Thursday, December 07, 2006
இன்று இப்படம் கடேசி! / ததடாடாலலடிடி!
சில நாட்களுக்கு முன்னர் ஒரு நாள்.. சிறிது தயக்கத்துடன் என்னிடம் பேசினார் ஒரு வலைப்பதிவர்!
“ஒரு விஷயம் சொல்றேன்.. தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க நடத்துற தடாலடி போட்டிகள்ல லக்கிலுக்குக்கே பெரும்பாலும் பரிசு கொடுக்கறீங்க. குங்குமத்தில் பிரசுரம் செய்யும் ஆறுதல் பரிசுக்குரிய கமெண்ட்டுகளிலும் அவரோட கமெண்ட்டுகளே அதிகமாக இடம்பெறுகின்றன. அதுக்குப் பதிலா வேற சில பதிவாளர்களின் கமெண்ட்டுகளை பிரசுரிக்கலாமே? நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுத்தது போலிருக்குமே! சமீபத்தில் அறிவிக்கப்படாத ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் இது குறித்து பலர் வருத்தப்பட்டாங்க” என்றார் அந்த நண்பர்.
அவருக்கு நான் சொன்ன பதிலைச் சொல்வதற்கு முன் எனக்கு வந்த இன்னும் சில மின்னஞ்சல்கள் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.
அடுத்த நாளே எனக்கு வந்த ஒரு தனி மடலில் இருந்ததும் சற்றேறக்குறைய இதே விஷயம்தான்! ஆனால் லக்கிலுக்கின் பெயருக்குப் பதில் இங்கே இருந்தது மாயவரத்தான் பெயர்!!
அடுத்ததாக வந்த ஒரு மொபைல் அழைப்பு, ‘லக்கிலுக், சிவஞானம்ஜி, தமிழி, சிந்தாநதி’ என்றது. அடுத்துவந்த மெயில், ‘மாயவரத்தான், வீ த பீப்பிள்’ என்றது.
இப்போ என் பதில்..
தடாலடிப் போட்டிக்கு வரும் பின்னூட்டங்களில் எழுதியவர்களின் பெயரையெல்லாம் நீக்கிவிட்டுத்தான் பரிசீலணைக்கே எடுத்துப் போவேன். சராசரியாக ஐந்து பேர் மதிப்பிடுவார்கள். அதாவது தாங்கள் செலக்ட் செய்யும் கமெண்ட்டுகளுக்கு டிக் கொடுப்பார்கள்.
அதிகதிகப்படியான டிக் வாங்கும் கமெண்ட்டுகளுக்கு முதல் பரிசு(கள்) முடிவு செய்யப்படும். எவ்வளவுக்கெவ்வளவு டிக் குறைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு இறங்குவரிசையில் ஆறுதல் பரிசு, அதாவது பிரசுரத்துக்கு மட்டும்!
இப்படி டிக் வாங்கி தேர்வாகும் லக்கிலுக்/ மாயவரத்தான் கமெண்ட்டுகளை நான் தூக்கிக்கடாசுவது எந்த விதத்தில் நியாயம்?
முதல் பரிசு வாங்கிவிட்டார் என்பதால் ஆறுதல் பரிசுக்காக டிக் மதிப்பீட்டில் தேறிவரும் இவர்களது கமெண்ட்டுகளை ஒதுக்குவதும் நியாயமே அல்ல! நான் வளர்ந்த விகடன் எனக்குக் கற்றுக்கொடுத்ததும் இதைத்தான். அதாவது விகடன் நடத்தும் போட்டிகளில் பாருங்கள், முதல் பரிசு வாங்கிவிட்டார் என்பதற்காக ஒருவரது ஆறுதல் பரிசுகளை (இரண்டு, மூன்றாம் பரிசுகளையும்கூட) நிராகரிப்பதில்லை எப்போதுமே!
ஆக, திரும்பத்திரும்ப வெற்றி பெறும் நபர்களிடம் ‘இனிமேல் நீங்கள் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது. அப்போதுதான் மற்றவர்கள் பரிசு வாங்க முடியும்’ என நான் எப்படிச் சொல்லமுடியும்? அது சொத்தையான கோரிக்கையல்லவா! தவிர, ஐம்பதுக்கு குறைவான பங்களிப்புகள் என்று தடாலடிப்போட்டிக்கு வருகிறதோ அன்றுதான் அதை நிறுத்திக்கொள்ளலாம் என்பதே என் (முன்னாள்) முடிவு. இந்த நண்பர்களே ஐம்பதுக்கும் குறையாமல் தொடர்ந்து போட்டி நடக்கக் காரணமாயிருந்தவர்கள்!
மற்ற பதிவர் யாரேனும் ஒரு ஆலோசனையாக அதுவும் நேரிடையான பின்னூட்டம் வழியாகச் சொல்வதே சரியானதாகும். அப்போதும்கூட தொடர் வெற்றிபெறும் அவர்களின் திறமையை மனமாரப் பாராட்டிவிட்டுத்தான் இதைச் யோசனையாக முன்வைக்க வேண்டும்.
ரோஜாக்களுடன்தான் முள்ளும் இருக்கிறது! முட்களுடன்தான் ரோஜாவும் இருக்கிறது!! இந்த உலக உண்மை தெரிந்தும் இரு கூறாகப் பிரிந்து ‘இவரை ஆட்டத்தில் சேர்க்காதீங்க’ என அவர்களும், ‘அவரை ஆட்டத்தில் சேர்க்காதீங்க’ என இவர்களும் சொல்வது வருத்தத்துக்குரியது.
ஆகவே தோழர்களே இந்த வாரத்துடன் நம்ம தடாலடி ஆட்டத்தை முடித்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறேன். இந்த வாரமே இப்படம் கடேசி! பின்னிப் பொளந்து கட்டிடுங்க!
போட்டி இதுதான்: படத்தைப் பார்த்தீர்கள்தானே! படத்துக்குப் பொருத்தமாக என்ன வேண்டுமென்றாலும் எழுதலாம்! அது எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்! பரிசு? அதுவும் என்ன வேண்டுமானாலும் (சனிக்கிழமைக்குள் முடிவு செய்து அறிவிக்கிறேன்) இருக்கலாம்!!!!
நன்றி! நன்றி! வணக்கம்! வணக்கம்! (இங்கே எதுக்காக ரெண்டு ரெண்டு தடவை சொல்லியிருக்கேன்னு புரியுதில்லே!!)
பிற் சேர்க்கை: சனிக்கிழமை மாலை 6 மணிவரை வந்து, முதல் கட்டப் பரிசீலணையில் ஜெயித்திருக்கும் பளிச் கமெண்ட்டுகள் கீழே பின்னூட்டங்களின் அணிவகுப்பிலேயே எனது பின்னூட்டமாக வெளியாகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
343 comments:
1 – 200 of 343 Newer› Newest»முதல் ஆளா முதுமலை கேம்புக்குபோகலாம்னு பார்த்தா காலைக் கட்டி வெச்சிட்டாங்களே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
காலுல மாட்டிக்க ஏதுனா வாங்கிக்கொடுன்னு இந்த மனுஷன்கிட்டே கேட்டது தப்பாப் போச்சே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
காலையும் கட்டிப் போட்டுட்டு என்னத்த சரணாலயம் வேண்டிக் கெடக்கு?
- (அதே) மாயவரத்தான்...
யானைக் கால் வியாதி பரவாம இருக்க என் காலைக் கட்டி வெச்சிட்டா போதுமா?
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
போட்டிக்கு சம்பந்தமில்லாத / பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம் :
அடப்பாவிகளா.. மாயவரத்தான் இது வரைக்கும் எண்ணே எண்ணி மூணே மூணு போட்டில தான் கலந்துகிட்டான். ரெண்டுத்துல ஆறுதல். ஒண்ணுத்துல முதல் பரிசு.
அது(வும்) பொறுக்கலயாய்யா உங்களுக்கு?!
ஆத்தா கால்கட்டு போட்டாத்தான் அடங்குவான்னு அப்பவே சொன்னா! அந்த கட்டு இதுதானா?
நாமக்கல்லில் இருந்து கபீர்முகம்மது.
என்னோட காலை கட்டி போட்டிருக்கிறதால எறும்பு ஏரோப்ளேன் ஓட்டினேன்னு கப்ஸா விடுறதைப் பாரேன்.
டாக்டருகிட்ட போவணும்.. மனுசக் கால் வியாதி வந்துட்ட மாதிரி தெரியுது.
சொன்னா கேளுங்க! எக்ஸிபிஷனுக்கு வந்தா நெயில் பாலீஷ் கேட்டு அடம்பிடிக்க மாட்டேன்! என்னையும் கூட்டிட்டுப் போங்க!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
'சீக்கிரமா கால் கட்டு போட்டுறணும்'னு சொன்னாங்க. அடப்பாவிகளா..அதுக்கு இதான அர்த்தம்?!
"ங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி" ன்னு பாடினதை எங்கப்பன்கிட்ட வந்து போட்டுக் குடுத்தாளே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
அடடா!
அடி சறுக்கும் என்றுத்தான்
பிணைத்துவிட்டார்களோ!
நல்ல பிணைப்புகளும்
நிமிடத்தில் சறுக்குகிறதே..
என்ன செய்யலாம்?
சவூதியிலிருந்து இப்னு ஹம்துன்
'அன்னை ஓர் ஆலயம்' படத்திலே சோடியா நடிச்சோம். இப்போ ('சிவாஜி'யிலே) ஒரு பாட்டி வேஷமாச்சும் கொடுக்கிறாரான்னு கேட்டு பார்க்கணும்.
மவனே.. காலிலே சங்கிலி கட்டியிருக்குன்னு நெனச்சு அவனவன் அழுகின வாழைப்பழத்தை என் மூஞ்சியிலேயே விட்டு கடாசுறான். சங்கிலி சும்மாவாச்சும் தான் இருக்குன்னு மேட்டரு தெரிஞ்சிச்சி, டங்கு டணால் ஆகிடும்.
மதம் பிடிச்சிதுன்னு சொல்லி எனக்கே இரும்புச் சங்கிலின்னா? மனுசங்களுக்கு?
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
குயிலைப் பிடிச்சி கூண்டிலடைச்சி கூவச் சொல்லுகிற உலகம்....
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
எல்லாம் சரி கெளதம்ஜி, ஐம்பதுக்கும் குறைவான ஆக்கங்கள் வரும் போது நிறுத்துவதாக முன்னரே முடிவெடுத்துவிட்டு இப்போது தடாலடியாக நிறுத்துவது முறையா? மறுபரிசீலனை செய்யவும்.
யோவ்.. காலிலே சங்கிலியை கட்டி வெச்சிட்டு ரன்னிங் ரேஸிலே ஓடுன்னு சொன்னா எப்படி?!
சரி..சரி.. டி.வி. சீரியல் பார்த்தே ஆகணும்னு இனிமே ஒத்த காலிலே நிக்க மாட்டேன். கட்டை அவிழ்த்து விடுங்க.
காலுக்கு தங்கத்துல கொலுசு போடுடான்னா... இரும்புல செயின போட்டு கட்டி வச்சிட்டுயே.... இது உனக்கே நியாயமா?
"இது டாட்டா ஸ்டீல் தயாரிப்பு! யானை பலம் வாய்ந்தது!"
யானை நினைக்குது : "ம்க்கும் விளம்பரம் டொம்ப முக்கியம்!"
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
"தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி" ன்னு அவளைப் பார்த்துப் பாடினதை எங்கப்பன்கிட்ட வந்து போட்டுக் குடுத்துட்டாளே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
ஆண் யானை : "அட! சும்மா அத்துகினு வாம்மே! அந்த சங்கிலி 23ம் புலிகேசி அரண்மனை கொல்லன் செஞ்சது"
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
ஆமாம், செயின போட்டு கட்டிட்டா மட்டும் நான் ஓடிட மாட்டேன்னு நினைப்பா? ஒரு வேள தங்கத்துல போட்டா...?
பெங்கலூருலிருந்து சுமதி
என் இடுப்பு சைசுக்கெல்லாம் அரைஞான் கயிறு கிடைக்காதாம்ல!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
கடவுளே... இந்த மனுசங்கலுக்கு கூட சுதந்திரம் கிடைச்சாச்சு... ஆனா எனக்கு எப்போ தான் கிடைக்குமோ? தெரியலயே....
பெங்கலூரிலிருந்து பாண்டுரங்கன்..
ஏம்பா எலி பேச்சைக் கேட்டுகிட்டா என்னைக் கட்டி வெச்சீங்க?
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
சந்தைக்குப் போகணும்! ஆத்தா வையும்! அவுத்து வுடு!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
இந்த மனுஷப் பயலுவ யானை பலம் யானைக்கே தெரியாதுன்னு அடிக்கடி
சொல்றாங்களே! நெசம்தானோ!
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
அட! நம்புங்க அண்ணாச்சி! சத்தியமா நாங்க வெளி நடப்பெல்லாம் செய்யமாட்டோம்! கட்டை அவுத்து விடுங்க!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
தங்க சங்கிலியில் கட்டிப்போட்ட மட்டும் எனக்கு என்ன சந்தோஷமா?
சென்னையிலிந்து நா.ஜெயசங்கர்
எனக்கு கால்கட்டு போட்டுட்டாங்க
ஆபிஸில் இருந்து சந்தோஷ் :))
எனக்கு கால்கட்டு போட்டுட்டாங்க
ஆபிஸில் இருந்து சந்தோஷ் :))
என்ன இது என்னோட(யானை) படத்தைப் போட்டும் துளசி, பொன்ஸ் எல்லாம் காணோம்!
புளூ கிராஸ்ல இருந்து யாராச்சும் வருவாங்களா? வந்தா நமக்கு பிரியாணி வாங்கித் தரும்படி ஏற்பாடு செய்யச் சொல்லணும்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
இந்த குங்குமத்துல நம்ம நிலைமையைப் பார்த்தாவது மேனகா காந்தி வருவாங்களா?
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
சிக்கன் குனியா வந்ததுலேர்ந்து முழங்காலெல்லாம் வலி! சங்கிலியைக் கொஞ்சம் அவுத்து விட்டா தேவலை!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்னு! இறந்தாலும் ஆயிரம் பொன்னு ன்னு அடிக்கடி சொல்றாங்கிய! இந்த சங்கிலியால கால்ல ஆனதென்னவோ புண்ணு!
நாமக்கல்லில் இருந்து கபீர்முகம்மது
அல்வா வாங்கி வந்து கொடுத்துட்டு அசந்திருந்த நேரத்துல கட்டிப் போட்டுட்டானே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
நம்பளோட கள்ளக்காதல் விவகாரம் தெரிஞ்சி போச்சோ!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி!
என் கலருக்கு மேட்சா புது டிசைன்ல செயினு ஏதாச்சும் வந்திருக்கான்னு விசாரிச்சு சொல்றீங்களா?
எக்ஸேஞ் ஆஃபர்ல கொடுத்துடலாம்னு இருக்கேன்!
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
தேங்காயைப் போல கருத்துக்கள் சிதறிக்கிட்டிருக்க........
கடேசீல இப்படி கட்டி வச்சுட்டீங்களே கவுதம் சார்!
கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலருன்னு மாளவிகா நம்மளைப் பாத்தும் பாடுவாங்களோ!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
அவுத்து உடுங்கப்பா என்னை! ஒரு கை பார்க்குறேன்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
(இதுக்கு மேல போட்ட கமெண்டெல்லாம் என்ன ஆச்சி?)
இன்னிக்கு வெள்ளிக்கிழமையா? கடைசி போட்டின்னதும் ஒரு நாள் முன்கூட்டி வந்தாச்சு போல.
கொஞ்சநேரம் வேற வேலையா இருந்து வந்தா இங்க போட்டி!
அதுக்குள்ள 30 ஸ்கோர்?
இப்பதான் வலைப்பதிவுலகம் இரண்டு கூறா அடிச்சுக்குதே? அது உங்க வரையில் வந்தாச்சா?
பின்னூட்டம் நூற்றுக்கு மேல வந்தாலும் படைப்புகள் அவ்வளவு இருந்தாலும் எழுதறதே ஒரு பத்து பேர்தானே? மத்தவங்களை யாராவது எழுத வேண்டாம்னு சொன்னாங்களா என்ன?
அதுல வேற லக்கிக்கு லக் இருக்கு, திறமையும் இருக்கு- அதுக்கு மேல ஆர்வமும் இருக்கு.
ஆர்வம் இருக்கிறவங்க யார் வேணாலும் கலந்துக்கோங்க. யாரும் காலைப்பிடிச்சு இழுக்கப் போறதில்லை.
அதுக்காக மாறிமாறி காலைவாராம இருங்களேம்பா?
(பிரச்சினையுள்ள இடங்களாப்பாத்து இன்னிக்கு மூக்கை நுழைக்கிறேன். யாரு முதுகில் டின் கட்ட போறாங்களோ?)
போட்டிக்கு அப்பறமா வாரேன். bye!
சிபி
உங்க கமென்ட்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு
எனது ஓட்டு உங்களுக்கே :-)
பொறுத்தது போதும்
பொங்கியெழு
கனத்த சங்கிலிகள் - உன்
கால் தூசிக்கு சமம்
முயற்சித்தால் உண்டு
சுதந்திரம்!!!
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்
டேய் கட்டதுரை,
எங்க சங்கத்து ஆளை கட்டிப்போட்டது யாரு?
சென்னையிலிருந்து கைப்புள்ள
ஒரு குறும்பா!
விடுதலை விழாவில்
யானைகளின் அணிவகுப்பு-
விலங்கிட்ட கால்கள்!
-தமிழ்நாட்டிலிருந்து சிந்தாந்தி
அடப்பாவிங்களா! நீங்க உடைக்குற சிதறு தேங்காய் பொறுக்க நானும் போட்டிக்கு வந்துடுவேன்னா கட்டி வெச்சீங்க?
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
வேணாம்! விட்டுடு! அழுதுடுவேன்!
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
ஆரம்பிச்சதும் நான்தான்! ஐம்பது அடிச்சதும் நான்தான்! கட்டிப் போட்டு வெச்சாலும் கலக்குவம்ல!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
கால்ல கட்டுப் போட்டுட்டே ரைட்டு! என் கையில கட்டுப் போட்டுப் பாரேன்! மவனே தில் இருந்தா!
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
//எனக்கு கால்கட்டு போட்டுட்டாங்க //
வாழ்த்துக்கள் சந்தோஷ்! உங்களுக்கும் கட்டா?
கோவையிலிருந்து யானை சொன்னது!
பட்டை போடுறதா நாமம் போடுறதான்னு முடிவு பண்ணிட்டுதான் அவுத்து விடுவாங்களாம்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
கால்கட்டுப் போட்ட பிறகும்
அடுத்தவளுக்கு அலையிறியா?
சங்கிலியால உனக்கு
கால்கட்டு போட்டாத்தான் சரிப்படுவே!
நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடி வா! நீ இருக்கும் இடத்துக்கு என்னால வரமுடியாது. ஏன்னா என்னைத்தான் கட்டிப்போட்டிருக்காங்கள்ள!
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
(இல்லாட்டி மட்டும்,...னு நிலா நினைக்குமோ!)
லக்கி லுக் பாக்குறதுக்குள்ள நாமக்கல் சிபி களத்துல பூந்துட்டாரே! ஓடிப்போய் லக்கியார்கிட்டே சொல்லலாம்னா கட்டி வெச்சிட்டாங்கப்பா!
யானை கட்டிப் போரடிப்போம்னு சொன்னது இதைத்தானா? தனியா கட்டி வெச்சி போரடிக்க வெச்சிட்டீங்களே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
கட்டிப் போட்டிருக்குற தைரியத்துல ஸ்பூன்ல பால் குடுக்க வர்றாம் பாரு! இவனை...!
நாமக்கல்லில் இருந்து கபீர் முகம்மது
ஆவி அம்மணி வரும் நேரமாச்சு! அவுத்து வுடுங்க! ஓடிப் போயிடுறேன்!
எங்களைக் கலந்தாலோசிக்காமல் கடைசிப் போட்டி என்று அறிவித்த கௌதம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
போட்டி நல்ல இருக்கு!
லெக் பீஸை நமக்கே நமக்குனு ஒதுக்கியிருப்பீங்க போல!
நன்றி கௌதம்ஜி!
புதுசா டாஸ்மார்க் ஓப்பன் பண்னியிருக்காங்களாம் திருவல்லிக் கேணியில! அவுத்து உட்டா அப்படியே காலாற நடந்து போவேன்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
//உங்க கமென்ட்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு
எனது ஓட்டு உங்களுக்கே //
நிலாச்சாரம் மிக்க நன்றி!
(75 ஆச்சா?)
கடைசிப் போட்டின்னு சொல்லி காலை வேற கட்டி வெச்சிட்டாங்க! பின்னிப் பெடலெடுக்கலாம்னு பார்த்தா முடியலையே!
**** போட்டிக்கு அல்ல****
லக்கி,
எங்கபா ஆளை கானோம், வாங்க பாஸ்ஸு, நீங்க வந்தா தானே தூள் கிளப்பும் தடாலடி
அன்புடன்,
ஜெய்
கருத்து கந்தசாமி வந்தா ஏதாவது கருத்து சொல்லி நம்மை ரிலீஸ் பண்ணுவாரு!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
யோவ்! சங்கிலிய கொஞ்ச நேரம் அவுத்து வுடுய்யா! ஷார்ட்ஸை போட்டுக்குறேன். எல்லாரும் பாக்குறாங்க! வெக்கமா இருக்கு!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
சத்தியமா எனக்கு
"மதம்" பிடிக்காதுங்க, சங்கிலியை கொஞ்சம் அவிழ்த்துவிடுங்க ப்ளீஸ்!!!
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்
'Mada'veriyargalai puddikka sonna enna pudichu katti pottutan intha padupavi.
srinivas from dubai
Intha sangilikkalam attangura aala nanu!
Po Rasa Po Rasa Neram varumpothu Naan Kodukkiren Unakku 'Kili'
Srinias from Dubai
அவனுக்கு மனசிலே கிலி....
எனக்குக் காலிலே சங்கிலி!
சிவஞானம்ஜி/சென்னை-4
சிந்திச்சுப் பார்த்து திறமையைக் காட்டு;
சங்கிலி போட்டுத் தடுக்க வராதே!
சிவஞானம்ஜி/சென்னை-4
கால்ல கொலுசு மாட்டி யார் போனாலும்
பின்னாடியே போறியா?
இந்த இரும்புக் கொலுசை கால்ல மாட்டி
கம்னு கெட!
பந்தம் ஒரு கைவிலங்கு நான் போட்டது - அதில்
சொந்தம் ஒரு கால்விலங்கு நீ போட்டது'ன்னு கண்ணதாசன் சொல்வாரே
அந்த விலங்கு இதுதானா - யானை ஓடிப் போயிராம சொந்தமாவே இருக்கட்டும்கிறதுக்காக இதைப் போட்டுவிட்டிருக்கிறாங்களா - கஷ்டம்டா சாமி!
கோவையிலிருந்து சுப்பையா
அறுத்தெறியும் ஆற்றலுண்டு.
அடங்கிக்கிடக்கிறது ஆனை.
ethanai sangili pottalum vittu vidathu karuppu. vegathu avaal paruppu
ithuvum photoku commentthan
RASI FROM CHENNAI
பெண் யானை ஆண் யானையிடம் - " உங்களுக்கு ஒரு கொலுசு வாங்க கூட தெரியல! இப்படியா சலங்கை இல்லாம வாங்கிட்டு வருவாங்க?"
Priya, California
கருப்பு யானைக்குக் கருப்பு சங்கிலி;
அப்போ சிவப்பு யானையானால்...?
சிவஞானம்ஜி/சென்னை-4
எப்போதாவது மதம் பிடிக்கும் யானைக்கு எப்பொழுதும் சங்கிலி;
எப்பொழுதும் 'மதம்'பிடித்த தலைகளுக்குக் காத்திருக்கு கயிறு!
ஆடத்தெரியாதவளுக்கு 'அரங்கம் கோணல்';
ஓடத்தெரியாத எனக்குக் காலில்
சங்கிலி!
கருப்பு யானைக்கு கருப்பிலே சங்கிலி;
அப்போ சிவப்பு யானைக்கு...?
சங்கிலி கறுப்பன்.
பாரதியை என் தாத்தன் அடித்ததால் எனக்கு தண்டனையா?
"பூனைக்கு மணிக் கட்டிய எதிர்க்கட்சித் தலைவனே!
எங்கள் தலைவர் யானைக்கு கால் கட்டிருக்கிறார் பார்த்தாயா?"
அரசியல் மேடையில் இந்த புகைப்படத்துடன் தொண்டன்.
"அவன் மட்டும் மதம் பார்ப்பானாம். நான் கொண்டால் தப்பா?"
யானைக்கு விரல் இல்லை.
கால மட்டும் காட்டிட்டு 'காண்டாமிருகம்'னு சொல்றான் பாரு.
இது போட்டிக்கானதல்ல=
மீண்டும் அதே விஷயத்தை தொடுவதற்கு மன்னிக்கவும்.
இது படைப்புத் திறனை வெளிப்படுத்தும் போட்டியே தவிர வினாடிவினா போட்டியல்ல. இங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட பதில் அந்த கேள்வியை உருவாக்கும் நண்பர் கௌதமிடம் கூட கிடையாது. படைப்பாளியின் கற்பனை -வானம் வரை எல்லையுள்ள கற்பனைத்திறன்- தான் இந்தப் போட்டியின் பதிலை -படைப்பை - உருவாக்குகிறது. அதை சில நடுவர்கள் - அதுவும் நீதிபதிகளாக அல்ல- வாசகர்களாக மாறி - தேர்ந்தெடுக்கிறார்கள்.
முக்கியமாக இது பரிசுக்கான போட்டியல்ல. இது படைப்புக்கான போட்டி. இதனாலேயே ஏற்கனவே பரிசு பெற்று விட்டார் என்று எவரையும் ஒதுக்குவது சிறந்த படைப்பு ஒன்றை இழக்க காரணமாகலாம். ஆகச்சிறந்த படைப்பை தேர்வு செய்ய இது தடையாகக்கூடும். இதைப் புரிந்து கொள்ளாமல் உள்ளே வராமலே புகைவிடுபவர்களை என்ன சொல்ல...
ஆனால் குங்குமத்தில் பிரசுரம் என்ற விஷயத்தை விடுத்து பார்த்தால், முந்தைய சினிமா போன்ற பரிசாக இருந்தால் மாறிமாறி பலருக்கும் வாய்ப்பு வழங்குமுகமாக முதல் பரிசு பெற்றவர் அடுத்த மூன்று போட்டிகளில் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார் என்று ஒரு விதிமுறை வகுத்தாலே போதும்.
இது தடாலடி போட்டி தொடர என் ஆலோசனை!
புதுசா கல்யாணம் ஆனதால, கொலுசு போட்டு விட்டுட்டான் இந்த பூசாரி. பெண்ணடிமைத்தனமா? ஆணாதிக்கத்தனமா?
கரிகாலச்சோழன் வெள்ளையனிடம் மாட்டியபோது எடுத்தப் புகைப்படம்.
அமைதியா இருக்குற என்னை சங்கிலி போட்டு கட்டி வெச்சிட்டீங்க!
சிக்கன் குனியாவைப் பரப்பும் தீவிரவாதிக் கொசுக்களை இப்படி சங்கிலி போட்டுக் கட்ட முடியுமா?
நாந்தான் 'சங்கிலிக் கறுப்பன்'னா எவனுமே நம்ப மாட்டேங்கறாங்க. அதான்! ஹி ஹி!
கணினிக் குறும்புன்னு, தேன்கூடுப் போட்டிக்கு இந்தப் படத்தை அனுப்புறான் பாரு.
கொஞ்சம் பொறுமையா இருங்க யானையாரே!
உங்க உருவம் பெருசு! கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஃபோட்டோ எடுக்க முடியும்.
இந்தப் போட்டி ஏதோ சங்கிலித் தொடராம்! அதைத்தான் கெளதம் ஸிம்பாலிக்கா சொல்றாரு.
தன்னை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று யானைகளின் நூதனப் போராட்டம்.
இந்தப் படத்தில் உள்ளவர், 8-1-1999 அன்று காணாமல் போனார். அவர் காணாமல்ப் போன அன்று படத்தில் குறிப்பிட்டதுபோல் இரும்புச் சங்கிலி அணிந்திருந்தார். கண்டுப்பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்கச் சன்மானம் வழங்கப்படும்.
நடிகைகள் எல்லாரும் பிஸியா இருக்குறதால, எனக்கு சான்ஸ் கொடுத்திருக்காங்க, அந்த நகைக்கடக் காரங்க.
'யானைகள் விடுதலை'ன்னு சொல்லி என்னைப் படம் எடுத்துட்டு, இப்படிப் பண்ணிட்டானே இந்த கெளதம் பய!
எனக்கு விரல் இல்லை. ஆனால் நகம் உண்டு. நான் யார்?
கறுப்பர்கள் விடுதலைக்காக நெல்சன் மண்டேலா இந்தப் படத்தை வச்சித்தான் பிரச்சாரம் பண்ணினாராம்!
முழுசா எடுத்தா 'தொப்பைத் தூக்கி'ன்னு எல்லாரும் கிண்டல் பண்றாங்க. அதான் கால மட்டும் எடுங்கன்னு சொல்லிட்டேன்.
அப்பாடா! வேலை முடிஞ்சது!
- வெற்றிக் களிப்பில் எறும்பு.
உன்னடியில் சரணடைந்தேன்.
- பக்திப் பரவசத்தில் இரும்புச் சங்கிலி.
பலக் கவிதைகளைத் தூண்டுமாம் இப்படம். மனப்பால் குடிக்கிறான் கெளதம்.
(சும்மா ஒரு ஃப்லோவுக்காகப் போட்டேன். தப்பா நெனச்சிக்காதீங்க கெளதம்.)
மறுமொழி எழுதி எழுதி கை வழிக்கிறது. 'கொஞ்ச நேரம் அத அவுத்து உடுங்கப்பா!'
இந்த சூ-லேஸு மட்டும் எப்பவுமே அவுர மாட்டேங்குது!
"ஏன்னா.. வைர மூக்குத்தி வேணும், வைரத் தோடு வேணும்னா உங்க கிட்ட கேட்டேன்? நாலு சவரன்ல ஒரு தங்கச் சங்கிலி வேணும்னு தானே கேட்டேன்?
'உன் கழுத்துக்கெல்லாம் தங்கச் சங்கிலி வாங்கி மாளாதுடீ! உன் உடம்பு இருக்கிற சைஸ்-ல காலுக்கு வேணா வாங்கித் தரேன்'னு சொல்லி இப்படி செஞ்சிட்டேளேன்னா!"
ஏம்பா? இந்த ஏர்வாடி தீ விபத்துக்கப்புறம் யாரையும் சங்கிலியாலக் கட்டிப்போடக்கூடாதுன்னு சட்டம் போட்டாங்களே!. அதை இன்னும் நடைமுறப் படுத்தலையா?
விடாது கறுப்பை தடைப் பண்ணிட்டாங்களாமே இந்த தமிழ்மணத்தில். அதுக்குத்தான் இந்த விளம்பரமோ?
ஐ! யானைக்கு மூனு விரல்தான் இருக்குது!
ஏதோ 'சங்கிலி'ன்னு ஒரு புதுப்படமாம்! அதுக்குத்தான் இந்தப் போஸ்ட்டர்.
எப்போதுமே ஒரே இடத்தில் நிற்கும் கட்டிப்போட்ட யானை மாதிரி, எப்போதுமே 'லக்கிலுக்'கிற்க்கே பரிசுகள் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்ததால், 'தடாலடி', தடைப்பட்டுப் போகிறது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அப்போ 100ம் நான்தானா?
தளையும் தடையும் தடுத்திடுமா என்ன
தறி கெட்ட மனத்தினை.
>> வேந்தன் ஹைதிராபாத்திலிருந்து
கட்டியது காலை மட்டும் தான்!
என் மனதையல்ல!
-சென்னையிலிருந்து தமிழி.
எங்கே செல்லும் இந்தப் பாதை!
யாரோ! யரோ! அறிவாரோ!
-சென்னையிலிருந்து தமிழி.
தலைக்கு முகபடாம்;
காலுக்கு சங்கிலி....
என்னா மனுசங்கடா நீங்க!..
(முகபடாம்=யானையின் தலையில் அணிவிக்கப்படும் அலங்காரத்துணி)
சிவஞானம்ஜி/சென்னை-4
ஏமிரா! தேவர் பிலிம்ஸ் இல்லாட்டியும்,
ராமநாரயணன் கிட்ட சொல்லிருவேன்.
லக்க லக்க லக்க!
-சென்னையிலிருந்து தமிழி.
யானை சாதகத்துல ஏதும் மனுஷதோஷம் இருந்திருக்கும் !?
அதுக்காடா கட்டிப்போடறது ?!
-சென்னையிலிருந்து தமிழி.
கைகள் கட்டப்பட்டால் தானா புரட்சி பிறக்கும் !?
எங்கள் கால்கள் கட்டப்பட்டாலும் !
-சென்னையிலிருந்து தமிழி.
அவுத்து விடுங்கப்பா! இன்னிக்கு விநாயக சதுர்த்தியாமா!?
-சென்னையிலிருந்து தமிழி.
அங்சுத்துக்கு அடங்காத களிறு நான் அடங்கி நிற்பது, 'நான் கட்டப்பட்டிருக்கிறேன்' என்ற உன் நம்பிக்கைக்காக!
-சென்னையிலிருந்து தமிழி.
யானை அடித்து போரிடும் காலம் இல்லையென்றா கட்டிப்போட்டாய்.
-சென்னையிலிருந்து தமிழி.
கிளிக்கு ஜோஸ்யம்!குதிரைக்கு வண்டி!
மாட்டிற்கு ஏர்!என்றெல்லாம் என் இனத்திற்கு வேலை தந்தமனிதா!
என் கையில் மட்டும் பிச்சைத்தட்டை தந்தாய்? எனக்கேட்டதாலா கட்டிபோட்டாய்.
மதம் மாறமாட்டேன் அவிழ்த்து விடு!
-சென்னையிலிருந்து தமிழி.
சுதந்திரதின அணிவகுப்பில்
நாந்தான் முதலில் வருகிறேன்!
சிவஞானம்ஜி/சென்னை-4
சங்கிலி இல்லே; சத்தியம்தான் என்னைக் கட்டுக்குள் வைக்குது...
சிவஞானம்ஜி/சென்னை-4
கட்டு படுத்தலாம்
மதம் கொண்ட யானையை
ஆனால் மனிதனை?
யானைக்கும் அடி சறுக்கும்னு சொல்றாங்க
ஆனா, தெரியாம இடிச்சிட்டேன்னு
இப்பிடி கட்டி போட்டுட்டாரே?
சங்கிலி தொடரை இப்பிடி
சங்கிலியால் நிறுத்தலாமா?
தடாலடி போட்டிய தான் சொல்றேன்
யானைக் கட்டி போர் அடித்த நாடு -
எங்கள் தஞ்சை நாடு
போங்க சார், யானையை கட்டி வைச்சா அதுக்கு bore தான் அடிக்கும்
ஆணுக்குதான் கால்கட்டுப் போடுவாங்க
ஆணைக்குமா?
சங்கிலி பொன்னாக இருந்தாலும்
இரும்பாக இருந்தாலும்
சங்கிலி சங்கிலிதான்
கட்டுடைத்துப் வெளிப்படுக
வீறுகொண்டெழுக
என்ன சொல்லி என்ன செய்ய
மனத்திண்மை இருந்தாலன்றோ
நம் பலம் நமக்குத் தெரியும்
நம் பலம் நமக்குத் தெரியும்
கால்கட்டு..........?
"ஜீவகாருண்யத்துக்கு வேட்டு!"
பாகன் :
ஆப் ஏலம் ஐலசா...
கும்தாஸ் ஐலசா...
எடுத்துப் போடு ஐலசா...
தூக்கிப் போடு ஐலசா...
யானை (மனதுக்குள்) :
கால்ல கட்டு ஐலசா...
கயட்டிப் போடு ஐலசா...
பாகன் :
ஆப் ஏலம் ஐலசா...
கும்தாஸ் ஐலசா...
எடுத்துப் போடு ஐலசா...
தூக்கிப் போடு ஐலசா...
யானை (மனதுக்குள்) :
கால்ல கட்டு ஐலசா...
கயட்டிப் போடு ஐலசா...
--போட்டிக்காக அல்ல---
கட்டப்பட்டிருப்பது
யானையின் கால் அல்ல...
லக்கிலுக்கின் கை :-)
--போட்டிக்காக அல்ல---
கட்டப்பட்டிருப்பது
யானையின் கால் அல்ல...
லக்கிலுக்கின் கை :-)
--போட்டிக்காக அல்ல---
கட்டப்பட்டிருப்பது
யானையின் கால் அல்ல...
லக்கிலுக்கின் கை :-)
பட்டையா?
நாமமா?
வடகலையா?
தென்கலையா?
அதெல்லாம் தெரியாது....
சங்கிலி மட்டும் நிச்சயம்!
நா ஆசி தந்தால்
நீ காசு தருவியா?
அவுத்து வுட்டான்.. அம்புட்டுதேன் !காலடியில இருக்குற பத்து ரூவாயையும் அபேஸ் பண்ணிக் குடிச்சிடுவானே என் முதலாளி....
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
"இன்று இப்படம் கடேசி"யாம்ல... நான் எப்டி போய் பார்ப்பேன் அண்ணாச்சி? சொல்லுங்க....
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
சீக்கிரம் கிளம்பு...
கோவிலுக்குப் போகணும்..
பூஜை முடிஞ்சதும் ரோட்டுக்குப் போகணும்...ஆசி வழங்கணும்..
அப்பதான் நீ டாஸ்மார்க் போகலாம்!
(பாகனிடம்)
என்னயக் கூடத் தான் பெங்களூருல கூப்டாக.. ஈரோட்டுல கூப்டாக.. சென்னையில கூப்டாக.. கோயமுத்தூருல கூப்டாக... ஆனால எங்க போக விடுறானுக.. கால்ல மட்டும் சங்கிலி இல்லைன்னா இந்நேரம் பிச்சிக்கினு போயிருப்போம்ல.............
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
மனுசனுக்கு ஒரு காலம் வந்தா
யானைக்கும் ஒரு காலம் வரும்..
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
ம்ஹும்.. சங்கிலிய மட்டும் நல்லா கழுவி சுத்தமா வச்சிருக்கான்.. என் காலைக் கழுவ கொஞ்சம் தண்ணி கொடுக்கக் கூடாதா?
- வந்தாச்சு பொன்ஸ் :)
கால்ல இருக்க வரைக்கும் தான் சங்கிலி..
அவுத்து விட்டா ஆயிடுவேன்
கங்குலி...
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
கால்சட்டை தானேடா கேட்டேன் நான் உன்கிட்ட...
அளவெடுக்கத் தான் போறேன்னு நம்பி.... உங்கிட்ட கால நீட்டினேன்..
மாப்பூ.. வச்சிட்டியே ஆப்பூ....... ம்ம்ம்ம்...
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
அண்டம் அதிர
ஒரு நடை நடந்தால்போதும்
அனைத்துச் சங்கிலிகளும்
தூள்தூளாகும்
அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன்
அன்புக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன்
வாய்பேசாத எனக்கே இவ்வளவு பெரிய சங்கிலி என்றால்
வாய்ஜாலத்திலேயே காலந்தள்ளும்
உனக்கு எவ்வளவு பெரிய சங்கிலி கட்டுவது?
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
ஹய்யோ ஹய்யோ.. சங்கிலியோட ஒரு முனைய என் காலுல கட்டினவன்... இன்னோரு முனைய அப்டியே விட்டுட்டுப் போயிட்டானே... இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்காங்களே.. நானும் எவ்வளவு நேரம் தான் மாட்டிக்கிட்ட மாதிரியே நடிக்கிறது.. இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆமா.....
பெங்களூருல இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
நான் பண்ணுன சத்தியத்துக்கு எங்க மருவாதி இருக்கு? கால்ல இவ்ளோ பெர்சா கட்டுப் போட்டாங்கள்ல...
நம்ம மேல இவ்வளவு தான் நம்பிக்கை போல.. ஹும்......
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன் மு.
* இது போட்டிக்கு அல்ல *
நானும் ஒரு போட்டியாளன் என்ற முறையில் என் கருத்துக்களைத் தெரிவிக்க விழைகிறேன் இங்கே....
கெளதம் சொன்னது சரி.. யாரையும் தடுப்பது தவறு.. திறமை எங்கிருந்தாலும் அதற்கு மதிப்புக் கொடுத்து ஊக்குவிப்பதே சாலச் சிறந்தது..
உண்மையைச் சொன்னால்.. லக்கிலுக், நாமக்கல் சிபி, வீ த பீப்பிள், சிவஞானம்ஜி (இன்னும் யாராவது விடுபட்டிருந்தா மன்னிச்சுக்கங்கப்பா..) போன்றோர் தங்களது {கற்பனை, திறமை, முயற்சி} - ஐ அள்ளி வீசுவதால் படைப்பு வெள்ளம் பெருகுகிறது...
அவர்களின் படைப்புக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தையும் பொறுத்தே தெரிவு செய்யப்படுகின்றனவே தவிர வெறும் எண்ணிக்கையை மட்டும் வைத்து அல்ல.. பொறுமையாக யோசித்தால் விளங்கும்!!
எனவே இதனை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு தங்கள் திறனை வெளிப்படுத்தினால் போட்டியின் தரம் இன்னும் அதிகரிக்குமே...
உண்மையாகச் சொன்னால்... நான் இம்முறை அதிகமாக எண்ணிக்கையை அனுப்பியதற்கு மேற்கூறிய காரணிகளே காரணம்..
கடைசியாப் பார்த்தா போட்டி நேத்தைக்கு அப்பு.. ;-( இன்னைக்கில்ல....நான் இன்னைக்குன்னு நம்பி..............
எக்குத்தப்பா சும்மா எடுத்து வுட்டேன்.. கடைசியாத் தான் தேதியப் பாத்தேன்....
பரவால்ல அப்பூ..... ஒரு சந்தோசம்.. கொஞ்சம் ஏதோ மூளையைக் கொஞ்சம் கசக்கினேன்ல... அதேன்.....
கெளதம்... நீங்கள் தங்கள் முடிவை மறுபரிசீலணை செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து....!!!
நன்றி!
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
hello gautham.. u are the first person i know to post in tamil..good job..keep it up..sry i cannot write in tamil in my computer.. :D
ஆண்டவனை பூஜிக்க வந்த எனக்கும் இருக்கு ஒரு கட்டு!
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்
ஆண்டவனை பூஜிக்க வந்த எனக்கும் கட்டினார்கள் ஒரு சரடு!
சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்
போட்டி நேரம் எப்போ முடியுது?
நான் இட்ட சில பின்னூட்டங்கள் வெளிவரவில்லையே?
* இது போட்டிக்கு அல்ல *
//நானும் ஒரு போட்டியாளன் என்ற முறையில் என் கருத்துக்களைத் தெரிவிக்க விழைகிறேன் இங்கே....
கெளதம் சொன்னது சரி.. யாரையும் தடுப்பது தவறு.. திறமை எங்கிருந்தாலும் அதற்கு மதிப்புக் கொடுத்து ஊக்குவிப்பதே சாலச் சிறந்தது..
உண்மையைச் சொன்னால்.. லக்கிலுக், நாமக்கல் சிபி, வீ த பீப்பிள், சிவஞானம்ஜி (இன்னும் யாராவது விடுபட்டிருந்தா மன்னிச்சுக்கங்கப்பா..) போன்றோர் தங்களது {கற்பனை, திறமை, முயற்சி} - ஐ அள்ளி வீசுவதால் படைப்பு வெள்ளம் பெருகுகிறது...
அவர்களின் படைப்புக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தையும் பொறுத்தே தெரிவு செய்யப்படுகின்றனவே தவிர வெறும் எண்ணிக்கையை மட்டும் வைத்து அல்ல.. பொறுமையாக யோசித்தால் விளங்கும்!!
எனவே இதனை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு தங்கள் திறனை வெளிப்படுத்தினால் போட்டியின் தரம் இன்னும் அதிகரிக்குமே...
உண்மையாகச் சொன்னால்... நான் இம்முறை அதிகமாக எண்ணிக்கையை அனுப்பியதற்கு மேற்கூறிய காரணிகளே காரணம்..
கடைசியாப் பார்த்தா போட்டி நேத்தைக்கு அப்பு.. ;-( இன்னைக்கில்ல....நான் இன்னைக்குன்னு நம்பி..............
எக்குத்தப்பா சும்மா எடுத்து வுட்டேன்.. கடைசியாத் தான் தேதியப் பாத்தேன்....
பரவால்ல அப்பூ..... ஒரு சந்தோசம்.. கொஞ்சம் ஏதோ மூளையைக் கொஞ்சம் கசக்கினேன்ல... அதேன்.....
கெளதம்... நீங்கள் தங்கள் முடிவை மறுபரிசீலணை செய்யலாம் என்பது என் தாழ்மையான கருத்து....!!!
நன்றி!
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.//
ரிப்பீட்டு!!!
லக்கி,
வாங்க பாஸ்ஸு, நீங்க இல்லாமா போட்டியா, ரொம்ப கொடுமையா இருக்குபா... இவங்க எப்பயுமே இப்படிதா இதுக்காக வா கையை எல்லாம் கட்டிக்கிட்டு, எழுதுற கையும், ஆடற கால்யையும் அடக்கமுடியுமா??
நட்புடன்,
ஜெய்
//கடைசியாப் பார்த்தா போட்டி நேத்தைக்கு அப்பு.. ;-( இன்னைக்கில்ல....நான் இன்னைக்குன்னு நம்பி..............
எக்குத்தப்பா சும்மா எடுத்து வுட்டேன்.. கடைசியாத் தான் தேதியப் பாத்தேன்....
பரவால்ல அப்பூ..... ஒரு சந்தோசம்.. கொஞ்சம் ஏதோ மூளையைக் கொஞ்சம் கசக்கினேன்ல... அதேன்.....//
இல்லை சரவணன்..
சனிக்கிழமை(9-12-06) மாலை 5 மணி வரை வரும் கமெண்ட்டுகள் ஆட்டைக்கு சேர்த்துக்கொள்ளப்படும்.
மன்னிக்கவும் சிவஞானம்ஜி அவர்களே..
கணிணியில் உட்காராததால்தான் இன்றைய கமெண்ட்டுகளை உடனுக்குடன் பதிவில் ஏற்ற இயலவில்லை.
அவுத்து வுடுங்கப்பா! இந்தியாவுக்காக நானாவது போய் விளையாடிப் பார்க்குறேன்!
எத்தினி நாளைக்குத்தான் சேவாக், டெண்டுல்கர், கங்குலி இவங்களையே நம்பிகிட்டு இருக்குறது!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
இப்ப நடந்த சர்வேல குங்குமம்தான் நெம்பர் ஓண்ணாம்! ஓடிப்போய் சாருப்ரபா சார்கிட்டே சொல்லலாம்ணு பார்த்தா....!
என்ன.........!?
விநாயகர் சிலையை உடைச்சிட்டாங்களா?
அவுத்து விடுங்க என்னை முதலில்!
பார்த்துடறேன் ஒரு கை!
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
ம்ஹூம். பாடி ஸ்ட்ராங்க்தான். ஆனா பேஸ்மெண்ட் வீக்கு. அதான் சங்கிலில கட்டியிருக்கேன்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
"கட்டிப் போடுற வரைக்கும் நீ ஏன் சும்மா இருந்தே? ஓங்கி ஒரு உதை கொடுத்திருக்கலாமே"
"கட்டிப் போடுறப்போ அவன் ஒரு வார்த்தை சொன்னான். டேய் இவன் கட்டிப் போட்டுட்டா எவ்வளவு நேரம்னாலும் சும்மா இருக்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்" னுட்டான்.
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
என்ன லக்கியார் இல்லாம தடாலடிப் போட்டியா? நான் ஆட்டைக்கு வரலை! என்னை அவுத்து உட்டுடுப்பா கௌதம்! நான் போயிடறேன்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி!
அடச்சே! காலேஜ் ரோடுல போயி ஃபிகருங்களைப் பார்த்து கமெண்டு அடிச்சிகிட்டிருந்ததை யாரோ வத்தி வெச்சிட்டாங்களே!
கட்டிப் போட்டதுமில்லாம இன்னியோட கடைசின்னு வேற சொல்லிட்டாரே!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
யானை ஒரு பாலூட்டி;தாவர உண்ணி;நிலம்வாழ் விலங்குகளில் மிகப் பெரியது;வலிமை மிக்கது;நீண்டநாள் வாழக்கூடியது(சுமார் 70 ஆண்டுகள்)
யானைகளில்,சாவன்னா யானைகள்,ஆப்ரிக்க யானைகள்,ஆசியயானைகள் என மூன்று சிற்றினங்கள் உள்ளன.
யானைகளுக்கு மட்டுமே தும்பிக்கை உண்டு; தந்தங்கள், யானையின் கடைவாய்ப்பற்களின் நீட்சி
ஆகும்; தந்தங்கள் 10 அடி வரை
வளரக்கூடியவை;அவற்றின் எடை 90 கி.கி வரை இருக்கலாம்.தந்தங்கள்
இல்லா யானை மக்னா எனப்படும்.
யானையின் சினைக்காலம்
22 மாதங்கள். பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் இதுதான். பொதுவாக யானைகள் ஒரு குட்டியையே ஈனுகின்றன;இரட்டைகள்
பிறப்பது மிக அரிது.
இந்தியாவில், 35000 யானைகள் உள்ளதாகவும்,அதில் 5000
யானைகள் மனிதனால் பழக்கப்பட்டவை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
நீரளவு அதிகமுள்ள ஆற்றுப்
படுகைப் பகுதிகளும்,அடர்ந்து வளர்ந்துள்ள புல்வெளிப்பகுதிகளும்,
யானை விரும்பிவாழும் பகுதிகள்; வறட்சிக்காலத்தில் நீர்நிலை மற்றும் உணவு நாடி இடம்பெயர்வதும் உண்டு.
அவை, 10 முதல் 70 யானைகள் சேர்ந்த கூட்டமாகத்தான்
வாழ்க்கை நடத்துகின்றன;வயதான ஒரு பெண்யானை தலைமைதாங்கி
வழிநடத்தும்.
ஒரே கூட்டத்தைச் சேர்ந்த பெண்யானைகளுடன் இனப்பெருக்கம்
செய்ய அக்கூட்டத்தின் ஆண்யானைகளை தலைவி அனுமதிக்காது;ஆண்யானைகளுக்கு
தந்தம் நன்கு வளர்ந்தவுடன்,அவை விரட்டிவிடப்படும்.
யானைகளின் பார்வை மந்தமானது ("மாக்கண்");செவித்திறனும் மோப்பசக்தித்திறனும் வியப்பளிக்கக்-
கூடிய அளவில் உள்ளன!ஆங்கிலேய
ராணுவம் இந்தியர்களின் யானைப்படைக்கு மிரண்டோடியதும்
உண்டு
யானைகள் நன்கு நீந்தும் திறன்
உடையவை;ஒருமணி நேரத்தில்
4 கி.மீ. நடக்கவும், 17 கி.மீ. ஓடவும்
கூடியவை.எடை 7000 கிலோ;
ஒருநாளைக்கு 150 லிட்டர் தண்ணீர்
பருகும்;முக்கிய எதிரி புலிகள்தாம்!
சங்கஇலக்கியம் உள்ளிட்ட பழம்பாடல்களில் யானைகள் பற்றிக்
குறிப்புகள் உள்ளன.
பஞ்சபூதங்களால் ஆன இந்த
உலகமும் பரமாத்மாவும்,பார்ப்பவர்
கண்ணுக்கு எப்படித் தெரிந்தாலும்,
அவை இரண்டும் ஒன்றுதான் எனபதை அறிக:
"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்"
(திருமூலர் திருமந்திரம்)
'யானை இருந்தாலும் ஆயிரம்
பொன்;இறந்தாலும் ஆயிரம் பொன்'.
ஆனால் அவற்றை ஒத்தைரூபாய்க்
காசுக்காக பிச்சை எடுக்கவிட்டானே
மணுசப்பய!
(படத்துக்குப் பொருத்தமாக என்ன வேண்டுமானாலும் எழுதலாம்;அது
எத்தனை வரிகள் வேண்டுமானாலும்
இருக்கலாம்தானே?)
சொன்னா கேளுங்கப்பா! சிலை உடைப்பு விவகாரத்துக்கெல்லாம் நான் போக மாட்டேன்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
குறைஞ்சுது 100வது தேத்தணும்னு இப்படி என்னை கட்டி வெச்சிட்டாரு!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
என்னைக் காட்டி ஏமாத்தி இன்னொருத்தனை(யானையை)க் கூட்டிட்டு வருவாங்க! அப்புறம் அவனுக்கும் இதே நிலைமைதான்!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
கறுப்பு என்பதால்தான்
கட்டி வைத்தீரோ சங்கிலியால்?
வெளுப்பு என்றிருப்பின்
வெளியில் விட்டிருப்பீரோ?
நிறத்திலா உள்ளன
கபடங்களின் பிறப்பிடம்?
அறியாத மானிடரே - உம்
மனத்தில்தான் அந்த பேதம்!
ஐந்தறிவு உடைய எனை
சங்கிலியால் கட்டிவைத்தாய்
ஆறறிவு உடையவனாம்
மானிடனே நீயறிவாய்!
உழைப்பால் உயர்கவென
சான்றோர்கள் சொன்னதுதான்!
அது உன் உழைப்பால் நீ உயர்க
என்பதன்றி பிறருழைப்பால்
நீ உயர்க என்பதல்ல!
ஜாதி பேரைச் சொல்லக் கூடாதுதான்! அதுக்காக தேவர் பிலிம்ஸ் பக்கம் போகக்கூடாதுன்னு கட்டி வெக்குறது சரியா?
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
கட்டியே வைத்தாலும்
காதல் அழிந்திடுமோ!
கண்மணியே காத்திருப்பாய்!
கணப்பொழுதில் வந்திடுவேன்!
பாகன் சற்று அசரட்டும்!
பறந்திடுவேன் உனைத் தேடி!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
உட்டாலக்கிடி கிரிகிரி! இந்தப் பேட்டை தாதா நானு! என்னையவே கட்டி வெச்சிகினியா நீயி? சித்த இரும்மே!
எங்க பேச்சை பசங்க வந்தா நீ தாராந்து பூடுவே பாரு!
கோவையிலிருந்து நாமக்கல் சிபி
இம்மென்றால் சிறைவாசம்
ஏனென்றால் வனவாசம்
கருப்பாய் பிறந்தெந்தன் தவறா?
சிவப்பாய் பிறந்திட்டால்
விருப்பாய் பார்ப்பீரோ?
எத்தனை சங்கிலி என்னை
இருகக் கட்டினாலும்
அத்தனையும் உடைக்க
ஒரு நொடி போதும்.
நில்லென்று சொன்னால் நிற்கவும்
வாவென்றால் வரவும்
நானொன்றும் அடிமையல்ல
அடிமைத் தளைகளை
வேறுடன் அறுக்க வந்த
புதுயுகத்து யானை.
என்னம்மா தங்கச்சி! பாக்கற! உன் அண்ணணைக் கட்டிப்போட்டுடாங்கன்னா!
டேய்! டீமில் இருக்காரு கங்குலி!
மரியாதை கழட்டிடுடா இந்த சங்கிலி!
என் பேரு செயின்ஜெயபாலு!
கட்டிட்டாலும் உதைக்கும்டா இந்தக்காலு!
வரட்டா! ஏய் டண்டணக்கா! டணக்குணக்கா!
யக்கா! நான் மாட்டிகிட்டேன்க்கா!
-சென்னையிலிருந்து தமிழி.
போதுமா! அன்னையே!
'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா!' என ஆணையிடுங்கள் என்னையே!
-சென்னையிலிருந்து தமிழி.
சங்கிலி யானையிடம் பேசுவதுபோலக்கூட யாராச்சும் ட்ரை பண்ணலாமே?!
போட்டிக்கு சேர்த்தியில்லாத வகையில் என் நண்பர் ஒருவர் நேரடியாக என்னிடம் சொன்ன ஒரு கமெண்ட்:
"முதுமலைக்குப் போவணும், அம்மா வையும்! அவுத்து வுடு!"
யானையின் கால் சங்கிலி சொல்கிறது,
"எலேய் மக்கா, அங்க பாரு, அன்னைக்கி உன்னிய செயினால அடிச்சிட்டும் போதாம அந்த செயினயே உன் கால்லயே ஞாபக மறதியா விட்டுட்டு போனானே அந்த சாவு கிராக்கி வரான்,, இப்ப நீ ஒன் திறமய காட்டு பாக்கலாம்..."
யானயும் பாத்துட்டு, "ம்ம்ம்ம் இரு இரு பக்கமா வரட்டும், பாத்துக்கிறேன்.."
அப்போ அந்த பக்கமா வந்த நம்ம வடிவேலு இந்த யானய பாத்துட்டாரு,
"அடடா, நீ அவன் தானா..? எலேய் நான் அன்னைக்கு உன்னிய அடிச்சேன்னு பழி வாங்கறதுக்கு அலயறியா?
"டேய், நான் அன்னிக்கு ஏதோ தெரியாம பன்னிபுட்டேண்டா, மன்னிச்சுடுறா..அதுக்காக அதே செயின கால்லயே கட்டிகிட்டு அலயறியா?
என்ன பாத்தா பாவமா தெரியலயாடா உனக்கு,,,, வேனாண்டா.. விட்டுடுடா...
"அய்யோ.....அம்ம்ம்ம்மா....அம்ம்ம்ம்ம்மா ..... !"
சுமதி, பெங்கலூரிலிருந்து...
முகத்தை காட்டுனா விநாயகர்னு சொல்றானுக! ஆனா சங்கிலியால கட்டிட்டானுக!
படுபாவிகளா!
ஐஸ்வர்யாராய் தங்கச்சி நானில்லை! சொன்னா நம்புங்க!
ஐயப்பனுக்கு மாலை போட்டுருக்கேன். அதான் கருப்புக்கு மாறிட்டேன்.
ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேன்னு சொல்வாங்க!
ஆனா இப்ப சங்கிலியோசை தான் வருது.
நான் கொஞ்சம் கருப்புதான் ஒத்துக்கிறேன்.
ஆனால் உங்க அளவுக்கு இல்லையே!
ரஜினி காந்தும் கேப்டன் விஜயகாந்தும் என்னமாதிரியே கருப்பா கலையா இருக்காங்கலாமே! நெசமாவா?
அல்டிமேட் அஜித்துக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். அது என்னான்னு சொல்லுங்க!
5.2 இது என்னோட உயரம் இல்லீங்க! எடை, டன் கணக்குல.
கால் காட்டுங்கறது இதுதானா?
மனுசனுக்கு யானைக்கால் வியாதி வருது..
யானைக்கு மனுசகால் வியாதி வருமாங்க..
-ரசிகவ் ஞானியார்
சாப்ட்வேர் கம்பெனியில கழுத்துல பட்டையை போட்டுறுக்காங்க..எனக்கு காலில போட்டுறுக்காங்க
- ரசிகவ் ஞானியார்
அட டிசம்பர் 6 வந்தா என்னைய ஏன்ங்க கட்டிப்போடுறீங்க...
இடிச்சவங்களுக்குத்தான்ங்க மதம் பிடிச்சிருக்கு.. எனக்கு இல்லைங்க...நம்புங்கப்பா..
- ரசிகவ் ஞானியார்
//சங்கிலி யானையிடம் பேசுவதுபோலக்கூட யாராச்சும் ட்ரை பண்ணலாமே?!//
...லாமே!
இதோ..
'எள்ளு தான் காயுதுன்னா, எலிப்புளுக்கையும் ஏன் காயணும். உன்னைய கட்டி போடுறேன்னு சொல்லி என்னையும் ஒரே இடத்திலே கட்டிப் போட்டுட்டானுங்களே!" (சங்கிலியின் புலம்பல்!)
Post a Comment