Tuesday, August 10, 2010
ச்சே! வலைப்பூவை எதெதுக்குத்தான் பயன்படுத்துறதுன்னு வெவஸ்தையே இல்லியா?!
இந்தப்பதிவைப் படிச்சதும் கடைசியில் நீங்கள் (அல்லது உங்களில் பலர்!) உச்சரிக்கப்போகும் வார்த்தைகளைத்தான் தலைப்பாகக் கொடுத்திருக்கிறேன்!
கொஞ்சம் பணத்தோடும் நிறைய திட்டங்களோடும் தோளுக்கு தோள் கொடுக்கும் நல்ல நண்பர்களின் பக்கபலத்தோடும் ஒரு சின்ன அலுவலகம் ஆரம்பித்திருக்கிறேன். இப்போதைக்கு ஜெமினி பார்சன் மேனரில் ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறோம்.
சென்னையில் அசோக் நகர் பகுதியில் அலுவலகத்துக்கான இடம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு மாத காலமாக தேடித்தேடி அலைந்து அலுத்ததுதான் மிச்சம்!
அச்சுப் பத்திரிகைகள், வீடியோ பத்திரிகைகள் ஆரம்பிக்கும்பணி இடம் கிடைக்காத சோகத்தால் இழுவையாகிக்கொண்டே இருக்கிறது.
உங்களில் யாரேனும் அசோக் நகரில் ’அலுவலகம் வாடகைக்கு’ எனக் கேள்விப்பட்டாலோ.. அல்லது உங்களுக்கே அப்படி ஒரு இடம் வாடகைக்குக் கொடுக்க இருந்தாலோ.. எனக்கு ஒரு தகவல் அனுப்பி உதவ முடியுமா.. ப்ளீஸ்!
editorgowtham@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
தகவல் தெரிந்ததும் சொல்கிறேன் நண்பரே! உங்கள் Budget தெரிந்தால் நல்லது.
ஸ்ரீ....
அன்புக்கு நன்றி நண்பரே!
5000 javascript:void(0)முதல் 20000 வரை!
தவறேதுமில்லை..
புன்னகை தேசத்துக்கும் நன்றி..
நீங்கள் பழைய பாக்கட் நாவல் ஜி அசோகன் நண்பரா.
@ராம்ஜி_யாஹூ
இல்லை நண்பரே.. அவரது நாவல்களை வாசகனாகப் படித்த அனுபவம் மட்டுமே எனக்கு..
வணக்கம் சார்,உங்கள் பதிவில் தவறேதும் இல்லை.பகிர்ந்து கொள்வதுதானே பதிவு.நான் 16 8 10 முதல் 19 8 10 வரை 4 நாட்கள் அலுவலக மீட்டிங் சென்னை வர உள்ளேன்.அப்போது உங்களை சந்திக்க விரும்புகிறேன்.எனது சென்னை நண்பர்களிடம் சொல்கிறேன்.ஏற்பாடு செய்ய.
சென்னை மிகப் பெரிய நகரம்தானே.. கண்டிப்பாக ஏதோ ஒரு புள்ளியில் உங்களுக்கும் இடம் குறித்து தரும்
Post a Comment