Friday, January 19, 2007

என் இனிய வலை நண்பர்களே...

வணக்கம் நண்பர்களே!

உங்கள் வாழ்த்துக்களோடும் ஆசிகளோடும் புதிய பணியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். திக்கெட்டும் தமிழ் பரப்பத் தொடங்கியிருக்கும் 'மக்கள் தொலைக்காட்சி'யின் தலைவராக அதாவது PRESIDENT - NEWS & MARKETING பொறுப்பேற்றிருக்கிறேன்.
சென்னையில் அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு சென்னையில் நடக்கும்போது நண்பர்கள் அனைவருக்கும் ட்ரீட் கொடுக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

நன்றியுடனும் நட்புடனும்...
ஜி.கௌதம்

புதிய கைப்பேசி எண் நாளை தருகிறேன். என்றும் உங்கள் நட்பையும் அன்பையும் வேண்டுகிறேன்.

Sunday, January 14, 2007

பொங்கலோ பொங்கல்!

நண்பர்களே!
சற்றேரக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகு இன்றுதான் கணிணிப் பக்கம் கவனம் செலுத்த முடிந்திருக்கிறது!!
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இங்கே வலைப்பூவில் வெளியான என் காதல் பால் கதைகள் அழகிய புத்தகமாக உருப்பெற்றிருக்கிறது. விகடன் பிரசுரத்தின் வெளியீடு. விலை ரூபாய் 55.
ஆனந்த விகடனில் அல்லாது வேறு ஒரு வார இதழில் (குங்குமம்) வெளிவந்த தொடரினை விகடன் பிரசுரம் நூலாக வெளியிடுவது இதுவே முதன்முறை. அந்த வகையில் என் தாய்வீடான விகடன் எனக்களித்திருக்கும் மதிப்பிட இயலாத பரிசு இது.
நூல் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் விகடன் பிரசுரத்தின் ஸ்டாலில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

இன்னும் ஒரு மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டுக்கொண்டு,
அனைவருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.
பொங்கலோ பொங்கல்!