நண்பர்களுக்கு வணக்கம்!
எனக்கு கிடைக்கும் நல்லவை என் நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டுமென ஆசைப்படுபவன் நான். அது அருமையான பொருளாக இருக்கலாம், அட்டகாசமான சேவையாக இருக்கலாம், அசத்தலான வாய்ப்பாக இருக்கலாம், அல்லது ஆனந்தப்படுத்தும் அனுபவமாக இருக்கலாம்… ’எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்’ என்ற தலைப்பில் இதுபோன்ற விஷயங்களை எனது வலைப்பூவிலும் (Blog) வதனப்புத்தகத்திலும் (FaceBook) அவ்வப்போது பகிர்ந்து வந்துள்ளேன்.
அதன் அடிப்படையில் மேலும் ஒரு நல்ல விஷயத்தை இப்போது உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்!
அந்த வகையில் இந்தப் பதிவை எனது அனுபவப் பகிர்வாக எடுத்துக் கொள்ளலாம். தவிர, தொடர்புடைய நிறுவனத்தில் எனக்கும் துளியூண்டு பங்கிருப்பதால் இதனை விளம்பரப் பதிவாகவும் எடுத்துக் கொள்ளலாம்! எப்படியிருந்தாலும் நல்லது மட்டுமே என்பதற்கு தனிப்பட்ட நான் கியாரண்டி!
இன்னும் ஒருசில வருடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் முழுமையடைந்தது விடும். சென்னையின் தொலைதூர இடங்களுக்கெல்லாம் அதிகபட்சம் அரை மணி நேரத்துக்குள் சென்றடையும் விரைவு நிலை உருவாகும். அப்போது சென்னை மாநகரம் பயண நேரத்தில் மிகவும் சிறியதாக சுருங்கிப் போகும். அதனை கருத்தில் கொண்டு, நகரப் பரபரப்பை விட்டு சற்று விலகி ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே இருக்கும்படியான ஒரு குடியிருப்பு ப்ராஜக்டை (Gated Community Project) சில வருடங்களுக்கு முன்னர் தேட ஆரம்பித்தேன். அதுவும் சிக்கனமான பட்ஜெட்டில் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன்… சின்ன கல்லு, பெத்த லாபம்!
கண்டடைந்தேன் ஒரு சொர்க்கத்தை! ஆம், சென்னையில் உருவாகிவரும் 'ஏறக்குறைய சொர்க்கம்’ அது!
திருமழிசையில் உருவாகிக் கொண்டிருக்கிறது அந்த ஸ்மார்ட் குடியிருப்பு. சென்னை பெருநகர / சிஎம்டிஏ (Chennai Metropolitan Development Authority) எல்லைக்குட்பட்டே இருக்கிறது. போரூரில் இருந்தும், கோயம்பேடில் இருந்தும் 20 நிமிட பயணத்தில் இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் பல அருகே இருக்கின்றன. மூன்று தொழிற்பேட்டைகளுக்கும் (Industrial Estates), புதிதாக உருவாகப்போகும் பரந்தூர் விமான நிலையத்திற்கும், குத்தம்பாக்கத்தில் அமையப்போகும் புதிய பேருந்து நிலையத்திற்கும், 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகப்போகும் திருமழிசை திரைப்பட நகரத்திற்கும் (Film City), புதிதாக அமையப்போகும் (கோயம்பேடில் இருந்து புலம் பெயரும்) காய்கறி மார்க்கெட்டுக்கும், தமிழக அரசு உருவாக்கிக் கொண்டிருக்கும் புதிய சாட்டிலைட் டவுன்ஷிப்பிற்கும் (Satellite Township) மிக அருகே அமைந்துள்ளது. ஐந்து கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே மெட்ரோ ரயில் நிலையங்கள்!
இப்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் ஐந்து கிமீ தூரததிற்குள் இருக்கின்றன. புதிய ஏர்போர்ட், புது பஸ் ஸ்டாண்ட், சாடிலைட் டவுன்ஷிப் அனைத்தையும் இணைக்கும்படியான விரிவாக்கத்தின் போது ஓரிரு கிமீ தூரத்திற்குள்ளேயே மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும்!.
முக்கியமாக… நல்ல நிலத்தடி நீர் வசதி கொண்ட இடம். குடியிருப்பை ஒட்டினாற்போலிருக்கும் மெகா சைஸ் கண்மாயை தூர் வாரி, அரசு அனுமதியுடன் பராமரிக்கும் பொறுப்பை கட்டுமான நிறுவனமே ஏற்றுள்ளது. அதனால், தண்ணீர்ப்பஞ்சத்துக்கு வாய்ப்பே இல்லை!
இண்டு இடுக்குகளில் எல்லாம் கட்டிடங்களைக் கட்டாமல், 76% இடத்தை பொதுவெளியில் காலியாக (Open Space) வைத்துக்கொண்டு, மிச்சமிருக்கும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுகிறார்கள்!
அதி முக்கியமாக… நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு வசதிகளுடன் இந்த ப்ராஜக்டை திட்டமிட்டிருக்கிறார்கள். நீச்சல் குளம், ஜிம், பூங்கா, கம்யுனிடி ஹால் போன்றவை நாம் பார்க்கும் பெரும்பாலான Gated Community-களில் இருப்பவை. பொதுவாக குடியிருப்பு கட்டிடங்களுக்கு நடுவே க்ளப் ஹவுஸ் ஒன்றைக் கட்டி அதில் இப்படிப்பட்ட ஒருசில வசதிகளை வைத்திருப்பார்கள்.
ஆனால் நான் தேடிக்கண்டடைந்த குடியிருப்பில் இடம்பெற்றிருக்கும் நூற்றுக்கும் அதிகமான வசதிகளை (Amenties) நினைவில் வைத்துக்கொண்டு சொல்வதற்கே மெமரி சிப் தடுமாறுகிறது! விற்பனை ஒப்பந்தப் பத்திரத்தில் (Sale Deed) அதிகாரப்பூர்வமாக அவர்கள் குறிப்பிடும் வசதிகளை கட் அண்ட் பேஸ்ட் செய்து ஒரு லிஸ்ட் உருவாக்கி இத்துடன் இணைத்துள்ளேன், பார்க்கவும். ‘வாரேவாவ்’ சொல்லும்படியான வசதிகளை ஆறரை ஏக்கரில் சொகுசு ரிசார்ட் போல ஆங்காங்கே நிரவி வைத்து, அதன் நடுவே அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிறார்கள்!
கட்டுமானப் பொருட்களிலும் கட்டுமானத் தொழில்நுட்பத்திலும் உயரிய தரத்தை கடைபிடிக்கிறார்கள். படித்தது பொறியியல் (இன்ஞினியரிங்) என்பதால் அலசி ஆராய்ந்தும், நண்பர்களிடம் கலந்தாலோசித்தும் இதை உறுதி செய்து கொண்டிருக்கிறேன்.
முத்தாய்ப்பாக… ப்ராஜக்டின் நுழைவாயில் பகுதியில் வி.ஆர்.மால் (VR MALL) வரப்போகிறது. நான்கு திரையரங்குகளுடன் மூன்று தளத்தில் ஷாப்பிங் மால் வரப்போகிறது. சென்னை அண்ணா நகரில் தற்போது வி.ஆர். மால் அமைந்திருக்கும் இடத்திற்கு பின்புறம் மெட்ரோ ஜோன் என்றொரு குடியிருப்பு இருக்கிறது. அதைப்போலவே இந்த இடமும் உருவாகப்போகிறது. (மெட்ரோ ஜோன் குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டுமென்றால் பல கோடிகள் கொடுக்க வேண்டும்!).
இன்னும் ஒரு அசத்தல்.. மெயின் கேட், வீட்டின் கதவுகள், ஏசி, லைட்ஸ் என அனைத்தையும் செல்போன் செயலி (Mobile App) மூலமே இயக்கும்படியான ஆட்டோமேஷன் வசதிக்காக பிரத்தியேக செயலியை உருவாக்குகிறார்கள். அந்த செயலியின் மூலமே நீச்சல் குளம், ஜிம் உட்பட அனைத்து வசதிகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆட்டோமேஷன் செய்து கொடுப்பதற்காக தனி கட்டணமேதும் கிடையாது. அந்த வகையில் தென்னிந்தியாவின் முதல் மெகா ஸ்மார்ட் கேட்டட் கம்யுனிடி ப்ராஜக்ட் இது!
இப்படி ராஜ வசதிகளுடன் இருக்கும் இந்த இடத்தை 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத வாக்கில் நேரில் சென்று பார்வையிட்டேன். ‘கண்டேன் சீதையை’ கணக்காக துள்ளிக் குதித்தேன்! கைக்கும் பைக்கும் அடக்கமாக சின்னதாக ஒரு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்… வெறும் பதினைந்து லட்சத்துக்கு ஒரு வீடு (Flat) வாங்கலாம் என்ற இனிப்பான தகவல் கிடைத்தது!
தேடியது கிடைத்து விட்டதென்ற மகிழ்ச்சியில் கொஞ்சம் அசமந்தமாக இருந்து விட்டேன்… சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக கோவா பயணம், வேலை விஷயமாக லண்டன் பயணம் இரண்டையும் முடித்துவிட்டு 2024 ஏப்ரல் மாதம் மறுபடியும் சைட்டுக்குச் சென்றேன். ‘விலை ஏறிடுச்சு சார், நீங்க பார்த்துட்டுப் போன அதே சைஸ் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் இப்ப 17 லட்சம் ரூபாய்’ என்றார்கள். இரண்டே மாதங்களில் இரண்டு லட்சம் ரூபாய் விலை உயர்வு!
மேலும் தாமதம் செய்யாமல் தொணதொணவென்று பேரம் பேசி, 16 லட்சத்தி 10 ஆயிரம் ரூபாய்க்கு எனக்கான ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டை புக்கிங் செய்து விட்டேன். ‘இண்டீரியர் செய்து வீட்டை வாடகைக்கு கொடுத்தால் மாதம் 13 ஆயிரம் வரை வாடகைக்கு உத்தரவாதம் இருக்கிறது…’ என்றார்கள். வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் அந்தப் பொறுப்பையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்றார்கள். வாடகை ஒப்பந்தங்களைக் கையாள்வதற்காகவே பிரத்தியேகமாக ஒரு துணை நிறுவனத்தையும் அவர்களே நடத்துகிறார்கள்.
16 லட்சத்துக்கு வாங்கும் வீட்டுக்கு 13 ஆயிரம் வாடகை வருமானம் கிடைப்பதென்பது இந்தக்காலத்தில் அரிய வகை அதிர்ஷ்டம்!
கடந்த அக்டோபர் மாதம் மறுபடியும் ஒருமுறை சைட் விசிட் செய்தேன். அப்போது, வேடிக்கை பார்ப்பதற்காக என்னுடன் கேஷூவலாக வந்த நண்பர் ஒருவர் உற்சாகமாகி ‘ஆன் த ஸ்பாட்’டில் அவருக்கும் ஒரு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் புக் செய்தார். அப்போது விலை.. 19 லட்சம்!
நான் எதைச் சொன்னாலும் நல்லதுக்கே என நம்பும் இன்னொரு நண்பன் மதுரையிலிருந்து வந்தான். கடந்த நவம்பர் மாதம் அவனுக்காக ஒரு வீட்டை புக் செய்யச் சென்றோம். அப்போது ஸ்டுடியோ அபார்ட்மெண்டின் விலை… 21 லட்சம்! (நண்பன் புக் செய்த 1 பெட் ரூம் அபார்ட்மெண்ட் விலை 24.5 லட்சம்!)
இடத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துகொண்டே இருக்கிறது!
புதிய விமான நிலையத்துக்காக இடங்களை கையகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். புதிய பேருந்து நிலைய வேலைகளை ஆரம்பிக்கப் போகிறார்கள் . திருமழிசையில் திரைப்பட நகரம் கட்டுவதற்கான திட்டப்பணிகளை ஆரம்பித்து விட்டது தமிழக அரசு. சாடிலைட் டவுன்ஷிப்பை பிரும்மாண்டமாக கட்டமைப்பதற்கான முஸ்தீபுகள் ஆரம்பமாகி விட்டன. கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவதற்காகவும் அரசு தரப்பில் ஆய்வுகள் நடக்கின்றன. இப்படி சகல வகைகளிலும் அப்பகுதி அசுரத்தனமாக பிரபலமாகிக் கொண்டிருப்பதால் இந்த குடியிருப்பு அமைந்துள்ள சாலையை 200 அடி சாலையாக விரிவுபடுத்துவதற்கும் அரசு ஒப்புதல் வெளியாகி இருக்கிறது. அதனால் தான் விலை மாதாமாதம் உயர்ந்து கொண்டே இருக்கிறது!
இவ்வளவு மதிப்பு கொண்ட வீடுகளை (Flats) எப்படி இத்தனை குறைவான விலைக்கு விற்க முடிகிறது?! Size does the matter! 1000 சதுர அடி அளவுள்ள வீட்டில் நாம் குடியிருந்தாலும், வெறும் 400 அடிகளுக்குள் தான் அதிகம் புழங்குவோம். அதன் அடிப்படையில் தேவையில்லாத இடத்தைக் குறைத்து, தேவையான வசதிகளை மட்டும் வீட்டுக்குள் வைத்து, சொகுசு வசதிகளை அனைவருக்கும் பொதுவாக பொதுவெளிகளில் கட்டமைத்து.. Space Saving உத்திகளை கையாண்டிருக்கிறார்கள். அதனால் சின்ன பட்ஜெட்டிலேயே 2 பெட் ரூம் வீடு வாங்க இயலும்! லோனில் வாங்கினாலும் குறைவான ஈஎம்ஐ கட்டி சிரமமின்றி வாழலாம்!
மாதாமாதம் விலையேறிக் கொண்டே போகும் இந்த குடியிருப்பில் இந்த மாதம் உங்களுக்கான வீட்டை புக் செய்தால் கார் பார்க்கிங் (Closed Car Parking), ஓலா ஸ்கூட்டர் (E Scooter) போனஸாகக் கொடுக்கிறார்கள். பதிவுக்கட்டணத்தையும் (Registration Charges) அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள். விலையிலும் குறிப்பிட்ட அளவில் தள்ளுபடி கொடுக்கச் சம்மதித்திருக்கிறார்கள். எனக்கென / என் நண்பர்களுக்கென நான் வாங்கி வைத்திருக்கும் வரம் இது!
ஒரு லட்சம் கொடுத்து புக்கிங் செய்து கொண்டால் போதும். 90% வரை லோன் கிடைப்பதற்கும் அவர்களே ஏற்பாடு செய்து தருகிறார்கள். தவிர, அவர்களே இண்டீரியர் நிறுவனமொன்றையும் நடத்துகிறார்கள். ‘சிக்’ பட்ஜெட்டில் (ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்டுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம், 1 பெட் ரூம் அபார்ட்மெண்ட்டுக்கு 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம், 2 பெட் ரூம் அபார்ட்மெண்ட்டுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம்) இண்டீரியர் செய்து கொடுக்கிறார்கள்!
கட்டுமான நிறுவனமும், கட்டப்படும் இந்த குடியிருப்பும் RERA எனப்படும் அரசு அமைப்பான ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் நமது முதலீட்டுக்கு உத்தரவாதமும் பாதுகாப்பும் உண்டு! நம்பி முதலீடு செய்யலாம்!
இந்த விரிவான பரிந்துரைக்குப் பின்னால் ‘நான் பெற்ற இன்பம் பெறுக என் நண்பர்களும்’ என்ற பொதுநலமும், கூடவே இன்னொரு சுயநலமும் எனக்கு இருக்கிறது!
இதற்கென நான் புதிய நிறுவனம் ஒன்றை (GGs SWAY REALTORS) ஆரம்பித்திருக்கிறேன். அதன் மூலம் தான் கட்டுமான நிறுவனத்தில் பேசிப்பேசி, மற்றவர்களுக்குக் கிடைக்கும் விலையை விட குறைவான விலையில் நண்பர்களுக்கு வாங்கித் தருகிறேன். GGs Sway நிறுவனத்தின் பணியாளர்கள் இரண்டு பேருக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். அவர்களுக்கான ஊதியம் கிடைத்தால் போதும், அதிகம் ஈட்ட வேண்டுமென்ற பேராசையெல்லாம் இல்லை. கிடைக்கும் தொகையில் பெரும்பகுதியை வீட்டுக்கான விலையில் தள்ளுபடியாக கொடுத்து, நிறைய நண்பர்களை வீடு வாங்கச் செய்வதுதான் எனது பிரதான நோக்கமாகும். ஆம், தனிமரத்தை தோப்பாக்க வேண்டும். ஒரு குழுவாக இருந்து கோரிக்கை வைப்பதாலும், குரல் கொடுப்பதாலும் பல பலன்கள் கிடைக்கும், அனைவருக்குமே!
மொத்தமாக அனைத்து வீடுகளுக்கும் இண்டீரியர் செய்வதற்கு பேரம் பேசினால் அனைவரும் குறிப்பிட்ட தொகையை மிச்சம் செய்யலாம். நேரடியாக நாமே வாடகைக்குக் கொடுத்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும். ஃப்லிம் சிட்டி வந்தபின்னர் அங்கே படப்பிடிப்பு நடத்தும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுத்தால் 25 லட்சத்துக்குள் வாங்கும் வீட்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் கூட மாத வாடகையாகக் கிடைக்கும் அதிசயம் சாத்தியமாகும்!
சொந்த உபயோகத்திற்காக வீடு வாங்குபவர்கள் தவிர, நல்ல முதலீடு என்ற நோக்கத்துடன் வாங்கும் 21 நண்பர்களைச் சேர்க்க வேண்டும். 21 வீடுகள் புக் செய்ய வேண்டும். 21 வீடுகளையும் வாடகைக்கு விட வேண்டும். மாத வருமானத்தும் வழி… விலை உயர்வும் (Appreciation) கிடுகிடுவென இருக்கும். இன்னும் ஒரு வருடத்தில் 2 மடங்காக விலை உயர வாய்ப்பிருப்பதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.
22 ஆவதாக ஒரு வீட்டை புக் செய்து, அதை வாடகைக்கு கொடுக்காமல் நாமே வைத்துக் கொண்டு, 21 பேரும் வருடத்தில் 2 வாரங்கள் வந்து தங்கி வசதிகளைப் பயன்படுத்தி ரிசார்ட்டில் இருப்பது போல மகிழ்ந்து செல்லலாம். அந்த 22-வது வீட்டின் வாடகையை 21 பேரும் அவரவர் உபயோகிக்கும் நாட்களுக்கேற்ப பகிர்ந்து கொள்ளலாம்! அனைத்து வீடுகளையும் நிர்வகிக்கும் பணியை GGs Sway Realtors நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.
இதுவே என் திட்டம். இதுவரை 9 நண்பர்களைச் சேர்த்து விட்டேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!
“நீ சஜஸ்ட் செஞ்சா அது நல்லதாத்தான் இருக்கும், அதனால நானும் ஒரு வீடு வாங்குறேன்”
“வேலை விஷயமா அடிக்கடி சென்னை வந்து போறப்ப ஹோட்டல்ல தான் ரூம் எடுத்து தங்கறேன். மாசம் ஒரு தடவையாச்சும் வர்றது மாதிரி ஆகிடுது. எப்படியும் வருஷத்துக்கு குறைந்தபட்சம் அறுபதாயிரம் ரூபாயாவது வாடகைக்குன்னே செலவாகுது. இனிமேல் இந்த ஃப்ளாட்லயே தங்கிப்பேன்..”
“என்னைப் பொறுத்தவரை ஃப்லிம் சிட்டி கட்டினதுக்கு அப்புறம் சினிமாக்காரங்களுக்கு அத்தியாவசியாகிடும். வெளி மாநிலங்கள்ல இருந்து நடிக்குறதுக்காக வரும் ஆர்ட்டிஸ்ட்களை சென்னை சிட்டிக்குள் தங்க வைக்கிறதை விட, இந்த அபார்ட்மெண்ட்ல தங்க வைத்தால் சினிமாக்காரர்களுக்கு செலவு மிச்சம். நேர விரயம் இல்லாம ஃப்லிம் சிட்டிக்கு வந்து போக முடியும். சினிமா கம்பெனிகளுக்கு நல்ல வாடகைக்கு விடலாம்…”
“அடுத்த நாலஞ்சு வருஷத்துல இந்த இடத்தோட மதிப்பு செமத்தியாகிடும். அதனால வாங்கினேன்..”
“வருடாவருடம் குடும்பத்தோட டூர் போறதுக்காக டைம் ஷேர் கம்பெனியில மெம்பர்ஷிப் எடுக்கலாம்னு இருந்தேன். நல்லவேளை… இந்த ப்ராஜக்ட் பத்தி தெரிஞ்சது. மெம்பர்ஷிப்புக்கு செலவழிக்கிற பணத்துல கூடுதலா கொஞ்சம் போட்டு இந்த ஃப்ளாட்டை வாங்கறேன். டைம் ஷேர்ல தங்க இடம் மட்டும் தான் கொடுப்பாங்க. ஆனா, இந்த ஃப்ளாட்டை வாடகைக்கு கொடுத்து அந்த பணத்தை சேர்த்து வச்சு வருடாவருடம் குடும்பத்தோட டூர் போவேன். தங்குமிடம், டிரான்ஸ்போர்ட், சாப்பாடு செலவு எல்லாத்தையும் வாடகை பணமே கவர் பண்ணிக்கும்…”
“ஓ.எம்.ஆர். - இ.சி.ஆர். எல்லாம் கசகசன்னு ஆகிடுச்சு. எதிர்காலத்துல இந்த ஏரியாதான் ஸ்மார்ட் சென்னை. அதனால தான் இன்வெஸ்ட் பண்றேன்…”
“வெளிநாட்டுல தொழில்… இந்தியா வர்றப்ப சகல வசதிகளுடன் தங்குறதுக்காக ஒரு ஃப்ளாட் வாங்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன், இப்பத்தான் அதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுவும் கம்மி பட்ஜெட்டுல…”
“வி.ஆர். மால் வரட்டும், ஏர்போர்ட் வரட்டும், பஸ் ஸ்டாண்ட் வரட்டும்.. விலை டபுள்ட் ரிபுள்னு செமயா ஏறிடும். அப்ப வித்துடுவேன்..”
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் என்றாலும் நண்பர்கள் எட்டு பேரும் (ஒன்பதாவது ஆள் நான்) ஸ்மார்ட் தான். பத்தாவது நண்பராக நீங்கள் இருந்தால் I am very happy!
விருப்பமிருந்தால் தனிச் செய்தியில் (Private Message) என்னைத் தொடர்பு கொள்ளவும். அல்லது +91 78719 77789 என்ற எண்ணுக்கு வாட்ஸப் சாட் வழியாக தொடர்பு கொள்ளலாம். உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணைத் தெரியப்படுத்தவும். மேலதிக விவரங்களை அனுப்பி வைக்கிறேன். அழைக்கிறேன், விரிவாகப் பேசலாம்!
இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அழியா அன்புடன்…
ஜி கௌதம்
*****
மதுரையில் இருக்கும் நண்பர்கள் வரும் 21.12.2024-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் உங்கள் வசதிக்கேற்ற நேரத்தில் மதுரை FORTUNE PANDIAN HOTEL-க்கு வாருங்கள்! ஹால் புக் செய்யப்பட்டுள்ளது. ஆற அமர உட்கார்ந்து விரிவாகப் பேசி மற்ற விவர்ங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்!
திண்டுக்கல்லில் இருக்கும் நண்பர்கள் வரும் 22.12.2024-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் உங்கள் வசதிக்கேற்ற நேரத்தில் HOTEL VIVERA GRANDE-க்கு வாருங்கள்! ஹால் புக் செய்யப்பட்டுள்ளது. ஆற அமர உட்கார்ந்து விரிவாகப் பேசி மற்ற விவர்ங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்!
No comments:
Post a Comment