Friday, April 20, 2007

மீண்டும் ஒரு தடாலடிப் போட்டி!

வலை நண்பர்களுக்கு வணக்கம்!

'இடம்: நடேசன் பார்க், சென்னையில் தி.நகர்.
நேரம்: மதியம் 3.30 முதல் மாலை: 7.30 வரை.
நாள்: ஏப்ரல்.22'2007, ஞாயிற்றுக்கிழமை.'

என்னடா இதுன்னு கேட்கறீங்களா?
நடக்கப்போற வலைப்பதிவாளர் சந்திப்பில் உங்கள் அனைவரையும் பல நாட்களுக்குப் பிறகு, பலரை முதன்முறையாக சந்திக்கும் ஆவலுடன் இருக்கிறேனாக்கும் நான்!

அதன் விளைவாக திடீர்னு ஒரு தடாலடிப்போட்டி நடத்தி, பரிசு பெறுபவர்களை வலைப்பதிவாளர் சந்திப்பில் அறிவிக்கவும் ஆவலாக இருக்கிறேன்.

போட்டிக்கான தலைப்பு : அம்மா..

(ரொம்ப) சின்ன கதை, கவிதை, கட்டுரை, துணுக்குச் செய்தி, நகைச்சுவைத் துணுக்கு, நிஜ அனுபவம்.. எதை வேண்டுமானாலும் பின்னூட்டத்தில் அனுப்பி இந்த தடாலடிப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

நாளை இரவு 12 மணி வரை போட்டிக்கான படைப்புகளை அனுப்பலாம். ஒருவரே எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

முதல் மூன்று படைப்புகளுக்கு அன்புப் பரிசுகள் வழங்கக் காத்திருக்கிறேன். உங்களிடமிருந்து குறைந்தபட்சம் ஐம்பது படைப்புகளையாவது எதிர்பார்க்கிறேன். ஏமாத்திடாதீங்க மக்கா....

Friday, April 13, 2007

மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரியத் தயாரா?

'மக்கள் தொலைக்காட்சி'யின் செய்திப்பிரிவுக்கு உதவி ஆசிரியர்கள் தேவை! ஆர்வமும் திறமையும் கற்றுக்கொள்ளும் வேகமும் இருந்தால் போதும். பணி.. சென்னையில். புதியவர்களுக்கு முன்னுரிமை!

விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்துக்கு வாங்க..