Wednesday, November 08, 2006

'மழை'ப்போட்டி முடிவுகள்..


போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்!

இதோ முதல் கட்டத்தேர்வில் அடிச்சு வந்த படைப்புகள் பத்து இங்கே!

பத்திலிருந்து பரிசுக்குரிய இரண்டு நாளை காலையில்.

தொ..ட..ரு..ம்!

luckylook said...
"எத்தினி வாட்டி சொன்னேன். கேட்டியா? இப்போ பாரு என்னாச்சின்னு""நான் எப்பவோ பண்ணுனதுக்கு இப்போ ஏம்மா திட்டுறே""எப்பவோ பண்ணாலும் அவஸ்தை இப்போ தானேடி""அம்மா... ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க... நான் செஞ்சது தப்பு தான்""இதே தப்பை உனக்கு பொறக்கப் போறதும் செஞ்சுத் தொலைக்கப் போவுது... கவனமா இரு""சரிம்மா""சனியனே.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். அரிசி தின்னாதே... அரிசி தின்னாதேன்னு... இப்போ பாரு தாலி கட்டுற நேரத்துக்கு கூட மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வர முடியலை"---- வெளியே செம மழை.....

SP.VR.SUBBIAH said...
உன்வீடு போனாலென்னஎன்வீடு போனாலென்னமழைநீருக்கோ இடம் வேண்டும்!அடித்த பண மழையில்ஏரி, குளங்களெல்லாம்குடியிருப்பானது!இப்போது குடியிருப்புகளெல்லாம்குளங்களாகிவிட்டனஅவ்வப்போது அடிக்கும் மழையால்!பதிலுக்குப் பதில்உனக்கு மட்டும்தான் தெரியுமா?இல்லை-இயற்கைக்கும் அது தெரியும்!

கார்த்திக் பிரபு said...
இரவில் மின்சாரம் தடைபடும்கொசுக்கள் காதுகளில் ரீங்காரமிடும்தவளைகள் பாம்புகளை வம்புக்கிழுக்கும்குழந்தைகள் அழுகுரல் ஓயாது ஒலிக்கும்தூங்கிப் போன பின்னரவில்திடீரென வரும் மின்சாரம்முழிப்பு தட்டிய நிமிடங்களில்நீர்ச் சொட்டும் ஜன்னல்களின் வழியேதெருவை பார்க்கும் போதுயாருமில்லாமம் தனியே பெய்துக் கொண்டிருக்கும் மழை

TAMIZI said...
நனையாத சூரியன் !!நல்லவரா! கெட்டவரா? இந்த மழை!?

luckylook said...
மாரி மாரிஅடிக்குது மாரிஇன்னிக்காவது குளிடாசோமாரி(குறிப்பு : மாரி என்றாலும் மழை என்றே பொருள். மாரி என இந்த மரபுக் கவிதையை முடித்திருப்பதால் இதையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்)

Kowsalya said...
நீ நகர்ந்த பின்னும் நீங்காத உன் வாசம் போல்மேகம் நகர்ந்த பின்னும் மரத்தடியில்பெய்கிறது மழை

Kowsalya said...
ஆண் - கோபம் - வெய்யில்பெண் - அழுகை – மழை

சென்ஷி said...
\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \\ \ \ \ \ \ \ \ \ \ \ .................................................மழை.

sivagnanamji(#16342789) said...
விரும்பி வேண்டுகையில்விலகிப் போவதுவும்வெறுத்து ஒதுக்குகையில்வீம்பாய்க் கொட்டுவதும்பெண்ணல்ல........மழை!

அருட்பெருங்கோ said...
மழை - ஓர் அனுபவம்!!!விடிந்தும் விடியாத இன்றைய அதிகாலைப் பொழுது.இரவு முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த என்னறை மின்விசிறி மெல்லத் தன் சுழற்சியை நிறுத்தியது.எப்போதும் அதன் “விர்ர்ர்ர்ர்ர்ர்” சத்தத்திற்குப் பழகிப் போன என் தூக்கம் மெல்லக் கலைகிறது.அணைத்துக் கொண்டு படுத்திருந்தக் காதலைக் கொஞ்சம் தள்ளி விட்டு போர்வையை விலக்கி பார்க்கிறேன்.முழுவதுமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது மின்விசிறி.எங்கும் மின்சாரம் இல்லாததால் ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.அப்போது கொஞ்சம் கொஞ்சமாக காதுக்குள் ஒரு மெல்லிய இசை நுழையப் பார்க்கிறது.“சில்…சில்…சில்…”நானும், நன்றாக உற்றுக் கேட்கிறேன்.ஒன்றும் பிடிபடவில்லை.பிறகு,மெல்ல எழுந்து கதவைத் திறந்து பால்கனி செல்கிறேன்.அங்கு,ஒரு குளிர்ச்சி உடல் முழுவதும் படர்கிறது.வெளியே மழை!அது, சட சட வெனப் பொழியும் பேய் மழையும் இல்லை.இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் இல்லை.காற்றோடு போராடி சுழன்றடிக்கும் புயல் மழையும் இல்லை.எங்கே நிலத்துக்கு வலிக்குமோ என வானத்தில் இருந்து மெது மெதுவாய் இறங்கும் காதல் மழை!.கொஞ்ச நேரம் கண்மூடி மழையை செவிக்குள் சேமிக்கிறேன்.குளிர் தாங்காமல் மீண்டும் வந்து படுத்துக்கொள்கிறேன்.தூங்கினேனா, இல்லைப் படுத்தேக் கிடந்திருந்தேனாத் தெரியவில்லை.மறுபடியும் எழுந்து பார்த்தபோது அறைத்தோழர்கள் எல்லாம் அலுவலகம் போயிருக்க, மழை மட்டும் எனக்காகக் காத்திருந்தது.காதலுக்கு ஏற்ற அந்த ரம்மிய நேரத்தில் பால்கனியில் அமர்ந்து காதல் பயணத்தின் ஒன்பதாவது பகுதியை எழுதுகிறேன்.முடித்தவுடன் மழை நின்றது.குளித்துக் கிளம்பி அலுவலகத்தை இணைக்கும் அந்த முக்கியசாலைக்கு வந்து சேர்கிறேன்.அந்த இடத்தில் இருந்து அலுவலகத்துக்கு எப்போதும் ஆட்டோவில் செல்லும் நான் , இன்று மட்டும் ஏன் நடந்தே வந்தேன் என்று இப்போது கூட எனக்குத் தெரியாது!எல்லோரும் கார்களில் வழுக்கிக் கொண்டு செல்லும் அந்த சாலையில் நான் மட்டும் காதலில் வழுக்கிக் கொண்டு செல்கிறேன்.அலுவலகத்துக்குள் நுழைந்துவிட்டு திரும்பி வெளியே எட்டிப்பார்க்கிறேன், மறுபடியும் ஆரம்பித்து இருந்தது மழை!

13 comments:

மதுமிதா said...

ஏங்க தடாலடி கௌதம்

இப்படி தடாலடியா போட்டி வெச்சு,
முடிவும் சொல்லிட்டா, நாங்க எப்படி போட்டில கலந்துக்கிறது:-(

லக்கிலுக் said...
This comment has been removed by a blog administrator.
கார்த்திக் பிரபு said...

hi luckylook ungaluku thoninadhu than enaku thonudhu

sivagnanamji(#16342789) said...

லக்கிலுக்
எவனோ(ளோ)வா...?
இப்படிக்கு
பத்தில் முத்து

sivagnanamji(#16342789) said...

லக்கிலுக்
எவனோ(ளோ)வா?

இப்படிக்கு
பத்தில் முத்து

சென்ஷி said...

அடங்கொப்புறானே
என்னோடதும் 10க்குள்ள வந்துடுச்சு
anyway, luckylookக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

G.Ragavan said...

முதல் பத்திடத்தில் வந்த அனைவருக்கும் வாழ்த்துகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது.

// luckylook said...
மாரி மாரிஅடிக்குது மாரிஇன்னிக்காவது குளிடாசோமாரி(குறிப்பு : மாரி என்றாலும் மழை என்றே பொருள். மாரி என இந்த மரபுக் கவிதையை முடித்திருப்பதால் இதையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்) //

லக்கிலுக் ஒரு சின்ன ஐயம். மரபூன்னு சொல்லீட்டதால வந்த ஐயம். இது எந்தப் பா? சித்தப்பான்னு சொல்லீராதீங்க :-)

மொதல் ரெண்டு மாரிக்கும் பொருள் என்ன? மாறி மாறின்னு இருந்திருக்கனுமோ? ஒருவேளை ஒவ்வொரு மாரிக்கும் வெவ்வேற பொருள் இருக்கா?

லக்கிலுக் said...

//லக்கிலுக்
எவனோ(ளோ)வா?

இப்படிக்கு
பத்தில் முத்து//

மன்னிக்கவும் அய்யா.

சும்மா காமெடிக்காக திருவிளையாடல் தருமி மாதிரி முயற்சித்தேன்.

உங்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கமில்லை.

அந்தப் பின்னூட்டத்தை நீக்கி விடுகிறேன்.

மீண்டும் மன்னிக்கவும்.

லக்கிலுக் said...

//மொதல் ரெண்டு மாரிக்கும் பொருள் என்ன? மாறி மாறின்னு இருந்திருக்கனுமோ? ஒருவேளை ஒவ்வொரு மாரிக்கும் வெவ்வேற பொருள் இருக்கா?//

மரபுக்கவிதை சொன்னா ரசிக்கணும்.. ஆராயக்கூடாது :-)


மாரி, மாரி என்றது சும்மா சொல் அழகுக்காகப் போடப்பட்டதே. இந்த மாதிரி மரபுக்கவிதைகளில் எழுத்துப்பிழையோ, பொருட்பிழையோ பார்க்கப்படாது....

அருட்பெருங்கோ said...

பரிசு பெறப் போகும் அந்த இருவருக்கும் இப்போதே எனது வாழ்த்துக்கள்!!!

sivagnanamji(#16342789) said...

லக்கிலுக்
நானும் கிண்டலுக்குதான் சொன்னேன்;
சீரியஸா எடுத்தீட்டீங்களே

பொன்ஸ்~~Poorna said...

ஜி.ரா,
மாரியைப் பற்றிப் பேசி எனக்கு ஒரு சந்தேகத்தை உருவாக்கிட்டீங்க!

உடலையும் தலையையும் மாறி மாறிப் பொருத்தினதினால் தானே கடவுளுக்கு மாரியம்மன் என்று பெயர் வந்ததாகச் சொல்லுவார்கள்? அப்படியானால், மாரி என்பதும் இதே பொருளில் வரும்னு சொல்லலாமா? (சொல் ஒரு சொல்? :))))

மணி ப்ரகாஷ் said...

மழையைப் பற்றி போட்டினு பார்த்துட்டு வந்தேன்.ஆனா போட்டி முடிந்து முடிவும் அறிவித்துவீட்டீர்கள்.. இருந்தாலும் மழையினைப் பற்றி நான் எழுதிய எழுத்துகளை வாசித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்..


http://mani-vilas.blogspot.com/2006/10/blog-post_116209671953019677.html