வணக்கம் நண்பர்களே!
கரும்பு தின்னக் கூலியும் கொடுத்திருக்கிறீர்கள்!
தேன்கூடு போட்டியில் இரண்டாம் பரிசு!!
என்னோடு வாழ்ந்து, என்னைச் செதுக்கிப்போன நண்பன் திருப்பதிசாமி பற்றி
உலகத்தமிழ் நண்பர்களுக்குச் சொல்லவேண்டும் என்பதே என் ஆசை.
அதை உருப்படியாகச் சொல்லியிருக்கிறேனா என்பது தெரியவில்லை.
ஓரளவுக்கு மனநிறைவடைந்தேன் என்பது உண்மையே.
இதைப் பலரும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான்
தேன்கூடு போட்டியில் இணைத்தேன்.
படித்து நெகிழ்ந்த நீங்கள் இரண்டாம் பரிசுக்குரியதாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்!
இந்த வெற்றி எனக்கானது அல்ல.
நான் வெறும் கருவி மட்டுமே, நண்பன் திருப்பதிசாமியின் வெற்றி இது!
சினிமாவில் ஒருவன் எத்தனை வெற்றிகள் கொடுத்திருந்தாலும்
அவனது சமீபத்திய தோல்விதான் அவனைத் தீர்மானிக்கும். துரத்தியடிக்கும்.
கணேஷ், ஆஸாத் என இரு பெரும் வெற்றிப் படங்களை தெலுங்கில் இயக்கியிருந்தாலும்
நரசிம்மா என்ற சமீபத்திய தோல்விப் படத்தைக் கொடுக்க நேர்ந்ததால்
திருப்பதிசாமி என்ற சாதனையாளனை திரையுலகம் மறந்து விட்டது.
'ஒரு நண்பனின் நிஜம் இது' என்ற இந்த பரிசுக்குரிய படைப்பு மூலமாக
திருப்பதிசாமி சமீபத்திய வெற்றியையே விட்டுச் சென்றதாக நான் கருதுகிறேன்.
இந்த வெற்றி அவனுக்கே!
செத்தும் ஜெயித்தான் திருப்பதிசாமி!
வாக்களித்த நண்பர்களுக்கும்
தேர்ந்தெடுத்த நடுவர் குழுவினருக்கும்
வாய்ப்பளித்த தேன்கூட்டிற்கும் தமிழோவியத்திற்கும்
உலகம் காணக் களம் கொடுத்த தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டிற்கும்
என்னை எழுதத் தூண்டிய நண்பர் கடல் கணேசனுக்கும்
மற்றும்
பின்னூட்டத்தில் ஆறுதல் சொன்ன, ஆதரவுத் தோள் கொடுத்த, திருப்பதி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அத்தனை பேருக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்!
உடன் பரிசு பெற்றிருக்கும் கொங்குராசா, ராசுக்குட்டி மற்றும் இளாவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
முன்வரிசைக்கு வந்திருக்கும் படைப்புகளைப் பெற்றெடுத்த
Haranprasanna, குந்தவை வந்தியத்தேவன், (மறுபடியும்) RaasuKutti,
சுரேஷ் (penathal Suresh),ஜெஸிலா மற்றும் உமா கதிருக்கும் வாழ்த்துக்கள்.
கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.
21 comments:
அட! ரிஸல்ட் வந்துருச்சா?
வெற்றி பெற்றதற்கு வாழ்த்து(க்)கள்.
சினிமாவைப் பொறுத்தவரை ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்.
இல்லேன்னா கதை கந்தல்
கௌதம்,
வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள்.
கதையோட முன்னுரையை சுருக்கியிருந்தால் முதல் பரிசை தட்டி சென்றிருக்கும்.
//சினிமாவில் ஒருவன் எத்தனை வெற்றிகள் கொடுத்திருந்தாலும்
அவனது சமீபத்திய தோல்விதான் அவனைத் தீர்மானிக்கும். துரத்தியடிக்கும்.
கணேஷ், ஆஸாத் என இரு பெரும் வெற்றிப் படங்களை தெலுங்கில் இயக்கியிருந்தாலும்
நரசிம்மா என்ற சமீபத்திய தோல்விப் படத்தைக் கொடுக்க நேர்ந்ததால்
திருப்பதிசாமி என்ற சாதனையாளனை திரையுலகம் மறந்து விட்டது.//
படத்தோட எடிட்டிங் அவர் செய்யவில்லை என்று கேள்விப்பட்டதாக நியாபகம்.
கெளதம்,
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!!
கெளதம்,
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கௌதம்!!!
வாழ்த்துக்கள் கொளதம் சார் :)
வாழ்த்துக்கள் கௌதம்.. நேரமின்மையால் இந்த முறை உங்கள் படைப்பு ஒன்று தான் நான் படித்தது.. பரிசுக்குரிய படைப்பு தான்..
பரிசு பெற்ற கொங்கு ராசாவுக்கும் ராசுக்குட்டிக்கும் என் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்...
வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள்.
இறந்தப்பின்னும் உங்களுக்கான களமாய் தன் மரணம் தந்த நட்பு எப்போதும் போற்றத்தகுந்ததே
வாழ்த்து(க்)கள்!
கெளதம்,
பரிசுப்போட்டியில் வெற்றிபெற்றமைக்கு இனிய வாழ்த்துக்கள்
உண்மையான நட்புக்குக் கிடைத்த வெற்றி இது என்று நினைக்கிறேன்.
உங்களில் வாழும் திருப்பதி சாமிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கௌதம்
வாழ்த்துக்கள்..
பத்திரிக்கை உலகைப்போல, இணையத்திலும் தொடரட்டும் உங்கள் பணி!
வாழ்த்துக்கள்!
வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள். நள்ளிரவென்றும் பாராமல், நீங்கள் எனக்கு தனிமடல் அனுப்பிய உங்கள் அன்பு என்னை திக்குமுக்காட செய்துவிட்டது. இந்தக்கதை பரிசுகளுக்கு அப்பாற்பட்டது என்பதே என் கருத்து. உங்களைப் போன்றோர் ஊக்கமளித்தால் வலைப்பூக்கள் இன்னும் சிறப்புறதாகிவிடும்.
வாழ்த்துக்கள் கௌதம். சிறப்பான ஒரு படைப்புக்கு இந்த முறை பரிசு கிடைத்திருக்கிறது.
தொடர்ந்து பல சுவையான படைப்புக்களையும், திருப்பதிசாமியிடமிருந்து நீங்கள் கற்ற அந்த ஊக்கப்படுத்தலையும் எதிர்பார்க்கிறேன்.
-- Vignesh
VALTHUKKAL GOWTHAMA. NAAN PADUKKUM POTHE ITHARKKU NICHIYAM PARISU UNDU ENA NINAITHEN. EPPOTHUM UNMAI KADHAIUM UNMAI NATPUM THOTRU PONATHILLAI!
வெற்றி பெற்றதற்காக வாழ்த்துக்கள்.
கண்டிப்பாக அவர் இருந்தால் மகிழ்வார் இறந்ததால் உங்களை இப்படி மகிழ்விக்கின்றார்.
Post a Comment