நண்பர் குணசேகரன் ரகிநாதன் அனுப்பிய சுவாரசியமான மெயில் இது!
இந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து ஒரு சினிமா ஸ்க்ரிப்ட் நெய்து கொண்டிருக்கும் என்னை வெகுவாகக் கவர்ந்தது!
தி.மு. அதாவது திருமணத்திற்கு முன் அதாவது நிச்சயதார்த்தம் முடித்து ‘கடலை’ சாகுபடி அதி தீவிரமாக பண்ணிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில்..
1. அவன்: ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.
2. அவள்: நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?
3. அவன்: இல்லை, இல்லைஇ நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
4. அவள்: நீ என்னை விரும்புகிறாயா ?
5. அவன்: ஆமாம், இன்றும், என்றென்றும்
6. அவள்: என்னை ஏமாற்றிவிடுவாயா ?
7. அவன்: அதைவிட நான் இறப்பதே மேல்
8. அவள்: எனக்கொரு முத்தம் தருவாயா ?
9. அவன்: கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்
10. அவள்: என்னை திட்டுவாயா ?
11. அவன்: ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?
12. அவள்: நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?
இனி தி.பி. அதாவது திருமணத்திற்குப் பின்..
கீழிருந்து மேலே படியுங்கள், அதாவது 12 ல் ஆரம்பித்து 1 வரை!!
No comments:
Post a Comment