Saturday, June 14, 2008

வலைப்பதிவவர்களுக்கு கமல்ஹாசனின் கோரிக்கை!

சினிமா விமரிசகர்களின் பேனாக்களில் வெகுசில பேனாக்களே விலைக்கு வாங்க முடியாதவை! வலைப்பதிவர்களின் பேனாக்களையும் இந்த ஜாதியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமளவு பெருமைகொள்கிறேன்.


ஃப்ரான்ஸ் இயக்குநர் ஃப்ரான்ஸ்வாட்ருஃபோ(Francosisc Truffaut) தனது புத்தகம் ஒன்றில் சொன்ன கருத்து இது.. “இசை, ஓவியம், நடனம் போன்ற கலை வடிவங்களை விமர்சிக்க, அக்கலையின் பரிமாணங்களோ அல்லது அந்தக் கலையேகூடத் தெரிந்திருக்க வேண்டுமென்பது வழங்கி வரும் நியதி. ஆனால் சினிமாவுக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லவே இல்லை. சினிமாவை யாரும் விமர்சிக்கலாம்”.


“யாரும் விமர்சிக்கலாம்” என்பதில் அவரின் பெருந்தன்மையும் சினிமாவை ஒரு மக்கள் கலையாக்க வேண்டும் என்ற உத்வேகமும் தெரிகிறது; புரிகிறது.


நான் அக்கருத்திலிருந்து சற்று வேறுபடுகிறேன். தொடுத்த பூமாலையை யார் கையிலும் கொடுக்கலாம். அதை வாங்க அருகதையற்றவன் என்பவன் எந்த ஜாதியிலும் இல்லை.


ஆனால் குரங்கின் கையில் கொடுப்பது நல்லதா?!


பூமாலையின் நலம் கருதினால் - நல்லதே அல்ல.


'பாவம் குரங்கு' என்று குரங்குக்கு சம உரிமை கேட்கும் அபாரப்பெருந்தன்மை திரு. ட்ருஃபோவிற்குக்கூட இருக்காது. இருக்கவும் கூடாது என்று நினைப்பவன் நான்.


சினிமாவை ஏற்கனவே தொடுத்தவர்களிடமிருந்து சிரமமில்லாமல் வாங்கி விற்கும் சில்லரை வியாபாரிகளின் சினிமாவை யாரும் விமர்சிக்கலாம் என்ற அனுமதியை சௌகர்யம் கருதி அந்த வியாபாரிகளே தந்துள்ளனர். ஆனால் செடி வளர்த்து, பூத்த பூவை தொடுத்து விற்பவனுக்கு குரங்குச் சேட்டைகள் தாங்கொணா சோகமாகும்.


நல்ல ஒரு மனிதன் குரங்குகளைக்கூட நல்ல வேலைக்குப் பயன்படுத்த முடியும் என்பதற்கு உதாரணக்கதை - ராமன் கதை. இப்படிப்பட்ட உதாரண புருஷர்கள் சிலரும் இங்கே வலையுலகில் தசாவதாரம் படத்துக்கு நல்லபடியான விமர்சனம் எழுதியுள்ளார்கள் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.


ஏனைய பல குரங்கர்கள் மேலும் சினிமாவை நன்கு ஆராய்ந்து அறிந்து மேம்பட வாழ்த்துக்கள். வாழ்த்து பலித்தால் அவர்களது நாளைய விமர்சனங்கள் எதிர்கால கலைஞர்கள் படிக்கும் பாடமாகும்.


பின் குறிப்பு: பல வருடங்களுக்கு முன் ‘வாசுகி' இதழில் வெளியான கமல்ஹாசனின் ஒரிஜினல் கடிதம் இது. அக்கடிதத்தில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் சாய்வாகச் சேர்த்து (italics) இங்கே மறுபிரசுரம் செய்துள்ளேன். :-)



82 comments:

Sridhar Narayanan said...

டைமிங்கான பதிவு. :-)

ஒரு படைப்பை அணுகும்பொழுது குறைந்தபட்சம் முன்முடிவுகள் இல்லாமல் அணுகுவது முக்கியம். வேறு என்ன சொல்ல...

✪சிந்தாநதி said...

மீண்டும் பதிவுலகிற்கு வந்தமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் ரீ என்ட்ரி அன்று நான் நோ என்ட்ரியில் இருந்ததால் (கணினிப் பிரச்சினை) பங்கேற்க முடியவில்லை.

===

வலைப்பதிவர்களை இப்படி வாரி இருக்கீங்க ;)

சென்ஷி said...

HA..HAAH.. HAA...

RASITHU SIRITHEN. :)

Sanjai Gandhi said...

//இங்கே வலையுலகில் தசாவதாரம் படத்துக்கு நல்லபடியான விமர்சனம் எழுதியுள்ளார்கள் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

ஏனைய பல குரங்கர்கள் மேலும் சினிமாவை நன்கு ஆராய்ந்து அறிந்து மேம்பட வாழ்த்துக்கள். வாழ்த்து பலித்தால் அவர்களது நாளைய விமர்சனங்கள் எதிர்கால கலைஞர்கள் படிக்கும் பாடமாகும்.

பின் குறிப்பு: பல வருடங்களுக்கு முன் ‘வாசுகி' இதழில் வெளியான கமல்ஹாசனின் ஒரிஜினல் கடிதம் இது. அக்கடிதத்தில் ஒரு சில வார்த்தைகளை மட்டும் சாய்வாகச் சேர்த்து (italics) இங்கே மறுபிரசுரம் செய்துள்ளேன். :-) //

அண்ணே என்னண்ணே காமெடி பன்றிங்க? 3 நாட்களாக வெளிவரும் தசாவதாரம் விமரிசனம் பத்தி பல வருடங்களுக்கு முன்னாடியே கமல் எழுதி இருக்கிறாரா? :((
அவ்வ்வ்வ்வ்வ்வ்..

சுரேகா.. said...

ஆஹா...

சமயம் பார்த்த பதிவு!

அது எந்த தேதியிட்ட வாசுகி என்று சொல்ல முடியுமா?

மங்களூர் சிவா said...

படத்தை பற்றி நல்ல விமர்சனம் எழுதாதவர்கள் அனைவரையும் குரங்கர்கள் என அழைப்பதிலிருந்தே உங்கள் குரூரம் தெரிகிறது கெளதம்.

முதலில் தொடுத்தது பூமாலையா? எழவுக்கு போடும் மாலையா என அதை சரிபாருங்கள்.

துளசி கோபால் said...

மனசில் முன்முடிவு ஏதும் வந்துறக்கூடாதுன்னுதான் 'நான் படம் பார்க்குமுன்' வரும் எந்த விமரிசனக்களையும் படிப்பதில்லை.

லக்கிலுக் said...

நல்லவேளை, நான் குரங்கில்லை! :-)

லக்கிலுக் said...

//படத்தை பற்றி நல்ல விமர்சனம் எழுதாதவர்கள் அனைவரையும் குரங்கர்கள் என அழைப்பதிலிருந்தே உங்கள் குரூரம் தெரிகிறது கெளதம்.//

மங்களூர் சிவா!

பதிவை படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கு பின்னால் பின்னூட்டம் போடும் வழக்கத்தை இனிமேலாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! :-)

G Gowtham said...

கிரி, sridhar narayanan, சிந்தாநதி, சென்ஷி, sanjai, சுரேகா, மங்களூர் சிவா, துளசி கோபால் மற்றும் லக்கிலுக்.. அனைவருக்கும் நன்றி.

சென்ஷி..
அது எந்த வருடத்து இதழ் எனத் தெரியவில்லை. எதையாவது படிக்கையில் அது பளிச் என இருப்பதாகத் தோன்றினால் பிளேடு போட்டு தனியே எடுத்துவைத்துவிடுவேன் நான். அந்த வகையில் இந்தப்பக்கம் மட்டும் (வாசுகி இதழின் கடைசிப்பக்கம்) என்னிடம் மிச்சமிருந்தது! உங்கள் பார்வைக்கு வேண்டுமால் இதோ இணைத்து விடுகிறேன்..

துளசி கோபால் said...

//பிளேடு போட்டு //

:-))))))))))))))))))

உண்மைத்தமிழன் said...

சுத்தப் பேத்தல்..

திரைப்படம் என்பதே ரசிகனின் பார்வைக்காகத்தான்.. அவனது பார்வையில் அவனது கருத்தை வெளியிட அவனுக்கு உரிமை உண்டு. உரிமை இல்லை என்றால் படம் தயாரித்தவரும், இயக்குநரும் மட்டுமே படத்தை பார்த்துக் கொள்ளலாம். ரசிகனிடத்தில் கொண்டு போகக்கூடாது..

ஒவ்வொரு ரசிகனும் அவனவன் உழைப்பில் கிடைத்த ஒரு பகுதி பணத்தை கொடுத்துத்தான் திரைப்படம் பார்க்கிறான். ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கியவனுக்கு அதன் மீது எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ, அதே அளவு, திரைப்படத்தை காசு கொடுத்து பார்த்த ரசிகனுக்கும் உண்டு.

விழுந்தடித்துக் கொண்டு ஓடிப் போய் பார்ப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக அவரது ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கே தங்களது தலைவரின் நடிப்பு இதில் நன்றாக இல்லை என்று சொல்வதற்கும் உரிமை இல்லை என்றால் தலைவர் அல்லது ஹீரோ என்பதற்கான தகுதி அவருக்கும் நிச்சயம் இருக்காது..

குறை சொன்னவர்கள் பலரும் தங்களது அறிவுக்குட்பட்டு தங்களது கருத்துக்களை பொது மையத்தில் தங்களுக்கான இடத்தில்தான் தெரிவித்துள்ளார்கள்.

அந்த அறிவு இங்கேயுள்ள ரசிகர்களுக்கு இல்லையென்று எடுத்தவர் கருதினால், அறிவுள்ள ரசிகர்கள் எங்கே இருக்கிறார்களோ அவர்களிடம்தான் கொண்டு போய் கொடுக்க வேண்டும்.. இல்லாவிடில் திரையரங்க வாசலிலேயே "திரைப்படம் பற்றிய அறிவுள்ளவர்கள் மட்டும் உள்ளே வந்தால்போதும்.." என்று சொல்லி போர்டு வைத்துவிட்டு, பின்பு எதிர்விமர்சனக்காரர்களை 'குரங்குகள்' என்றழைக்கட்டும்..

மொத்தத்தில் ஆதரித்தால் நண்பன், எதிர்த்தால் எதிரி என்கிற 'ஆண்டான்;அடிமை' புத்தி இதில் தெளிவாகத் தெரிகிறது.

டிஸ்கி : சமயம் பார்த்து இப்படியொரு 'திருத்தப்பட்ட' பதிவு போட்டு வலைப்பதிவர்களின் கருத்துரிமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் 'தடாலடி'க்கு நிறைய கண்டனங்கள்.. குறைந்த பாராட்டுக்கள்..

சென்ஷி said...

@ உண்மைத்தமிழண்ணே.. நீங்க இப்பல்லாம் பதிவு எழுதறதவிட பின்னூட்டம் எழுதறதுதான் பெருசா இருக்குது.. மாயக்கண்ணாடிக்கு விமர்சனம் எழுதியவரா நீங்கள் என்ற ஆச்சரியம் + அதிர்ச்சி மட்டுமே இருக்கிறது. :(

@ கௌதம்...

கேள்வி கேட்டது நானில்லை. சுரேகா :))

லக்கிலுக் said...

உண்மைத்தமிழன் அண்ணே!

உங்களுக்கு கொஞ்சம் கூட நகைச்சுவை உணர்ச்சியே இல்லையா? தடாலடியாரின் இந்த போஸ்ட் ஒரு கும்மி போஸ்ட்! ஜாலியாக enjoy செய்யுங்கள்!!

G Gowtham said...

சற்று நேரத்துக்கு முன்பாக திரு.உண்மைத்தமிழன் தொலைபேசினார். போனிலும் தன் கண்டனங்களைத் தெரிவித்தார்.

இருபது நிமிடங்கள் 'சுருக்கமாக' முழங்கியவர் கட்டக் கடைசியாக (பரிதாபமாக) ஒரு கேள்வி கேட்டார்.. “அப்படின்னா நானெல்லாம் சினிமா விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு சொல்றீங்களா?”

ஒரே ஒரு பதில் கேள்வியை மட்டும் அவரிடம் கேட்டு, என் (மன்னிக்கவும் அவரது) 'சிற்றுரை'யை முடித்துக்கொண்டோம். அந்தக் கேள்வி...

“சினிமா - மூவி - ஃபிலிம்.. மூன்றுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு விஷயத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் அட்லீஸ்ட் அதன் பெயரையாவது புரிந்து கொண்டிருக்க வேண்டாமா?”

“கொஞ்சம் அவசர வேலை.. ஒரு நாப்பது பக்கம் கம்போஸ் செய்ய வேண்டியிருக்கிறது.. அப்புறம் பேசறேனே” என்று கூறி, லைனைக் கட் அடித்து விட்டார் 'உண்மை'யார்.

நீங்க என்ன சொல்றீங்க நண்பர்களே..?!

உண்மைத்தமிழன் said...

//சென்ஷி said...
@ உண்மைத்தமிழண்ணே.. நீங்க இப்பல்லாம் பதிவு எழுதறதவிட பின்னூட்டம் எழுதறதுதான் பெருசா இருக்குது.. மாயக்கண்ணாடிக்கு விமர்சனம் எழுதியவரா நீங்கள் என்ற ஆச்சரியம் + அதிர்ச்சி மட்டுமே இருக்கிறது.:(//

தம்பீ.. 'மாயக்கண்ணாடி' என்னுள் தோற்றுவித்தது 'நான் தோல்வியுற்ற ஒருவன்' என்கிற உணர்வை..

ஆனால் தசாவதாரம் எந்தவித்திலும் எனக்குள் எவ்வித உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

இதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

உண்மைத்தமிழன் said...

//லக்கிலுக் said...
உண்மைத்தமிழன் அண்ணே! உங்களுக்கு கொஞ்சம கூட நகைச்சுவை உணர்ச்சியே இல்லையா? தடாலடியாரின் இந்த போஸ்ட் ஒரு கும்மி போஸ்ட்! ஜாலியாக enjoy செய்யுங்கள்!!//

அடப்பாவி சண்டாளா..

இந்த மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு பொறுப்பா இந்த பேட்டியைத் தேடியெடுத்துப் போட்டு, இதுல நைஸா ஒரு குத்தையும் குத்திருக்காரு.. இதைப் போயி 'கும்மி போஸ்ட்டு'ன்னு சொல்றியேடா..

பதிவின் நோக்கத்தையே குழி தோண்டி புதைச்சுட்ட..

உனக்கு 'குசேலன்' டிக்கட் நிச்சயம் கிடைக்காது..

மங்களூர் சிவா said...

/
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//லக்கிலுக் said...
உண்மைத்தமிழன் அண்ணே! உங்களுக்கு கொஞ்சம கூட நகைச்சுவை உணர்ச்சியே இல்லையா? தடாலடியாரின் இந்த போஸ்ட் ஒரு கும்மி போஸ்ட்! ஜாலியாக enjoy செய்யுங்கள்!!//

அடப்பாவி சண்டாளா..

இந்த மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு பொறுப்பா இந்த பேட்டியைத் தேடியெடுத்துப் போட்டு, இதுல நைஸா ஒரு குத்தையும் குத்திருக்காரு.. இதைப் போயி 'கும்மி போஸ்ட்டு'ன்னு சொல்றியேடா..

பதிவின் நோக்கத்தையே குழி தோண்டி புதைச்சுட்ட..
/


/
லக்கிலுக் said...
//படத்தை பற்றி நல்ல விமர்சனம் எழுதாதவர்கள் அனைவரையும் குரங்கர்கள் என அழைப்பதிலிருந்தே உங்கள் குரூரம் தெரிகிறது கெளதம்.//

மங்களூர் சிவா!

பதிவை படித்துப் பார்த்து புரிந்து கொண்டதற்கு பின்னால் பின்னூட்டம் போடும் வழக்கத்தை இனிமேலாவது ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! :-)
/

:))))))))))))))))))))))))

லக்கிலுக் said...

//G Gowtham said...
இருபது நிமிடங்கள் 'சுருக்கமாக' முழங்கியவர் கட்டக் கடைசியாக (பரிதாபமாக) ஒரு கேள்வி கேட்டார்.. “அப்படின்னா நானெல்லாம் சினிமா விமர்சனம் பண்ணக்கூடாதுன்னு சொல்றீங்களா?”///

உ.தமிழன் அண்ணன் விமர்சனம் பண்ணலாம். ஆனா நாப்பது, ஐம்பது பக்கத்துக்கு நீங்க மாயக்கண்ணாடிக்கு பண்ணது மாதிரி விமர்சனம் பண்ணி எங்களையெல்லாம் கதற கதற கற்ப.. ச்சே... கதற கதற கொலை பண்ணக்கூடாது.


//தம்பீ.. 'மாயக்கண்ணாடி' என்னுள் தோற்றுவித்தது 'நான் தோல்வியுற்ற ஒருவன்' என்கிற உணர்வை..

ஆனால் தசாவதாரம் எந்தவித்திலும் எனக்குள் எவ்வித உணர்வையும் ஏற்படுத்தவில்லை.
//

சினிமான்னா உணர்வை ஏற்படுத்திதான் தீரணுமா? படம் மூணேகால் மணி நேரம். தொடர்ச்சியாக பார்த்ததால் சோடா குடிக்க வேண்டும் என்ற தாக உணர்ச்சியை எனக்கு தசாவதாரம் ஏற்படுத்தியது.

உண்மைத்தமிழன் said...

திருவாளர் கெளதம் அவர்களே..

நான் தங்களுடன் 'தொல்லைபேசி'யில் உரையாடிபோது சொன்னது போலவே என் கருத்தில் இப்போதும் உறுதியுடன் இருக்கிறேன்.

சினிமாவை பார்க்கின்ற ஒவ்வொரு ரசிகனுக்கும் அந்தப் படம் தனக்குப் பிடித்தது அல்லது பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு முழு உரிமை உண்டு. விமர்சனம் செய்ய உரிமையில்லை என்று சொல்வதற்குத்தான் யாருக்கும் உரிமையில்லை. அது தனி நபர் சுதந்திரம். இந்தத் தனி நபர் சுதந்திரத்திற்கு கல்வி, அறிவு, அனுபவம், சான்றிதழ் எதுவும் தேவையில்லை.

உண்மையாகவே ஒரு திரைப்படம் வெற்றிகரமாக ஓடுகின்ற போது இதே ஹீரோக்கள்தான் முன்பின் பார்த்திராத ரசிகனின் விமர்சனத்தை எடுத்துப் போட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். எதிர்மறை விமர்சனங்கள் புறக்கணிக்கப்பட்டு ஆதரவான விமர்சனங்கள் மட்டுமே ஊடகங்களில் வெளியாகின்றன. காரணம் வியாபாரம். பணம்.. இதுதான் மிக முக்கியம்.

இந்த வியாபாரத்திற்காகத்தான் விமர்சனங்கள் தயாரிப்பாளருக்கு மிக, மிக தேவையாயாயிருக்கின்றன. எதிர்மறை விமர்சனங்கள் திரைப்படத்தின் வியாபாரத்தை பாதிக்கும் என்பதனால்தான் ஹீரோவும், தயாரிப்பாளரும் அவற்றை விரும்புவதில்லை. ஊடகங்களுக்கு தற்போதைக்கு பெரிய விளம்பரமும், வருவாயும் திரை நட்சத்திரங்களால்தான் கிடைக்கிறது. ஆக வெகுஜன ஊடகங்களில் நமது வலைப்பதிவர்கள் எழுதியது போன்ற அவரவர் அறிவுக்குட்பட்ட உண்மை விமர்சனங்கள் வெளியிட வாய்ப்பே இல்லை.

சினிமா மட்டுமே அல்ல.. அரசியல் பற்றிக்கூடத்தான் விமர்சனங்கள் எழுதி வருகிறார்கள். இந்த இடத்தில் எல்லாரையும் அரசியல் கட்சிகளில் சேர்ந்து தொண்டராகி வேலை பார்த்து பின்புதான் விமர்சனம் செய்ய வேண்டும் என்கிறீர்களா..?

உங்களுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது. மூன்று முறை பார்க்கவும் தோன்றியிருக்கிறது. அது உங்களது மனம் சார்ந்த இயல்பு. இதுவே அனைவருக்கும் இருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல..

வலைப்பதிவர்கள் என்பவர்கள் ஏதோ எந்த அறிவுமில்லாமல் ஓசியாக கிடைத்த இணையத்தில் ஏதோ மனம் போன போக்கில் எழுதுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.

அனைத்து விமர்சனங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக படித்துப் பாருங்கள்.. ஒருவரின் கோணம் மற்றவருக்கு இல்லை.. மற்றவரின் கோணம் இன்னொருவருக்குத் தோணவே இல்லை.. அவ்வளவு வித்தியாசங்கள்..

இதையெல்லாம் நீங்கள் உங்களுடைய ஹீரோவின் வளர்ச்சிக்காக அவரது ரசிகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களாக எடுத்துக் கொண்டுதான் தீர வேண்டும்.

அதைவிட்டுவிட்டு விமர்சனம் எழுதறதுக்கு முன்னாடி சினிமாவில் நடி.. டைரக்ட் பண்ணு... டான்ஸ் ஆடு.. பைட் போடு.. கேமிரா பிடி.. எல்லாத்தையும் கத்துக்க.. அப்புறமா வந்து எழுது அப்படீன்னு சொன்னா.. முன்பு சொன்ன கமெண்ட்டில் இருந்த அதே வார்த்தையைத்தான் இங்கேயும் சொல்வேன்..

அடுத்த படத்தை நீங்களும், உங்களது தொண்டரடிப் பொடியாழ்வார்களும், இயக்குநரும், தயாரிப்பாளரும் மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள்.. தியேட்டர்களுக்கு கொண்டு வராதீர்கள்..

அப்புறம் நீங்கள் கேட்ட 'அந்த' கேள்விக்கான பதில் நிஜமாகவே அந்த நிமிடம்வரை எனக்குத் தெரியாது.. ஆனாலும் தெரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது என்பதற்காக விசாரித்து அறிந்து கொண்டேன்.

சினிமா என்பது ஆரம்பக் காலத்தில் திரைப்படம் காட்டும் தியேட்டர்களைத்தான் குறிக்குமாம்..

பிலிம் என்பது வெறும் பிலிம் ரோல்தான்.. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

மூவி என்பது அசையும் படம்.. அதாவது சலனப்படமாக இருந்த காலத்தில் அழைக்கப்பட்ட வார்த்தையாம்.

இதில் இன்னொரு புது தகவலாக 'டாக்கி' என்பதையும் கேள்விப்பட்டிருந்தேன். இதுகூட பேசும்படம் வந்த பின்பு அதைத் தனியாகக் குறிக்க உருவான சொல்.. இப்போதும் சினிமாவில் 'டாக்கி போர்ஷன் மட்டும் 70 நாள் ஷ¥ட்டிங்' என்று ஷெட்யூல் இயக்குநர்கள் பேசி கேட்டிருக்கிறேன்..

ஸோ.. கெளதம்ஜி.. விமர்சனங்களை நமது வளர்ச்சிக்கு உரிய ஆலோசனையாக நல்லவிதமாக எடுத்துக் கொள்வோமே.. .

டிஸ்கி : ஆமா.. இதுக்கு மட்டும் எங்கிட்டிருந்தோ ஓடி வந்துட்டீங்களே..? இதற்கு முன்பும், தற்போதும் வலையுலகில் எத்தனை பேர் அரசியல் விமர்சனம், கலை விமர்சனம், இலக்கிய விமர்சனம், பண்பாடு பற்றிய விமர்சனம், புத்தக விமர்சனம் என்று பலவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.. அப்போதெல்லாம் ஏன் இது மாதிரி வந்து கேட்கல..? சினிமா பத்தி மட்டுமே விமர்சனம் பண்ணக் கூடாதுன்னா இது அராஜகம்தானே..

லக்கிலுக் said...

//“சினிமா - மூவி - ஃபிலிம்..//


ஃபிலிம் = ராவான ஓல்டுமாங்க் சரக்கு!

மூவி = சரக்கு + கோக், பெப்ஸி

சினிமா = சரக்கு + கோக் பெப்ஸி + வறுத்த நெத்திலி, எறா தொக்கு!


சரியா வாத்தியாரே? :-(

உண்மைத்தமிழன் said...

//லக்கிலுக் said...
உ.தமிழன் அண்ணன் விமர்சனம் பண்ணலாம். ஆனா நாப்பது, ஐம்பது பக்கத்துக்கு நீங்க மாயக்கண்ணாடிக்கு பண்ணது மாதிரி விமர்சனம் பண்ணி எங்களையெல்லாம் கதற கதற கற்ப.. ச்சே... கதற கதற கொலை பண்ணக்கூடாது.//

தம்பி.. நாற்பது, ஐம்பது பக்கங்கள் என்பது காட்சிகளை முழுமையாக விளக்கும்போது ஏற்படத்தான் செய்யும். ஷகிலா படத்து பிட்டு சீன் பார்க்கும்போது பாதில கட் செஞ்சா என்ன சவுண்ட் விட்டுறப்ப..? யோசிச்சுப் பாரு.. அதே மாதிரிதான்.. எதையும் அரைகுறையா சொல்லிரக் கூடாது..

உண்மைத்தமிழன் said...

//லக்கிலுக் said...
சினிமான்னா உணர்வை ஏற்படுத்திதான் தீரணுமா? படம் மூணேகால் மணி நேரம். தொடர்ச்சியாக பார்த்ததால் சோடா குடிக்க வேண்டும் என்ற தாக உணர்ச்சியை எனக்கு தசாவதாரம் ஏற்படுத்தியது.//

நல்லது.. தவறில்லை.. காரணம் நீ கொண்டாட்டக்காரன்.. வாழ்க்கையை கொண்டாடும் நோக்கிலேயே உன் மனம் செல்லும்.. அப்படி நீ இருப்பதில் ஒன்றும் தவறில்லை.

ஆனால் என் மனம் அப்படியில்லை. அதுலேயும் பதிவு எழுத வேண்டுமெனில் ஏதாவது ஒரு விதத்தில் அதனுடைய பாதிப்பு நமக்குள் ஊடுறுவ வேண்டும். அப்படியில்லையெனில் பதிவு லேதுதான்..

இந்தப் படத்தைப் பொறுத்தமட்டில் உன்னைப் போலவே எனக்கும் மூணே கால் மணி நேரம் பொழுது போனது. நேரம் போனதே தெரியவில்லை. அவ்வளவுதான்.. வேறென்ன சொல்ல வேண்டும்..?

உண்மைத்தமிழன் said...

//லக்கிலுக் said...
“சினிமா - மூவி - ஃபிலிம்..
ஃபிலிம் = ராவான ஓல்டுமாங்க் சரக்கு!
மூவி = சரக்கு + கோக், பெப்ஸி
சினிமா = சரக்கு + கோக் பெப்ஸி + வறுத்த நெத்திலி, எறா தொக்கு!
சரியா வாத்தியாரே?:-(//

இது ஒண்ணு போதாதா? நீ யாருன்னு காட்டுறதுக்கு..? நல்லாயிருப்பா..

G Gowtham said...

நமது வளர்ச்சிக்கு உரிய ஆலோசனையாக நல்லவிதமாக எடுத்துக்கூறியிருக்கும் உண்மைத்தமிழன் அவர்களே..

இந்தப்படத்தை நான் மூன்று முறை பார்க்கவில்லை. முதல் முறை இருபது நிமிடங்கள் தவற விட்டதால் இன்னொரு முறை பார்த்தேன் அவ்வளவே.ஆகவே எனது மனம் சார்ந்த இயல்பு என எதையும் நான் அறிவுறுத்தவோ அல்லது அதையே மற்றவர்களிடம் எதிர்பார்க்கவோ இல்லை.

முக்கியமாக ஒரு சங்கதி.. ‘'உங்களுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது.'' என்று கூறியிருக்கிறீர்கள்!

ஐயா.. இந்தப்படம் எனக்குப் பிடிச்சிருக்குன்னு எப்பய்யா சொன்னேன்?! பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னுதானேய்யா சொன்னேன்!!

;-)

உண்மைத்தமிழன் said...

//ஐயா.. இந்தப ்படம் எனக்குப் பிடிச்சிருக்குன்னு எப்பய்யா சொன்னேன்?! பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னுதானேய்யா சொன்னேன்!!;-)//

எப்படி 'தலைவர்' டயலாக்கை திருப்பியடிக்கிறீகளாக்கும்..?

முதல் 20 நிமிஷத்திற்காக மறுபடியும் அந்தப் படத்தை இறுதிவரை பார்த்திருக்கிறீர்கள்..

படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நன்றாக இல்லை என்கிறீர்கள்.. ஆனால் அதைப் பற்றி யாரும் விமர்சனம் எழுதக் கூடாது என்கிறீர்கள்.. அல்லது சினிமா தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் மட்டுமே சினிமா விமர்சனம் எழுத வேண்டும் என்கிறீர்கள்..

இதெல்லாம் ஓவரா இல்ல..

இதையெல்லாம் முன்னாடியே சொல்லிட்டு உங்க பேர்லயே ஒரு பதிவைப் போட்டிருக்கலாமே.. எதுக்கு கமலஹாசனின் கருத்து..? கருத்துக்குப் பின்னே உங்களது கழுத்து..!(சும்மா எதுகை மோனைக்காக)..

G Gowtham said...

ஓ.. அவர்தான் உங்க ‘தலைவ'ரா?

//படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. நன்றாக இல்லை என்கிறீர்கள்.. //

நான் எப்பய்யா சொன்னேன்?!

உண்மைத்தமிழன் said...

//பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னுதானேய்யா சொன்னேன்.//

இதுக்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் மேற்கொண்டு பேசுவதற்கு ஏதுவாக இருக்கும்..

லக்கிலுக் said...

//ஐயா.. இந்தப்படம் எனக்குப் பிடிச்சிருக்குன்னு எப்பய்யா சொன்னேன்?! பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்னுதானேய்யா சொன்னேன்!!//

முதலில் இந்த டயலாக்குக்கு விசில் அடிச்சிக்கறேன் :-)



////தம்பி.. நாற்பது, ஐம்பது பக்கங்கள் என்பது காட்சிகளை முழுமையாக விளக்கும்போது ஏற்படத்தான் செய்யும். ஷகிலா படத்து பிட்டு சீன் பார்க்கும்போது பாதில கட் செஞ்சா என்ன சவுண்ட் விட்டுறப்ப..? யோசிச்சுப் பாரு.. அதே மாதிரிதான்.. எதையும் அரைகுறையா சொல்லிரக் கூடாது..////

உ.த. அண்ணே! ஷகிலா படத்து பிட்டையும் நாலு நிமிஷம் போட்டா தான் வேலைக்கு ஆவும். அதையே நாற்பது, ஐம்பது நிமிஷத்துக்கு நீளமா போட்டா டர்ரு தான்! கிழிஞ்சுடும் போங்க...

நீங்க ஷகிலா படமே பார்த்தது இல்லையா? உலகப்படங்களுக்கு வேலை பார்க்கும் எடிட்டர்களை விட திறமையானவர்கள் ஷகிலா படங்களை எடிட் செய்கிறார்கள்.


//விமர்சனங்களை நமது வளர்ச்சிக்கு உரிய ஆலோசனையாக நல்லவிதமாக எடுத்துக் கொள்வோமே.. . //

உ.த. அண்ணே! விமர்சனம் என்பது சரியான நோக்கில் சரியானவற்றை விமர்சனம் செய்வதாக இருக்க வேண்டுமில்லையா?

உதாரணத்துக்கு சொல்லணும்னா, நீங்கள் செக்கச்சேவேல் என்று தசாவதாரம் ப்ளிட்சர் மாதிரி சூப்பரா இருக்கீங்க. உங்களை போயி பூவராகவன் மாதிரி கருப்பா இருக்கீங்கன்னு நான் விமர்சனம் செஞ்சேன்னா அது அயோக்கியத்தனம் இல்லையா?


//எப்படி 'தலைவர்' டயலாக்கை திருப்பியடிக்கிறீகளாக்கும்..?//

உ.த. அண்ணே! தடாலடியாரோடு ஐஞ்சி வருஷம் பழகியிருக்கீங்கன்னு சொல்றீங்க.. அவர் யாரோட ரசிகர்னு தெரியாதா? அவரு அக்மார்க் ரஜினி ரசிகர்...

ஏதோ தெரியாத்தனமா ஒரு கமல் பேட்டியை வலைப்பதிவில் போட்டுட்டாருன்னு சொல்லி அவரை கமல் ரசிகர்னு தவறாக முத்திரை குத்துவது நியாயமில்லை.

லக்கிலுக் said...

ம்ம்ம்... இங்க நடக்குற கூத்துலே எனக்கு பொழைப்பு கெட்டது தான் மிச்சம் :-(

லக்கிலுக் said...

//இதுக்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் மேற்கொண்டு பேசுவதற்கு ஏதுவாக இருக்கும்..//

அஜக்கு இன்னா அஜக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

இதுக்கு அர்த்தம் தெரிஞ்சிக்கிட்டா பாட்ஷா படத்தை 175 நாள் ஓடவெச்சிங்க? லாஜிக் பார்த்தா மேஜிக் பண்ணமுடியுமா?

உண்மைத்தமிழன் said...

//உ.த. அண்ணே! ஷகிலா படத்து பிட்டையும் நாலு நிமிஷம் போட்டாதான் வேலைக்கு ஆவும். அதையே நாற்பது, ஐம்பது நிமிஷத்துக்கு நீளமா போட்டா டர்ருதான்! கிழிஞ்சுடும் போங்க...//

தம்பீ.. நான் என்ன சொன்னேன் தெரியுமா? அந்த 4 நிமிஷத்து பிட்டையே 1 நிமிஷம் ஓட்டிட்டு நிறுத்தினா என்ன செய்வன்னுதான் கேட்டேன்..

//நீங்க ஷகிலா படமே பார்த்தது இல்லையா?//

தம்பீ.. வலையுலகில் தோழர் ஷகிலாவின் நடித்து வெளி வந்த திரைப்படங்களில் தோழர் ஷகிலாவே பார்த்திராத படங்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.. நான் பார்க்காத தோழரின் படங்கள் 3 அல்லது 4 அவ்வளவே. இது ஒரு தனிக்கதை.. இப்பொழுது எழுத வேண்டாம் என்பதால்தான் எழுதாமல் உள்ளேன்..

அந்த 3 அல்லது 4-ம் காவல்துறையின் கையில் சிக்கி கோர்ட்டு அறைகளுக்குள் தூங்கிக் கொண்டிருப்பதாக மீரான்சாகிப் தெருவில் உள்ள அண்ணாச்சி ஒருத்தர் சொன்னார்..

உண்மைத்தமிழன் said...

//உ.த. அண்ணே! விமர்சனம் என்பது சரியான நோக்கில் சரியானவற்றை விமர்சனம் செய்வதாக இருக்க வேண்டுமில்லையா? உதாரணத்துக்கு சொல்லணும்னா, நீங்கள் செக்கச்சேவேல் என்று தசாவதாரம் ப்ளிட்சர் மாதிரி சூப்பரா இருக்கீங்க. உங்களை போயி பூவராகவன் மாதிரி கருப்பா இருக்கீங்கன்னு நான் விமர்சனம் செஞ்சேன்னா அது அயோக்கியத்தனம் இல்லையா?//

தம்பி..

நிறங்களின் தன்மை வெளிப்படையானது. மாறாதது.. மடிப்பாக்கத்தில் இருந்து பார்த்தாலும், மணப்பாறையில் இருந்து பார்த்தாலும் நிறம் ஒரே நிறம்தான்.. மாறுதல் இல்லை. ஸோ.. நீ சொன்னது இகழ்ச்சியியல் என்ற பிரிவில் வரும்.

ஆனால் சினிமா..? ஏ சென்டரில் ஓடுகின்ற திரைப்படங்கள் பி, சி, சென்டர்களில் ஓடுவதில்லை. இஏ சென்டரில் ஓடாத திரைப்படங்கள் பி, சி சென்டர்களில் ஓடுகின்றன.. காரணம் என்ன..?

இதற்குப் பெயர் ரசனை.. இது உள்மனதில் இருந்து வருவது. மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும்..

எல்லாத்தையும் விளக்கமா சொல்லணுமாக்கும்..?

உண்மைத்தமிழன் said...

//உ.த. அண்ணே! தடாலடியாரோடு ஐஞ்சி வருஷம் பழகியிருக்கீங்கன்னு சொல்றீங்க.. அவர் யாரோட ரசிகர்னு தெரியாதா? அவரு அக்மார்க் ரஜினி ரசிகர்...//

அப்படியா.. இப்பத்தான் தெரியுது.. சரி..

சிவாஜி பற்றிய பதிவுகளின்போது இதே போல் பொங்காதது ஏனோ.?

கேட்டுச் சொல்லேன்..

லக்கிலுக் said...

//தம்பீ.. நான் என்ன சொன்னேன் தெரியுமா? அந்த 4 நிமிஷத்து பிட்டையே 1 நிமிஷம் ஓட்டிட்டு நிறுத்தினா என்ன செய்வன்னுதான் கேட்டேன்..//

அந்த ஒரு நிமிஷத்தோடு திருப்தி பட்டுட்டு ரேஷ்மா பிட்டு போட சொல்லி கத்துவேன்


////தம்பீ.. வலையுலகில் தோழர் ஷகிலாவின் நடித்து வெளி வந்த திரைப்படங்களில் தோழர் ஷகிலாவே பார்த்திராத படங்களையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன்.. நான் பார்க்காத தோழரின் படங்கள் 3 அல்லது 4 அவ்வளவே. இது ஒரு தனிக்கதை.. இப்பொழுது எழுத வேண்டாம் என்பதால்தான் எழுதாமல் உள்ளேன்..////

முருகா.. முருகா...

முருகா முருகான்னு சொல்லி வலையுலகில் சாமியார் வேஷம் போடும் போலி சாமியார் தானா?

ஆன்மீகம் ஆன்மீகம்னு பேசுறவங்க, எழுதறவங்க எல்லாம் கடைசியிலே சங்கராச்சாரியாரா தான் இருக்கீங்க :-(

வெட்கம்.. வேதனை.. அவமானம்!!

உண்மைத்தமிழன் said...

//லக்கிலுக் said...
ம்ம்ம்... இங்க நடக்குற கூத்துலே எனக்கு பொழைப்பு கெட்டதுதான் மிச்சம்:-(//

உனக்கு மட்டுமா ராசா.. எனக்கும்தான்.. தமிழ்மணம் சந்திப்பு பத்தி எழுதலாம்னு 4 பக்கத்துக்கு நோட்ஸ் எழுதி வைச்சிட்டு டைப் பண்ண உக்காந்தேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து கெடுத்துட்டீங்க..

லக்கிலுக் said...

//இதற்குப் பெயர் ரசனை.. இது உள்மனதில் இருந்து வருவது. மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும்.. //

ரசனையும், விமர்சனமும் ஒன்றா என்பதை பத்து வரிகளில் விளக்கவும்.

”ச்சீ.. அந்த பொண்ணு பீப்பாய் மாதிரி இருக்கு!” என்று விமர்சனம் செய்வதும் ரசனையில் சேருமா?

Anonymous said...

//நிறங்களின் தன்மை வெளிப்படையானது. மாறாதது.. மடிப்பாக்கத்தில் இருந்து பார்த்தாலும், மணப்பாறையில் இருந்து பார்த்தாலும் நிறம் ஒரே நிறம்தான்.. மாறுதல் இல்லை. ஸோ.. நீ சொன்னது இகழ்ச்சியியல் என்ற பிரிவில் வரும்.//

சந்தடி சாக்குலே உ.த. அண்ணன் தான் ப்ளிட்சர் மாதிரி செக்கச்சேவேல்னு இருக்கிறதா வதந்தி பரப்புவதை உலக வலைப்பதிவர்கள் அனைவரும் கவனிக்கவும்.

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//இதுக்கு என்ன அர்த்தம் என்று சொன்னால் மேற்கொண்டு பேசுவதற்கு ஏதுவாக இருக்கும்..//
அஜக்கு இன்னா அஜக்குதான்
குமுக்கு இன்னா குமுக்குதான்///

இதுக்கு என்னடா ராசா அர்த்தம்? இவையெல்லாம் தமிழ் வார்த்தைகள்தானா?

//இதுக்கு அர்த்தம் தெரிஞ்சிக்கிட்டா பாட்ஷா படத்தை 175 நாள் ஓடவெச்சிங்க?//

ஒரு படம் ஓடும், ஓடாதததுக்கு ஆயிரம் காரணம் இருக்கு ராசா.. எல்லாத்தையும் சொல்லணும்னா எனக்கு கை வலிக்குது. விட்ரு.. முடியாது.. பாட்ஷாவின் வெற்றிக்கும் ஆயிரம் காரணம் இருக்கு.. இப்ப தசாவதாரம் மட்டுமென்ன தோத்தா போயிருச்சு.. போட்ட காசு வந்தாச்சுல்ல.. அப்புறமென்ன..?

//லாஜிக் பார்த்தா மேஜிக் பண்ணமுடியுமா?//

இது ரெண்டும் சேர்ந்ததுதாண்டா கண்ணா சினிமா..

லாஜிக்-மேஜிக் இவையிரண்டும் சேர்ந்ததுதான் சினிமா..

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//தம்பீ.. நான் என்ன சொன்னேன் தெரியுமா? அந்த 4 நிமிஷத்து பிட்டையே 1 நிமிஷம் ஓட்டிட்டு நிறுத்தினா என்ன செய்வன்னுதான் கேட்டேன்..//
அந்த ஒரு நிமிஷத்தோடு திருப்திபட்டுட்டு ரேஷ்மா பிட்டு போட சொல்லி கத்துவேன்.///

கத்துவீல்ல.. அதைத்தான் நானும் சொல்றேன்.. பாதி, பாதியா என்னாலேயும் எழுத முடியாதுன்னு..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நண்பா கௌதமா,
இந்த 'ஒட்டு வெட்டிப்' பதிவை இப்போது நீ போட்டதால்தான் அதில் அரசியல் இருக்கிறது என்று உண்மையார் பொங்கி விட்டார்.

மற்றபடி நல்ல கும்மி....

ஆனாலும் ஆதாரமான ஒரு விதயத்தைச் சுட்ட விரும்புகிறேன்.

எந்த விதயத்தையும் விமர்சிப்பவனுக்கு அந்த விதயத்தில் ஈடுபாடு,விருப்பு-interest- இருந்தாலே போதும்;விமர்சிக்கலாம்.இதற்கு அந்த விதயத்தைப் பற்றி 'எல்லாம்' தெரிந்தவர்கள்தான் வர வேண்டும் எனச் சொல்வது கலைக்கு ஒத்துவராத ஒரு விதயம்.

ஒரு சினிமா விமர்சிக்கப் படும் போது ,'எங்கே நீ வந்து எடுத்துப் பாரு பார்ப்போம்' என பதில் சொல்வது,முதல்வனில்,'எங்கே நீ வந்து ஒருநாள் முதல்வரா இரு பார்ப்போம்' எனச் சொல்லும் பேதமை.

இரண்டாவது,விமர்சனம் நன்றாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்வதும்,நல்ல விதமாக இல்லையென்றால் விமர்சிப்பவனை விமர்சிப்பதும்,கலை அல்ல;முழுக்க அரசியல் !

மணி(ரத்னம்) ஒருமுறை அழகாகச் சொன்னார்,படம் மிக மோசமாக விமர்சிக்கப் படுகிறது என்றால்,நமது பெர்ஸப்ஷனுக்கும்,பார்வையாளரின் பெர்ஸப்ஷனுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டியதுதான்.நாம் எடுத்த படங்கள் நன்றாக இருக்கிறது என அதே ரசிகர்கள்தானே தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள்,தூக்கிக் கீழே போடும் போதும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் !' என்று.

எனவே உண்மை'யின் வார்த்தைகள் நான் முழுதுமாக ஏற்கிறேன்,இன்னும் படம் பார்க்காவிட்டாலும் !(நீதான் சிங்கப்பூருக்கெல்லாம் டிக்கெட் தரமாட்டேன்னு சொல்லிட்டியே!)

மூன்றாவது பதி(வர்)வுகள் பற்றிய பார்வை.பெரும்பான்மையான கும்மியாளர்கள் இருப்பினும்,சில கூர்மையான அவதானிப்புகளும்,பார்வைகளும் இங்குதான் காணக் கிடைக்கும்;அவை வணிகக்காரணங்களுக்குள் சிக்கியிருக்கும் பத்திரிகையில் கிடைக்காது;அவர்களுக்கு பல நிர்ப்பந்தங்கள் நடைமுறை உலகில்-practical-இருக்கின்றன.எனவே பதிவர்கள் பார்வை பலநேரம் நேர்மையாகவும்,கூர்மையாகவும் இருக்கும்,நான்காவதாக சொல்லப்ப்டும் வகையினரைத் தவிர!

நான்காவதாக,பதிவுலகில் இருக்கும் சில குழுக்களின் ‘கட்டமைப்பு உருவாக்கம்'.இவர்கள் தங்கள் கட்டமைப்பு சித்தாந்தங்கள்,அல்லது சித்தாந்தத் தலைவர்கள் கூறுவதே முடிவு என்று இருப்பவர்கள்;திராவிடக் கட்சிகள் குழு,பிராமணர் குழு,ஈ.வே.ரா பெரியார் குழு எனப் பல...இவர்கள் கருணாநிதியோ,பெரியாரோ,சோ'வோ அல்லது ஷகீலாவோ சொல்வதே வேதம் என்று வாதிடும் வெற்று மண்டையாளர்கள்;அவர்களிடமிருந்து எந்த நேர்மையான கருத்தும் கிடைப்பது துர்பலம் !

எனவே..கருத்து சுதந்திரம் கிறுக்குத்தனமோ,குரங்குத்தனமோ அல்ல!அது பதிவுலகின் ஆரோக்கியம்.

டிஸ்கி:நானும் கமலஹாசனின் படங்களை விரும்பிப் பார்ப்பவனே;ஆயினும் இந்த விதயத்தை ஒரு விமர்சகனின் உரிமைகள் என்ற வகையிலேயே அணுகியிருக்கிறேன்.படம் பார்த்தபின் என் உண்மையான கருத்து வரும் !

டிஸ்கி 2:நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்,மற்றபடி நான் உண்மை'க்குப் போட்டி அல்ல !

G Gowtham said...

//எல்லாத்தையும் சொல்லணும்னா எனக்கு கை வலிக்குது. விட்ரு.. முடியாது.. //

கை வலிக்குதுங்குற காரணத்துக்காக உங்க கருத்தைச் சொல்லாம இருக்கலாமா உனா தானா சார்! எங்களை இப்படி ஏமாத்தலாமா உனா தானா சார்?!

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
முருகா.. முருகா...முருகா முருகான்னு சொல்லி வலையுலகில் சாமியார் வேஷம் போடும் போலி சாமியார்தானா? ஆன்மீகம் ஆன்மீகம்னு பேசுறவங்க, எழுதறவங்க எல்லாம் கடைசியிலே சங்கராச்சாரியாரா தான் இருக்கீங்க:-( வெட்கம்.. வேதனை.. அவமானம்!!//

இதுல வெட்கப்படுறதுக்கும், அவமானப்படுறதுக்கும் என்ன இருக்கு..?

அந்தந்த வயசுல அதையெல்லாம் தாண்டித்தான் மேல வரணும்.. கெட்ட பின்புதான் புத்தி வரும்.. புத்தி வந்தால் பக்தி தானாகவே வரும்..

Anonymous said...

//தமிழ்மணம் சந்திப்பு பத்தி எழுதலாம்னு 4 பக்கத்துக்கு நோட்ஸ் எழுதி வைச்சிட்டு டைப் பண்ண உக்காந்தேன்..//

நோட்ஸே 4 பக்கமுன்னா பதிவு 400 பக்கத்துலே இருக்கும்னு சொல்லுங்க. அண்ணன் எப்படியும் நாளைக்கு பதிவு போட்டுருவாரு. எல்லாம் ஊரை விட்டு ஓடுறது தான் நல்லதுன்னு நெனைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

//யலக்கிலுக் said...
//இதற்குப் பெயர் ரசனை.. இது உள்மனதில் இருந்து வருவது. மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும்.. //
ரசனையும், விமர்சனமும் ஒன்றா என்பதை பத்து வரிகளில் விளக்கவும். ”ச்சீ.. அந்த பொண்ணு பீப்பாய் மாதிரி இருக்கு!” என்று விமர்சனம் செய்வதும் ரசனையில் சேருமா?//ய

ஒன்றுதான். ஒரு பொருளைப் பார்த்தவுடன் உங்களுக்குள் தோன்றும் எண்ணத்திற்கு ரசனை என்று பெயர். நீ அதனை வெளிப்படுத்தினால் அந்தப் பேச்சு மொழி அல்லது எழுத்து மொழிக்கு விமர்சனம் என்று பெயர்..

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//நிறங்களின் தன்மை வெளிப்படையானது. மாறாதது.. மடிப்பாக்கத்தில் இருந்து பார்த்தாலும், மணப்பாறையில் இருந்து பார்த்தாலும் நிறம் ஒரே நிறம்தான்.. மாறுதல் இல்லை. ஸோ.. நீ சொன்னது இகழ்ச்சியியல் என்ற பிரிவில் வரும்.//
சந்தடி சாக்குலே உ.த. அண்ணன் தான் ப்ளிட்சர் மாதிரி செக்கச்சேவேல்னு இருக்கிறதா வதந்தி பரப்புவதை உலக வலைப்பதிவர்கள் அனைவரும் கவனிக்கவும்.///

ராசா.. இதை உன் பேர்லயே வந்து சொல்லியிருக்கலாமே.. நான் என்ன கொலையா செய்யப் போறேன்.. என்னிக்குத்தான் நீ திருந்தப் போறியோ..?

உண்மைத்தமிழன் said...

//டிஸ்கி 2:நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்,மற்றபடி நான் உண்மை'க்குப் போட்டி அல்ல!//

என்னை ஆளை விடுங்க சாமி.. நான் ஒதுங்கிக்கிறேன்.. ஆள் மாத்தி ஆள் என்னையவே கும்முறீங்க..

உண்மைத்தமிழன் said...

//நான்காவதாக, பதிவுலகில் இருக்கும் சில குழுக்களின் ‘கட்டமைப்பு உருவாக்கம்'. இவர்கள் தங்கள் கட்டமைப்பு சித்தாந்தங்கள், அல்லது சித்தாந்தத் தலைவர்கள் கூறுவதே முடிவு என்று இருப்பவர்கள்; திராவிடக் கட்சிகள் குழு, பிராமணர் குழு, ஈ.வே.ரா பெரியார் குழு எனப் பல... இவர்கள் கருணாநிதியோ, பெரியாரோ, சோ'வோ அல்லது ஷகீலாவோ சொல்வதே வேதம் என்று வாதிடும் வெற்று மண்டையாளர்கள்; அவர்களிடமிருந்து எந்த நேர்மையான கருத்தும் கிடைப்பது துர்பலம்!//

தூள் அறிவன் ஸார்.. கொன்னுட்டீங்க போங்க.. உங்களுக்கு 'ஆப்பு' எப்படி கிடைக்கப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்..

லக்கிலுக் said...

//அந்தந்த வயசுல அதையெல்லாம் தாண்டித்தான் மேல வரணும்.. கெட்ட பின்புதான் புத்தி வரும்.. புத்தி வந்தால் பக்தி தானாகவே வரும்..//

பக்தி வந்த பின்னர் எல்லாத்தையும் திரைமறைவுலே வெச்சிக்கலாம்னு சொல்றீங்களா உ.த. அண்ணா!

உண்மைத்தமிழன் said...

//கருத்து சுதந்திரம் கிறுக்குத்தனமோ, குரங்குத்தனமோ அல்ல! அது பதிவுலகின் ஆரோக்கியம்.//

வழி மொழிகிறேன்.. இதைத்தான் நானும் அப்பால இருந்து சொல்லிக்கின்னே கீறேன்..

Anonymous said...

//ராசா.. இதை உன் பேர்லயே வந்து சொல்லியிருக்கலாமே.. நான் என்ன கொலையா செய்யப் போறேன்.. என்னிக்குத்தான் நீ திருந்தப் போறியோ..?//

சரி. இப்போ என் பேருலயே வந்து சொல்றேன். என் பேரு திண்டுக்கல் சர்தார்.

உண்மைத்தமிழன் said...

///G Gowtham said...
//எல்லாத்தையும் சொல்லணும்னா எனக்கு கை வலிக்குது. விட்ரு.. முடியாது..//
கை வலிக்குதுங்குற காரணத்துக்காக உங்க கருத்தைச் சொல்லாம இருக்கலாமா உனா தானா சார்! எங்களை இப்படி ஏமாத்தலாமா உனா தானா சார்?!///

ஒரு நாள் பொழைப்பைக் கெடுத்துட்டு எப்படி சாமி உங்களால இப்படிப் பேச முடியுது..?

G Gowtham said...

அறிவன்..
வந்ததற்கும் வாதத்துக்கும் நன்றி!

ஹலோ அனா தானா..
//என்னை ஆளை விடுங்க சாமி.. நான் ஒதுங்கிக்கிறேன்.. //
அப்படியெல்லாம் நீங்க சொல்லக்கூடாது. உங்களுக்கு ஒரு சாங் டெடிகேட் பண்றேன்..
http://www.youtube.com/watch?v=_e4abjYbqlA

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//தமிழ்மணம் சந்திப்பு பத்தி எழுதலாம்னு 4 பக்கத்துக்கு நோட்ஸ் எழுதி வைச்சிட்டு டைப் பண்ண உக்காந்தேன்..//
நோட்ஸே 4 பக்கமுன்னா பதிவு 400 பக்கத்துலே இருக்கும்னு சொல்லுங்க. அண்ணன் எப்படியும் நாளைக்கு பதிவு போட்டுருவாரு. எல்லாம் ஊரை விட்டு ஓடுறதுதான் நல்லதுன்னு நெனைக்கிறேன்.///

எங்க ஓடினாலும் விட மாட்டேன்டா தம்பீ.. படிச்சுத் தொலைஞ்சே ஆகணும்..

லக்கிலுக் said...

//தூள் அறிவன் ஸார்.. கொன்னுட்டீங்க போங்க.. உங்களுக்கு 'ஆப்பு' எப்படி கிடைக்கப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்..//

உ.த. அண்ணே!

அறிவன் சார் உங்களுக்கேத்த ஜோடி தான் அண்ணே!

ரெண்டு பேரும் சேர்ந்து அப்துல் கலாம் மாதிரி கனவு காணலாம். ஷங்கர் மாதிரி பேண்டஸி படம் எடுக்கலாம்.

ஜோடி நம்பர் ஒன்!!

உண்மைத்தமிழன் said...

///G Gowtham said...
ஹலோ அனா தானா..
//என்னை ஆளை விடுங்க சாமி.. நான் ஒதுங்கிக்கிறேன்.. //
அப்படியெல்லாம் நீங்க சொல்லக்கூடாது. உங்களுக்கு ஒரு சாங் டெடிகேட் பண்றேன்..
http://www.youtube.com/watch?v=_e4abjYbqlA///

எங்க ஆபீஸ்ல யுடியூப்புக்கு ஆப்பு வைச்சிட்டாங்க சாமியோவ்..

என்ன பாட்டுன்னு பாட்டாவே சொல்லிருங்க.. கேட்டுக்குறேன்..

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//அந்தந்த வயசுல அதையெல்லாம் தாண்டித்தான் மேல வரணும்.. கெட்ட பின்புதான் புத்தி வரும்.. புத்தி வந்தால் பக்தி தானாகவே வரும்..//
பக்தி வந்த பின்னர் எல்லாத்தையும் திரைமறைவுலே வெச்சிக்கலாம்னு சொல்றீங்களா உ.த. அண்ணா!///

பொதுவில் என்றில்லை திரைமறைவில் வைத்தாலும் என் அப்பன் முருகன் சூலாயுதத்தால் குத்துவான்.. என்ன தண்டனை கொஞ்சம் லேட்டாக கிடைக்கும்.. அவ்வளவுதான்..

லக்கிலுக் said...

//எந்த விதயத்தையும் விமர்சிப்பவனுக்கு அந்த விதயத்தில் ஈடுபாடு,விருப்பு-interest- இருந்தாலே போதும்;விமர்சிக்கலாம்.இதற்கு அந்த விதயத்தைப் பற்றி 'எல்லாம்' தெரிந்தவர்கள்தான் வர வேண்டும் எனச் சொல்வது கலைக்கு ஒத்துவராத ஒரு விதயம்.//

அறிவன் சார்!

குறைஞ்சபட்சம் விமர்சனம் செய்ய அடிப்படைத் தகுதியாக விமர்சனமாவது செய்ய மட்டுமாவது தெரிந்திருக்கணும் இல்லையா?

உதாரணத்துக்கு எனக்கு கர்னாடக இசைன்னாலே என்னன்னு தெரியாது. மேடையிலே அவங்க பாடுறது ஏதோ கத்துறமாதிரி தான் எனக்குத் தெரியும். நான் போயி சுப்புடு மாதிரி அதை விமர்சனம் பண்ணேன்னா நல்லாவா இருக்கும்? :-)

பதிவின் முதல் வரிகளை வாசிக்கவும். கமல்ஹாசன் விமர்சகர்களை எந்தளவுக்கு மதிக்கிறார் என்று தெரியும். விலைக்கு வாங்கமுடியாத விமர்சகர்களின் பேனாவை அவர் உயர்வாகவே கருதுகிறார் என்பது புரியும்.

//சினிமா விமரிசகர்களின் பேனாக்களில் வெகுசில பேனாக்களே விலைக்கு வாங்க முடியாதவை! //

G Gowtham said...

அந்தப்பாட்டு.. ‘போகாதே...'

அப்புறம் இன்னொரு விஷயம். இன்னொரு புது வலையாம். அங்கேயும் ஆரம்பமே தசாவதார விமர்சனம்தானாலம்!!

http://sowkkiyama.blogspot.com/

லக்கிலுக் said...

////நான்காவதாக,பதிவுலகில் இருக்கும் சில குழுக்களின் ‘கட்டமைப்பு உருவாக்கம்'.இவர்கள் தங்கள் கட்டமைப்பு சித்தாந்தங்கள்,அல்லது சித்தாந்தத் தலைவர்கள் கூறுவதே முடிவு என்று இருப்பவர்கள்;திராவிடக் கட்சிகள் குழு,பிராமணர் குழு,ஈ.வே.ரா பெரியார் குழு எனப் பல...இவர்கள் கருணாநிதியோ,பெரியாரோ,சோ'வோ அல்லது ஷகீலாவோ சொல்வதே வேதம் என்று வாதிடும் வெற்று மண்டையாளர்கள்;அவர்களிடமிருந்து எந்த நேர்மையான கருத்தும் கிடைப்பது துர்பலம் !////

சம்பந்தமில்லாத ஒரு ஜாலியான பதிவில் வந்து தங்கள் சொந்த விருப்புகளுக்கு இணங்காதவர்கள் மீது குழு முத்திரை குத்துபவர்களை எந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்றும் சொல்லிவிடுங்கள் அறிவன் சார். அதையும் தெரிஞ்சுக்கறோம் :-)

உண்மைத்தமிழன் said...

///திண்டுக்கல் சர்தார் said...
//ராசா.. இதை உன் பேர்லயே வந்து சொல்லியிருக்கலாமே.. நான் என்ன கொலையா செய்யப் போறேன்.. என்னிக்குத்தான் நீ திருந்தப் போறியோ..?//
சரி. இப்போ என் பேருலயே வந்து சொல்றேன். என் பேரு திண்டுக்கல் சர்தார்.///

தம்பீ..

திண்டுக்கல் சர்தார் பாவம்.. விட்ரு.. தான் உண்டு, தன் பதிவு உண்டுன்னு அமைதியா இருக்கார். எதுக்கு வீணா அவரைப் போய் வம்புக்கு இழுக்குற..?

அவரைப் பத்தி முழுசா தெரியணும்னா தம்பி குமரன் "என்னிடம் கேள்வி கேளுங்கள்" அப்படின்னு ஒரு பதிவு போட்டிருக்காரு. அதுல கேள்வி கேட்டவங்க லிஸ்ட்ல திண்டுக்கல் சர்தாரும் இருக்காரு.. போய் படிச்சுப் பாரு.. புரியும்.. தெரியும்..

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//தூள் அறிவன் ஸார்.. கொன்னுட்டீங்க போங்க.. உங்களுக்கு 'ஆப்பு' எப்படி கிடைக்கப் போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்..//
உ.த. அண்ணே! அறிவன் சார் உங்களுக்கேத்த ஜோடி தான் அண்ணே! ரெண்டு பேரும் சேர்ந்து அப்துல் கலாம் மாதிரி கனவு காணலாம். ஷங்கர் மாதிரி பேண்டஸி படம் எடுக்கலாம். ஜோடி நம்பர் ஒன்!!///

தேங்க்ஸ்.. ரெண்டுமே 'சக்ஸஸ் பார்முலா'தானேடா கண்ணா..

Anonymous said...

//அதுல கேள்வி கேட்டவங்க லிஸ்ட்ல திண்டுக்கல் சர்தாரும் இருக்காரு..//

அண்ணே!

ஆனாக்க திண்டுக்கல் வாக்களர் லிஸ்ட்டுலேயே அவரு பெயரு இல்லையாமே? வரவணை கண்டுபிடிச்சி சொல்லி இருக்காரே?

உண்மைத்தமிழன் said...

//G Gowtham said...
அந்தப் பாட்டு.. ‘போகாதே...'//

சரி போகல.. உங்களுக்கென்ன ஒரு க்ளிக் பண்ணி விடுறதுக்கு கையா வலிக்கப் போவுது..? எங்களுக்குத்தான தெரியும்..

உண்மைத்தமிழன் said...

//அப்புறம் இன்னொரு விஷயம். இன்னொரு புது வலையாம். அங்கேயும் ஆரம்பமே தசாவதார விமர்சனம்தானாலம்!!
http://sowkkiyama.blogspot.com//

படிச்சேன்.. இதுவும் ஒரு வகையில் நேர்மையான விமர்சனம்தானே.. இதையெல்லாம் ஆக்கப்பூர்வமா எடுத்துக்கோணும்.. என்ன நான் சொல்றது..?

லக்கிலுக் said...

//தேங்க்ஸ்.. ரெண்டுமே 'சக்ஸஸ் பார்முலா'தானேடா கண்ணா..//

அந்த பார்முலா அப்துல் கலாமுக்கும், ஷங்கருக்கும் மட்டும் தான் சக்ஸஸ். ஃபாலோ பண்ணவங்க அத்தனை பேருக்கும் அட்டர் ஃப்ளாப். உதாரணம் வேணுமா?

அப்துல் கலாமை ஃபாலோ பண்ண பாலகுருசாமி...

ஷங்கரை ஃபாலோ பண்ண பிரவின்காந்த்!

லக்கிலுக் said...

//திரைமறைவில் வைத்தாலும் என் அப்பன் முருகன் சூலாயுதத்தால் குத்துவான்..//

:-)))))))))

நோ கமெண்ட்ஸ்

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
சம்பந்தமில்லாத ஒரு ஜாலியான பதிவில் வந்து தங்கள் சொந்த விருப்புகளுக்கு இணங்காதவர்கள் மீது குழு முத்திரை குத்துபவர்களை எந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்றும் சொல்லிவிடுங்கள் அறிவன் சார். அதையும் தெரிஞ்சுக்கறோம்:-)///

அடப்பாவி.. அதையும் நீதானடா சொல்லணும்.. அவர்கிட்ட கேக்குற..?

லக்கிலுக் said...

//படிச்சேன்.. இதுவும் ஒரு வகையில் நேர்மையான விமர்சனம்தானே.. இதையெல்லாம் ஆக்கப்பூர்வமா எடுத்துக்கோணும்.. என்ன நான் சொல்றது..?//

ஆமாம். இதுமாதிரி விமர்சனம் பண்ணத் தெரிஞ்சவங்க தான் விமர்சனம் பண்ணனும்னு கமல் சொல்லி இருக்காரு.

போறவன், வர்றவன் எல்லாம் ஏறிட்டு போறதுக்கு சினிமா என்ன டவுன்பஸ்ஸா? அது கலை அண்ணே.

ஒரு பிரபல குறும்பட இயக்குனர் நீங்க. உங்களுக்கு நான் சொல்லி புரியணுமா? :-)

லக்கிலுக் said...

//அடப்பாவி.. அதையும் நீதானடா சொல்லணும்.. அவர்கிட்ட கேக்குற..?//

முத்திரை குத்துறவங்க கிட்டே தானே கேட்கமுடியும்? உங்க கிட்டேயா கேட்டேன்?

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//அதுல கேள்வி கேட்டவங்க லிஸ்ட்ல திண்டுக்கல் சர்தாரும் இருக்காரு..//
அண்ணே! ஆனாக்க திண்டுக்கல் வாக்களர் லிஸ்ட்டுலேயே அவரு பெயரு இல்லையாமே? வரவணை கண்டுபிடிச்சி சொல்லி இருக்காரே?///

டேய்.. இப்பத்தான சொன்னேன்.. பேர் போட்டு வாடான்னு.. அப்பத்தான கமெண்ட்டுக்கு ஒரு மரியாதை இருக்கும்..

எனக்கென்னவோ கண்டுபிடிச்சு சொன்னவர் மேலத்தான் சந்தேகமா இருக்கு.. ஏன்னா அவராலத்தான் அது மாதிரி எழுத முடியும்.. என்னால் பேச்சில் மட்டுமல்ல, எழுத்தில்கூட முருகனை கைவிட முடியாதுப்பூ..

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//தேங்க்ஸ்.. ரெண்டுமே 'சக்ஸஸ் பார்முலா'தானேடா கண்ணா..//
அந்த பார்முலா அப்துல் கலாமுக்கும், ஷங்கருக்கும் மட்டும் தான் சக்ஸஸ். ஃபாலோ பண்ணவங்க அத்தனை பேருக்கும் அட்டர் ஃப்ளாப். உதாரணம் வேணுமா? அப்துல் கலாமை ஃபாலோ பண்ண பாலகுருசாமி... ஷங்கரை ஃபாலோ பண்ண பிரவின்காந்த்!///

பாலகுருசாமி-அப்துல்கலாம் ஒப்பீடே தவறானது..

பிரவின்காந்த் முதல் படத்தின் சக்ஸஸ் ஸ்டோரியை அடுத்த படங்களிலும் தொடர நினைத்தார்.. அதனால்தான் தோல்வியில் முடிந்தது..

இவர் மட்டுமல்ல.. 'நேதாஜி', 'காதலர் தினம்', 'எனக்கு 20 உனக்கு 18' என்று அடிவாங்கிய லிஸ்ட்டுகளும் உண்டு.

100 சதவிகிதம் கற்று முடித்தவர்களால்தான் தொடர்ச்சியான வெற்றியை பெற முடியும.. அது இப்போதைக்கு யாராலும் முடியாது..

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//படிச்சேன்.. இதுவும் ஒரு வகையில் நேர்மையான விமர்சனம்தானே.. இதையெல்லாம் ஆக்கப்பூர்வமா எடுத்துக்கோணும்.. என்ன நான் சொல்றது..?//
ஆமாம். இதுமாதிரி விமர்சனம் பண்ணத் தெரிஞ்சவங்கதான் விமர்சனம் பண்ணனும்னு கமல் சொல்லி இருக்காரு. போறவன், வர்றவன் எல்லாம் ஏறிட்டு போறதுக்கு சினிமா என்ன டவுன்பஸ்ஸா? அது கலை அண்ணே. ஒரு பிரபல குறும்பட இயக்குனர் நீங்க. உங்களுக்கு நான் சொல்லி புரியணுமா?:-)///

அப்ப வலைப்பதிவர்களையெல்லாம் யாருன்னு நினைச்ச..?

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//அடப்பாவி.. அதையும் நீதானடா சொல்லணும்.. அவர்கிட்ட கேக்குற..?//
முத்திரை குத்துறவங்க கிட்டே தானே கேட்கமுடியும்? உங்க கிட்டேயா கேட்டேன்?///

நீதான சொன்ன 'ஜோடி நம்பர் ஒன்' அப்படீன்னு.. நண்பருக்காக நியாயம் கேட்கக் கூடாதா..?

லக்கிலுக் said...

//என்னால் பேச்சில் மட்டுமல்ல, எழுத்தில்கூட முருகனை கைவிட முடியாதுப்பூ..//

இதனாலே தாண்ணே உங்க மேலே எங்களுக்கு சந்தேகம் வருது. ஏன்னா முருகனே தெய்வானையை ஏமாத்திட்டு வள்ளியை ஜூட்டு விட்ட தில்லாலங்கடி தானே?

Anonymous said...

//டேய்.. இப்பத்தான சொன்னேன்.. பேர் போட்டு வாடான்னு.. அப்பத்தான கமெண்ட்டுக்கு ஒரு மரியாதை இருக்கும்..//

என்னோட பேரே Anonymous தான். நான் எந்த பேரை போட்டுட்டு வர்றது?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>>>>>>>எந்த விதயத்தையும் விமர்சிப்பவனுக்கு அந்த விதயத்தில் ஈடுபாடு,விருப்பு-interest- இருந்தாலே போதும்;விமர்சிக்கலாம்.இதற்கு அந்த விதயத்தைப் பற்றி 'எல்லாம்' தெரிந்தவர்கள்தான் வர வேண்டும் எனச் சொல்வது கலைக்கு ஒத்துவராத ஒரு விதயம்.//

அறிவன் சார்!

குறைஞ்சபட்சம் விமர்சனம் செய்ய அடிப்படைத் தகுதியாக விமர்சனமாவது செய்ய மட்டுமாவது தெரிந்திருக்கணும் இல்லையா?

உதாரணத்துக்கு எனக்கு கர்னாடக இசைன்னாலே என்னன்னு தெரியாது. மேடையிலே அவங்க பாடுறது ஏதோ கத்துறமாதிரி தான் எனக்குத் தெரியும். நான் போயி சுப்புடு மாதிரி அதை விமர்சனம் பண்ணேன்னா நல்லாவா இருக்கும்? :-)

பதிவின் முதல் வரிகளை வாசிக்கவும்.<<<<<<<<

லக்கி,என்னுடைய முதல் வரிகளையும் வாசிங்க...

//அந்த விதயத்தில் ஈடுபாடு,விருப்பு-interest- இருந்தாலே போதும்;//

ஈடுபாடு என நான் சொல்வது அடிப்படைக்கும் மேற்பட்ட சராசரியான அறிவு.கர்நாடக சங்கீதம்னா 'என்னன்னே தெரியாம' நான் விமர்சிக்க சொல்லலியே?

சுப்புடு நாட்டியத்தை விமர்சிக்கிறார்னா,'எங்கே நீ வந்து மேடையில ஆடு'ன்னா சொல்வது?
அதைத்தான் சுட்டினேன்.

மற்றபடி உங்கள் அனைத்து-என் பின்னூட்டம் சார்ந்த-பதில்களும்,வேறுபட்ட பார்வைத் தளங்களில் இருந்து நம் இருவராலும் பார்க்கப்படுபவை;எனவே'செல்லாது,செல்லாது' என்று போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்..
:-)

உண்மைத்தமிழன் said...

///லக்கிலுக் said...
//என்னால் பேச்சில் மட்டுமல்ல, எழுத்தில்கூட முருகனை கைவிட முடியாதுப்பூ..//
இதனாலேதாண்ணே உங்க மேலே எங்களுக்கு சந்தேகம் வருது. ஏன்னா முருகனே, தெய்வானையை ஏமாத்திட்டு வள்ளியை ஜூட்டு விட்ட தில்லாலங்கடிதானே?///

இதுல தில்லாலங்கடியெல்லாம் இல்ல தம்பீ.. வள்ளி, தெய்வானை கூடத்தான முருகன் நிக்குறாரு.. தனித்தனியா விடலையே..?

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//டேய்.. இப்பத்தான சொன்னேன்.. பேர் போட்டு வாடான்னு.. அப்பத்தான கமெண்ட்டுக்கு ஒரு மரியாதை இருக்கும்..//
என்னோட பேரே Anonymous தான். நான் எந்த பேரை போட்டுட்டு வர்றது?///

அதெப்படி ஒரே நிமிஷத்துல ரெண்டு கமெண்ட்டும் ஒண்ணாவே வருது.. அம்புட்டு ஸ்பீடு..

உண்மைத்தமிழன் said...

///லக்கி,என்னுடைய முதல் வரிகளையும் வாசிங்க...
//அந்த விதயத்தில் ஈடுபாடு,விருப்பு-interest- இருந்தாலே போதும்;//
ஈடுபாடு என நான் சொல்வது அடிப்படைக்கும் மேற்பட்ட சராசரியான அறிவு. கர்நாடக சங்கீதம்னா 'என்னன்னே தெரியாம' நான் விமர்சிக்க சொல்லலியே? சுப்புடு நாட்டியத்தை விமர்சிக்கிறார்னா, 'எங்கே நீ வந்து மேடையில ஆடு'ன்னா சொல்வது? அதைத்தான் சுட்டினேன். மற்றபடி உங்கள் அனைத்து-என் பின்னூட்டம் சார்ந்த-பதில்களும்,வேறுபட்ட பார்வைத் தளங்களில் இருந்து நம் இருவராலும் பார்க்கப்படுபவை;எனவே'செல்லாது,செல்லாது' என்று போயிகிட்டே இருக்க வேண்டியதுதான்..:-)///

அறிவன் ஸார்.. பதில் தெளிவானது.. புரியும் என்று நினைக்கிறேன்..

Sanjai Gandhi said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸபாஆஆஆஆஆ...
நீ்ங்க 2 பேரும் இன்னும் டையர்ட் ஆகவே இல்லையா? :(

லக்கிலுக் said...

//இதுல தில்லாலங்கடியெல்லாம் இல்ல தம்பீ.. வள்ளி, தெய்வானை கூடத்தான முருகன் நிக்குறாரு.. தனித்தனியா விடலையே..?//

முருகன் கருவறைக்குள் ரெண்டு பொண்டாட்டியோடு நிக்குறது உண்மைதான். ஆனால் கருவறைக்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பொண்டாட்டி தான் தெரியும். இன்னொரு பொண்டாட்டியை பார்க்க எதிர்ப்பக்கமாக தான் போகணும். நடுவில் முருகன் ரெண்டு பக்கமும் பொண்டாட்டி என்ற வியூவை எந்த கோயிலாலவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? முருகனடிமைன்னு சொல்லிக்கறீங்க இதுகூட தெரியலையே?



///அதெப்படி ஒரே நிமிஷத்துல ரெண்டு கமெண்ட்டும் ஒண்ணாவே வருது.. அம்புட்டு ஸ்பீடு..////

கொஞ்சமாவது லாஜிக் பார்க்குற ஆளா இருந்திருந்தா உங்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். வேகமெல்லாம் ஒண்ணுமில்லே. அனானிகளும் ஆட்டையிலே இருந்தாங்க.


//அறிவன் ஸார்.. பதில் தெளிவானது.. புரியும் என்று நினைக்கிறேன்..//

அப்படி என்ன புரிஞ்சுதுன்னு கொஞ்சம் விளக்கமுடியுமா?

அறிவன் சார் பூமியிலேர்ந்து ரெண்டு அடி மேலே தான் எப்பவும் நிற்பார். அறிவுஜீவிகளுக்கு அவர் பதில் புரியும்னு நெனைச்சிக்கிட்டு பதில் அளிப்பார். துரதிருஷ்டவசமாக யாருக்குமே புரியாமல் போய்விடுகிறது.