ஏற்கெனவே நான் அறிவித்திருந்தபடி 'மழை'ப்போட்டி, அதாவது லேட்டஸ்ட் தடாலடிப்போட்டியில் இரண்டாம் சுற்றில் தேர்வான ஒன்பது பங்களிப்புகளும் இந்த வார குங்குமம் வார இதழில் பிரசுரமாகியுள்ளன!
தவிர, இந்த வார குங்குமத்தில் அட்டைப்படக் கட்டுரையின் நாயகனும் நமது வலலபதிவாளர்களில் ஒருவரே! அவர்.. பழூர் கார்த்தி. பூனாவில் நடைபெற்ற 'சிவாஜி' படத்தின் படப்பிடிப்பை பிரத்தியேக படங்களுடன் நெரடி ரிப்போர்ட் செய்திருக்கிறார் கார்த்தி.
இதழ் இப்போது கடைகளில் விற்பனைக்கு!
வாழ்த்துக்கள் வலைப்பதிவாளர்களே..
10 comments:
நன்றி தடாலடியாரே!
பக்கம் 122ல் எங்களது எழுத்துக்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
ஏங்க, குங்குமம் கிடைக்காத ஊர்லே இருக்கற மக்கள்ஸ்க்காக அந்த அட்டைப்படத்தைக் கொஞ்சம் 'ஸ்கேன்' செஞ்சு போடக்கூடாதா?
//ஏங்க, குங்குமம் கிடைக்காத ஊர்லே இருக்கற மக்கள்ஸ்க்காக அந்த அட்டைப்படத்தைக் கொஞ்சம் 'ஸ்கேன்' செஞ்சு போடக்கூடாதா?//
அக்கா ஒரு வாரம் கழிச்சி இந்த வார குங்குமம் வலையில் ஏற்றப்படும்.
குங்குமத்தின் ஆன்லைன் முகவரி : http://www.dinakaran.com/kungumam/
மீண்டும் நன்றி சார்.உங்கள் சேவை தொடர வேண்டும்..அது சரி அன்று நீங்கள் 'ஈ' படத்திற்க்கு போனதை பற்றி யாரும் (ஒருவரை தவிர) விலாவரியாக பதிவு போட வில்லையே..நீங்களாவது?
மீண்டும் நன்றி சார்.உங்கள் சேவை தொடர வேண்டும்..அது சரி அன்று நீங்கள் 'ஈ' படத்திற்க்கு போனதை பற்றி யாரும் (ஒருவரை தவிர) விலாவரியாக பதிவு போட வில்லையே..நீங்களாவது?
//மீண்டும் நன்றி சார்.உங்கள் சேவை தொடர வேண்டும்..அது சரி அன்று நீங்கள் 'ஈ' படத்திற்க்கு போனதை பற்றி யாரும் (ஒருவரை தவிர) விலாவரியாக பதிவு போட வில்லையே..நீங்களாவது?//
யாரோட படம் பாத்தம்ணு சொன்னா எங்களையெல்லாம் நீங்க சபிச்சுடுவீங்களே... அதனால தான்....
நன்றி கெளதம் அவர்களே!
நன்றி குங்குமம் ஆசிரியர் குழுவிற்கு!
ஏன் என் பின்னூட்டங்களை எடுத்தீங்க..... இவ்வளவுதான் கருத்து சுதந்திரமா?
தலைப்புல ஜிங்குசா அடிக்கிறவங்க மட்டுந்தான் பின்னூட்டனும் ஒரு வேண்டுகோள் போட்டுங்க!
//ஏன் என் பின்னூட்டங்களை எடுத்தீங்க..... இவ்வளவுதான் கருத்து சுதந்திரமா?//
நீங்க ஏன் ஒரிஜினல் ஐடியிலே வராம அதர்-ஆப்ஷன் மூலமா வந்துருக்கீங்க. உங்களுக்கு அவ்வளவு தான் தைரியமா?
மன்னிக்க வேண்டும் கொட்டாங்கச்சி என்ற அனாமத்து அல்லது அனானியாரே!
பெயர், ஊர், முகம், முகவரி, மற்றும் எதுவும் தெரிவிக்க விரும்பாமல் கொட்டாங்கச்சிக்குள் ஒளிந்திருக்கும் உங்களை வருத்தப்படுத்துவதல்ல என் நோக்கம். நேர்முகத்தோடு என் வலைப்பூவை வாசிக்கும் மற்ற பலரை வருத்தப்படுத்திவிடக்கூடாது என்பதே என் செயலுக்குக் காரணம்.
Post a Comment