Friday, April 20, 2007

மீண்டும் ஒரு தடாலடிப் போட்டி!

வலை நண்பர்களுக்கு வணக்கம்!

'இடம்: நடேசன் பார்க், சென்னையில் தி.நகர்.
நேரம்: மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை.
நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை.'

என்னடா இதுன்னு கேட்கறீங்களா?
நடக்கப்போற வலைப்பதிவாளர் சந்திப்பில் உங்கள் அனைவரையும் பல நாட்களுக்குப் பிறகு, பலரை முதன்முறையாக சந்திக்கும் ஆவலுடன் இருக்கிறேனாக்கும் நான்!

அதன் விளைவாக திடீர்னு ஒரு தடாலடிப்போட்டி நடத்தி, பரிசு பெறுபவர்களை வலைப்பதிவாளர் சந்திப்பில் அறிவிக்கவும் ஆவலாக இருக்கிறேன்.

போட்டிக்கான தலைப்பு : அம்மா..

(ரொம்ப) சின்ன கதை, கவிதை, கட்டுரை, துணுக்குச் செய்தி, நகைச்சுவைத் துணுக்கு, நிஜ அனுபவம்.. எதை வேண்டுமானாலும் பின்னூட்டத்தில் அனுப்பி இந்த தடாலடிப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

நாளை இரவு 12 மணி வரை போட்டிக்கான படைப்புகளை அனுப்பலாம். ஒருவரே எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

முதல் மூன்று படைப்புகளுக்கு அன்புப் பரிசுகள் வழங்கக் காத்திருக்கிறேன். உங்களிடமிருந்து குறைந்தபட்சம் ஐம்பது படைப்புகளையாவது எதிர்பார்க்கிறேன். ஏமாத்திடாதீங்க மக்கா....

42 comments:

நாமக்கல் சிபி said...

முதலில் காணும் தெய்வம்!

நாமக்கல் சிபி said...

இந்த உலகுக்கு என்னைத் தந்தவள்!
இந்த உலகத்தை எனக்குத் தந்தவள்!

நாமக்கல் சிபி said...

தடாலடிப் போட்டிகளைச் சந்திக்க
தமிழை எனக்குத் தந்தவள்!

நாமக்கல் சிபி said...

நிலவைக்காட்டி சோறு ஊட்டும் நிலா!

நாமக்கல் சிபி said...

பிள்ளை உணவருந்தி
தான் பசியாறுபவள்!

நாமக்கல் சிபி said...

பிள்ளைக்கு உணவூட்டியே
தன் பசியை ஆற்றிக்கொள்பவள்!

நாமக்கல் சிபி said...

அம்மா ஒரு அன்புத் தோழி!

நாமக்கல் சிபி said...

அம்மா!

தலைவா!
இது அ.தி.மு.க அம்மா இல்லையே?

நாமக்கல் சிபி said...

உயிரெழுத்தின் முதலெழுத்து!
ஆம்! என்
உயிர் எழுத்தின் முதலெழுத்து!

உயிரோடு நாம் சொல்லும் முதல் சொல்லே அம்மா!

நாமக்கல் சிபி said...

காமெடியனாகவே
இருந்தாலும்
என்னை எப்பொழுதும்
நாயகனாகவே
பாவிப்பவள்!

(அதாங்க! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)

Anonymous said...

எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

ஆவி அம்மணி said...

ஆவியாய் நான் வந்தாலும்
அஞ்சாமல்
என் அன்பு மகளே என்று
அன்பு காட்டி
அரவணைப்பவள்!

Anonymous said...

ஐ!
அம்மா! தடாலடியார் திரும்ப வந்துட்டாரும்மா!

நாங்க போட்டிக்குப் போறோம்!

வழக்கம்போல உச்சிமோந்து நெட்டி முறிச்சி போட்டிக்கு எங்களை அனுப்பி வையுங்க!

Isaac raja said...

தாயின் வலி நமக்கும் தெரிவதால்தான்,
அழுகின்றோம் நாம் பிறக்கும் போது!

கோ.ஐசக் ராஜா
சென்னை

வினையூக்கி said...

நாளை முடிக்க வேண்டிய வேலைகள் இருப்பினும், அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்ற எனது சக ஊழியனுக்கு விடுப்பு வழங்கினேன், கடைசி காலத்தில் அம்மாவை சரியாக பராமரிக்காத நான்.

வினையூக்கி said...

மொழி தெரியாத ஊர், உடல் நடுக்கும் குளிர், மடிக்கணினியை அருகில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கையில், அதை ஒருவன் எடுத்துக்கொண்டு ஓட, அவனை நான் துரத்தி முகத்தில் ஒரு குத்து விட்டவுடன் "அம்மா" என்ற அவனின் கத்தல், முதன் முறையாக ஒரு திருடனிடம் உட்கார்ந்து பேச வைத்தது,

கண்மணி/kanmani said...

இந்த அழுகுனி ஆட்டத்துக்கு நான் வல்ல.சிபியே 40 கவித அனுப்புனா நாங்க எங்க போறது

கண்மணி/kanmani said...

ரத்தமும் சதையும் தந்தவள் உன்னை தலை மேல் வைத்துத்தான் கொண்டாடுவோம் உனக்குத் தெம்பிருக்கும்வரை.ஆனாலும்முதுமையின் விளிம்பில்,நோயின் தாக்கத்தில்
நடை மறந்து உடல் தளர்ந்து குழந்தையாய் மாறிய உன்னை தொட்டுத் தூக்கி சுத்தம் செய்ய நேரமின்றி மனமுமின்றி மூடிய அறைக்குள் சிறைபடுத்தி நாளை எண்ணும் கொடுமை என் பிள்ளைகளால் எனக்கும் வரக்கூடாது தாயே........[என் உறவில் கண்ட உண்மை]

கண்மணி/kanmani said...

வார்த்தையில் அடங்காத
அதிசயம்

நடமாடும் தெய்வம்
அன்பின் அட்சய பாத்திரம்

அம்மாவானால் மட்டுமே புரியும்
அம்மாவின் மகிமை

கண்மணி/kanmani said...

பெற்றது ஒன்றானாலும்

பிள்ளைகள் பத்தென்றாலும்

பாசத்தை சமமாக பங்கிடும்

உண்மையான சோஷலிஸ்ட்

சென்ஷி said...

அம்மா

[(பி.கு: இதை விட சிறியதாக சிறப்பானதாக யாரும் எழுதிவிட முடியாதென்ற நம்பிக்கையில் பி.கு மட்டும் பெருசாபோயிடுச்சு :)]

சென்ஷி said...

முற்றுப்புள்ளி
பெறாத
தொடர்கதை
அம்மா....

சென்ஷி said...

முற்றுப்புள்ளி
பெறாத
தொடர்கதை
அம்மா..

சென்ஷி

சென்ஷி said...

என்றும்..

அ - அன்பு
ம் - ம்மட்டும்
மா - மாறாது

என்றென்றும்..

சென்ஷி

சென்ஷி said...

ஒரு சிறுகதை : -

அகர முதல எழுத்தெல்லாம்.. என நான் ஆரம்பிக்க, அம்மா தடுத்து
"அது கிடக்கட்டும் விடு... எங்க மாமாவுக்கு டாட்டா காட்டு..."

சென்ஷி

ILA (a) இளா said...

கதை வேறொரு பதிவிட்டு தொடுப்பு தரலாமா?

::உங்ககிட்ட கத்துகிட்ட தமிழ்தான்:: எப்படி இருக்கு ஐயா?

சென்ஷி said...

விகடன் பரிசுப்போட்டியில் பரிசு பெற்ற கவிதை... யார் எழுதுனதுன்னு மறந்து போச்சு... ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச கவித..

"ஒரே வார்த்தையில்
கவிதை கேட்டால்
அம்மாவென்பேன்
கேட்பது
அம்மாவென்றால்
இன்னும் சுருக்கி
நீ என்பேன்.."


சென்ஷி

ILA (a) இளா said...

http://thamizsangam.blogspot.com/2007/04/69.html

- யெஸ்.பாலபாரதி said...

//வினையூக்கி said...

மொழி தெரியாத ஊர், உடல் நடுக்கும் குளிர், மடிக்கணினியை அருகில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கையில், அதை ஒருவன் எடுத்துக்கொண்டு ஓட, அவனை நான் துரத்தி முகத்தில் ஒரு குத்து விட்டவுடன் "அம்மா" என்ற அவனின் கத்தல், முதன் முறையாக ஒரு திருடனிடம் உட்கார்ந்து பேச வைத்தது, //

நல்லா இருக்கே! :)

சென்ஷி said...

தொப்புள்கொடி
எடுத்துசென்றது
இரத்த உணவாய்
பாசத்தை

சென்ஷி

Anonymous said...

AMMA....AVALAI PATRI THERINTHU KOLLA ENNAI PONRA ORU THAYAALTHAN MUDIYUM....

வினையூக்கி said...

1. இ-கலப்பையை தரவிறக்கம் செய்க.
2. இ-கலப்பையை கணினியில் நிறுவவும்.
3. Alt + 2 தட்டச்சு செய்யவும்
4. ammaa - அம்மா

சென்ஷி said...

who is the winner?

பாரதி தம்பி said...

//1. இ-கலப்பையை தரவிறக்கம் செய்க.
2. இ-கலப்பையை கணினியில் நிறுவவும்.
3. Alt + 2 தட்டச்சு செய்யவும்
4. ammaa - அம்மா//

பெரும்பாலும் புதிதில் அனைவருமே அம்மா என்றுதான் தட்டச்சுகிறோம். இதுவும், வினையூக்கி எழுதியிருக்கும் மற்றொரு
சின்னஞ்சிறு கதையும் நல்லாருக்கு.

கண்மணி/kanmani said...

சென்ஷி கவிதை அருமை

கண்மணி/kanmani said...

வாபஸ்....சென்ஷிக்கான பாராட்டு..விகடன்ல சுட்டதா?

வினையூக்கி said...

//ஆழியூரான். said...
//1. இ-கலப்பையை தரவிறக்கம் செய்க.
2. இ-கலப்பையை கணினியில் நிறுவவும்.
3. Alt + 2 தட்டச்சு செய்யவும்
4. ammaa - அம்மா//

பெரும்பாலும் புதிதில் அனைவருமே அம்மா என்றுதான் தட்டச்சுகிறோம். இதுவும், வினையூக்கி எழுதியிருக்கும் மற்றொரு
சின்னஞ்சிறு கதையும் நல்லாருக்கு
//

நன்றி ஆழியூரான்.

வினையூக்கி said...

///♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
//வினையூக்கி said...

மொழி தெரியாத ஊர், உடல் நடுக்கும் குளிர், மடிக்கணினியை அருகில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கையில், அதை ஒருவன் எடுத்துக்கொண்டு ஓட, அவனை நான் துரத்தி முகத்தில் ஒரு குத்து விட்டவுடன் "அம்மா" என்ற அவனின் கத்தல், முதன் முறையாக ஒரு திருடனிடம் உட்கார்ந்து பேச வைத்தது, //

நல்லா இருக்கே! :)
///
நன்றி பாலா.

சென்ஷி said...

//கண்மணி said...
வாபஸ்....சென்ஷிக்கான பாராட்டு..விகடன்ல சுட்டதா?//

ஏங்க்கா.. நாந்தான் சுட்டதுன்னு மு.கு. கொடுத்திருக்கேன்ல :)

சென்ஷி

உண்மைத்தமிழன் said...

ஹலோ பிரதர்.. எல்லாத்தையும் பிரிண்ட் அவுட் எடுத்த வைச்சாச்சு. படிச்சாச்சு.. இதுக்கு மேல தாங்க முடியல.. சீக்கிரமா முடிவைச் சொல்லிட்டு கையோட நான் கலந்துக்குற மாதிரி ஒரு போட்டியைத் தொடங்குங்க..

நாமக்கல் சிபி said...

//வினையூக்கி said...

மொழி தெரியாத ஊர், உடல் நடுக்கும் குளிர், மடிக்கணினியை அருகில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கையில், அதை ஒருவன் எடுத்துக்கொண்டு ஓட, அவனை நான் துரத்தி முகத்தில் ஒரு குத்து விட்டவுடன் "அம்மா" என்ற அவனின் கத்தல், முதன் முறையாக ஒரு திருடனிடம் உட்கார்ந்து பேச வைத்தது, //

இந்தக் கதை அற்புதமாக இருக்கிறது!

சபாஷ் வினையூக்கி!

Anonymous said...

waste tv