தேன்கூடு போட்டியில் கலந்து கொண்டு பரிசுக்குத் தேர்வாகாத 'மற்ற பல' போட்டியாளர்களை 'மன விகாரம்' பிடித்தவர்கள் என தனது 'ஞான'க்கண்களால் கண்டறிந்திருக்கிறார் ஐயா ஜயராமன் அவர்கள்!
முதல் பரிசு பெற்ற நிலாவை வாழ்த்தி ஐயா அவர்கள் கொடுத்த பின்னூட்டம் இதோ...
At July 28, 2006 2:16 AM, ஜயராமன் said...
இது தங்கள் இந்த பதிவில் நான் இடும் இரண்டாவது பின்னூட்டம்.
முதல் பரிசு அறிவிப்பை கேட்டு நான் நானே வென்றதாக மகிழ்ந்தேன்.உங்களுக்காக மெனக்கட்டு இந்த தேன்கூடு எங்க இருக்குன்னு பாத்து அதில என்ன பதிச்சு தேனியெல்லாம் கொட்டாம போய் ஒரு ஓட்டு போட்டேன். (யாருக்குன்னு சொல்லவேற வேணுமா) இந்த ராமர் அங்கே அணிப்பிள்ளையா ஆயிட்டேன்.
பரிசுகள் மூன்றும் மூன்று சுவையான பதிவுகளுக்கு போய் இருக்கிறது. முக்கனிகள் போல் மூன்று பதிவுகளும் இருக்கின்றன.
ஒருத்தர் கவிதை சிம்பதி ஓட்டில பரிசு தட்டிவிட்டது என்று நினைக்கிறேன். (அதற்காக குறை என்று தவறாக நினைக்கவேண்டாம்)ஆனால், தங்கள் கதை பல மைல் வித்தியாசத்தில் ஓடி வென்ற குதிரை.
இந்த 'மரணம்' தலைப்பில் இவ்வளவு உற்சாகமாகவும் பாஸிட்டிவ் ஆகவும் ஒரு கதையை அமைத்தது தங்கள் முதல் வெற்றி.
மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது. தங்கள் சிறுகதையை படித்த பிறகு அதை சொல்லிய விதம், (லோகல் ஸ்லாங் மட்டும் இல்ல. விறுவிறுப்பான வார்த்தைகளை போட்டு வேகமாக சொன்ன பாணி) மறுபடியும் படிக்க சொன்னது.மேலும் ப்ளாஸ்பேக் ரொம்ப குறைச்சல்.
மற்ற பல கதைகளில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு மூட்டையை அவர்கள் சுமந்து கொண்டே அலைந்தார்கள். அதனால் கதை படிக்கும்போது அயர்ச்சி வந்தது. ஆனால், தங்கள் கதை நிகழ்விலேயே சுற்றி வந்தது.தங்கள் கதையின் பாத்திரங்கள் காம்ப்ளிகேட் இல்லாத ஓர் முனை பாத்திரங்கள். அது கதைக்கு மிக மெருகு.
மற்ற பல கதைகளில் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்களின் மன விகாரங்களை போலவே குழம்பி போய் இருந்தார்கள்.
ரொம்ப இழுத்துவிட்டேன் போல இருக்கு.
ஜூட்.
கங்க்ராட்ஸ்.
ஐயா அவர்களுக்கு அங்கேயே நான் கொடுத்த பதிலூட்டம் இதோ...
At July 28, 2006 12:19 PM, ஜி கௌதம் said...
ஐயா ஜயராமன் அவர்களே..(மன்னிக்கவும் நிலா! இது உங்கள் இடமென்றாலும் ஐயாவிடம் கொஞ்சம் பேசவேண்டியுள்ளது!)
ஏற்கெனவே நான் இங்கே ஒரு பின்னூட்டத்தில் சொன்னதை மறுபடியும் ஒருமுறை வழி மொழிகிறேன்.... 'சரியானது வென்றே தீரும்!' வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள், மனமார வாழ்த்துங்கள்.
அதே சமயம்... 'மற்ற பலரை'க் காயப்படுத்தாமலிருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
//மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது.//
//மற்ற பல கதைகளில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு மூட்டையை அவர்கள் சுமந்து கொண்டே அலைந்தார்கள். அதனால் கதை படிக்கும்போது அயர்ச்சி வந்தது.//
//மற்ற பல கதைகளில் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்களின் மன விகாரங்களை போலவே குழம்பி போய் இருந்தார்கள்.//
எல்லோரையும் உற்சாகப் படுத்தவேண்டும் என்பதற்காக 80 பதிவுகளுக்கும் வோட்டுப் போட்டவன் நான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் போட்டிக்குப் படைப்புகளை அனுப்பியவர்களில் நானுமொருவன் என்பதால் சுய கோபத்தில் நான் இந்தப் பின்னூட்டத்தை எழுதுவதாக தப்பர்த்தம் செய்துவிட வேண்டாம்!
'இன்றைக்கு சமையல் அருமை' என மனைவியைப் பாராட்டலாம். ஆனால் 'இதுவரை நீ சமைத்ததெல்லாம் சகிக்கலை. இன்றைக்கு சமையல் அருமை'எனச் சொல்வது மனைவிக்கான பாராட்டு இல்லை!
'மற்ற பலரின் மன விகாரங்களை' அவர்களது ஒரே படைப்பில் படித்து கண்டுபிடித்த அதிமேதேவி ஐயாவே... இணையத்தில் தமிழ் வளர்வதாக நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். எழுதுபவர்களை உற்சாகப் படுத்த முடியாதபடியான மன விகாரம் உங்களுக்கு இருக்கட்டும், அதனால் ஊருக்குக் கெடுதல் இல்லை. ஆனால் காயப்படுத்தாமல் இருக்கவாவது கற்றுக் கொள்ளுங்கள்.
நிலாவின் பதிவில் இதை வளர்க்க விரும்பாததால் தனி இடுகையாக இங்கே பதிவு செய்கிறேன். என் கருத்துக்கு ஏக கருத்துக்களையும் எதிர்க் கருத்துக்களையும் வரவேற்கிறேன் நண்பர்களே..
9 comments:
யார் கதைகளில் எழவு வீட்டு களை அடித்தது என்றும் யார் யார் கதைகளில் சக வலைப்பதிவாளர்களின் மனவிகாரங்கள் அசிங்கமாக தெரிந்தன என்றும் அவர் விளக்குவாரா?
சரியான புரிதலில்லாமையே இதற்கான காரணமென்று எண்ணுகிறேன்..
இது குறித்த எனது ஒரு பதிவையும் தங்களின் கவனத்திற்கு தர விரும்புகிறேன்.
http://anniyalogam.com/go.php?u=livingsmile/2006/07/blog-post_29.html
நன்றி..
நான் அந்த பதிவிலேயே இது யார் மனதையும் புண்படுத்துமானால் என்னை மன்னிக்க பொன்ஸ் அவர்களை கேட்டுவிட்டேன். இதை நீங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிறது.
என் கருத்துக்களுக்கு நான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், இந்த கருத்துக்களை நான் யாரிடம் இந்த சூழலில் விவாதிக்க விரும்பவில்லை.
இதை தாங்கள் இன்னும் பெரிது படுத்த வேண்டாம்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை
நன்றி
மன்னிக்கணும் வித்யா,
உங்களைக் குறிப்பிட்டு ஜயராமன் எழுதிய வரிகளை நான் திரும்ப அடிக்கோடிட்டு உங்கள் வருத்தத்தைப் புதுப்பிக்க வேண்டாம் என்றுதான் அது பற்றிக் குறிப்பிடவில்லை!
நேற்று நான் அலுவலகத்துக்கு விடுமுறை.
வெளியே அலைச்சல்!
இடையே ஒரு நெட் சென்டருக்குள் புகுந்தபோது நிலாவின் பதிவில் ஜயராமனின் பின்னூட்டத்தைப் பார்க்க நேர்ந்தது. அடுத்த நிமிடமே பதிலூட்டம் கொடுத்துவிட்டேன்.
பிறகு நிலாவுக்கு சங்கடம் கொடுத்துவிட்டேனோ என்ற சின்ன வருத்தத்தோடு தூங்கி விட்டேன்.
இன்று காலையில் சிஸ்டத்தில் உட்கார்ந்ததும் நான் செய்த முதல் வேலை... இந்த இடுகையைப் பதிவு செய்ததுதான்.
போஸ்ட் பண்ணிய பிறகே உங்கள் இடுகையைப் படித்தேன். வருத்தப் படாதீர்கள் வித்யா,,, தனி மரம் தோப்பாகாது!
எழுதுவதை நிறுத்தி விடாதீர்கள்.
sir ungalukku ean indha vendhadha velai..nan already vidhya voda padhivil pinnotamitukane .idha parri
pls idhai valarkaadheergal..apuuram numma atkal ellarum idhai parriye oru varam sandai pootu pesikitey irupaanga..vera endha urupadiyaana vishyngal padhvugl indha vishyathaal eludha padamal pogalm..pls viturunga
living smile potta (abt this problem) nan eludhiya pinnotam paarka..idhai(my comment) neengal kandipaaga publish seeya vendum ..nandri
கௌதம்
வேறுபடுவதற்கு மன்னிக்கவும். தேவை இல்லாமல் ஒரு விஷயத்தைப் பெரிதாக்குகிறோம் என நினைக்கிறேன்.
ஜயராமன் எழுதியது சரியா தவறா என்ற பிரச்சனைக்கே நான் போகவில்லை. நீங்கள் இதனைப் பெரிது படுத்தாமல் விட்டிருந்தால் எனது பதிவில் ஜயராமனின் பின்னூட்டம் கவனிக்கப் படாமலேயே போயிருக்கும்; இப்போது பாருங்கள், அதனைப் படிக்காத பலரும் இதனைப் படித்து காயம்பட்டுப் போனார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு சிறிய அறைக்குள் ஒருவர் சிலரை விமரிசித்ததை ப்ரஸ் கான்ஃபரஸ் போட்டு சொல்வது போலாகிவிட்டது.
இதில் ஜயராமனுக்கு மட்டுமல்ல - காயப்பட்ட எல்லோருக்குமே மனவேதனை.
ஏற்கெனவே தமிழ்மணம் ரணகளமாக இருக்கிறது. இதனை இத்துடன் விட்டுவிடலாமே!
வித்யாவிற்குப் போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கு போட்டதால் ஒன்றை அழித்துவிட்டேன்.
http://gpost.blogspot.com/2006/07/blog-post_115416939029550623.html
Post a Comment