Friday, September 22, 2006

காதல் வெள்ளி தடாலடி முடிவுகள்!!!!


‘காதல் வெள்ளி’ கண்ட அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் இதோ பரிசு!

நாள்: 22.09.2006 அதாவது இன்று
நேரம்: மாலை சரியாக 6:30 மணி
இடம்: எம்.எம்.ப்ரிவியூ தியேட்டர், 57 கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 17
தொலைபேசி: 28343813

(கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு மிக அருகில், பாலத்திலிருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலையில் இருக்கிறது)

அதுசரி வெற்றியாளர் யாரென்று கேட்கிறீர்களா?
முதல் பரிசுக்குரிய பதில்:
'காதல்..!!!'

[சூப்பர் ஸ்டாரின் அஜ்ஜுக்கு இன்னா அஜ்ஜுக்குத் தான்.. குமுக்கு இன்னா குமுக்குத்தான் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை ;)] என்று பிராக்கெட் கமெண்ட் கொடுத்திருக்கிறார் பரிசுக்குரியவரான பொன்ஸ்.

எனக்கு நினைவுக்கு வந்தது: A ROSE IS A ROSE IS A ROSE!

இந்த முறை இரண்டாம் பரிசுக்குரிய பதில் சொன்ன அத்தனை பேருக்கும் பரிசு தர முடிவெடுத்துள்ளேன்.

போட்டியில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் இரண்டாம் பரிசு!!!!

ஆக ஒரே ஒரு பதில் அனுப்பியிருந்தாலும் அவர் படம் பார்க்க வரலாம்!

சில விளக்கங்கள்:
  • ஒருவர் எத்தனை பதில்கள் அனுப்பி இருந்தாலும் தலைக்கு ஒரு டிக்கெட் மட்டுமே அனுமதி! பெண்ணாக இருப்பின் தன்னுடன் ஒருவரை அழைத்து வரலாம்!
  • Anonymous பதில் அனுப்பியவர்கள் 'ஆட்டையில்' சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள்!
  • இருக்கை மற்றும் வரிசை முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!
  • வெளியூர் மற்றும் வெளிநாட்டு வலை நண்பர்கள்(போட்டியில் கலந்து கொண்டவர்கள் மட்டும்!) தங்கள் சார்பாக வேறு யாராவது ஒரு வலைப்பதிவாளரையோ அல்லது நண்பரையோ அனுப்பி வைக்கலாம்!

உற்சாகமாக உங்கள் அனனவரையும் வரவேற்கத் தயாராக இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் செங்கம் ஜஃபார் அவர்களுக்கு ஜே!

"இப்படி ஒரு போட்டி நடத்திவிட்டேன். என் நண்பர்கள் நாலைந்து பேரை அனுமதிப்பீர்களா?" என தயாரிப்பாளரிடம் கேட்டேன். அப்போது மணி மாலை 4. அவர்தான் பெருந்தன்மையோடு, "பங்கேற்ற அத்தனை பேருக்கும் வாய்ப்புக் கொடுங்கள். வரவேற்க நான் தயார்" என்றார். முன்கூட்டியே திட்டமிடப்படாத நிகழ்வே இது!

நேரம் குறைவாக உள்ளதால் 6:45 வரை திரையிடலை நிறுத்திவைப்பதாகவும் தயாரிப்பாளர் கூறியுள்ளார். வாங்க சீக்கிரம்!

25 comments:

TAMIZI said...

இலவச டிக்கெட்-ன்னு சொல்லைருக்கலாம் இதற்கு.
அது சரி- பத்திரிக்கையாளர் அல்லவா! விற்பனை கூட்ட நன்றாகவே தெரிந்ருக்கிறது. உங்களுக்கு..

குறிப்பு: இது குற்றச்சாட்டல்ல...

Anonymous said...

sodappal selection

நன்மனம் said...

//ஆக ஒரே ஒரு பதில் அனுப்பியிருந்தாலும் அவர் படம் பார்க்க வரலாம்! //

அனுமதி இலவசம் அப்படீங்கறத ஒரு போட்டி வெச்சு நாசுக்கா சொல்லி இருக்கீங்க... சரியா!!!

:-)

சின்னபுள்ள said...

இப்பவே 5:30(ist) இதுக்கு பிறகு துபாய் பிளைட் பிடிச்சி வரமுடியுமானு பாக்குறேன்..:::)))

sivagnanamji(#16342789) said...

வாழ்த்துகள் பொன்ஸ்!
நன்றி கெளதம்!

40 ஆண்டுகளுக்கு முன் பார்த்த
மொகல்-கெ-ஆஸம்
இப்பொழுதும்
நினைவில் ஆடுகின்றது

வாய்ப்பிற்கு நன்றி!

newsintamil said...

???

G Gowtham said...

//இலவச டிக்கெட்-ன்னு சொல்லைருக்கலாம் இதற்கு.
அது சரி- பத்திரிக்கையாளர் அல்லவா! விற்பனை கூட்ட நன்றாகவே தெரிந்ருக்கிறது. உங்களுக்கு..//
இல்லை நண்பரே!
இப்படி ஒரு போட்டி நடத்திவிட்டேன். என் நண்பர்கள் நாலைந்து பேரை அனுமதிப்பீர்களா? என தயாரிப்பாளரிடம் கேட்டேன். அப்போது மணி மாலை 4.
அவர்தான் பெருந்தன்மையோடு பங்கேற்ற அத்தனை பேருக்கும் வாய்ப்புக் கொடுங்கள். வரவேற்க நான் தயார் என்றார். முன்கூட்டியே திட்டமிட்டாத நிகழ்வே இது!

பொன்ஸ்~~Poorna said...

கௌதம்,
டிக்கட்டுக்கு ரொம்ப நன்றி, ஆனா இன்னிக்கு டாக்டர் அப்பாயின்மென் ட் இருக்கு.. மாத்த முடியாது :(

எனக்குப் பரிசு முடிவாகும் முன்பே ஆப்டிமிஸ்டிக்காக அதைக் கடன் கேட்ட அருளுக்கே வாய்ப்பைக் கொடுத்துவிடுகிறேன்.. அவரிடம் பேசிவிட்டு உறுதிப் படுத்துகிறேன்..

ILA(a)இளா said...

அந்தப் "படம்" புளிக்கும்

லிவிங் ஸ்மைல் said...

தொடர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வரும் எங்கள் கௌதம்மண்ணாக்கு நன்றி!!!

வெற்றி பெற்ற பா.க.ச. சென்னைக்கிளைத் தலைவி அவர்களுக்கு மதுரைக் கிளை சார்பாக வாழ்த்துக்கள்.

* தொடர்ந்து சென்னை மாநாகராட்சிக்கும் மட்டுமே தொண்டாற்றி வரும் எங்கள் தலயும் ஓரவஞ்சனைக்காரருமான திரு. கௌதம் அவர்கள் மீது பா.க.ச, மதுரைக் கிளை சார்பாக கண்டனத்தைப் பதிவு செய்கிறோன்...

நன்றி!!!

லிவிங் ஸ்மைல் said...

// கௌதம்,
டிக்கட்டுக்கு ரொம்ப நன்றி, ஆனா இன்னிக்கு டாக்டர் அப்பாயின்மென் ட் இருக்கு.. மாத்த முடியாது //

யெக்கா..! என்னக்கா இது...!!

Anonymous said...

Match fixing

லிவிங் ஸ்மைல் said...

பொன்ஸ் said...
// கௌதம்,
டிக்கட்டுக்கு ரொம்ப நன்றி, ஆனா இன்னிக்கு டாக்டர் அப்பாயின்மென் ட் இருக்கு.. மாத்த முடியாது :( //

ச்சுப்.... போயக்கா!!... உங்கூட நான் டூ..?!

சந்தனமுல்லை said...

thanx Gowtham..!

SP.VR.சுப்பையா said...

படத்தை விடுங்கள்
டிக்கெட்டை விடுங்கள்
காட்சி நேரத்தை மறந்து விடுங்கள்

நாங்கள் எதற்காகப் போட்டியில் கலந்து கொண்டோம்?

கெளதம்ஜி நடத்தும் போட்டி என்பதற்காகத்தான்

ஆக்வே ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட அனைவருக்குமே இரண்டாம் பரிசு என்பது
சரியாக இல்லை!

ஆகவே முன்பு கூறியபடி அடுத்த பரிசுகளுக்குரிய சொற்களையும் வெளியிடுங்கள்

பரிசா முக்கியம்?

வின்னிங் போஸ்ட்டிற்கு வந்ததல்லவா முக்கியம்!

ILA(a)இளா said...

//பா.க.ச.//
இது என்னங்க புதுசா, இதுக்கும் என்ன அர்த்தம்?

Anonymous said...

?????
Not satisfied with the Selection :-(

நிலா said...

அடப் போங்கப்பா :-)))))

பொன்ஸ், வெற்றிக்கனியைத் தட்டிப் பறிச்சதுக்கு வாழ்த்துக்கள்

மஞ்சூர் ராசா said...

நண்பரே ஊருக்கு வரும் போது எனது பரிசை வாங்கிக்கொள்கிறேன். அது வரை பத்திரமாக வைத்திருக்கவும்.

பின்குறிப்பு: அந்த நேரத்தில் எந்த படமானாலும் ஓ.கே.

நிலவு நண்பன் said...

அய்யோ இப்பத்தான் நான் முடிவைப் பார்க்குறேன்...எனக்கும் பரிசா..?

நான் நாளை மதுரைக்கு போகிறேன். ஆகவே அங்க படம் பார்க் ஏற்பாடு பண்ணுங்க கௌதம்..:)

newsintamil said...

கௌதம்

நேரம் குறைவாக இருந்ததால் இப்படி ஒரு முடிவெடுத்தீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பலருக்கும் சிறு அதிருப்தி தந்த ஒரு நிகழ்வு இது. ஆரம்பத்திலேயே நான்கு பேருக்கு அனுமதி என்று அறிவித்திருந்தீர்கள். ஆகவே குறைந்தது முதல் பரிசுக்கு நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். இல்லை எல்லோருக்கும் பரிசு என்பதால் எல்லாமே முதல் பரிசு என்றிருக்க வேண்டும்.

பரிசு அறிவிக்கப்பட்ட பதிவு தமிழ்மணத்தில் மிகத் தாமதமாகத்தான் வந்தது. (அதன் பிற்பகுதியை நேற்று நான் பார்க்கவே இல்லை.) பலரும் அதைப் பார்த்து புறப்பட அவகாசமே இருந்திராது. மேலும் வர இயலாதவர்கள் மற்றொருவரை தேர்ந்து அனுப்பவும் எந்த அவகாசமும் இல்லை.

ஆகவே நண்பர்களே
---------------
இந்தப்போட்டியின் உண்மையான வெற்றியாளர்கள் இந்த முடிவை உடனே கண்டு, உடனே புறப்பட்டு, உடனே சென்று அனார்கலியைப் பார்த்தவர்களே!
----------------
அவர்கள் யாரெல்லாம் என்று இன்னும் கௌதம் சொல்லவில்லை :-((

பரிசைப் பெற முடியாததால் சினிமாவுக்கு பதில் புத்தகம் பரிசு கிடைக்குமா.....?

ஜாலியான போட்டியில் வந்து விதிமுறையெல்லாம் பேசாதடா அடங்கு அடங்கு என்கிறது ....

ஆகவே வுடு ஜூட்.

G Gowtham said...

// சின்னபுள்ள said...
இப்பவே 5:30(ist) இதுக்கு பிறகு துபாய் பிளைட் பிடிச்சி வரமுடியுமானு பாக்குறேன்..:::))) //
அதனாலென்ன, சென்னைக்கு வர்றப்ப கவனிச்சுட்டாப் போச்சு!

//லிவிங் ஸ்மைல் said...
* தொடர்ந்து சென்னை மாநாகராட்சிக்கும் மட்டுமே தொண்டாற்றி வரும் எங்கள் தலயும் ஓரவஞ்சனைக்காரருமான திரு. கௌதம் அவர்கள் மீது பா.க.ச, மதுரைக் கிளை சார்பாக கண்டனத்தைப் பதிவு செய்கிறோன்...//
மதுரைக்கு வர்றப்ப மதுரைக்காரவுகளுக்காக ஒரு போட்டி நடத்த யோசிக்கிறேன்! :-)
கண்டனத்தை வாபஸ் வாங்கிக்கங்க!

// ILA(a)இளா said...
அந்தப் "படம்" புளிக்கும் //
இல்ல இளா..இனிப்பாக்கிடலாம்!
நம்பிக்கையை விட்ராதிங்கோ!!

// SP.VR.SUBBIAH said...
படத்தை விடுங்கள்
டிக்கெட்டை விடுங்கள்
காட்சி நேரத்தை மறந்து விடுங்கள்

நாங்கள் எதற்காகப் போட்டியில் கலந்து கொண்டோம்?

கெளதம்ஜி நடத்தும் போட்டி என்பதற்காகத்தான்

ஆகவே முன்பு கூறியபடி அடுத்த பரிசுகளுக்குரிய சொற்களையும் வெளியிடுங்கள்//
உங்கள் வார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன்.
வேண்டுமானால் எனக்குப் பிடித்த மேலும் மூன்று சொற்களையும் தேர்வு செய்து பதிகிறேன், சீக்கிரமே!

G Gowtham said...

//நிலா said...
அடப் போங்கப்பா :-)))))//
உங்க 'வெங்காயம்' ரசிக்கவைத்த பதில்!

//மஞ்சூர் ராசா said...
நண்பரே ஊருக்கு வரும் போது எனது பரிசை வாங்கிக்கொள்கிறேன். அது வரை பத்திரமாக வைத்திருக்கவும்.
பின்குறிப்பு: அந்த நேரத்தில் எந்த படமானாலும் ஓ.கே. //
ஓ.கே.

//நிலவு நண்பன் said...
அய்யோ இப்பத்தான் நான் முடிவைப் பார்க்குறேன்...எனக்கும் பரிசா..?
நான் நாளை மதுரைக்கு போகிறேன். ஆகவே அங்க படம் பார்க் ஏற்பாடு பண்ணுங்க கௌதம்..:)//
மன்னிக்கணும்.
அந்த அளவுக்கு தடால்டிக்கெல்லாம் நான் இன்னும் தயாராக் இல்லை! :-)
வேண்டுமானால் நம்ம லிவிங் ஸ்மைல் வித்யாவை மதுரையில் சந்தியுங்கள்.
என் சார்பாக நிச்சயம் ட்ரீட் தருவார்!

// வலைஞன் said...
நேரம் குறைவாக இருந்ததால் இப்படி ஒரு முடிவெடுத்தீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பலருக்கும் சிறு அதிருப்தி தந்த ஒரு நிகழ்வு இது.//
அதிருப்திப்பட்டவர்களுக்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்கிறேன்.

newsintamil said...

Have fun, no அதிருப்தி

சும்மா...

போட்டி என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் வெற்றி என்று சொல்லி விட்டீர்கள். போட்டி என்றாலே winners and losers இருக்க வேண்டுமே என்பதால் தான் அதிருப்தி என்றேன். அதுதான் anani இருக்கவே இருக்கு loser.

so no problem.

பரிசு வாங்கிய வெற்றியாளர்கள் யாரென்று சொல்லி விடுங்களேன்.

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு அதை அறியும் உரிமை.. சாரி ஆசை உண்டல்லவா?

ILA(a)இளா said...

//இல்ல இளா..இனிப்பாக்கிடலாம்!//
நானும் மூணு பின்னூட்டம் போட்டுஇருந்தேன். வெள்ளியன்று போக முடியாமல் சனியன்றுதான் கவுதமை சந்திக்க முடிந்தது. ஒரு நாள் தள்ளி வந்தாலும், கேடி படத்திற்கு கூட்டிச்சென்று சொன்னதவறாத "காதல்பால்" கவுதமுக்கு நன்றிங்கோ.