Friday, December 22, 2006

தற்காலிகமாக பிரிகிறேன் நண்பர்களே!

அன்புள்ள வலையுலக நண்பர்களே!

மிகக் குறுகிய காலமே உங்களுடன் பழகியிருந்தாலும் மிக மிக நெருக்கமாகிப் போயிருக்கிறேன் உங்களில் பலருடன். அதனாலேயே ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் நான் எடுத்த ஒரு முடிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

'குங்குமம்' வார இதழின் 'பொறுப்பாசிரியர்' பதவியில் இருந்து நானாகவே விலகுகிறேன். இன்று இப்படம் கடைசி, இந்தத் தியேட்டரில்!

ஆகவே தோழர்களே!
இன்னும் இரண்டு மணி நேரமே (மாலை 6 மணிவரை) நான் குங்குமம் அலுவலகத்தில் இருப்பேன்.
குங்குமம் இதழ் தொடர்பான (இதழில் என் வழியாக வெளியான தங்கள் படைப்புகள் தொடர்பான) சந்தேகங்கமேதும் இருக்குமானால் உடனடியாகக் கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்ளவும். நானும் அலுவலகத்தில் விளக்கம் கேட்டுப் பெற ஏதுவாக இருக்கும்.

இன்னும் சில வாரங்களுக்கு வலைப்பூ பக்கம் நான் வர இயலாது என்பதால் இப்போதைக்கு இதுவே என் கடைசிப் பதிவு!

நன்றி நண்பர்களே!

25 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்....

ரவி said...

நீங்கள் மேலும் பல உயரங்களை தொட்டு நிறைவான சாதனைகளை புரிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் !!!!

We The People said...

அட கஷ்ட காலமே, இது என்னடா வம்பு இது, எல்லாரும் இப்படி கெளம்பிட்டீங்க??

குங்குமம் விட்டு தானே போறீங்க, ப்ளாக் உங்களுடையது தானே எழுதுங்க தல..

விரைவில் உங்களை எதிர்ப்பார்க்கிறோம்.

அப்புறம் நம்ம தடாலடி பரிசு வரவில்லையே தல.. அது அவ்வளவு தானா??

நன்மனம் said...

கெளதம்...

தங்கள் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

Anonymous said...

கெளதம்...

இதுநாள் வரையில் இருந்ததை விட இனி இன்னும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்வுடனும், சம்பாதியத்துடனும் இருக்க வாழ்த்துக்கள்...

ஆமா, ஆமா, குங்குமத்தவிட்டு போயிட்டாலே மேல சொன்ன எல்லாம் ஆட்டோமாடிக்கா வந்துடாதா என்ன.....

G.Ragavan said...

உங்கள் எண்ணம் போல வண்ணம் அமைந்து சிறக்க எனது வாழ்த்துகள். வாழ்க. வளர்க.

மணியன் said...

உங்கள் தொழில்முறை அடுத்த கட்ட வளர்ச்சி இனிமையாகவும் வளமையாகவும் அமைய வாழ்த்துக்கள்!!
தொடர்ந்து வலைப்பதிவில் எதிர்நோக்குவோம்.

We The People said...

//நீங்கள் மேலும் பல உயரங்களை தொட்டு நிறைவான சாதனைகளை புரிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் !!!!//

ரிப்பீட்டு!

கானா பிரபா said...

வணக்கம் கெளதம்

உங்கள் எதிர்காலம் சிறக்க நீங்கள் எடுத்த தீர்மானம் எதுவாயினும் அது பலிக்க என் வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பதிவுலகத்தில் நீங்கள் தானே ராஜா, அதை விட்டுவிடாதீர்கள்

✪சிந்தாநதி said...

!

Anonymous said...

நீர் வெற்றியின் சின்னம்!

அது தெரியும் எமக்கு!!

புதிய அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்.

தம்பி
பாலா

ramachandranusha(உஷா) said...

புதுவருடத்தில் மனம் போல வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்

சிறில் அலெக்ஸ் said...

உங்க முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள் கௌதம்.

Anonymous said...

கௌதம்!
நல் வாழ்த்துக்கள்.....புது வருடத்திற்கும் தான்!
யோகன் பாரிஸ்

SP.VR. SUBBIAH said...

Wish you all the best in life!
SP.VR.Subbiah

நாமக்கல் சிபி said...

தாங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

You know - this blog may be someplace I may have to stick around a bit, like your insight

ராஜன் said...

நல் வாழ்த்துக்கள் கௌதம்!

Anonymous said...

//நீங்கள் மேலும் பல உயரங்களை தொட்டு நிறைவான சாதனைகளை புரிய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் !!!!//

Me also

senshe

மதுமிதா said...

///சில நிமிடங்களுக்கு முன்னர் நான் எடுத்த ஒரு முடிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்///

இந்த நட்பின் பகிர்தல் போதும்
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கௌதம்

///இப்போதைக்கு இதுவே என் கடைசி பதிவு///

அப்ப நாளைக்கு இன்னொரு புது பதிவோட மகிழ்வுடன் சந்திப்போம்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கெளதம்...

தங்கள் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

அடுத்த கட்ட வளர்ச்சி சிறக்க எனது வாழ்த்துகள்

Anonymous said...

ellam nanmaikke !god blees u my dear friend .

Anonymous said...

இந்த வார குங்குமத்தில் கடைசி பக்க கதை உங்கள் தற்போதைய நிலைமையை பிரதிபலிப்பதுபோன்ற உண்ர்வினை தவிர்க்க முடிவதில்லை கௌதம்.

VSK said...

முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள் கௌதம்!!

Raghavan alias Saravanan M said...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!

வெறும் வார்த்தைப் பிரயோகத்திற்காகச் சொல்லவில்லை கெளதம் ஜி..

உண்மையாகச் சொல்கிறேன்..
நிச்சயம் உங்கள் முயற்சிகள் பலிக்கவும் எண்ணம் போல ஈடேறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

மீண்டும் சந்திப்போம் புதுப்பொலிவுடன்.. சரிதானே ஜி?