Wednesday, July 19, 2006

சிறு மீன் / எப்படி? எதற்கு? ஏன்? 4

புதிதாகப் பெய்த மழை நிறைய மீன்களை ஆற்று நீரோடு அடித்துவந்தது. வேட்டைக்குக் கிளம்பின இரண்டு கொக்குகள்.

ஒன்றையொன்று தொந்தரவு செய்யக்கூடாது என்ற ஒப்பந்தத்துடன் போதிய இடைவெளி விட்டு, ஒற்றைக்கால் தவத்தை ஆரம்பித்தன.

வரமாகப் பெரிய சைஸ் மீன் வரவேண்டும் என ஆசைப்பட்டது கொக்கு நம்பர் ஒன். தன்னைக் கடந்து நீந்திப்போகும் சின்னஞ்சிறு மீன்களையெல்லாம்
பிடித்துத் தின்னாமல் வேடிக்கை பார்த்தது! ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரை காத்திருக்க முடிவு செய்திருந்தது அது.

இரண்டாவது கொக்குக்கு அந்த வைராக்கியமெல்லாம் தெரிந்திருக்கவில்லை.
ஓடும் நீரில் ஆடி அசைந்துவரும் குட்டி மீன்களைப் பிடித்துச் சாப்பிட ஆரம்பித்தது. பாவம்... அதன் பசி அதற்கு!

நெடு நேரமாகியும் பெரிய மீன் எதுவும் வந்தபாடில்லை. வைராக்கியக் கொக்குக்கு பசி மயக்கம்!

மாறாக, அந்த நேரப் பசிக்கு கிடைத்த மீன்களைச் சாப்பிட்டுவிட்டு தெம்போடு பெரிய மீனுக்காகக் காத்திருந்தது இரண்டாவது கொக்கு. பெரிய மீனைப் பிடிக்கும் ஆசை யாருக்குத்தான் இருக்காது!

பசிக் கிறக்கத்தில் முதலாவது கொக்கு வாடி வதங்கிப் போயிருந்த நேரத்தில்... அந்த ஒரு விநாடியில்... வில்லன்கள் காத்திருப்பதை அறியாமல் நீரோடு வந்தது மெகா சைஸ் மீன் ஒன்று!

அந்த நொடியில் என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிகிறதா?

?

?

?

?

?

?

?

பெரிய மீனைக் கவ்வ முயன்று, உடலில் போதிய தெம்பு இல்லாததால் கோட்டை விட்டது கொக்கு நம்பர் ஒன். அதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட இரண்டாவது கொக்கு வலுவோடு பாய்ந்தது. பெரிய மீனையும் அதுவே பிடித்தது.

11 comments:

Boston Bala said...

அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என யூகிக்க முடிகிறதா?

கருத்துக் கணிப்பு...

1. இரண்டு கொக்குகளும் பகிர்ந்து உண்டது.
2. இரண்டாவது கொக்கு மட்டுமே தனியே உண்ண முயன்று ருசி இல்லாமல் தூர எறிந்தது. அதை காக்கைகளும் இன்ன பிறவும் தின்று பசியாறியது.
3. இரண்டாவது கொக்கு ஏற்கனவே நிறைய மீன்களை உண்டு கொழுத்ததினால், போதிய லாவகமும் துரித வேகமும் இல்லாமல் பெரிய மீனை கோட்டை விட்டது.

#1 நடக்க நீங்கள் நினைத்தால், இடது சாரி
#2 நடக்க நினைத்தால், வலது சாரி கருத்தாக்கம் உடையவர்
#3 நடந்தால் எதிர்மறை (பெஸிமிஸ்ட்) சிந்தனையாளர் ;-)

G Gowtham said...

உடனடி பின்னூட்டத்துக்கு நன்றி பாலா அவர்களே.

//கருத்துக் கணிப்பு...

1. இரண்டு கொக்குகளும் பகிர்ந்து உண்டது.
2. இரண்டாவது கொக்கு மட்டுமே தனியே உண்ண முயன்று ருசி இல்லாமல் தூர எறிந்தது. அதை காக்கைகளும் இன்ன பிறவும் தின்று பசியாறியது.
3. இரண்டாவது கொக்கு ஏற்கனவே நிறைய மீன்களை உண்டு கொழுத்ததினால், போதிய லாவகமும் துரித வேகமும் இல்லாமல் பெரிய மீனை கோட்டை விட்டது.

#1 நடக்க நீங்கள் நினைத்தால், இடது சாரி
#2 நடக்க நினைத்தால், வலது சாரி கருத்தாக்கம் உடையவர்
#3 நடந்தால் எதிர்மறை (பெஸிமிஸ்ட்) சிந்தனையாளர் ;-) //

நீங்கள் குறிப்பிட்ட மூன்று விஷயங்களையும் நான் படிப்பவரது யூகத்துக்கே விட்டுவிட்டேன்.
விவேகானந்தர் சொன்னபடி
குறிக்கோளுக்காக
பசித்திரு-தனித்திரு-விழித்திருப்பதில் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடு உண்டு.
ஆனால் பசித்திரு என்பது பசி மயக்கத்திலிருப்பதல்ல என்றே நம்புகிறேன்.
கருத்துக்கு மிக மிக நன்றி.

- யெஸ்.பாலபாரதி said...

அண்ணாத்த...
//விவேகானந்தர் சொன்னபடி
குறிக்கோளுக்காக
பசித்திரு-தனித்திரு-விழித்திருப்பதில் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடு உண்டு.//
இது வள்ளலார் சொன்னார்ன்னு நெனச்சுகிட்டு இருந்தேன்...
விவேகா(செல்லமாக..) சொன்னதும்
கிட்டதட்ட மீன் மேட்டர் மேட்டர் மாதிரி தான்.. ஆனா சுழி தான் குறைவு.
விழுமின்! எழுமின்!
கருமம் கை கூடும் வரை உழைமின்!
:)

G Gowtham said...

ஆஹா... தப்பு பண்ணிப்புட்டேனே தம்பி யெஸ்.பாலபாரதி!
அது //பசித்திரு, தனித்திரு, விழித்திரு... //வள்ளலார் சொன்னதுதான்.
குறிகோளுக்காக 'எழுமின், விழுமின்..' சொன்னவர் விவேகானந்தர்.
ரெண்டு பேரையும் குழப்பி பின்னூட்டத்துல கவுந்துட்டேன்.
மம ன்ன் னினி க்க் கக வுவு ம்ம்!

கடல்கணேசன் said...

ஜிஜி, தேர்ந்த சிந்தனையாளர்கள் உங்களைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு வரும் பின்னூட்டங்களில் தெரிகிறது..(உங்களைப்போல்) தனித்துவத்துடன் எழுதுபவர்கள் எப்போதும் கவனிக்கப்படுவார்கள். உங்கள் புதிய முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

நாகை சிவா said...

பசி வந்தா பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். அப்படியும் அந்த கொக்கு அசரல போல இருக்கு.

Boston Bala said...

----பசி வந்தா பத்தும் பறந்து போகும் ----

கொக்கு பசிக்கு இரையாகாமல் பத்து மீன்களும் சிட்டாய் பறந்து போயிருக்கிறது ;-)

இலவசக்கொத்தனார் said...

அதாவது சாப்பாட்டு நேரம் வர வரையில் சும்மா இருக்காம நொறுக்கித் தீனி எதாவது சாப்பிட்டுக் கிட்டே இருக்கணும். அதானே விஷயம்? நல்லா புரியுதப்பா. ஆனா இதை என் பெர்ஸனல் டயட்டீஷியனான என் தங்கமணியிடம் சொல்வது யார்? :)

Nakkiran said...

இப்பொ என்ன சொல்ல வரீங்க

ரவி said...

என்ன உள்குத்தோ - யாரு கண்டா ?

G Gowtham said...

செந்தழல் ரவி,
இது உள் குத்து இல்லீங்கோ!
வெளிக்குத்துதாங்கோ!
boston bala வோட பின்னூட்டத்த
கவனமா படிங்க உக்காந்து யோசிச்சா அது உள்குத்து - உங்களுக்கு நீங்களே குத்திக்கலாமுங்கோ!