Monday, September 18, 2006
கும்மாங்குத்து! - எப்படி? எதற்கு? ஏன்?
மிகுந்த பலசாலி அவன். குத்துச் சண்டை வீரனும்கூட!
போட்டி ஆரம்பித்த இரண்டாவது ரவுண்டிலேயே எதிராளியை நாக் அவுட் செய்துவிடும் அசாத்திய வெற்றிக்காரன்.
குத்துச் சண்டை மேடைகளில் தோல்வியையே சந்தித்திராத அந்த சூரன், ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் காலாற நடந்து போன சமயம்.. வழிப்பறித் திருடன் ஒருவனிடம் சிக்கிக் கொண்டான்!
பர்ஸையும் வாட்சையும் கழட்டிக் கொடுக்கச் சொன்னான் கத்தியுடன் குறுக்கே புகுந்த திருடன். மறுத்தான் வீரன்.
கைகலப்பு ஆரம்பமானது. ஓரிரு நொடிகளிலேயே முடிந்தும் போனது!
நூற்றுக்கணக்கான குத்துச் சண்டைப் போட்டிகளில் தோல்வியையே சந்தித்திராத அவன் குற்றுயிரும் குலையுயிருமாகத் தோற்றுப் போனான் அந்தத் திருடனிடம்!
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான் திருடன்.
மறுநாள் மருத்துவமனையில் அவனைச் சந்தித்த பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும் கேட்ட ஒரு கேள்வி.. “இவ்வளவு பலசாலியான நீங்கள் எப்படி ஒரு சாதாரண திருடனிடம் தோற்றுப் போனீர்கள்?!”
அதற்கு அவன் சொன்ன பதில் என்னவாக இருக்கும் என யூகிக்க முடிகிறதா?
?
?
?
?
?
?
“எனக்கும் என் மனைவிக்கும் நேற்று கடுமையான வாக்குவாதம். சுடு சொற்களால் என்னை பலமாக காயப்படுத்தி இருந்தாள் அவள். அந்த வலியுடன் இருந்த நான் தோற்றதில் ஆச்சர்யமேதும் இல்லை!” என்றான் வீரன்.
‘ஒருவனின் வெற்றிகளுக்கு மட்டுமல்ல, தோல்விகளுக்குப் பின்னாலும் ஒரு பெண்ணே இருக்கிறாள். குறிப்பாக மனைவி’ என பத்திரிகையாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.
முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள்: இங்கே
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
காரணத்தை இங்கும் தலைகீழாக எழுதுவீர்கள் என்று நினைத்தேன்.
:-)
இதுக்கும் நாங்க பஞ்ச் டயலாக் எழுதணுமா?
"என்னாது கல்யாணமா? அப்ப இந்தா வாங்கிக்க?"
அந்த தொழில் நுணுக்கம் கணினியில் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை சிபி
90% உடல் பலம் இருந்தாலும் 10% மன பலமும் சேரும்போதுதான் முழு வெற்றி கிடைக்கும்
இல்லையென்ரால் 90% கிணற்றைத்தாண்டி என்ன பிரயோஜனம்
உள்ளே அல்லவா விழுக நேரிடும்!
//அந்த தொழில் நுணுக்கம் கணினியில் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை சிபி //
மிகவும் சுலபம். காரணத்தை எழுதும்போது மட்டும் மானிட்டரை(திரையை) தலைகீழாக வைத்துக் கொண்டு எழுதவும்.
:-)
இந்த ஆவியோட தொல்லை தாங்க முடியலையே!
எங்க போனாரு இந்த பூசாரி பொன்னைய்யன்?
இரு இரு! உனக்குன்னே ஒரு ஸ்பெஷல் தாயத்து தயாரிக்கிறேன்!
ஆவியும் எழிதுது பஞ்ச் டயலாக். உனக்கு எழுதத் தெரியாதா!
அப்போ தெரிஞ்சிக்கோ முதல்ல பஞ்ச்னா என்னன்னு!
அனைவரையும் பன்ச் டயலாக் எழுத ஊக்குவிப்பதால் இனி கௌதம் அவர்கள்
"பஞ்ச் டயலாக் பரமசிவம்" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுவார்.
பட்டம் வழங்குபவர்கள்.
-ஆவிகள் யுனிவர்சிட்டி.
ம்ம்ம்..... வீட்டிலே சண்டை போட்டுட்டு ஆபிசுக்கு வர்ற பத்திரிகையாளர்கள் இப்படித்தான் எழுதுவார்கள்....
கவுதம் அண்ணே, உடம்புலே அடி கிடி எதுவும் இல்லையே? :-))))
தங்கமணி வாழ்க!
சரியாச் சொன்னீங்க சுப்பையா சார்! ஆயிரம் இருந்தாலும் அனுபவஸ்தர் இல்லையா!
சிபி,
//மானிட்டரை(திரையை) தலைகீழாக வைத்துக் கொண்டு எழுதவும்.//
ஆஹா.. கிளம்பீட்டாய்ங்கய்யா.. கிளம்பீட்டாய்ங்க! இப்பவே என்னா ஆபீஸ்ல ஒரு மாதிரியாத்தான் பார்க்குறாய்ங்க!
நண்பா லக்கிலுக்,
பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பாவ்! :-(
இளா,
தங்கமணிதான் தங்கச்சி பேரா?
வலைப்பூ உலகத்துலே
தங்கமணிதான் எல்லா(ருடைய) ஹோம் மினிஸ்டர் பேரும்!
//அமானுஷ்ய ஆவி said...
வலைப்பூ உலகத்துலே
தங்கமணிதான் எல்லா(ருடைய) ஹோம் மினிஸ்டர் பேரும்! //
அப்டியா சேதி!
எதுக்கும் எங்க வீட்டு தங்கமணிகிட்ட ஒருவார்த்தை பேரு புடிச்சிருக்கானு கேட்டுட்டு ஏத்துக்கிறேனே!
//எதுக்கும் எங்க வீட்டு தங்கமணிகிட்ட ஒருவார்த்தை பேரு புடிச்சிருக்கானு கேட்டுட்டு ஏத்துக்கிறேனே! //
ஆஹா! இதுதான் அனுபவ அறிவு!
வாங்கிய பின் தோன்றும் ஞானம்!
Dear Sir
Just imagine like this, the boxer is already burning on thinking about his wife.When the culprit crossed him, his anger doubles and he gives left and right to the thief.
Moral : Even Wives negative Sense increase husbands Strength.
Note : Tamil Keypad is notworking in my system,so tried in english, apologize!
கொதம், இது கூட தெரியாதா..? குத்து சண்டை காரன்கிட்டே போய் கத்தி சண்டைய போட சொன்னா எப்படிங்க.....?
இது எப்படி இருக்கு....!?
ஏன் கொதம், இதுக்கு எல்லாம் போய் தங்கமணிய இந்த காட்டு காட்டுறீங்கலே...? உங்கலுக்கே நியாயமா?
ஏன் கொதம், இதுக்கு எல்லாம் போய் தங்கமணிய இந்த காட்டு காட்டுறீங்கலே...? உங்கலுக்கே நியாயமா?
// வலைப்பூ உலகத்துலே
தங்கமணிதான் எல்லா(ருடைய) ஹோம் மினிஸ்டர் பேரும்! //
***தங்கமணி***தங்கமணி*** என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா ? முதலில் தங்கம் வாங்கிக்கொடுங்கள் பிறகு அணிந்து கொள்கிறோம்.
;-)))
//Moral : Even Wives negative Sense increase husbands Strength//
ஆஹா! இது ஒரு பாஸிட்டிவான அப்ரோச்! பலே!
தங்கமணி --> தங்கம் அணி!
ஆஹா! என்ன ஒரு விளக்கம்! லதா அவர்களே!
இது சரியான பஞ்ச்!
ஆஹா! பெண்ணுரைமை வாதிங்கள்ளாம் கிளம்பீட்டாங்க!
இன்னிக்கு நமக்கு கௌதம் சூப் கண்டீப்பா கிடைக்கும் போல இருக்கே!
// ‘ஒருவனின் வெற்றிகளுக்கு மட்டுமல்ல, தோல்விகளுக்குப் பின்னாலும் ஒரு பெண்ணே இருக்கிறாள். குறிப்பாக மனைவி’ என பத்திரிகையாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். //
நற... நற... (கோவத்துல பல்லக் கடிக்கிறேனாம்)
// RAANA MONAA said...
Just imagine like this, the boxer is already burning on thinking about his wife.When the culprit crossed him, his anger doubles and he gives left and right to the thief.
Moral : Even Wives negative Sense increase husbands Strength. //
அது!.. அது!!...
// அமானுஷ்ய ஆவி said...
ஆஹா! பெண்ணுரைமை வாதிங்கள்ளாம் கிளம்பீட்டாங்க!
இன்னிக்கு நமக்கு கௌதம் சூப் கண்டீப்பா கிடைக்கும் போல இருக்கே!//
எனக்கொரு சிங்கிள் டம்பளர் ஆர்டர்!!... (இப்பவே ஆர்டர் குடுத்தாச்சுப்பா, அப்புறமேட்டு இல்லன்னு சொல்லக்கூடாது, சரியா?)
Gowtham
I too agree with this
// RAANA MONAA said...
Just imagine like this, the boxer is already burning on thinking about his wife.When the culprit crossed him, his anger doubles and he gives left and right to the thief.
Moral : Even Wives negative Sense increase husbands Strength//
thokkaradhum thotthutu..adukku karanattha wife mela podarada..
nalla iruku sir valthukkal..orey potti thana kalakal ponga
nalla iruku sir valthukkal..orey potti thana kalakal ponga
Post a Comment