Thursday, August 19, 2010

கலைஞருக்கு ஒரு கடிதம்!

உட்கார்ந்து யோசித்தது யார் என்று தெரியவில்லை.. எனக்கு வந்த இந்த ஃபார்வர்ட் மின்னஞ்சல் டுபாகூர் கடிதத்தை!
//
ஐயா.,

செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்., எதிலும் தமிழ்னு
சொன்னீங்க...ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..


நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..

அந்த இடம் - நம்ம டாஸ்மாக்

அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..

சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கோம்..

உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல., நல்ல
பேரா வைங்க..

மிடாஸ் கோல்ட் - தங்க மகன்

நெப்போலியன் - ராஜராஜ சோழன்

கோல்கொண்டா - கங்கைகொண்டான்

வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்

ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அலுவலர் தேர்வு

சிக்னேச்சர் - கையெழுத்து

ஓல்டு மாங்க் - மகா முனி

ஜானி வாக்கர் - வெளி நடப்பு

கார்டினல் - பொதுக் குழு

மானிட்டர் - உளவுத் துறை

மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி

ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே

ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000 



தமிழ் மொழி 
தமிழ் மொழி
தமிழ் மொழியாம்..
//

5 comments:

உண்மைத்தமிழன் said...

ஹா.. ஹா.. ஹா..!

இது ஒண்ணுதான் கடைசியா பாக்கி..!

இங்கேயும் தமிழைப் புகுத்திட்டா தமிழ் வளர்ந்திரும்தான்..!

podujanam said...

பாஸ், இந்த மேட்டர ஏற்கனவே படிச்சாச்சு. ஆ.விகடன்ல கூட எழுதினாங்க. சொந்தமா யோசிங்க நண்பா.

G Gowtham said...

//பாஸ், இந்த மேட்டர ஏற்கனவே படிச்சாச்சு.//
அதான் எடுத்த எடுப்பிலேயே கொட்டை எழுத்துல போட்டுட்டேனே நண்பா..
//உட்கார்ந்து யோசித்தது யார் என்று தெரியவில்லை.. எனக்கு வந்த இந்த ஃபார்வர்ட் மின்னஞ்சல் டுபாகூர் கடிதத்தை!// என்று..

☀நான் ஆதவன்☀ said...

தமிழ்ல பேரு வச்சா வரிவிலக்கு கிடைக்குமா? :))

Cable சங்கர் said...

வாழ்க தமிழ்.. வளர்க குடி மக்களின் வாழ்க்கை