Wednesday, June 30, 2010

அதிரடி தடாலடி! - மூணாறு போலாம் வர்றீங்களா?

போட்டிக்கான பரிசு இதுதான்..

கேரளாவில் இருக்கும் குளுகுளு ஸ்தலமான மூணாறுக்கு ஒரு விசிட்!
அங்கே நட்சத்திர ஹோட்டலுக்கு இணையாக இருக்கும் க்ளப் மஹிந்த்ரா ரிசார்ட்டில் (ஒரு முறை போய்வந்தவர்களைக் கேளுங்கள்.. ஏறக்குறைய சொர்க்கம் அது!)இரண்டு நாட்கள் தங்கி மகிழ இலவச வாய்ப்பு!

வரும் புதன் கிழமை (7.7.2010) பகல் 2 மணி முதல் வெள்ளிக்கிழமை (9.7.2010) காலை 10 மணிவரை ரிசார்ட்டில் தங்க வசதி செய்து தரப்படும்.
போக்குவரத்து மற்றும் உணவு ஏற்பாடுகளுக்கு கம்பெனி(?!) பொறுப்பாகாது.

கீழே காணும் படங்களில் எதற்கு வேண்டுமானாலும் குறும்பு கொப்பளிக்க ஒரு கமெண்ட் அடியுங்கள். பெஸ்ட் குறும்பர்களில் இரண்டு பேருக்கு பரிசு கொடுக்க நான் தயார்!

ஒரே நபர் எத்தனை படங்களுக்கு வேண்டுமானாலும் கமெண்ட் அளிக்கலாம்.
வெற்றி பெற்றவரோ அல்லது அவர் சார்பாக பரிந்துரைக்கப்படுபவரோ முணாறு தங்கும் வாய்ப்பை பரிசாக அனுபவிக்கலாம்.

பரிசை அனுபவிக்க ஆகும் மற்ற பிற செலவுகள் அனைவரின் கவனத்துக்கும்.
பஸ்ஸில் அல்லது ரயிலில் போனால் போகவர ரூ.1000க்குள் செலவாகலாம். மேல் விவரங்களுக்கு சொடுக்கவும்.. எப்படிப் போவது மூணாறுக்கு?

தங்குமிடம் என் செலவு என்பதால் அதற்காக வெற்றியாளர்கள் பைசா செலவழிக்க வேண்டாம். தங்குமிடத்தைப் பார்க்க சொடுக்கவும்..
எப்படி இருக்கும் க்ளப் மஹிந்த்ரா ரிசார்ட்?
வீடியோ பார்க்கணுமா?

ரிசார்ட்டில் தங்கியிருக்கும் இரண்டு நாட்களில் (மொத்தம் 6 வேளைகள்) அட்டகாசமான நட்சத்திர ஹோட்டலுக்கு நிகரான பஃபே உணவுக்கு ஆகும் செலவு - ஒரு நபருக்கு ரூ.1300/- (நம்புங்கள்.. நிஜம்தான்!).

சரி இப்ப போட்டிக்குப் போலாமா? படங்களைக் கவனமாகப் பாருங்கள். கமெண்ட் அடிச்சுத்தள்ளுங்கள். போட்டிக்கான இறுதி நேரம்.. 5.7.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி!

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5

படம் 6

படம் 7

36 comments:

DrPKandaswamyPhD said...

படம் 7.
இதுதாங்க கரெக்ட். ஒரே பந்த வச்சுட்டு எதுக்கு எல்லோரும் அடிச்சுக்கணும்? ஆளுக்கு ஒண்ணுன்னு கொடுத்துட்டா சண்டையெல்லாம் வராதில்ல!

DrPKandaswamyPhD said...

ஏனுங்க, எந்த ஆட்டத்தைங்க பாக்கறது?

DrPKandaswamyPhD said...

படம் 1

இப்ப அந்த பந்தை அடிச்சா அம்பயர் என்ன சொல்வார்?

DrPKandaswamyPhD said...

படம் 6

எந்த ஆட்டத்தைங்க பாக்கறது?

ஜி கௌதம் said...

DrPKandaswamyPhD..
வருகைக்கும் பங்கேற்புக்கும் மிக்க நன்றி.
உங்கள் ப்ரொஃபைலை பார்த்தேன்..
Age 76, Retired Scientist எனப் போட்டிருக்கிறீர்கள். எழுத்தில் இளமையாகத்தான் இருக்கிறீர்கள்..
வாழ்த்துகள்.. வாழ்த்துங்கள்!
:)

anbu said...

picture 4

goal podamal eppadi thadukkurathunu
engalukku training ellam koduthachu......correct aga pointla pidithu nippattitena??!!!!

anbu said...

football mattumilla........neenga
ella country models parkalam....

anbu, madurai

மாயவரத்தான்.... said...

படம் 1 : ம்ஹூம்.. தலை கீழா நின்னாலும் இரண்டு பேருக்கு மட்டும் தான் பரிசாம்!

மாயவரத்தான்.... said...

படம் 3 : "மதியம் மொச்சைக் கொட்டை குழம்பா சார்?!"

மாயவரத்தான்.... said...

படம் 5

பக்கத்துல நிக்குறவ பல்லு வெளக்காம வந்திட்டா போல! 'கப்'பு தாங்க முடியலடா சாமி!

மாயவரத்தான்.... said...

படம் 2 :

நல்ல வேளை நான் கோல்ப் விளையாடும் போது இப்படி குறுக்க வந்து நிக்கலை! வந்திருந்த, மவனே சங்கு தாண்டி!

மாயவரத்தான்.... said...

படம் 4 :

பாலை ஒதைக்கச் சொன்னா, இவன் என்னடான்னா ____________________ ! (கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்ளவும்)

ஜி கௌதம் said...

என்ன மக்களே.. இந்தப்போட்டிக்கே இப்படி திணர்றீங்க?

இதுக்கே இப்படின்னா.. அடுத்த போட்டியில ஜெயிச்சு எப்படி இசைஞானியை நேரில் சந்திக்க வாய்ப்பு பெறப்போகிறீர்கள்?!

ராம்ஜி_யாஹூ said...

Moonar is a ok place, but club mahindra is a stupid resort company. You will get pain only if you stay in club mahindra.

மாயவரத்தான்.... said...

படம் 7 :

என்ன அநியாயம் இது.. எங்களுக்கு மட்டும் ஒரு பந்து தானா?!

யாருடா சொன்னது?!

மாயவரத்தான்.... said...

உணவு ஏற்பாடுகளுக்கு கம்பெனி பொறுப்பாகாதா? அந்த 1,300 ரூபாய் பபே செலவு எங்களுதா?!

அப்புறம் ஜெயிக்கிறவங்க எத்தனை பேரை கூட கூப்பிட்டு போவலாம்?!

மாயவரத்தான்.... said...

படம் 2:

அடேய் கசம் புடிச்சவனே.. இந்த நேரத்துலயா உனக்கு மூடு வந்து தொலைக்கணும்?!

மாயவரத்தான்.... said...

படம் 1 : (தலைகீழாக நிற்பது நம்ம கெளதம் தான்!)

"அடப்பாவி மக்கா.. 4-ம் தேதி ஞாயித்துக்கிழமைன்னு சொல்றதுக்கு பதிலா 5-ம் தேதிய மாத்தி சொல்லிட்டேன். அதுக்காக இந்த தண்டனையா?!"

மாயவரத்தான்.... said...

படம் 5 :

போற போக்கை பாத்தா மாயவரத்தான் அன்னபோஸ்ட்டில ஜெயிச்சிடுவான் போலருக்கே!

ஜி கௌதம் said...

நண்பர் மாயவரத்தான் என்னை தலைகீழாக நிற்கவைத்து தண்டித்ததாலும்..
("அடப்பாவி மக்கா.. 4-ம் தேதி ஞாயித்துக்கிழமைன்னு சொல்றதுக்கு பதிலா 5-ம் தேதிய மாத்தி சொல்லிட்டேன். அதுக்காக இந்த தண்டனையா?!"?

மெஜாரிட்டி கமெண்ட்டுகளை அவர் கொடுத்திருப்பதால் அவரது கருத்தினை மெஜாரிட்டியாகக் கருதியும்..

போட்டிக்கான கால அவகாசத்தை இன்னும் ஒரு நாள் தள்ளிவைத்து 5-ம் தேதி மாலை 6 மணி என அறிவிக்கிறேன்!

அஹமது இர்ஷாத் said...

போட்டி'ய கொஞ்சம்? தள்ளி வைக்ககூடாது.. எனக்கு வெக்கேஷன் கிளம்ப இன்னும் 12 நாட்கள் இருக்கு...என்னங்க பன்றது...

ஜி கௌதம் said...

DrPKandasawamyPhD ஐ தொடர்ந்து போட்டியில் இதுவரை பங்குபெற்றிருகும் anbu, மாயவரத்தான் இருவருக்கும்..

கருத்து சொல்லிய
ராம்ஜி_யாஹூ வுக்கும்..

வருத்தம் தெரிவித்த
அஹமது இர்ஷாத் துக்கும்..

நன்றி!

ஜி கௌதம் said...

அஹமது இர்ஷாத்..

//போட்டி'ய கொஞ்சம்? தள்ளி வைக்ககூடாது.. எனக்கு வெக்கேஷன் கிளம்ப இன்னும் 12 நாட்கள் இருக்கு...என்னங்க பன்றது..//

12 நாட்கள் கழிச்சு.. இன்னொரு போட்டிய அறிவிச்சுட்டாப் போச்சு!

டோண்ட் வொர்ரி.. பி ஹேப்பி!!

அஹமது இர்ஷாத் said...

12 நாட்கள் கழிச்சு.. இன்னொரு போட்டிய அறிவிச்சுட்டாப் போச்சு!//

ஓகே இதே மாதிரி 'குற்றால ட்ரிப்'... எப்படி டீல்... சார் i Hope You!!!!

☼ வெயிலான் said...

படம் 1 - இது தான் பந்து ஆசனமா?

படம் 2 - பக்கத்தில் போகாதே! பால் இல்ல பாம்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படம் -1 : இப்படித் தலைகீழா நின்னு தவம் செஞ்சாலும் கோல் போஸ்ட் கண்ணுக்குத் தெரியலையே..?

மரியாதையா என்னையும் டீம்ல சேர்த்திருங்க..!

இப்ப உடம்பு வளையுது. ஆனா கிரவுண்டுல மட்டும்தான் வளைய மாட்டேங்குது..!

சத்தியமா நம்புங்க சாமி.. நான் இந்திய புட்பால் டீம்தான்..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படம்-2 :

டேய்.. ஒரே ஒரு தடவையாச்சும் பந்தைத் தொட்டுக்குறேண்டா.. விடுறா..!

கொஞ்ச நேரம் இப்படியே போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம்டா.. இருடா..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படம்-3 :

யப்பா.. மவனே எந்த ஊர்லடா வாங்குன இந்த டிரவுசரை..! கிழிஞ்சிருச்சு..!

ஐயோடா.. எங்களுக்கு கப்பே வேணாம்.. உன் கப்பே தாங்க முடியலடா சாமி..!

ரெண்டு இன்ச் முன்னாடி விழுந்திருந்தேன்னா என்ன ஆயிருக்கும்..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படம்-4 :

பந்தைத்தான் உதைக்க முடியலை.. இதையாவது உதைச்சுக்குறேன்..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படம் - 5:

ச்சீ.. ராஸ்கல்ஸ்.. கிரவுண்டு முழுக்க எச்சில் துப்பி நிரப்பிட்டானுங்க..!

ச்சே.. இவ்ளோ டிரெஸ் போட வைச்சுட்டானுகளே..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படம் - 6 :

இங்க வந்ததுக்கு ஆதாரமா ஆடிட்டாச்சும் போவோம்..!

எங்க டீம்தான் ஜெயிக்கலை.. நானாவது ஆடிக்கிறேன்..!

வயசைப் பார்க்காதீங்க.. மனசைப் பாருங்க.. நானும் யூத்துதான்..!

ஹை.. மாரடோனா நியூடா ஓட முடியாம போச்சு..! சந்தோஷமா இருக்கு..!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படம்-7 :

ஏம்பா இந்த மாதிரி பொண்ணுங்களையெல்லாம் ரெப்ரியா போடக் கூடாதா..?

இந்தப் பந்துக்குப் பதிலா அந்தப் பொண்ணை புடிச்சுக் குடுங்கப்பா..!

கோல்போஸ்ட் பக்கத்துல இப்படியொரு பொண்ணை நிப்பாட்டி வைங்க.. அப்புறம் பாருங்க எத்தனை கோல் விழுகுதுன்னு..?

மேட்ச் ஆரம்பிக்கும்போதே இப்படி கிளப்பிவிட்டா எப்படிங்க ஒழுங்கா விளையாட முடியும்..?

ஜி கௌதம் said...

ஆட்ட நேரம் முடிந்துவிட்டபடியால் ரிசல்ட்ஸ் அறிவிக்கும் நேரம் ஆரம்பமாகிவிட்டது..

முதல் கட்ட வடிகட்டலில் தேர்வாகி வந்த கமெண்ட்டுகள் இதோ..

DrPKandaswamyPhD said...
படம் 6
எந்த ஆட்டத்தைங்க பாக்கறது?

anbu said...
picture 4
goal podamal eppadi thadukkurathunu
engalukku training ellam koduthachu......correct aga pointla pidithu nippattitena??!!!!

மாயவரத்தான்.... said...
படம் 3 :
"மதியம் மொச்சைக் கொட்டை குழம்பா சார்?!"

மாயவரத்தான்.... said...
படம் 4 :
பாலை ஒதைக்கச் சொன்னா, இவன் என்னடான்னா...

☼ வெயிலான் said...
படம் 1 - இது தான் பந்து ஆசனமா?

☼ வெயிலான் said...
படம் 2 - பக்கத்தில் போகாதே! பால் இல்ல பாம்!

உண்மைத் தமிழன் said...
படம் - 5:
ச்சே.. இவ்ளோ டிரெஸ் போட வைச்சுட்டானுகளே..!
உண்மைத் தமிழன் said...

படம்-7 :
கோல்போஸ்ட் பக்கத்துல இப்படியொரு பொண்ணை நிப்பாட்டி வைங்க.. அப்புறம் பாருங்க எத்தனை கோல் விழுகுதுன்னு..?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அண்ணே..

செலக்ட் செஞ்சதுக்கு ரொம்ப நன்றிங்கண்ணே..!

அப்படியே போக வர போக்குவரத்துச் செலவு, அங்க சாப்பாட்டுச் செலவு இதையும் கொஞ்சம் ஸ்பான்ஸர் செஞ்சீங்கன்னா வலைப்பதிவர் சங்கத்துல நீங்க நிக்குற போஸ்ட்டுக்கு கண்ணை மூடிக்கிட்டு ஆதரவு கொடுப்பேன்..!

ஜி கௌதம் said...

தேதி விஷயத்தில் ஒரு சின்ன(?!) குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
மன்னிக்கவும்.

பயணத்தைத் திட்டமிட கால அவகாசம் வேண்டும் என்பதால் இப்போதே பரிசுகளை அறிவிக்கிறேன்.

போட்டியில் கலந்துகொண்ட DrPKandaswamyPhD, anbu, மாயவரத்தான், வெயிலான், உண்மைத்தமிழன், ஐவரையுமே (தடாலடிக்கு தடாலடி.. இது எப்டி?!) பரிசுக்குரியவர்களாகத் தேர்ந்தெடுக்கிறேன்.

வாழ்த்துகள் நண்பர்களே!

ஜி கௌதம் said...

பரிசு பெற்றிருக்கும் நண்பர்கள் என்னை என் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டால் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளலாம்..

வாழ்த்துகளும் நன்றியும்!

editorgowtham@gmail.com