Thursday, February 17, 2011

நந்தி சினிமா பார்க்க வர்றிங்களா?


நந்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக் எனக்குப் பரிச்சயமானவர். நிறைய கனவுகளோடும் - எதிர்கால திட்டங்களோடும் சினிமா தயாரிப்புக்கு வந்திருப்பவர். அடுத்த பத்து வருடங்களை இப்போதே திட்டமிட்டு, அதை குறித்துவைத்துக் கொண்டு செயல்படும் திறமைசாலி இளைஞர். நந்தி படத்தின் துவக்க விழாவில் இலங்கைத் தமிழ் சகோதரர்களுக்கு திருமணம் நடத்தி வைத்து, மன மகிழ்வோடு படப்பிடிப்பைத் துவக்கினார். அவரது இந்த முதல் முயற்சி வெற்றி பெறவேண்டும் என 
ஆசைப்படுகிறேன்.


ஊடகத் தோழர்களுக்கும் - இணைய எழுத்தாளர்களுக்கும் - சினிமா விமரிசகர்களுக்கும் - முகப்புத்தக நண்பர்களுக்கும் - சினிமா ரசிகர்களுக்கும் பிரத்தியேக காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருக்கிறார் தினேஷ். இன்று - 17.2.2011 இரவு 6:45 மணிக்கு - எம்.எம். ப்ரிவியூ தியேட்டரில் (New No 137, Kodambakkam High Rd, T.Ngr, 600017)நந்தி படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.


வர விரும்புகிறவர்கள் இதையே அழைப்பிதழாகக் கருதிக் கொள்ளவும்.  வாருங்கள்.. உங்களது நேர்மையான விமரிசனம் புதியவர்களின் பாதைகளுக்கு உரம் போடுவதாக அமையட்டும். நன்றி!

3 comments:

capital G media pvt ltd said...

படம் பார்க்க விரும்பும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் அழைத்துவரலாம். முதலில் வருபவர்களுக்கே இருக்கை வசதியில் முன்னுரிமை.

G Gowtham said...

படம் பார்க்க விரும்பும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் அழைத்துவரலாம். முதலில் வருபவர்களுக்கே இருக்கை வசதியில் முன்னுரிமை.

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் நண்பர் என்று சொல்றீங்க.. இருந்தாலும் சொல்லிடறேன்.. படம் தேறாது சார்,