நன்றி மக்களே நன்றி! ஜாலியான விளையாட்டுத்தான் என்றாலும் சீரியஸாக கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி! முதல் கமெண்ட் கொடுத்த வெட்டிப்பயல் அவர்களுக்கும் கட்டக் கடைசி கொடுத்த சின்னப்புள்ள அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!
இந்த முறை பரிசுக்குரிய கமெண்ட்டுகளாக இரண்டினைத் தேர்வு செய்துள்ளேன்.
- Udhayakumar said...
உன்னை அடிச்ச வாத்தியாருக்கு இன்னைக்கு பேக் பஞ்சராகப் போகுது., சீட்ல ஆணி வைச்சுட்டோம்ல... - sivagnanamji(#16342789) said...
நம்ம மிஸ்ஸுக்கு மீசை இருந்தா எப்டி இருக்கும்?
இன்னொரு ஸ்பெஷல் நியூஸ்! பரிசு பெறும் இந்த இரண்டு தவிர இன்னும் சில கமெண்ட்டுகளையும் தொகுத்து 'குங்குமம்' வார இதழில் வெளியிடவும் ஆசிரியர் குழுவின் பரிசீலணைக்கு அனுப்பியுள்ளேன்.
வெற்றி பெற்ற உதயகுமார் மற்றும் சிவஞானம்ஜி இருவருக்கும் இனிமேல் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறப்போகிற மற்றவர்களுக்கும் போட்டியில் பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.
(கணினி கொஞ்சம் தகராறு செய்ததால் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமாகிவிட்டது. மன்னிச்சுட்டீங்கதானே?!)
28 comments:
இந்த முறையும் நமக்கே அல்வா!
// Udhayakumar said...
உன்னை அடிச்ச வாத்தியாருக்கு இன்னைக்கு பேக் பஞ்சராகப் போகுது., சீட்ல ஆணி வைச்சுட்டோம்ல... //
யே!! நாங்க தான் சொன்னம்ல...
// sivagnanamji(#16342789) said...
நம்ம மிஸ்ஸுக்கு மீசை இருந்தா எப்டி இருக்கும்? //
அட இது கூட நல்லாக்கு....
வாழ்த்துக்கள் நண்பர்களே..
இது போல் தடாலடி, அதிரடி சாக்கால் மக்களை திக்குமுக்காட வைக்கும் எங்கள் தலை ஜி. கெ(ள)ழதம்-க்கு நன்றியோ நன்றி!!
என்னா ப்ரைஸூ?
//31384//
ஸ் ஸ் இப்பவே கண்ண கட்டுதே
நன்றி! நன்றி!!
உதயகுமாருக்கு வாழ்த்துகள்!
இளா[விவசாயி ஒரிஜினல்?]வுக்கும்,வாழும்புன்னகைக்கும் நன்றி!
அடுத்த போட்டியை அறிவிக்க இருக்கும் கெளதமிற்கு நன்றி!!!
இளா,
//இந்த முறையும் நமக்கே அல்வா!//
கவலைப்படாதே சகோதரா,
பொறுமை என்பது ஒரு கசப்பான காய். ஆனால் அது கனிந்தால் மிக இனிமையான பழமாகும் என்றார் ரூஸோ. எனக்கென்னமோ உங்களுக்கு வெயிட்டா ஏதோ கிடைக்கப் போகுதுன்னு தோணுது!
லிவிங் ஸ்மைல்,
நன்றிக்கா!
பிரபு ராஜா,
//என்னா ப்ரைஸூ? //
அது வெற்றியாளர்களது விருப்பம்.
சிவஞானம்ஜி உள்ளூர்க்காரர்தான், பிரச்னையில்லை.
உதயகுமார் வெளிநாட்டுக்காரர் போலிருக்கு.
அவர் சார்பாக இங்கே சென்னையில் பரிசு வாங்கிக் கொள்ளும் நபரை உதயகுமார்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
சில கமென்டுகளைப் பார்த்த போது அந்தக்குழந்தையின் சிரிப்புக்கு ஏற்ற மாதிரி வரவில்லையே என்று நினைத்தேன். தேர்வு மிகப் பொருத்தம்.
// லிவிங் ஸ்மைல்,
நன்றிக்கா! //
அக்காவா..??!!
அடிங்க்!! (அடுத்த மாசம் வந்தாதான் எனக்கு 19 வயசே ஆகப் போது; 40+ ஆட்கள் என்னை அக்கா என்பதை நான் மிக மிக கடுமையாக ஆட்சேபிக்கிறேன்; இங்கே, நல்ல பிள்ளையா தங்கச்சீன்னு பாசாம சொல்லுங்க பாப்பம்...)
என் அக்காவின் (பெரியம்மா மகள் - என்னை விட ஏழு வயது பெரியவள்) கணவர் எப்போதும் என் மனைவியை அக்கா என்று தான் அழைப்பார். இத்தனைக்கும் என்னை விட ஐந்து வயது இளையவள் என் மனைவி.
அடுத்த முறை இளா அவர்களுக்கு,
வெயிட்டான அல்வாத் தட்டு கிடைக்க இருக்கிறது.
லிவிங் ஸ்மைல் அக்கா,
அக்கான்னு சொன்னா என்ன இப்ப? அக்கான்னுதான் சொல்லுவோம்!
வலைஞன்,
வித்யா சொன்னத சீரியஸா எடுத்துக்கிட்டிங்களா? அது சும்மாச்சுக்கும்! உண்மையைச் சொல்லப்போனா எனக்கும் வித்யாவுக்கும் ஆறு மாசம்தான் வயசுல வித்தியாசம்! :-)
எனிவே, உதவிக்கரம் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் நண்பரே!
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
நான் வெச்சிருந்த கமெண்டு, "மேத்ஸ் டீச்சருக்கு சிக்கன் குனியாவாம்"....
ஏனோ இந்த முறை கலந்துக்க வேணாம்னு தோணிச்சி......
அய்யா ஆவியாரே!
அடுத்த தடாலடிப் போட்டிக்கு அநேகமாக நீங்கள்தான் இன்ஸ்ப்ரேஷன்! எந்தப் பக்கம் திரும்பினாலும் வலைல பூந்து வெள்ளாடுறீங்க! கலக்குங்க!
//அய்யா ஆவியாரே!//
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அம்மா ஆவியாரே என்று இருக்க வேண்டும்!
//அம்மா ஆவியாரே என்று இருக்க வேண்டும்!//
ஆமால்ல, எங்கியோ ஒரு பின்னூட்டத்துல படிச்சேன். மிஸ் பண்ணிட்டேன்பா. ஸாரி.. டேன்மா!
மிஸ்ஸையே மிஸ் பண்ணிட்டீங்களா?
சரி சரி பிழைச்சிப் போங்க!
//மிஸ்ஸையே மிஸ் பண்ணிட்டீங்களா?
சரி சரி பிழைச்சிப் போங்க! //
ஏய் போலி ஆவி இன்னும் அடங்கலியா நீயீ....
Sorry for the Englipish :-(
Thanks a lot Gowtham!!! Kuppusamy (kuppusamy18@gmail.com) will decide the option. Even he doesn't know about this. I will send a mail to him.
வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.... தடாலடி போட்டி நடத்தி அனைவரையும் ஊக்குவிக்கும் கெளதம்ஜி அவர்களுக்கு நன்றி.....
கௌதம், குப்புசாமியும் இப்போ அமெரிக்காவில்தான் இருக்காரு. நான் இன்னொரு வலைப்பதிவரை மெயில் வீசி தேடிக் கொண்டிருக்கிறேன். அதுவரை காக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி!!!நன்றி!!!நன்றி!!!
"பத்து கட்டளைகள்"- என் சாய்ஸ்
நன்றி அனைவருக்கும்!
sivagnanamji அவர்களுக்கு,
என் புத்தகமும் அதைச் சுமந்துவரும் சாக்கில் நானும் உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.
udahayakumar,
நான் காத்துக் கொண்டிருக்கிறேன்
நன்றி. ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
நல்வரவு!
இன்று முதல் நம் அண்ணாத்தே கவுதம் "தடாலடி கவுதம்" என அழைக்கப்படுவார்.
அனானி முன்னேற்றக் கழகம், வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை, செந்தழல் ரவி ரசிகர் மன்றம், மாவீரன் டோண்டு ரசிகர்கள், போலியார் கழகம் மற்ற ஏனைய கழகம் மற்றும் நற்பணிமன்றத் தோழர்கள் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்......
கௌதம், பொன்ஸ் அவர்கள் என் சார்பாக பரிசைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு இதை நான் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டேன்.
நம்ம பேரயும் போட்டு பெரும படுத்திட்டீங்க...
மிக்க நன்றி!!!
Post a Comment