிகன் said...

1.என் பெயர் சூர்யா...நீ ஜோதானே?

SP.VR.சுப்பையா said...

இனிமே ஸ்கூல்ல எல்லாம் பரீட்சையே வைக்கக்கூடாதுன்னு கலைஞர் அய்யா சொல்லிட்டாராம்

மின்னுது மின்னல் said...

நான் சொல்லவே இல்ல அதுக்குள்ள நீ சிரிக்குற...

தம்பி said...

அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாமா!!!

சந்தோஷ் aka Santhosh said...

அழகாய் இருக்கிறாய் பயமா இருக்குது.

தமிழ்ப்பிரியன் said...

1.நானும் இன்னிக்கு ஹோம்வர்க் பன்னல..

மின்னுது மின்னல் said...

/./
தம்பி said...
அப்பா அம்மா விளையாட்டு விளையாடலாமா!!!
/./

தம்பி பேசுற பேச்சா இது...? :)

தமிழ்ப்பிரியன் said...

2.பொட்டு வைச்சா நீ இன்னும் அழகா இருப்ப..

Vicky said...

ஒரு ரகசியம் சொல்லட்டுமா.."ஒரு பொண்ணுகிட்ட மட்டும் எந்த ரகசியமும் சொல்லக்கூடாதாம்!!!"

Udhayakumar said...

உன்னை அடிச்ச வாத்தியாருக்கு இன்னைக்கு பேக் பஞ்சராகப் போகுது., சீட்ல ஆணி வைச்சுட்டோம்ல...

நாமக்கல் சிபி said...

உதய்,
சூப்பர்

Udhayakumar said...

கமெண்ட் கொஞ்சம் பார்த்துப் போடுங்க சாமிங்களா... அது குழைந்தைக... வேணும்னா நம்ம கௌதம் அண்ணன் கிட்ட சொல்லி பாக்யாவில வர்ற அட்டைப் பட கமெண்ட் மாதிரி முயற்சி பண்ணலாம். இங்கேயே ஆதரவு திரட்டலாமா? இல்லை அதுக்கும் ஒரு பதிவு ரெடி பண்ணீறலாமா???

Techie.... said...

நீயும், நானும் அண்ணன் தங்கச்சியாம். அய்யோ...அய்யோ...

-RAM

Techie.... said...

ஒருத்தரு பின்னாடி ஒருத்தரா வந்து எப்படி ஜொள்ளு விடறாங்க பாரேன்.

தனி மனித சுதந்திரம், எழுதமட்டும் தானோ என்னவோ?

-RAM

மாயவரத்தான்... said...

Aduththa marriage 'andha' jodikku thanaamae?!

வெற்றிமயிலோன் said...

"டேய் அண்ணா, கெளதம் அங்கிள் நம்ம விட்டுக்கு வரப்போறாராம்.எனக்குப் பயமாஇருக்குடா. ஏதாவது கஷ்டமான கெள்வியாக் கேட்டு - இதுக்குப் பதில் சொல்லு - நான் உனக்குப் பரிசு தர்றேன்னு சொல்லுவார்டா - என்னடா பண்றது?"

"ஒன்னும் பயப்படாதே - நீ பதிலுக்கு அவரை ஒரு கேள்வி கெட்டு வை!"

"என்ன கேள்வி கேக்கிறது?"

சின்னப்பைய்ன தன் தங்கையின் காதில் சொல்கிறான்

"உங்க வீட்டுக் குதிரை நிற்காம ஓடிக்கிட்டே இருக்கே - அதை எப்படிச் சாப்பிட வைக்கிறீங்க? எப்படித் தூங்க வைக்கிறீங்க?"

நெல்லை சிவா said...

அம்மாவுக்கு தெரியாம காசு எடுத்துட்டு வந்திருக்கேன்..வீட்டுக்கு போகும்போது, அவங்களுக்கு wedding day கிப்ட் வாங்கிட்டு போலாம்..சர்ப்ரைஸா இருக்கும்..

நெல்லை சிவா said...

மணிகிட்ட ஸ்கூல் விட நேரமாயிடுச்சுன்னு பொய் சொல்லியிருக்கேன்..போயி பெல்லடிக்க போயிட்டுருக்கான்..நல்லா ஹெட்மாஸ்டர்கிட்ட மாட்ட போறான்..

லதா said...

என் ப்ரொக்ரஸ் ரிப்போர்ட்டில் என் அப்பாவின் கையெழுத்தை நானே போட்டுவிட்டேன். யாரிடமும் சொல்லிவிடாதே

மாதங்கி said...

அந்த டாஷ் கார் ஸ்டிக்கரை அம்மா ஒளிச்சுவச்சிருக்கிற இடத்தை கண்டுபிடிச்சுட்டேன்

மாதங்கி said...

எனக்கு தங்கச்சி பாப்பா பொறக்க போறதாம், இனிமே நீ தெனமும் எங்கவீட்டுக்கு வந்து அது கூட விளையாடலாம்

**L* said...

ஆடி மாச தள்ளுபடிக்கு வாங்கின ஜீன்சை ஒளித்து வைத்து விடு, தீபாவளி தள்ளுபடி வர போகுது

Anonymous said...

பக்கத்து வீட்டு அக்காவுக்கு எதிர் வீட்டு அண்ணா கொடுத்த லவ் லெட்டரை அவங்க அப்பாகிட்ட கொண்டு கொடுத்துட்டேன்

**L* said...

பக்கத்து வீட்டு அக்காவுக்கு எதிர் வீட்டு அண்ணா கொடுத்த லவ் லெட்டரை அவங்க அப்பாகிட்டு கொண்டு கொடுத்துட்டேன்

கோவி.கண்ணன் [GK] said...

பையன் : மருத்துவர் எஸ்கே ஐயா ஒரு தொடரில் நம்ப லூட்டியெல்லாம் புட்டு புட்டு வச்சிருக்காறாம் ... நீ படிச்சி பாத்தியா ?

பொண்ணு : மக்கு இவ்வளவு நேரம் படிக்காமல் இருந்திருபேனா !

ஹி ஹி ...!
:))

**L* said...

மக்கள் தொலைகாட்சியில் மெகா சீரியல் கிடையாதாம்.

Anonymous said...

கூந்தலுக்கும் உன் சிரிப்பை போல இயற்கையிலியே வாசமுண்டு

நிலவு நண்பன் said...

கலர் டிவி தரப்போறாங்களாம். நாம ஏழைன்னு பொய் சொல்லிடுவோமா..

மதுமிதா said...

'சின்னப் பையன் சின்னப் பெண்ணின் காதில் என்ன சொல்கிறான்?' தடாலடி பரிசுப்போட்டில எனக்குதான் முதல் பரிசு.

மதுமிதா said...

ரகசியம் திங்கள்கிழமை வரை நமக்குள்ளே இருக்கட்டும். சிரிச்சு சந்தோஷத்தை வெளியே காட்டிக்கொடுத்திடாதே.
பரிசு லாப்டாப்.

Anonymous said...

போலி டோண்டு யாருன்னு கண்டுபிடிச்சிட்டேனே!

Thirumozhian said...

இன்னக்கி டவுசர் போட மறந்துட்டேன். யாருகிட்டயும் சொல்லிடாத.

Thirumozhian said...

நம்ம கவுதம் ஏதோ காலேஜுல ஃபங்ஷனுக்குத் தலம தாங்கப் போனாறாமே?

Thirumozhian said...

இந்த வருஷத்துக்குள்ளே புஷ் ஒஸாமாவப் புடிச்சிருவாறாம்.

ILA(a)இளா said...

GGக்கு 30422+ வாழ்த்துக்கள் சொன்னதா சொல்லிரு.

Thirumozhian said...

ஜெயலலிதாவுக்கு ரகசிய தகவல் வந்திருக்காம். இந்தியாடுடேவுல தமிழ்நாட்டு அரசுக்கு முதல் பரிசு கெடைச்சது தயாநிதி மாறனோட மிரட்டலாலதானாம்.

வியாபாரி said...

போட்டோ எடுக்குறாங்க, கண்ணைச்சிமிட்டாதே!

வியாபாரி said...

என்ன ஷாம்பு போட்டாய், வாசமா இருக்கே!

வியாபாரி said...

இவங்களப் பாரு, நம்மையே வேடிக்கை பார்த்துக்கிட்டு!!

பொன்ஸ்~~Poorna said...

அம்மாக்குத் தெரியாம அவங்க ஹேர் டிரையரில் காயவச்சதைக் கண்டுபிடிச்சிட்டேனே...

newsintamil said...

டீச்சருக்கு இன்னிக்கு பர்த்டேயாம். அதான் சாக்லேட் எல்லாம் கொண்டு வந்திருக்காங்க...

லிவிங் ஸ்மைல் said...

//உன்னை அடிச்ச வாத்தியாருக்கு இன்னைக்கு பேக் பஞ்சராகப் போகுது., சீட்ல ஆணி வைச்சுட்டோம்ல... //

இதுக்குத்தான் பரிசு சொல்லிட்டேன்..

இராம் said...

நம்மளை வச்சி காமெடி கீமடி பண்ணப் போறய்ங்க... இவியங்க....

மஞ்சூர் ராசா said...

டீச்சர் என்னெ குட் பாய்னு சொன்னாரு

மஞ்சூர் ராசா said...

சூப்பர் ஸ்மெல் வருதே எந்த சோப்பு போடறே?

மஞ்சூர் ராசா said...

நாளைக்கி லீவு

மஞ்சூர் ராசா said...

டீச்சர் இன்னிக்கி வரமாட்டங்க, ஜாலி

முத்து(தமிழினி) said...

ரகசியம்...யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது..காத கிட்ட கொண்டு வாயேன்....குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வினையூக்கி said...

என்னை டீச்சர் கங்குலின்னு சொல்லித் திட்டிட்டாங்க

வினையூக்கி said...

யார்கிட்டேயும் சொல்லாதே... நான் ஸ்கூல் மாறப் போறேன்

வினையூக்கி said...

உன் மொபைல் போன் நம்பர் என்ன?

newsintamil said...

டீச்சர பாரேன் தூங்கறாங்க. இப்ப பிரின்சி வந்தா எப்படிருக்கும்...

newsintamil said...

பாலுவோட பாக்கெட்டுல பல்லி பொம்மைய போட்டுட்டேன்...

newsintamil said...

பஸ்ல முன்னால நிக்கிற அக்காவுக்கு கல்யாணமாம். அதான் இப்படி வெக்கப்படுறாங்க..

newsintamil said...

கண்டக்டர் அங்கிள் அந்த அக்காவுக்கு லவ்லெட்டர் கொடுத்தாராம்..

sivagnanamji(#16342789) said...

யாரோ தலைவர் போய்ட்டாராம்;
நாளைக்கு லீவுதான்!

ஆவி அம்மணி said...

நம்ம பள்ளிக் கூடத்துல ஆவி உலவுதாமே!

Anonymous said...

ஓடிப்போயிடலாமா?

மஞ்சூர் ராசா said...

உனக்கு பரிசு கிடைக்க போகுது

மஞ்சூர் ராசா said...

ஹாப்பி பர்த்டே

ILA(a)இளா said...

வலைப்பதிவாளர்கள் யாருமே இனிமே சண்டை போட்டுக்க மாட்டாங்களாம்.

ஆவி அம்மணி said...

எட்டாக் கனிக்கு கொட்டாவி விடுகிறார் இளா!

(இதுவும் போட்டிக்குதான்)

TAMIZI said...

உன் பேர் சோனியாவா! என் பேர் செல்வராகவன்..!!

TAMIZI said...

சிரிக்காமக் கேளு...ஆமா..இவங்களுக்கு வேற வேலைய இல்லயா! ஐயே!

ILA(a)இளா said...

உன் அலாதி அன்பினில்
நனைந்தபின்
நனைந்தபின்
நானும் மழையானேன்!

வினையூக்கி said...

உனக்குத் தெரியுமா அந்த "அனானி" கமென்ட்ஸ் எல்லாம் நான் தான் போட்டேன்.

நாமக்கல் சிபி said...

எல்லாரும் சில்லென்று ஒரு காதலுக்கு டிக்கெட் தர போறார்னு நெனுச்சி போட்டி போடறானுங்க... ஆனா அவர் கொடுக்கப்போறது "பேரரசு"க்காம் ;)

நிலவு நண்பன் said...

பாரேன் ரசிகவுக்குத்தான் பரிசு கிடைக்கப்போவுதுன்னு தெரியாம ஆளாளுக்கு கமெண்ட்ஸ் அனுப்புறாங்க

நிலவு நண்பன் said...

உங்க அப்பா முன்னால் அமைச்சரா? அப்படின்னா இன்னிக்கு ராத்திரியே ரெய்டு வரும்பாரேன்

நிலவு நண்பன் said...

சிக்கன் குனியான்னு சொல்லிட்டு லீவு போடுவோமா?

ஆவி அம்மணி said...

இன்னிக்கு ஆவிகள் உலகத்துல கோ.வி 65 தான் டின்னராம்!

நிலவு நண்பன் said...

நாம வளர்ந்துட்டோம்னா இது மாதிரி நட்பா இருக்கமுடியாது. அதனால இப்படியே இருப்போமா..?

நிலவு நண்பன் said...

கடைசியில போலி டோண்டுவுக்கு பரிசு கிடைச்சா எப்படி இருக்கும்? ஹா..ஹா..ஹா

நிலவு நண்பன் said...

இந்தப் போட்டியினால யாருக்கு என்ன லாபமோ..? ஆனா நமக்கு விளம்பரம் கிடைக்குது பாரேன்

நிலவு நண்பன் said...

அந்த எல்கேஜி பொண்ணுகிட்ட இந்த லட்டரைக் கொடு கொடுக்கும்போது அழுதுட்டான்னு வச்சுக்க அந்த யுகேஜி பொண்ணுகிட்ட கொடுத்திரு.

நிலவு நண்பன் said...

நான் சும்மா உன்கிட்ட இரகசியம் சொல்றமாதிரி சொல்றேன் நம்ம என்னவோ ஏதோ சொல்றோம்னு இவனுங்க அடிச்சிட்டு கிடப்பாங்க பாரேன்

நிலவு நண்பன் said...

இந்த வார குங்குமத்திலேயும் இந்தப்போட்டி வந்தா எப்படியிருக்கும்?

நிலவு நண்பன் said...

தோழியே உனக்கு வாழ்த்து அட்டை அனுப்புவதை 2 விசயங்கள் தடுக்கும்
1. உன் திருமணம்
2. என் மரணம்

நிலவு நண்பன் said...

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
டியசனில் இருந்தாலும் ஓடி வருகின்றேன்

Syam said...

செல்வி சீரியல் முடிய போகுதாம் உனக்கு தெரியுமா :-)

BLOGESWARI said...

"P esticides
E llam
P araviyirukkum
S illunnu Banam
I yyaah.. thoo!"

Vidugadayaikku vidai sollu paapom? "

Simulation said...

01. கிராப் அடிச்சிட்டுப் போனதாலே, கேம்ஸ் டீச்சர் என்னைப் பையன்களோட விளயாடச் சொல்லிட்டாரு.

02. அப்பாவோட பதிவுல அந்த அனானி கமெண்ட்டை போட்டது நான் தான்.

03. புது ஷாம்பூ போட்டிருக்கேன்னு மோந்து பாக்கச் சொன்னியே. இப்பப் பாரு, உன் ஹேர் க்ளிப்லே மூக்கு மாட்டிகிச்சு.


- சிமுலேஷன்

கடல்கணேசன் said...

"கமெண்ட் எழுதி பரிசு வாங்கச் சொன்னா, எழுதாமல் உன்னையே பார்த்துட்டு இருக்கார் பார்.."

(அந்த அழகு தேவதையின் புன்னகையே பரிசு தான் கௌதம்.)

அமுதன் said...

உன்னைய கிண்டல் பண்ணுன மனோவ மிஸ்கிட்ட போட்டுக் கொடுத்துட்டேன்.

அமுதன் said...

நீ சிரிச்சா சூப்பரா இருப்ப தெரியுமா, காட் ப்ராமிஸா.

அமுதன் said...

நம்ம கம்ப்யூட்டர் லேப்ல இருந்து மவுஸ்பால சுட்டுட்டேன்.

அமுதன் said...

ஐஐஐயா ஜாலி!!! க்ளாஸ்ல கேள்வி கேப்பேன்னு சொன்னத மிஸ் மறந்தே போய்ட்டாங்க.

அமுதன் said...

நீ இப்படியே ரியாக்ஷன் குடு.... எல்லாரும் குழம்பட்டும்....

gopalan said...

Naan solradhu un vaai vazhia velia varadhanu paakren

Thirumozhian said...

துரைமுருகனுக்கு நடந்தது இருதய ஆபரேஷன் இல்லையாம். சிக்குன்குன்யா சிகிச்சையாம்.

sivagnanamji(#16342789) said...

நம்ம மிஸ்ஸுக்கு மீசை இருந்தா எப்டி இருக்கும்?

மாதங்கி said...

சன்டே என்னுடைய பர்த்டே பார்ட்டிக்கு நீ உங்கம்மா அப்பாவோட எங்க வீட்டுக்கு வரும்போது எனக்கு கிச்சன் செட் கிப்ட்டா வாங்கிட்டு வரயா, எங்க வீட்ல நான் கேட்டேன்னு மட்டும் சொல்லிடாதே!

சிறில் அலெக்ஸ் said...

1. கௌதம் போட்டி படத்துக்கு போஸ் கொடுப்போமா?

2. விடாது கறுப்புவும் விட்டுது சிகப்புவும் ஒரே ஆளாம்

3. உன் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கே

4. அழகாய் சிரிக்கிறாய் பயமாய் இருக்கிறது

5. மைக் டைசந்தான் காதக் கடிக்கச் சொன்னாரு

6. SKயின் பாலியல் பதிவுகளப் படிச்சியா?

7. ஜில்லுன்னு ஒரு ஐஸ் க்ரீம்?

சிறில் அலெக்ஸ் said...

நாந்தான் கணக்கு வாத்தியாராம் நீ தமிழ் டீச்சராம். சரியா?

vivasayi said...

நம்மை வைத்தும் போட்டியா? சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கு...

vivasayi said...

போட்டிக்கு பரிசு தர்றது இருக்கட்டும். நமக்கு என்ன தர போறாரு கவுதம் அங்கிள்?

vivasayi said...

உங்க அப்பா குங்குமம் ஆபீஸ்-ல வேலை செய்றார்ன்னு தானே சொன்ன! பாரு என்னல்லாம் பண்றாரு!

vivasayi said...

நான் தான் போலி கவுதம்னு உங்க அப்பா கிட்ட சொல்லிடாத..

ecr said...

நீ வேணா பாரேன்! கடைசியில ஜாம்பவானுக்கு டிக்கெட் கொடுக்கபோறாரு!

ecr said...

ஜாம்பவான் படத்துக்கு போரவங்களயெல்லாம் தற்கொலை முயற்சி கேஸ்ல போலிஸ் புடிக்கறாங்களாம்!

vivasayi said...

திங்கள்கிழமை மதியம் முடிவு சொல்றதுக்கு சனிக்கிழமையே போட்டியை முடிச்சா எப்படி?

வெதைக்கறதுக்கும், வெள்ளாமைக்கும் போதிய இடைவெளி வேணும் அண்ணே! அதனால இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க!

vivasayi said...

எங்க வீட்டுக்கு கலர் டிவி குடுத்துட்டாங்க! உங்களுக்கு?

G Gowtham said...

விவசாயி சொன்னது..//திங்கள்கிழமை மதியம் முடிவு சொல்றதுக்கு சனிக்கிழமையே போட்டியை முடிச்சா எப்படி?வெதைக்கறதுக்கும், வெள்ளாமைக்கும் போதிய இடைவெளி வேணும் அண்ணே! அதனால இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்க!//

நாட்டோட முதுகெலும்பே விவசாயிதாங்க! அவரு சொல்றத கேக்கலைனா எப்டி?!

அதனால போட்டிக்கான கெடுவை நீட்டிக்கிறேன் மகிழ்ச்சியோடு! நாளை நள்ளிரவு 12 மணிவரை நீட்டிக்கப்படுகிறது.

ஆவி அம்மணி said...

//நாட்டோட முதுகெலும்பே விவசாயிதாங்க! அவரு சொல்றத கேக்கலைனா எப்டி?!
//

ஆவிகள் சொன்னால் கேக்க மாட்டீங்களோ!

சந்தோஷ் aka Santhosh said...

smile please

பினாத்தல் சுரேஷ் said...

உதை விழும்.. உன்னை நம்பி போட்டி வேற அறிவிச்சிருக்காங்க.. சிரிச்சித் தொலை!

பினாத்தல் சுரேஷ் said...

உனக்கு முட்டைன்னு வாத்தியார் சொன்னது கணக்குலே இல்லியாம், சத்துணவிலேயாம்!

ஊமை said...

நம்மகிட்ட எவ்வளவு சூப்பர் ட்ரஸ்ஸெல்லாம் இருக்கு. அந்த பசங்கள பாரு ட்ரஸ்ஸே இல்லாம இருக்காங்க. நம்ம ட்ரஸ் ஒண்ண அவுங்களுக்கு குடுத்துறலாமா...

சூப்பர் ஐடியாடா...

பினாத்தல் சுரேஷ் said...

நான் அரிசி கொண்டுவரேன், நீ கலர் டிவி கொண்டு வரியா?

பினாத்தல் சுரேஷ் said...

என்ன இருந்தாலும் பத்திரிக்கைக்காரன் பத்திரிக்கைக்காரன் தான்! பாத்தியா.. 50 ரூபா செலவு பண்ணி எவ்வ்ளோ மேட்டர் தேத்திட்டாரு!

ஊமை said...

என் birthday யை ஒரு orphanage ல போய் celeberate பண்ணுனோம். It was so much fun!. அந்த பிள்ளைங்க எல்லாம் எவ்வளவு happy யா இருந்தாங்க தெரியுமா... எனக்காக pray பண்ணுனாங்க. என் கூட உக்காந்து சாப்டாங்க. It was by best birthday ever! நீயும் உங்க மம்மி, டாடி கிட்ட சொல்லி அதே மாதிரி பண்ணு.

சூப்பர் ஐடியாடா... இப்பவே போய் சொல்றேன்...

aaradhana said...

நாம்ப ரண்டுபேரும் twins என்று எல்லொரும் நம்மளேயே பார்த்து ரசிக்கிறார்கள்..

Anonymous said...

Valla meen weds Veelanku Today.

vivasayi said...

சுவையான ட்ரீட்ன்னா நல்லா இருக்கும், அழகான ட்ரீட்ன்னா எப்படிண்ணே...

மதுரன் said...

விசாரிச்சுப் பார்த்துட்டேன்.... இலங்கை ராணுவம் நம்மளையெல்லாம் ஒன்னும் செய்யாதாம்.தைரியமா தூங்கலாம்.

மதுரன் said...

இன்னிக்கு பேப்பர் பார்த்தியா? முஷாரப் அங்கிள் தீவிரவாதத்தை ஒடுக்குறதுல இந்தியாவுக்கு உதவப் போறாராம்.
அப்படின்னா... நம்மளும் க்ளாஸ் அமைதியா இருக்க மிஸ்ஸுக்கு ஹெல்ப் பண்ணிவோமா?

சின்னபுள்ள said...

கண்ணாமூச்சி விளையாடுவோமா...

சின்னபுள்ள said...

நான் தான் திருடன். நீதான் போலிஸாம்...

சின்னபுள்ள said...

mummy வீட்டுல இல்ல நாம cook பண்ணலாமா....

சின்னபுள்ள said...

பேச்சு போட்டியில பரிசு உனக்குதானாம்.

கார்த்திக் பிரபு said...

sir kalakureenga niraya potigal..indha time m ennal kalnthukka mudiyamal pochu..pach nest time irungiranum eppadiyavdhu

kaviselvan said...

jothikavukkum suryavukkum nijamave kalyanam nadanthuducham!!! adhu pudhu cinema illaiyam!!!

Srinivasan said...

Sakthi..Nee azhaga irukaennu ninaikala...Unnai love panniduvaennu ninaikala...

AAnaa ithu ellam nadanthudumoanu bayama irukku.

Simulation said...

தேர்ந்தெடுக்கப்பட்ட கமெண்ட்கள் சமீபத்திய குங்குமத்தில் வந்துள்ளதோ?!

- சிமுலேஷன்