ஸ்ஸ்... ப்பா... ரிசல்ட் வந்துடுச்சி!!!
சங்கர்தாதா ஜிந்தாபாத் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் சனிக்கிழமை (28-07-2007) 6.30 காட்சி!
இதோ சங்கர்தாதாவை சந்திக்கப்போகும் பத்து வெற்றியாளர்கள் :
1) இளா
2) வினையூக்கி
3) வவ்வால்
4) லக்கிலுக்
5) ராவணன்
6) சிந்தாநதி
7) சிவஞானம்ஜி
8) அருட்பெருங்கோ
9) நாமக்கல் சிபி
10) ஓசை செல்லா
வெற்றியாளர்கள், 9940679328 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம். வெற்றியாளர்கள் சென்னையில் இல்லையென்றால் பரிசினை சென்னையில் இருக்கும் நண்பர் யாருக்காவது பரிசளிக்கலாம்.
உங்கள் சென்னை நண்பரை பற்றிய விவரத்தை editorgowtham@gmail.com எனும் முகவரிக்கு தெரிவியுங்கள்.
Friday, July 27, 2007
Friday, July 20, 2007
தடாலடிப்போட்டி ஜிந்தாபாத்!

ஒவ்வொரு முறை டைரி எழுத ஆரம்பிக்கும்போதும், 'இந்த டைரிக்காவது ஆயுள் அதிகம் இருக்கட்டும்' என்றுதான் 'பிள்ளையார் சுழி' போடுவேன்! இடைவெளிகளுக்குப் பிறகு மறுபடியும் வலைப்பூ தொடுக்க வரும்போதும் அதே, அதே!
ச்சும்மா.. ஜாலியா.. ஜிலுஜிலுனு.. மறுபடியும் ஒரு தடாலடி போட்டில இருந்தே ஆரம்பிக்கலாமா?!
தெலுங்குத் திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'முன்னாபாய் ஜிந்தாபாத்' ரிலீஸாகப்போகுது. படத்தை இயக்கி இருப்பவர் நம்ம ஊர் பிரபுதேவா. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை (27.07.2007) சென்னையில் முதல் நாளில், படம் பார்க்க அழைப்பு தருகிறேன். ஒன்றல்ல, இரண்டல்ல.. பத்து பேருக்கு அழைப்பு!
சரி, போட்டி என்ன என்று கேட்கிறீர்களா?
பெரிதாக எதுவும் இல்லை நண்பர்களே, ஒரு வரியில் ஏதாச்சும் எழுதி அனுப்புங்க.. அது போதும்! எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்! படிக்க 'பளிச் - க்ளிக்'னு இருக்கணும், அவ்வளவே!
அகில உலக வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றாலும், சென்னையில் மட்டுமே பரிசு கிடைக்கும். வெளியூர் / வெளிநாட்டு அன்பர்கள் தங்களுக்குப் பரிசு கிடைக்குமானால், அதை யாராவது ஒரு சென்னைக்காரருக்கு அன்புப் பரிசாகக் கொடுக்கலாமே?
இனி.. நீங்களாச்சு! சங்கர்தாதாவாச்சு!
Subscribe to:
Posts (Atom)
