Wednesday, March 31, 2010

வலைப்பதிவாளர்களுக்கான ரெக்ரியேஷன் க்ளப்!

எம்புட்டு நாளாச்சு.. பதிவு போட்டு!

Buzz புண்ணியத்தில் ஏதேச்சையாக சில வலைப்பதிவுகளைப் படிக்க நேர்ந்தது. வலைப்பதிவாளர் திருமணம், வ.ப. வீட்டு கிரஹப்பிரவேசம், வ.ப. குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா, வ.ப. குழுமம், வ.ப. கும்பல், வ.ப. குழாம், வ.ப. சங்கம், வ.ப. அசோசியேஷன், வ.ப. வெங்காயம்.. என அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் தலையாய பிரச்னை என்னை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு போட வைத்துவிட்டது.

மேற்படி அல்லோல கல்லோலத்துக்குள் மூக்கை நுழைத்து எவ்விதமான மங்கலத்தையோ, அமங்கலத்தையோ செய்ய நான் வரவில்லை!

ஆமாம்.. நிஜமாகவே வலைப்பதிவாளர்களுக்கான ஒரு ரெக்ரியேஷன் க்ளப் ஆரம்பித்தால்தான் என்ன?

-இதுதான் என் கேள்வி.

திடுதிப்பென்று என் கையில் நான்கு டிக்கெட்டுகள் கிடைக்கும். ஒரு நல்ல சினிமாவுக்கான முதல் நாள் டிக்கெட்டுகளாக இருக்கும்.

ஆனால் தனி ஆளாகப் போய் சினிமா பார்க்கப் பிடிக்காது எனக்கு. அதற்காக தெருவில் இறங்கி நடக்கும்போது ‘சார்.. மணி எத்தனை?’ என கேட்கும் யாரையாவது அழைத்துக்கொண்டு சினிமா பார்க்க போகவும் முடியாது.

அம்மாதிரி நேரங்களில் நண்பர்கள் சிலருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவேன்.. ‘Vinnai Thandi Varuvaya.. Putham puthiya copy.. Saturday night Sathyaம் polam.. vareeya?'.

கையில் 4 டிக்கெட்டுகள் இருந்தால் அழைப்பை 8 பேருக்கு அனுப்பிவைப்பேன். முதலில் வரும் ‘Yes' களுக்கு முன்னுரிமை கொடுத்து, முதல் 3 பதிலாளர்களை தியேட்டருக்கு வரச்சொல்லிவிட்டு படம் பார்க்கக் கிளம்பிவிடுவேன்.

கண்டிப்பாக அந்த 3 பேரில் 2 பேராவது வலைப்பதிவராக இருப்பார்கள்! அல்லது வலைப்பதிவு மூலம் கிடைத்த நண்பர்களாக!

சினிமாவோ, அல்லது ஏதாவது ஒரு விழாவோ.. நல்ல தோழமையால் ரசிப்புக்குரியதாகி விடுகிறது. நல்லது கெட்டது நாலும் தெரிந்து வைத்திருக்கும் வலைப்பதிவர்களுக்கு நல்ல தோழமைக்கான தகுதி இருப்பதாக நம்புகிறேன் நான்.

அதனால்தான் கேட்கிறேன்.. வலைப்பதிவாளர்களுக்கான ஒரு ரெக்ரியேஷன்
க்ளப் ஆரம்பித்தால்தான் என்ன?

யார் யாரிடமும் பணம் வாங்கக் கூடாது. அசையும் / அசையா சொத்துக்கள் வேண்டாம். என்னிடம் 4 டிக்கெட் இருந்தால் நான் வலைக்கு வந்து ‘கா கா’ என அழைப்பு விடுப்பேன். முதலில் வருபவர்கள் டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். அல்லது தடாலடி போட்டி நடத்திக்கூட வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

’பாண்டிச்சேரி வரை பயணம் போகப்போகிறேன். இன்னிக்கு கிளம்பினா நாளைக்குத் திரும்பிடலாம். என் காரில் இன்னும் 4 பேருக்கு இடமிருக்கு. வர்றவங்க வரலாம்’ என ஒரு வலைப்பதிவர் அழைப்பு கொடுத்தால், ‘ஓ.கே.’ சொல்லும் யாரோ ஒரு நான்கு பேர் பாண்டிச்சேரி போய்வரலாம்.

’வெயில் ரொம்ப காயுது. கேரளா பக்கம் ஒரு ட்ரிப் அடிக்கலாம்னு தோணுது. மூணு நால் டூர். பத்து பேர் போலாம். ஒரு ஆளுக்கு 6 ஆயிரம் ரூபா செலவாகும். மொத்தமா செலவு பண்ணி, ஷேர் பண்ணிக்கலாம்.’ என ஒருவர் அழைத்தால், விருப்பமுள்ளவர்கள் டூர் போய் வரலாம்.

என்ன சொல்றீங்க?

26 comments:

சென்ஷி said...

:)

இவரு கூட வெளிநாட்டுப் பதிவர்களை கணக்கு சேர்த்துக்கல. அதனால கௌதம் ஜிகூட டுக்கா :)

யுவகிருஷ்ணா said...

சார்! அந்த மங்களப் பதிவை படித்து கிறுகிறுத்துப் போயிருக்கிறீர்கள் என்று தெரிகிறது! :-)

//ஆமாம்.. நிஜமாகவே வலைப்பதிவாளர்களுக்கான ஒரு ரெக்ரியேஷன் க்ளப் ஆரம்பித்தால்தான் என்ன?//

லாமே?

எல் கே said...

sari padathu nanbare

Athisha said...

சரக்கடித்து மகிழ ஏற்கனவே நிறைய ரிக்ரியேஷன் கிளப்புகள் வலையுலகில் இருக்கிறதே! இன்னொன்று வேண்டுமானால் இருந்துவிட்டு போகட்டும்.

G Gowtham said...

சென்ஷி, கிருஷ்ணா, LK..
நன்றி!

சென்ஷிக்கு..
இங்கே தலை, வால்னு யாரும் கிடையாது. யார் வேணும்னாலும் அறிவிப்பு கொடுக்கலாம். யார் வேணும்னாலும் பங்கு பெறலாம். நீங்க கூட ஒரு வெளிநாட்டு ட்ரிப்புக்கு மக்களை கூப்பிட்லாம்.. :-)
இப்படி வச்சுக்கலாமா நம்ம சங்கத்தோட கொள்கைய..?!
பழம் விட்ருங்க!

கிருஷ்ணா..
ஏ.ஆர்.ரகுமான் மாதிரி சாதனையாளரை சந்திக்கப் போகும்போது, நம்ம க்ளப் மெம்பர் யாராவது ஒருத்தரையாச்சும் கூட அழைத்துக்கொண்டு போலாம்.

LK..
Padathundreenga..?!

யுவகிருஷ்ணா said...

//ஏ.ஆர்.ரகுமான் மாதிரி சாதனையாளரை சந்திக்கப் போகும்போது, நம்ம க்ளப் மெம்பர் யாராவது ஒருத்தரையாச்சும் கூட அழைத்துக்கொண்டு போலாம்.//

அட இந்த ஐடியா நல்லாருக்கே? :-)

அங்காடிதெரு பார்த்தீங்களா சார்? புடிச்சிருந்துதா?

G Gowtham said...

அதிஷா..
ரெக்ரியேஷன் என்றால் சரக்கு அடிப்பது மட்டும்தான் என்று யாரோ உங்களுக்கு மந்திரித்து வைத்திருக்கிறார்கள்!
கூல்!
.

உண்மைத்தமிழன் said...

அடடா..

பிரதரை பதிவு போட வைச்சிட்டனா..?

நீங்களும் ஒண்ணு ஆரம்பிங்க..! அந்தப் பக்கமும் சேர்ந்துக்குறோம்..!

ரெக்ரேஷன் கிளப்புன்னா நான் எழுதுறதுக்கு நிறைய மேட்டர் கிடைக்கும்..!

வினையூக்கி said...

சார் எம்புட்டு நாளாச்சு !!! நல்லா இருக்கீகளா !!!

உங்க டிக்கெட்டுல சங்கர் தாதா ஜிந்தாபத், அம்முவாகிய நான் படம் பார்த்து இருக்கேன்

A Simple Man said...

Gowtham Sir,
pls start with this IPL season.
May I get a tkt for MI vs CSK match on 6th April?

G Gowtham said...

கிருஷ்ணா..
அங்காடித்தெரு பார்க்கலை. பார்த்தால் புடிக்கும்னுதான் தோணுது!

நம்ப க்ளப்போட முதல் போணியை அங்காடித்தெரு வுல இருந்தே ஆரம்பிச்சுரலாம்னு நினைக்கிறேன்!
:-)

வர்ற ஞாயிற்றுக்கிழமை சத்யம்ல அங்காடித்தெரு! மொத்தம் 3 டிக்கெட். எனக்கு ஒண்ணு. மத்த ரெண்டும் யாருக்கு?

கிருஷ்ணா.. நீயே இங்கே பின்னூட்டத்தில் ஒரு போட்டி வையேன்.

போட்டிக்கான முடிவுகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டியது.. மங்கலம் புகழ் உணா தானா!

எப்பூடி?

கிருஷ்ணா, உண்மைத்தமிழன்.. ஆட்டத்துக்கு ரெடியா?

G Gowtham said...

போட்டியை அறிவிப்பதற்காக கிருஷ்ணாவும், பரிசுக்குரிய 2 பேரை தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்போவதற்காக உண்மைத்தமிழனும் திரைப்படத்தைக் கண்டு ரசிக்கும் நமது க்ளப் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என கூறிக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்!

G Gowtham said...

உண்மைத்தமிழன்,
குட். டோண்ட் வொர்ரி.. பி ஹேப்பி.. ரொம்ப டென்ஷன் ஆகப்படாது. என்ஜாய் எவிடி மொமெண்ட் ஆஃப் த லைஃப்!

வினையூக்கி,
நல்லா இருக்கீங்களா?

A simple man..
:-)

A Simple Man said...

Sir,
seriously, pls let me know if you get any tkts.
Thanks.
http://iamverysimple.blogspot.com

G Gowtham said...

A Simple Man..
Ok Ok.. Will try and let u know soon..

A Simple Man said...

Thank you Sir.

K.S.Nagarajan said...

வலையுலக ரஜினிகாந்தே,

எப்பவாவது வர்றீங்க! வந்தா “கூல்”னு வெப்பத்தை கிளப்புறீங்க. Saturday Night Party ஏதேனும் உண்டா? :-)

G Gowtham said...

A Simple Man..
ம்ஹூம்.. ரொம்ப லேட்டா டிக்கெட் தேடியதால கிடைக்கலை!
ஏதாச்சும் காம்ப்ளிமெண்ட் டிக்கெட்ட கைப்பற்றலாம்னு மீடியாக்கார நண்பர்களிடம் தேடிப்பார்த்தா,
ஒரு நாழிதள் செய்தியாளர் தனக்கு கொடுக்கப்பட்ட காம்ப்ளிமெண்ட் டிக்கெட்ட ப்ளாக்ல வித்து துட்டு பார்த்துட்டாராம்.. அதனால பரபரப்பாகி, செம ஸ்ட்ரிக்ட் ஆகிடுச்சுன்னாங்க!

Better luck next time friend!

ILA (a) இளா said...

அட்ரா அட்ரா, அண்ணாச்சி, உங்களை பார்த்து எத்தனை நாளாச்சி...

G Gowtham said...

நாகராஜன்..
சாட்டர்டே நைட் வச்சாத்தான் பார்ட்டியா என்ன?!
மாத்தி யோசிக்கலாம்.. தயாரா இருங்க வர்ற வாரம்..

G Gowtham said...

இதனால் சகலமான வலையுலக மக்களே..
இவ்வளவு தூரத்துக்கு உள்நாட்டு குழப்பம் தலை விரித்து அயிட்டம் டான்ஸ் ஆடுகிறது என விளங்கிக்கொள்ளாமல் நான் பாட்டுக்கு தடாலடி போட்டி அறிவித்து, பல்பு வாங்கிக்கொண்டதால்.. இப்போதைக்கு வலைப்பதிவாளர்களுக்கான ரெக்ரியேஷன் க்ளப் திறப்பதற்கான நடவடிக்கைகளை இந்த சமூகம் கொஞ்சகாலத்துக்கு தள்ளிவைக்கிறது!

;-)

gulf-tamilan said...

கடைசியில் புஸ்ஸுன்னு ஆக்கீட்டிங்க :(((

A Simple Man said...

its ok sir, thank you for ur effort.
-ASM

ரவி said...

ஹை. ஹை.

நானும் வருவேன். இல்லைன்னா ஆட்டத்தை கலைப்பேன்..!!!

கவுதம். நல்லா இருக்கீங்களா ?

G Gowtham said...

K.S.Nagarajan
அடுத்த பார்ட்டிக்கு கண்டிப்பா உங்களுக்கு முதல் டிக்கெட்.. ஓ.கே?

ILA(@)இளா,
எப்புடி இருக்கீக இளா? சிங்காரச் சென்னைப்பக்கம் வர்லியா?

gulf-tamilan
சரி விடுங்க.. இப்போதைக்கு வெறும் காத்துதான்.. பின்னாடி கலக்கிடலாம்!

செந்தழல் ரவி
நல்லா இருக்கேன் ரவி.
உங்கள் தோழி ஒருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது.
சென்னைப்பக்கம் வந்தால் போன் பண்ணுங்க.. சந்திக்கலாம்.

Anonymous said...

I just want to say Hi to Everyone!