Thursday, November 09, 2006

'மழை'ப்போட்டி இறுதி முடிவுகள்


luckylook said...
"எத்தினி வாட்டி சொன்னேன். கேட்டியா? இப்போ பாரு என்னாச்சின்னு"

"நான் எப்பவோ பண்ணுனதுக்கு இப்போ ஏம்மா திட்டுறே"

"எப்பவோ பண்ணாலும் அவஸ்தை இப்போ தானேடி"

"அம்மா... ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க... நான் செஞ்சது தப்பு தான்"

"இதே தப்பை உனக்கு பொறக்கப் போறதும் செஞ்சுத் தொலைக்கப் போவுது... கவனமா இரு"

"சரிம்மா"

"சனியனே.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். அரிசி தின்னாதே... அரிசி தின்னாதேன்னு... இப்போ பாரு தாலி கட்டுற நேரத்துக்கு கூட மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வர முடியலை"

வெளியே செம மழை!

லக்கிலுக் பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் பேசப்படுவதை அழகாக கதையாக்கி இருக்கிறீர்கள்! இருப்பினும் மூட நம்பிக்கைக்கு கொடி பிடிப்பதால் உங்களுக்கு(ம்) இரண்டாவது பரிசுதான்! (ம்'க்குக் காரணம் இன்னும் இருவரும் இரண்டாவது பரிசைப் பங்கு போட்டுக் கொள்கிறார்).

SP.VR.SUBBIAH said...
உன்வீடு போனாலென்ன
என்வீடு போனாலென்ன
மழைநீருக்கோ இடம் வேண்டும்!

அடித்த பண மழையில்
ஏரி, குளங்களெல்லாம்
குடியிருப்பானது!

இப்போது குடியிருப்புகளெல்லாம்
குளங்களாகிவிட்டன
அவ்வப்போது அடிக்கும் மழையால்!

பதிலுக்குப் பதில்
உனக்கு மட்டும்தான் தெரியுமா?
இல்லை-
இயற்கைக்கும் அது தெரியும்!

ஐயா, மழை என முடியுமாறு கொடுக்கப்பட்ட வரையறைக்குள் வராவிட்டாலும் எடுத்துக் கொண்ட சேதிக்காக உங்களுக்கு ஆறுதல் பரிசு!

கார்த்திக் பிரபு said...
இரவில் மின்சாரம் தடைபடும்
கொசுக்கள் காதுகளில் ரீங்காரமிடும்த
வளைகள் பாம்புகளை வம்புக்கிழுக்கும்
குழந்தைகள் அழுகுரல் ஓயாது ஒலிக்கும்
தூங்கிப் போன பின்னரவில்
திடீரென வரும் மின்சாரம்
முழிப்பு தட்டிய நிமிடங்களில்
நீர்ச் சொட்டும் ஜன்னல்களின் வழியே
தெருவை பார்க்கும் போது
யாருமில்லாமம் தனியே பெய்துக் கொண்டிருக்கும் மழை!

வாழ்த்துக்கள் கார்த்திக், இரண்டாம் பரிசுக்குரிய மூன்று படைப்பாளிகளில் நீங்களும் ஒருவர்! இன்னும் கொஞ்சம் கைவைத்திருந்தால் மிக மிக அருமையாக வந்திருக்கும்!

TAMIZI said...
நனையாத சூரியன் !!
நல்லவரா! கெட்டவரா? இந்த மழை!?

தமிழி! படிச்சதும் பளிச்னு பிடிச்சுப்போச்சு. ஆனாலும் ஏதோ ஒண்ணு உதைக்குது. (சில சமயம் ஏன் எதுக்குனு விவரம் சொல்லாம மனசுக்கு ஏதோ தோணும்ல, அப்படி!) அதனால் உங்களுக்கு(ம்) இரண்டாம் பரிசு!

luckylook said...
மாரி மாரி
அடிக்குது மாரி
இன்னிக்காவது குளிடா
சோமாரி!

மன்னிக்கவும் லக்கிலுக்! மழை என முடியுமாறு கொடுக்கப்பட்ட வரையறைக்குள் வராவிட்டாலும் வார்த்தை விளையாட்டு பிடித்ததால் பத்தில் ஒன்றாக செமி ஃபைனலுக்கு தேர்ந்தெடுத்தேன். ஆனால் 'மாரி மாறி' குழப்பம் இருப்பதால் (நன்றி ஜி.ராகவன்) ஃபைனலுக்கு நஹி! ஆனாலும் ஆறுதல் பரிசு உண்டு! ஏன்னா மெய்யாலுமே எனக்குப் புட்ச அய்ட்டம்ல இதும் ஒண்ணு, அக்காங்!

Kowsalya said...
நீ நகர்ந்த பின்னும் நீங்காத
உன் வாசம் போல்
மேகம் நகர்ந்த பின்னும் மரத்தடியில்
பெய்கிறது மழை!

கலக்கிட்டிங்க கௌசல்யா. முதல் பரிசுக்குரிய இரண்டு படைப்புகளில் உங்களோடதும் ஒண்ணு. வாழ்த்துக்கள்!

Kowsalya said...
ஆண் - கோபம் - வெய்யில்
பெண் - அழுகை - மழை

நச்னு இருக்கு கௌசல்யா. முதல் பரிசு வாங்கிய இரண்டு படைப்புகளில் உங்களோடதும் ஒண்ணு என்பதால் இதுக்கு ஆறுதல் பரிசு!

sivagnanamji(#16342789) said...
விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்
பெண்ணல்ல........
மழை!

ஐயா சிவஞானம் அவர்களே! இன்னும் இளமையாவே வச்சிருக்கிங்க உங்க
கற்பனைகளையும் எழுத்துக்களையும்! முதல் பரிசுக்குரிய இரண்டு படைப்புகளில் இதுவும் ஒன்று! வாழ்த்துக்கள்!

அருட்பெருங்கோ said...
விடிந்தும் விடியாத இன்றைய அதிகாலைப் பொழுது.
இரவு முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த என்னறை மின்விசிறி மெல்லத் தன் சுழற்சியை நிறுத்தியது.
எப்போதும் அதன் "விர்ர்ர்ர்ர்ர்ர்" சத்தத்திற்குப் பழகிப் போன என் தூக்கம் மெல்லக் கலைகிறது.
எங்கும் மின்சாரம் இல்லாததால் ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.
மெல்ல எழுந்து கதவைத் திறந்து பால்கனி செல்கிறேன்.
குளிர்ச்சி உடல் முழுவதும் படர்கிறது.வெளியே மழை!
அது, சட சட வெனப் பொழியும் பேய் மழையும் இல்லை.
இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் இல்லை.
காற்றோடு போராடி சுழன்றடிக்கும் புயல் மழையும் இல்லை.

எங்கே நிலத்துக்கு வலிக்குமோ என வானத்தில் இருந்து மெது மெதுவாய் இறங்கும் காதல் மழை!.

கொஞ்ச நேரம் கண்மூடி மழையை செவிக்குள் சேமிக்கிறேன்.
குளிர் தாங்காமல் மீண்டும் வந்து படுத்துக்கொள்கிறேன்.
தூங்கினேனா, இல்லைப் படுத்தேக் கிடந்திருந்தேனாத் தெரியவில்லை.
மறுபடியும் எழுந்து பார்த்தபோது அறைத்தோழர்கள் எல்லாம் அலுவலகம் போயிருக்க, மழை மட்டும் எனக்காகக் காத்திருந்தது.

அருட்பெருங்கோ அவர்களே! அட்டகாசமான முயற்சி இது. ஆனால் 'பசு மாட்டைக் கொண்டு போய் பனை மரத்தில் கட்டுவதை'க் கட் பண்ணிவிட்டு உங்கள் படைப்பைச் 'சிறு'க்கிச் சுருக்கிப் பார்த்தேன். (தப்புன்னா மன்னிச்சுக்கோங்க!). இப்போது மழை என முடியுமாறு கொடுக்கப்பட்ட வரையறைக்குள் வராததால் கற்பனை நயத்துக்காக உங்களுக்கு ஆறுதல் பரிசு!

சென்ஷி said...
\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \\ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \ \\ \ \ .............................மழை!

சென்ஷி! செமை ஃபைனலுக்கு நான் தேர்ந்தெடுத்தாலும் ஃபைனலில் குங்குமம் ஆசிரியர் குழு வடிகட்டிவிட்டதால் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

குங்குமம் ஆசிரியர் குழு இங்கு எதற்கு வருகிறது என்கிறீர்களா? அடுத்தவார குங்குமத்தில் பரிசுக்குரிய மற்றும் ஆறுதல் பரிசுக்குரிய படைப்புகள் பிரசுரமாகின்றன. அதுதான் ஆறுதல் பரிசு!

அப்போ பரிசு? சட்னு தோணலைங்க! இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுங்க, திரும்ப வந்து சொல்றேன்!
அல்லது யாராச்சும் என்ன பரிசு கொடுக்கலாம்னு ஐடியா கொடுங்க நண்பர்களே..

மறுபடியும் ஒருமுறை போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுவது உங்கள் நண்பன் ஜி.கௌதம்.. கௌதம்.. தம்.. ம்..

21 comments:

கார்த்திக் பிரபு said...

நன்றி சார்..ரொம்ப சந்தோசமாக இருக்கு..என்னுடைய அடுத்த கவிதை குங்குமத்தில் பிரசுரமாகப்
போகிறெதென்பதே எனக்கு மிகப் பெரிய சந்தோசம்.இன்னும் பரிசு வேற இருக்கா? ரொம்ப எதிர்பார்ப்போடு இருக்கேன்.என்னவா இருந்தாலும்/வெளியே எங்கே போறதா இருந்தாலும். சனி,ஞாயிறு கிழமைகளில்
சொல்லுங்க சார்.

என்னை பொருத்தவரை மிக அருமையான பரிசு நம்ம எல்லாரும் சந்திக்கிறது தான்னு நினைக்கிறேன்..எல்லாரும் என்ன சொல்றீங்க?

லக்கிலுக் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.... போட்டியை நடத்தியவருக்கு நன்றிகள்....

சொக்கா... சொக்கா.... எப்படியோ பரிசு கிடைச்சிடுச்சி.... சீக்கிரமா பரிசை கொடுத்திங்கன்னா மண்டபத்திலே எழுதி கொடுத்தவர்கிட்டே கொண்டுபோயி சேர்த்திடுவேன் :-))))

லக்கிலுக் said...

பரிசா "மழை" படத்துக்கு சிறப்புக் காட்சின்னு மட்டும் சொல்லிடாதீங்க. அது பரிசு அல்ல. தண்டனை :-(

Kowsalya said...

Super.
குங்குமம் இதழில் ப்ரசுரிக்க போறீங்களா.. இதுவே எனக்கு பெரிய பரிசு தாங்க.

என் blog-ல சொன்னது போல் ஆறாவது படிக்கறச்சே எழுதினதுக்கு அப்புறும் இது தாங்க.

என்னாலயும் முடியும்னு பெரிய ஊக்கம் குடுத்திருக்கீங்க ரொம்ம்ம்ம்ப நன்றி

sivagnanamji(#16342789) said...

நன்றி கெளதம் அவர்களே நன்றி!
வசிஷ்டர் வாயால் பிர்மரிஷியா?
குங்குமம் ஆசிரியர் குழுவால்
முதற்பரிசா...?
வெற்றி பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்...

G Gowtham said...

நண்பர்களே! இன்னிக்கு ஈவினிங்கே பரிசை வாங்கிக்கத் தயாரா? திடீர்னு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. அட்டகாசமான ஒரு ப்ரிவ்யூ தியேட்டர்ல 'ஈ' படம் பார்க்கலாமா?
வள்ளுவர் கோட்டத்துக்கு மிக அருகில் இருக்கும் ஃபோர் ஃப்ரேம்ஸ் என்ற டைரக்டர் பிரியதர்சனுக்கு சொந்தமான அந்த தியேட்டரில் இன்று மாலை ஆறு மணிக்கு திரையுலக வி.வி.ஐ.பி.களுடன் நீங்களும் படம் பார்க்கலாம்.
யார் அந்த வி.வி.ஐ.பி.கள்னு தெரிஞ்சுக்க விரும்புறவங்க என் மொபைல் நம்பருக்கு வாங்க! (98409 41122). முதல் பரிசுக்குரிய சிவஞானம்ஜி இரண்டாம் பரிசுக்குரிய தமிழி, கார்த்திக்பிரபு, மற்றும் லக்கிலுக் நால்வருக்கும் தலைக்கு ஒரு டிக்கெட். இன்னொரு முதல் பரிசுக்குரிய தோழி கௌசல்யாவுக்கு பெண் என்பதால் துணைக்கு இன்னொருவரையும் அழைத்துக் கொண்டு வரவசதியாக இரண்டு டிக்கெட்டுகள்! என்ன சொல்றீங்க?

Anonymous said...

போட்டியை நடத்திய வலைப்பூ சூறாவளி தடாலடியாருக்கும், முதல் பரிசினை வென்ற என்றும் மார்க்கண்டேயர் சிவஞாம்ஜி அய்யா அவர்களுக்கும், இரண்டாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசு என இரட்டை பரிசு பெற்ற வலைப்பூ சுனாமி லக்கியார் மற்றும் பரிசினை வென்ற மற்ற போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இவன்
வலைப்பூ சுனாமி லக்கியார் இலக்கிய பாசறை
டைடல் பார்க், தரமணி, சென்னை-113.

கார்த்திக் பிரபு said...

sir nan earkenavey sonna madhiri innaiku vendamey saturday or saunday la vachukala!!!innaikunna vara mudiyadhE!!

அருட்பெருங்கோ said...

பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

நான் எழுதியதும் குங்குமத்தில் பிரசுரமாகப் போகிறதா??? :)

நன்றிகள் கௌதம் & குங்குமம் ஆசிரியர் குழு!!!

sivagnanamji(#16342789) said...

நன்றி கெள்தம் அவர்களே'
அனார்கலி பார்த்த ப்ரி வியூ தியேட்டர்தானே?

G Gowtham said...

கார்த்திக்,
அதனாலென்ன.. சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை (போனஸ் பரிசாக) எல்லோரும் சந்தித்தால் போயிற்று! ஏதாவது ப்ரோகிராம் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்.
இந்த பரிசு வேண்டும் என்பவர்கள் இதையும் பெற்றுக்கொள்ளட்டுமே!

சிவஞானம்ஜி,
அந்த தியேட்டர் இல்லை. அது கொஞ்சம் டப்பா!
இது புத்தம் புது தியேட்டர். வள்ளுவர் கோட்டத்துக்கு அருகே இருக்கிறது. அதாவது இண்டோர் ஸ்டெடியத்துக்கு எதிரே.

கார்த்திக் பிரபு said...

k sir appadideye seyyalam. ellarukum valthukal,hope meet u all.padam parthuttu ellarum avangavanga anubavathai eludhunga.bye

லக்கிலுக் said...

பரிசினை வாங்கிக்க நான் எப்பவும் Available தான். எல்லாருக்குமே தெரியுமே "இலவசம்"னா எனக்கு எவ்வளவு பிடிக்கும்ணு :-)

இன்னைக்கு ஈவ்னிங் யார் யாரெல்லாம் வர்றீங்கப்பா....?

G Gowtham said...

சிவஞானம்ஜி, லக்கிலுக்.. இருவரும் தங்கள் வருகையை உறுதி செய்துவிட்டார்கள்.
ஜில்லுனு அந்த ஜோடியோட உட்கார்ந்து ஜம்னு படம் பார்க்கப்போறாங்க!
அப்ப (கௌசல்யா, கார்த்திக், தமிழி) நீங்க?!

சென்ஷி said...

OK.
செமி ஃபைனல் வரைக்கும் வந்ததே பெருசு.

வாழ்த்துக்கள்

கௌசி மேம்

சென்ஷி

லக்கிலுக் said...

தமிழிக்கு அதிர்ஷ்டம் இருந்தும் நம்ம ஜோதியில கலந்துக்காம எஸ்கேப் ஆயிடுறார் :-(

கார்த்திக் பிரபு said...

ennal avara mudiyadhu sir nan chengalpattu pakkthil irukane..office la velayum iruku..miss panrane nalla chance -i ..im really missing it..:(

TAMIZI said...

நன்றி கெளதம் அவர்களே நன்றி!
வெற்றி பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்...
.குங்குமம் ஆசிரியர் குழு!!!

எனது கணிப்பொறியில் ஏற்பட்ட ஒரு அதீத கோளாறாலும் ஒரு மிக அவசரப்பணியாலும் இப்போது தான் வந்து அறிவிப்புக்களைப் பார்க்க இயன்றது.
மன்னிக்கவும்.கெளதம்.

TAMIZI said...

luckylook said...
தமிழிக்கு அதிர்ஷ்டம் இருந்தும் நம்ம ஜோதியில கலந்துக்காம எஸ்கேப் ஆயிடுறார் :-(
//
உண்மை லக்கியாரே!

"செடி அழுகிறதோ நன்றி மழையென !"

இப்போது என் மனதிலிலும் அதே நிலை.

TAMIZI said...

குங்குமம் ஆசிரியர் குழு!!! வாக்கெடுப்பில் வரும் என
நாங்கள் எதிர்பார்க்கவில்லை.கெளதம்.
நன்றி.

மூத்தவர்தம் முடிவிற்க்கு நன்றி.

லக்கிலுக் said...

தமிழி!

உங்கள் தொ.பே. எண்ணை என் ப்ளாக்குக்கு வந்து கமெண்டாக போடுங்கள். குறித்துக் கொள்கிறேன். பிரசுரிக்க மாட்டேன்.