Tuesday, January 25, 2011

வருத்தம் தரும் வலி..

என் தொண்டைப்பகுதியில் இருந்த புண்ணை ’புற்று நோய்க்கு முந்தைய கட்டம்’ என தவறாக அறிவித்து, தப்பும் தவறுமாக ரண சிகிச்சை கொடுத்துவந்த பிரபல மருத்துவர் பற்றியும், அவர் என் தொண்டைப்பகுதிகளில் ஊசி மூலம் செலுத்திய ஸ்டீராய்டு மருந்தின் பலனாக எனக்கு ஏற்பட்ட சோகங்களையும் முந்தைய ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். ( http://gpost.blogspot.com/2010/10/5.html ).

’இது அப்படி தெரியவில்லையே’ என சரியான நேரத்தில் சந்தேகப்பட்டு, என்னை உரிய மருத்துவ நிபுணர்களிடம் அழைத்துச் சென்று, எனக்கிருந்தது / இருப்பது புற்று நோய்க்கு முந்தைய காலகட்ட நோய் அல்ல எனத் தெளிவுபடுத்தி, உரிய சிகிச்சையினை நான் மேற்கொள்ள வழிகாட்டியாக இருந்தவர் மருத்துவர் நஞ்சப்பன். 

அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய இவரது சரியான மற்றும் விரைவான நோய் கண்டறியும் திறனால் உயிர் பிழைத்தவர்கள் ஆயிரக்கணகானோர். துள்ளத் துடிக்க கொண்டுவரப்படும் நோயாளிகளின் பிரச்னை எதுவென மின்னல் வேகத்தில் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களின் உடனடி சிகிச்சைக்கு வழிகாட்டியவர் நஞ்சப்பன்.

கற்றறிந்த வித்தைகள் எல்லாம் தனக்குப் பயன்படாது என எவனோ எப்போதோ சொல்லித் தொலைத்தது சரிதானோ என்னவோ.. அபாய கட்டத்தில் தனக்கு இருந்த ரத்தப் புற்றுநோயை மிகவும் தாமதமாகத்தான் அறிந்து கொண்டார் நஞ்சப்பன். 

என் போன்ற பல்லாயிரம் பேர்கள் இன்று உயிர் வாழ உதவி செய்தவர் இப்போது நம்முடன் உயிருடன் இல்லை!

7 comments:

Sankar Gurusamy said...

Our Deep condolescences to one and all for his demise. Let his soul lie in peace.

http://anubhudhi.blogspot.com/

rachinnathurai@gmail.com said...

வருத்தம் தரும் செய்தி

Jaleela Kamal said...

மிகவும் வருத்தமாக் இருக்கு

Philosophy Prabhakaran said...

அவருக்கு எனது அஞ்சலிகள்...

பத்மா said...

very sad ...
some things are inexplicable ..
RIP DOCTOR

காலப் பறவை said...

;(
மருத்துவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

அமைதி அப்பா said...

மிகவும் வருத்தப்பட வைக்கிற செய்தி.