பழைய தலைப்பு : தசாவதாரம் படத்துக்கு தடாலடி டிக்கெட்!
பிற்சேர்க்கை 9:
G Gowtham said...
தடாலடியின் உச்சகட்டமாக ஒரு அதிரடி அறிவிப்பு! சூப்பர் ஸ்டாரின் ‘குசேலன்' படத்தை முதல் நாள் பார்க்க ரெடியா?
விவரம் இன்னும் சில நிமிடங்களில்...
பிற்சேர்க்கை 10:
G Gowtham said...
குசேலன் தடாலடி!!போட்டிக்கான புகைப்படம் அதேதான். இடம், பொருள், சூழல்.. எதை வேண்டுமாலும் மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால், ரஜினியிடம் கமல் என்ன பேசுவார் என ‘மாத்தி யோசி'க்க வேண்டும்!
அம்புட்டுதான் போட்டி!ஜாலியாக யோசியுங்கள். ஆனால் சீரியஸாக போட்டியில் கலந்து கொள்ளுங்கள். பரிசு பரம சீரியஸ்!சொன்ன மாதிரியே ‘குசேலன்' படம் ரிலீஸாகும் அன்று தடாலடி டிக்கெட் தர நான் ரெடி.
மொத்தம் மூன்று பேருக்குப் பரிசு தரலாம் என இப்போதைக்கு முடிவெடுத்திருக்கிறேன். நாளை நடப்பதை நானறியேன்! :-)
அதேபோல குசேலனைப் பார்க்கும் வாய்ப்பை சென்னை அல்லது கோவை அல்லது நெல்லையில் வழங்கலாம் எனவும் முடிவெடுத்துள்ளேன். எந்த ஊரில் படம் பார்க்கலாம் என வெற்றியாளரே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
கமலாக உருமாறி களமிறங்குங்கள். குசேலனை வெல்லுங்கள்.
-------------------------------------------------------------------------------
தசாவதாரம் படத்துக்கு தடாலடி டிக்கெட்!
நோ ட்ரெய்லர்ஸ். நேரடியாக மேட்டருக்குப் போகலாம்!
'தசாவதாரம்' நாளை ரிலீஸ். காலை 8.30 மணிக்கே சென்னையில் படம் பார்க்க நீங்க ரெடியா?!
'உள்ளேன் ஐயா' சொன்னால் கச்சேரியை ஆரம்பிக்க நான் தயார்.
வெளியூர் மற்றும் வெளிநாட்டு வலைப்பதிவர்களும் ஆஜர் ஆகலாம் போட்டிக்கு. ஆனால் பரிசு கிடைத்தால் யாராவது சென்னைக்காரருக்கு அர்ப்பணித்துவிடவேண்டும்!
என்ன போட்டியை ஆரம்பிக்கலாமா?
புதிய வலைப்பதிவர்களின் கவனத்துக்காக முந்தைய தடாலடிகளில் ஒரு சாம்பிள்:
http://gpost.blogspot.com/2006/11/blog-post_18.htmlஇதுதான் போட்டி..
சூப்பர் ஸ்டாருக்காக பிரத்தியேகமாக படத்தைத் திரையிட்டுக் காட்டினார் உலக நாயகன். தியேட்டரை விட்டு வெளியேறும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இங்கே நீங்கள் பார்ப்பது.
சரி, உங்களுக்கான கேள்வி இதுதான்:
கமலிடம் ரஜினி என்ன சொல்லியிருப்பார்?
ஹலோ... நிஜமாகவே அவர் என்ன சொன்னார் என்பது மீடியாக்களில் செய்தியாக வந்துவிட்டது. ஆனால் நீங்களே உங்களை ரஜினியாக கற்பனை பண்ணிக்கொண்டு ச்சும்மா ஜாலியா ஒரு கமெண்ட் எடுத்து விடுங்களேன் பார்க்கலாம்! குறும்பு கொப்பளிக்கட்டும் உங்கள் கமெண்ட்களில்!!
பிற்சேர்க்கை 1 : பரிசு மொத்தம் மூன்று பேர்களுக்கு வழங்கப்படும் என்ற செய்தியை இங்கே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
வெள்ளிக்கிழமை - 13.6.20008 காலை 8.30 மணிக்காட்சி,
சனிக்கிழமை - 14.6.2008 இரவு 10 மணிக்காட்சி,
ஞாயிற்றுக்கிழமை - 15.6.2008 மாலை 6 மணிக்காட்சி
பிற்சேர்க்கை 2 : தடாலடியில் ஒரு கிளையடியாக முதல் கமெண்ட் அடித்த திருவாளர் விக்கி அவர்களுக்கு அவரது வேண்டுகோளுக்கு இணங்க, திருநெல்வேலியில் நாளை மாலை தசாவதாரம் படத்துக்கு மூன்று டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
பிற்சேர்க்கை 3 : பரிசுக்குரிய இருவர் (என்னடா.. ஒருத்தருக்குதான் பரிசுன்னு சொல்லிட்டு ரெண்டு பேருக்கு கொடுக்குறோம்னு பார்க்குறீங்களா? நாங்க சொன்னதையும் செய்வோம்.சொல்லாததையும் செய்வோம்ல.. :-)
//கிரி said... படத்த பற்றி நல்லதா நான் சொல்லலைனா ..என்னை கயிற்றை கட்டி கடல்ல இறக்கிட மாட்டீங்களே :-) கிரி சிங்கப்பூர் ல் இருந்து//
//சிறில் அலெக்ஸ் said... பத்து பேரும் அசினுக்கு முத்தம் குடுக்கிறாப்புல செஞ்சது நல்ல ட்ரிக்.//
கிரி, சிறில் அலெக்ஸ் - சென்னையில் நாளை காலை 8:30க்கு உட்லண்ட்ஸ் திரையரங்கில் நீங்களோ அல்லது உங்களின் சார்பாக உங்கள் நண்பரோ தசாவதாரம் படம் பார்ப்பதற்கு உங்களின் அல்லது உங்கள் நண்பரின் தொலைபேசி எண்ணை உங்களின் ஐடி வழியாக கமெண்ட் மூலம் தெரியப்படுத்தவும். உங்கள் கமெண்டை வெளியிட மாட்டோம். உடனடியாக அவர்களை தொடர்பு கொள்வோம்.
பிற்சேர்க்கை 4 : மக்களா.. போட்டி இன்னும் முடியல.. வெள்ளி காலை 8.30 ஷோவுக்கு மட்டும்தான் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கு. இன்னும் ஆரம்பத்துல சொன்ன மாதிரி மத்த காட்சிகளுக்கு போட்டோ போட்டி மிச்சம் இருக்கு.
ஆட வாங்க அண்ணாத்த..
பிற்சேர்க்கை 5 : வணக்கம் வாத்தியார்களே! நம்ம கிரியோட நண்பர் ஜானியும்
சிறில் அலெக்ஸ் நண்பர் பிரிட்டோவும் இன்று காலை 8.15 மணிக்கு ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பரிசு டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளப்போகிறார்கள்.
அதிகாலை போனஸாக இருவருக்கும் தலா ஒரு டிக்கெட் இன்று இரவுக்காட்சிக்கும் வழங்கப்படுகிறதுங்கோ!
பிற்சேர்க்கை 6 : திரு பிரிட்டோ அவர்கள் காலைக்காட்சியைத் தவறவிட்டதால், 14.6.2008 காலை 11.30 மணிக்காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டார்.பிற்சேர்க்கை 7 : மேலும் பரிசுக்குரிய மூவர்!
1.சின்னப்பையன்
2.சுப்பையா
3.நாகராஜன்
மூவருக்கும் வாழ்த்துக்கள்!
பிற்சேர்க்கை 8 : சுப்பையா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது சார்பாக பரிசைப் பெற்றுக்கொள்பவர்.. உண்மைத்தமிழன்!சின்னப்பையன் மற்றும் நாகராஜன் எங்கிருந்தாலும் பின்னூட்டத்துக்கு வரவும்..