Wednesday, October 25, 2006

தப்பிச்சுக்கோ! எப்படி?எதற்கு?ஏன்?


சை ஆசையாக அவன் ஆரம்பித்த தொழில் அது. ஆனால் வெற்றிக்கு ஆசை மட்டும் இருந்தால் போதுமா! போதுமான அனுபவமும் முதலீடும் இல்லாததால் தொடர்ந்து நஷ்டத்தையே சந்திக்க நேர்ந்தது.

எல்லா வழிகளிலும் போராடிப் பார்த்து, லாபக்கணக்கு எழுதமுடியாமல் திணறினான் அவன். ஆரம்பித்த தொழிலை பாதியில் அப்படியே நிறுத்தவும் மனமில்லாமல் தடுமாறினான். ‘ஊர் உலகம் ஏளனமாகப் பேசுமே’ என்ற கவலையும் அவனது மனக்குழப்பத்துக்கு இன்னொரு காரணம்.

இறங்குமுகத்தில் இருக்கும் தொழிலைச் சமாளிப்பதற்காக அடுத்தடுத்து கடன் வாங்கி, வட்டிக்கு மேல் வட்டியானது. கட்டமுடியாமல் திணறினான். நெருங்கிய நண்பன் ஒருவனைச் சந்தித்து ஆலோசனை கேட்க முடிவெடுத்தான். அதிகாலை நேரத்திலேயே வாக்கிங் போவதாக வீட்டில் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

வழியில் ஒரு அசம்பாவிதம்! திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது ஒரு வீடு! தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தனர் தீயணைப்புப் படை வீரர்கள்.

பதட்டத்தோடு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் அவனும் சேர்ந்துகொண்டான். நல்லவேளை.. உயிர்ச்சேதம் ஏதுமில்லை! கதறிக் கொண்டிருந்த குடும்பத்தினரை ஆட்டோவில் ஏற்றி எங்கோ அனுப்பிவைத்தார் வீட்டுக்குச் சொந்தக்காரர். போட்டது போட்டபடியே அப்படியே விட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி இருக்கவேண்டும் போலும், மேல் சட்டைகூட போடாமல் இருந்தார்.

“நகை, பணம், துணி.. எதையும் எடுக்க முடியலியா?” - கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

வீட்டுக்காரர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அவனும் ஆர்வமானான். எல்லாவற்றையும் நெருப்புக்குக் கொடுத்துவிட்டு நின்றஅந்த மனிதர் சொன்னது அவனது தொழில் குழப்பத்துக்கும் பதிலாக இருந்தது! நஷ்டத்தில் நடந்துகொண்டிருக்கும் தொழிலை அப்படியே நிறுத்திவிட்டு தப்பிக்கும் முடிவோடு திரும்பினான்!

அப்படி என்ன சொன்னார் அவர்?

?

?

?

?

?

?

?

“கிடைச்ச அவகாசத்துல என் குடும்பத்தினரை மட்டுமே காப்பாத்த முடிஞ்சது. நகை, பணம், துணியையெல்லாம் காப்பாத்த முயன்றிருந்தால் நானும் எரிந்து போயிருப்பேன்! நல்லவேளை இப்ப நான் உயிரோட இருக்கேன். இழந்ததையெல்லாம் சம்பாதிச்சுக்கலாம்ங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு!”

முந்தைய 'எப்படி? எதற்கு? ஏன்?'கள் இங்கே!

7 comments:

SP.VR. SUBBIAH said...

உண்மை! எந்த சூழ்நிலையிலும் மனிதனுக்கு வேண்டியது தன்னம்பிக்கையும் தைரியமும்தான்
If money is lost, Nothing is lost
If health is lost, something is lost
If courage is lost, everything is lost!

RBGR said...

இது போன்ற கதைகள் கட்டுரைகள் அறிவுரைகள் ஆலோசனைகள் அன்பு மொழிகள் மட்டுமே மனிதனை கல் காலத்தில் இருந்து கலி காலத்திற்க்குக் கொண்டு வந்தது...

Anonymous said...

kelapitinga thala!
manasula nenikaratha epdithan ungalala elutha mudiutho!
- ANBUDAN
PL.MUTHIAH
OOR NATAAN.

Anonymous said...

neenga indha matteri yellam engu irundhu sootugireergal mr gowtham?

Anonymous said...

ungalin edir kala kanavu?

Anonymous said...

neengal oru dubakur perveli endru soligirargale adu unmaiya?

Anonymous said...

நெறய இங்கிலீஷ் புக்கெல்லாம் படிக்கிறீங்க போல!

என்ன புக்குன்னு சொன்னீங்கன்னா நாங்களும் படிச்சு அறிவை வளர்த்துப்போம்ல!