
வழக்கம்போலவே ஆடி அசைந்துகொண்டு பத்து மணிக்கு மேல்தான் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்கள் பணிபுரிபவர்கள் அனைவருமே!
பலமுறை கோபப்பட்டுக் கண்டித்தும் பலனில்லாத்தை நினைத்து வருந்தினார் மேனேஜர். ரொம்ப நேரம் யோசித்து ஒரு காரியம் செய்தார்.
அதன்படி அன்று மாலையே கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்தார். அலுவலக நேரத்தில்தான் கூட்டம் நடைபெற்றது என்பதால் அத்தனை பணியாளர்களும் தவறாமல் ஆஜராகி இருந்தனர்.
பேச அழைக்கப்பட்டிருந்த சொற்பொழிவாளர் எடுத்த எடுப்பில் ஒரு கேள்வியை எடுத்து வீசினார்.. “ஒரு நாளைக்கு பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல முடியும் என வைத்துக் கொள்ளுங்கள். நூறு கிலோ மீட்டர் தொலைவில் சொர்க்கம் இருப்பதாகவும் கற்பனை பண்ணிக் கொள்வோம். உங்களால் எத்தனை நாட்களில் சொர்க்கத்தை அடைய முடியும்?” என்றார்.
ஒன்றாம் வகுப்பு பொடியனிடம் கேட்க வேண்டிய கேள்வியை இங்கு வந்து கேட்கிறாரே என கேலிச்சிரிப்பைக் காட்டியது கூட்டம்!
“உங்கள் அனைவரது சார்பில் யாராவது ஒருவர் மேடைக்கு வந்து என் கேள்விக்கு பதில் சொல்லவும்” என்றார் சொற்பொழிவாளர்.
பலர் எழுந்தனர். ஒருவர் மேடையேறினார். “பத்து நாட்களில் சொர்க்கத்தை அடைந்து விடுவோம். சிறு பிள்ளைத்தனமான கேள்வி இது!” என்றார் கிண்டலாக.
“இல்லை. நீங்கள் சொன்னது தவறு. இருபது நாட்களாவது ஆகும்!” என்றார் சொற்பொழிவாளர். தொடர்ந்து அவர் சொன்ன விளக்கத்தான் அது உண்மை எனப் புரிந்துகொண்டு தலை கவிழ்ந்தனர் பணியாளர்கள் அனைவருமே.
அப்படி என்ன விளக்கம் சொன்னார் அவர்?!
?
?
?
?
?
?
?
“ஒரு நாளைக்கு பத்து கிலோமீட்டர் என கணக்கெடுத்துக் கொண்டால் பத்து நாட்களில் சொர்க்கத்தை அடைந்துவிடலாம் என்பது சரிதான். ஆனால் வாரத்தில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் உங்களுக்கு விடுமுறை. அதைக் கழித்துவிட்டால் பன்னிரெண்டு நாட்களாகும் நீங்கள் நடக்க. அப்புறம் ஒவ்வொரு வாரமும் தவறாமல் நீங்கள் அலுவலகத்துக்கு விடுமுறை போடுவதையும், வழக்கமாக அலுவலகத்துக்கு தாமதமாக வருவதையும் கணக்கெடுத்துக் கொள்ளவேண்டும். அதே தாமதத்தோடுதான் எழுந்து நடக்க ஆரம்பிப்பீர்கள். எல்லோரும் பத்து நாளில் அடையும் சொர்க்கத்தை கண்டிப்பாக நீங்கள் அடைய இருபது நாட்களாவது ஆகிவிடும்!”
முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள் இங்கே!
12 comments:
செம உள்குத்துங்கோ
ம்...
இது தான் நாசூக்காக உணர்த்துதல் என்பதா நல்லா இருக்கு
அன்புடன்
த.அகிலன்
Good one...
தவறை அழகாக சுட்டி காட்டியிருக்கிறார்.Really a good try.Keep it up.
சூப்பரா கீதுங்கோ இந்த வாழைப்பழத்துல ஏத்துன ஊசி!
நல்லா இருக்கு....
கெளதம்,
இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சரியாக இருந்தாலும்...
வேலை என்ற தீர்மானிக்கப்பட்ட 09:00 AM to 06:00 Pm ( 1 hr for lunch) 8 மணி நேரத்திற்கே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது.
சனி,ஞாயுறு விடுமுறையாக அறிவிக்கப்பட்டவை. அலுவலகப் பணிகள் அதற்கான அளவுகளுடன்தான் கணக்கிடப்படவேண்டும்.
இப்படி குன்சாலாம் கதை சொல்லக்கூடாது. :-))
Case1:
பூமியில் இருந்து சொர்கத்திற்கு தாபல் டெலிவரி செய்யும் பையன் ,அவனுக்கு அது ஒர் வேலை.
உங்கள் (அல்லது அந்த சொற்பொழிவாளர் கணக்குப்படி) கண்டிப்பாக இருபது நாட்களாவது ஆகிவிடும்!
வேலை வேலையாக மட்டும், சுவராசியமற்ற routine ஆக இருந்தால் ,அது சொர்க்கதிற்கான வேலையானலும் அப்படித்தான் இருக்கும்.
case2:
பூமியில் இருந்து சொர்கத்திற்கு மனம் விரும்பி உல்லாசப்பயணியாகச் செல்பவர்கள்.
கண்டிப்பாக எவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரமே அடையப் பார்பார்கள்.நடையை விடுங்கள், ரெகுலர் ரிசர்வேசன் கிடைக்காவிட்டலும் தக்கால் முறையிலாவது டிக்கட் எடுத்து ஒடி விடுவார்கள்.
நீதி:
எதை நோக்கி ஏன் நடக்கிறோம் அதனால் என்ன அதிகப்படியான பயன் (அதிகச் சம்பளம் ) என்ற காரணிகளே எப்படி நடப்போம் என்பதை தீர்மானம் செய்யும்.
வேலையை எப்படி சுவராசியமான ஒன்றாக ஆக்கவேண்டும் என்று மேலாளருக்குத்தான் தெரிய வேண்டும்.
சும்மா மேனேஜ்மென்ட் ஜல்லி கதைக்குதாவது. :-)))
நன்றாக இருந்தது. ரசித்தேன்.
:-)
Nice one Sir
அருமையான பதிவு. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.
சரி இந்த கதைய கேட்டதுக்கு அப்புறமாவது சரியான நேரத்துக்கு ஆபீஸ் போறீங்களா :-)
Thanks dude!!!
Post a Comment