நண்பர்களே...
எனது நண்பர்களில் ஒருவர் எனக்கு அனுப்பிய
தனி மடல் இது...
// Dear Gowtham,
I strongly condemn the words of Mr.Jayaraman and welcome your reply to him in the post where he has commented.
But personally i feel your recent post has started a new avenue for the irresponsible castetist persons to express their views. It is a view of a person and you will see how people are waiting to bring in caste colour to such comments.
Waiting to see the response.
Also is this post required at all, are we not trying to expose a person's view, i think you will agree that we all do not have the same view some may be good and some may be bad. We have the basic courtesy of expressing it in a way that others do not get offended but that is not available in every person. Condemning that is right but exposing it will not be a good act. This is my personal opinion.
Waiting to get your view point.//
இதற்கு நான் அனுப்பிய பதில்...
//சத்தியமாகச் சொல்கிறேன்... கம்ப்யூட்டர் தமிழுக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் கையெழுத்துப் பறவையாகவே கடந்த மாதம் 29ம் தேதிவரை இருந்தவன் நான். அன்றுதான் முதன் முதலாக வலைப்பூ உலகத்தைப் பார்த்தவன். நிஜமாகவே இணையத்தில் தமிழ் வளர்வதாக நம்பிக்கை வந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பே ப்ளாக் பக்கம் எட்டிப்பாருங்க என என்னிடம் சொன்ன வலைப்பக்கம் பழம் தின்று கொட்டைபோட்ட(இப்போது வெளியேறிவிட்ட) நண்பர் ஒருவரிடம் போனவாரம்தான் 'நீங்க அப்ப சொன்னப்ப நான் கேக்கல. இப்பதான் ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேன்' என ஆர்வத்தோடு கூறினேன். அப்போதுதான் ஜாதி வர்ணப் பூச்சுடன் வலைப்பக்கம் நடக்கும் அத்து மீறல்கள் குறித்து அறிந்தேன். அதிர்ந்தேன்.
80 படைப்புகளையும் நிச்சயம் படித்திருக்க மாட்டார் திரு. ஜயராமன் என்றே நான் இப்போதும் கருதுகிறேன். அவரது அரை வேக்காட்டுத் தனமான பின்னூட்டம் என்னை வருத்தப் பட வைத்தது. அங்கேயே பதில் கொடுத்தாலும் நிலாவுக்கு தொடர் சங்கடம் ஏற்படுத்தி விட்டோமோ என்ற யோசனையுடன்தான் தனி போஸ்ட் போட முடிவெடுத்தேன்.
கருத்து சுதந்திரத்துக்கும் அபத்தத்தை அடையாளம் காட்டுவதற்கும் முடிச்சுப் போடாதீர்கள்.
இருப்பினும் உங்கள் கருத்தையும் அந்த நண்பர் சொன்னதையும் முடிச்சுப் போட்டுப் பார்த்து இப்போது லேசாக வருந்துகிறேன்.
தேவர் மகன் க்ளைமாக்ஸ் கமல் போல 'என்னையும் கத்தி எடுக்க வச்சுட்டாங்களே' என கவலைப்படுகிறேன்!
As we all know creative people are emotional idiots! //
ஆக...
'சரியானது வென்றே தீரும், அபத்தங்கள் கண்டனத்துகுரியதே ஆகும்'
என என் கருத்தை உறுதியோடு இன்னொரு முறை சொல்லி இந்த விவாதத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.
திரு.ஜயராமனின் பின்னூட்டத்துக்கு முதல் கோபம் காட்டியது நான்தான் என்பதால், நடக்கும் / நடக்கலாம் என நண்பர்கள் பலரும் கவலைப்படும் குழப்பங்களுக்கு வருந்தி
இத்துடன் இந்த விவகார விகாரத்தையும்
என் ஜி போஸ்ட்டையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறேன்.
என்னாலும்(!) நடந்துவிட்ட சங்கடங்களுக்கு வருந்துகிறேன்.
'ச்சே! என்னையும் கத்தி எடுக்க வச்சுட்டாங்களே!'
17 comments:
ada vidungappa ..idhaye innimale ellarum eludhuvanga ..poradhicirum..illakiya ulagil thaan ellarum kalpunarchiyai kaatukiraargal endraal ingeyuma..goutham sir pls neengal ini idhai parri eludhtheenga..indha nanbanin vendukolai earpeergal en nabukirane..
திரு கவுதம்... போட்டியில் கலந்து கொள்வதே சிறப்புடையது. நம் படைப்புகள் தான் நமக்குத் தெரியுமே !
ஆக்கம் வெற்றி பெறாமல் போனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதை விமர்சிப்பதும் முறையல்ல என்று நினைக்கிறேன். அதனால் போட்டிகள் சோர்வைக் கொடுத்துவிடும். திரு ஜெயராமன் அவர் தன் கருத்துக்களை சொல்லியிருக்கிறார். பொதுவில் சொன்னதால் எல்லோருக்கும் சங்கடம் அடைந்திருப்பதாக தெரிகிறது. அவர் தனிமடலில் சொல்லியிருக்கலாம். இதை பெரிது படுத்துவதில் வெறுப்புகளும், விமர்சனங்களும் தான் வரும். விட்டுவிடலாமே !
நான் சமிபகாலமாக தமிழ்மணம் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை. ஆனாலும் உள்ளங்கை அரிப்பெடுத்து அவ்வப்போது எட்டிப்பார்க்கிறேன். இந்த சமாச்சாரம் இப்போது தான் பார்த்தேன். கெளதம் இதற்கெல்லாம் மனம் நொடித்துப்போகலாமா , நம் கருத்தை அச்சமின்றி சொல்லத்தான் வலைப்பதிவுகள் , சொன்ன பிறகு அதற்காக மனக்கிலேசம் அடையலாமா, அதுவும் உண்மையை சொல்லி இருக்கும் போது தலை நிமிர்ந்து நிற்கவேண்டும்.
பதிவு விட்டுப்போவது சிறு பிள்ளைத்தனம் என்பேன்.நீங்கள் செய்தது சரியான ஒன்றே, எல்லாவற்றிற்கும் உள்ளர்த்தம் கற்பிக்கும் ஒருவருக்கு சுட்டிக்காட்டியுள்ளீர்கள் இதில் தவறென்ன?
nalla mudivu gautam. maaRidaathIngka.
athE pazaiya
anaani
கத்தி மட்டுமா...
கமல் சொல்றமாதிரி கத்திய தோள்ல போட்டுட்டு,"போங்கடா போயி கேர்ள் ஃபிரண்ட்கூட சேர்ந்து கோட் எழுதுங்கடா"ன்னு சொல்லிட்டே போங்க.
வலைப்பதிவுன்னாலே வெட்டித்தானே ஆகணும். (கட் அன்ட் பேஸ்ட்)
//அப்போதுதான் ஜாதி வர்ணப் பூச்சுடன் வலைப்பக்கம் நடக்கும் அத்து மீறல்கள் குறித்து அறிந்தேன். அதிர்ந்தேன்.//
இது மிகவும் வேதனையான விசயம். இங்கு அதிகமாக ஜா"தீ"யம் கொழுந்து விட்டு எரிகிறது,
இதைப் பற்றிய விரைவில் ஒரு பதிவு எழுதவுள்ளேன்,
//80 படைப்புகளையும் நிச்சயம் படித்திருக்க மாட்டார் திரு. ஜயராமன் என்றே நான் இப்போதும் கருதுகிறேன். அவரது அரை வேக்காட்டுத் தனமான பின்னூட்டம் என்னை வருத்தப் பட வைத்தது. //
உங்களை மட்டுமல்ல அனேகமானவர்களை வருத்தப்பட வைத்தது,
அன்புடன்...
சரவணன்.
கௌதம்
தமிழ்மணத்தில் இத்தகைய சர்ச்சைகள் சகஜமே... அதற்காக மாற்றத்தை ஏற்படுத்த வல்லவர்கள் வலைபதிவுலகிலிருந்து விலகுவது சரியல்ல
சிறுசிறு தவறுகள் ஏற்படுவது இயற்கையே... துடைத்தெறிந்துவிட்டு மீண்டும் எழுத வாருங்கள்
நண்பா,
* 80 பதிவுகளையும் அவர் படித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறதே. வலையுலகுக்கு புதிய மனிதரான நீங்களே பொறுமையாக 80 பதிவுக்கும் வோட்டு போட்டிருக்கும் போது, வலையுலகில் ஏற்கனவே பல அனுபவம் பெற்றிருக்கும் அவர் 80 பதிவையும் படித்திருக்கவும் வாய்ப்புள்ளது.
* 80 பதிவுகள் முழுமையாக இல்லாவிடினும் பாதியாவது படித்து, இதே ரீதியில் தான் மீதியும் என்றும் அவர் கருதியிருக்கலாம்.
* எல்லாருமே ஒரே ரீதியான கருத்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா? எது அபத்தம் எது சரி என்றெல்லாம் அளந்து பார்க்க எதுவும் அளவுகோல் இருக்கிறதா என்ன?
* முதலில் மேற்படி போட்டிக்கான தலைப்பே சற்று அபசகுனம் தான் : 'மரணம்'. எனவே அதில் 'எழவு' சம்பந்தப்பட்ட விஷயங்கள் இல்லாமல் என்ன இருக்கும்?! என ஜயராமன் சாரிடம் கேட்கிறேன்.
* சண்டையும், சச்சரவும் வலைஞர்களின் பரம்பரை சொத்து. (ஹிஹி). அதனால இப்படி நம்ம 'தலைவர்' இமயமலை போயிடுவேன்னு சொல்லிட்டு போன மாதிரி (?!) ஒரேடியா விட்டுட்டு போயிடுறேன்னு சொன்னா எப்படி? அதுக்காக ஒரு பாட்டு பாடியா உங்களை இருக்க சொல்ல முடியும்?!
(அது சரி.. வலைப்பூ பக்கம் வாங்கன்னு சொன்ன உங்க எதிரி...ஸாரி..நண்பர் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே இங்க நடக்குற மேட்டரையெல்லாம் எடுத்து விடலையாக்கும்?!)
பாருங்க...அந்த annani-க்கு சந்தோஷம் கொடுக்கணுமா? நீங்க நிறுத்தறது அந்த ஆளுக்கு அவ்வளவு சந்தோஷமா...அதுக்கு நீங்களும் உள்ளாகலாமா?
என்// ஜி போஸ்ட்டையும் தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறேன்.// ரொம்பத் தப்புங்க.எதை எதிர்த்தீங்களோ அதற்கே முதுகை காண்பிக்கிறீர்களே!
நிலா பதிவில் என்னுடைய பின்னூட்டம்.
-----------------------------------
ஜயராமன்,
வெற்றி பெற்ற மூன்று படைப்புகளிலும் உங்கள் பின்னூட்டத்தைப் படித்தபின் எனக்கு நிஜமாக ரொம்ப கோபம் வந்தது சார்..
//மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது. //
மற்ற பலரின்? எத்தனை சார் படிச்சீங்க?!! நானும் 80 படைப்பையும் படிச்சேன். மரணம் என்னும் தலைப்புக்கு நிச்சயம் ஒட்டி வருவதாகவே இருந்தன பல படைப்புகள்.. இன்னும் சில சைன்ஸ் fiction , காமெடி, satire கூட இருந்ததே, அதுக்கெல்லாம் ஓட்டு போட்டிருக்க வேண்டியது தானே? நீங்க நினைப்பது போல் எல்லாரும் நினைத்திருந்தால், அந்தச் சில படைப்புகளில் ஒன்று வந்திருக்குமே!!
// ஒருத்தர் கவிதை சிம்பதி ஓட்டில பரிசு தட்டிவிட்டது என்று நினைக்கிறேன். (அதற்காக குறை என்று தவறாக நினைக்கவேண்டாம்)//
சிம்பதி என்று எதைச் சொல்வீர்கள்? இதில் லிவிங் ஸ்மைல் வித்யாவின் கவிதைப் பக்கத்திலேயே என்னவோ சோகம், வன்ம்ம், வெறுப்புடன் எழுதி இருக்கிறதாய் சொல்றீங்க!! அவங்க சொல்லும் விஷயங்கள் நமக்கே நடந்திருந்தா எப்படி சார் இருந்திருக்கும்? சோகம், வன்மம் இல்லாம பேச முடியுமா என்ன? வித்யாவின் கவிதை முகத்தில் அறையும் நிஜம்.. பேச்சியாத்தாளையும் சந்திரா அத்தையையும் நீங்களும் நானும் சராசரி வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம். அதனால இயல்பா தோணுது.. ஆனா லிவிங் ஸ்மைல் சொல்லும் அக்கிரமங்கள் இன்னும் சமுதாயத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுக்க முடியுமா சார் உங்களால?!!
என்னவோ போங்க.. அன்பு, காதல் கவிதைகள் மட்டும் எழுத வேணுமானால், உலகம் முழுவதும் அன்பால் மட்டுமே நிரம்பி இருக்க வேணும்.. அதுவரை இப்படிப்பட்ட படைப்புகளை வெறும் அனுதாப ஓட்டாக்கிக் குறைத்துப் பேசுவதை .. என்ன சொல்றதுன்னு தெரியலை சார்.. உணர்ந்து தான் பேசறீங்களா? இல்லை வித்தியாசமா சொல்லணும்னு..? இதோட விட்டுர்றேன். எதுவும் சொல்ல வரலை!!
----------------------------------
எல்லாத்தையும் சொல்லிட்டு மன்னிப்பு கேட்டு அவர் வழியைப் பார்த்துகிட்டு போவாரு, போட்டியில் பங்கெடுத்த, மற்ற போட்டியாளர்களை ஊக்கப் படுத்திய நீங்க பதிவை விட்டுட்டு வெளியேறுவீங்க! இது எந்த ஊர் நியாயம்? கௌதம், இதுக்காகவே நீங்க வெளியேறக் கூடாதுன்னு கேட்டுக்கிறேன்..
உங்க பதிவுகளை நான் தொடர்ந்து படிப்பவள் இல்லை.. இருந்தாலும் உங்க போட்டிக் கதைகள் நிறைய எனக்குப் பிடிச்சிருந்தது.. அந்த விதத்தில் நீங்க வெளியேறுவது ஒரு இழப்பு தான்..
சண்டை, சச்சரவு இல்லாம தமிழ்மணம் இருந்தா போர் ஆகிடும்ங்க.. நல்ல காதல் படங்களில் ஒரு fight சீன் இருக்கிறது மாதிரி.. ;)இதெல்லாம் part of Blogging..
வாங்க! இந்த வெளியில் போகும் வேலை எல்லாம் வேண்டாம்..
நிறைய தொடர்களை ஆரம்பிச்சிருக்கீங்க.. தொடருங்க..
நீங்க பதிவு போடலைன்னா இதுக்கு நான் போட்டிருப்பேன்.. அவ்வளவு தான்.. ஏதோ இல்லாத பிரச்சனையை ஆரம்பிச்ச குற்ற உணர்ச்சியுடன் நீங்க வெளியேறுவதை நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன்..
திரு. கௌதம்,
தமிழ்மணம், மற்றும் வலைப்பூ உலகில் ஜாதீ கூடுதலாக கொளுந்து விடுகிறதென்னமோ நிஜம் தான்.
என்றாலும் எதிர் தரப்பு மாற்றுக் கருத்துக்களை அறிய இதைவிட நேரடியான களம் வேறில்லை.
நேரடி விவாதத்தில் முகதாட்சண்யத்திற்காக வாதம் கருத்து அடக்கிவாசிப்பது மாதிரி இல்லாமல் வலைப்பூக்களில் வீரியமாக விவாதங்கள், கருத்துக்கள் அமைவது தான் தனிச்சிறப்பு.
கருத்து பாட்டுக்கு வீரியமாய் இருக்கட்டும். இதற்காக மட்டும் வலைப்பூவை விட்டுச் செல்வது அவ்வளவு சரியாகப் படவில்லை.
அன்புடன்,
ஹரிஹரன்
www.harimakesh.blogspot.com
'அனானி' என தன்னை விளித்துக்கொள்ளும் அந்த யாரோ ஒரு நண்பர் எழுதி அனுப்பிய பின்னூட்டம் இது...
//தருமி, உங்களுக்கு நான் சொன்னது புரியலைன்னு நினைக்கிறேன், இங்கே கிடைக்கும் 1000 பேர்களை(ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா) விடவும் அதிக எக்ஸ்போஷர் அவருக்கு கிடைக்கிறது, கிடைத்துக்கொண்டிருக்கிறது.
அவர் ப்ளாக் உலகத்தில் குப்பைக் கொட்டும் எண்ணத்தையும் உள்குத்து வெளிக்குத்து மையக்குத்து(இது என்னுடையது) போன்றவற்றில் இருந்து விலகி, தமிழ் உலகிற்கு(இலக்கிய உலகிற்கு இல்லை) செய்ய வேண்டியது நிறைய இருக்கு.
அவரை விட்டுடுங்க ப்ளீஸ், இதை ஒரு நல்ல எண்ணத்தில் தான் சொன்னேன்.
.........................................................................................................................................................................
இவர் இருப்பதால் இருக்கும் சில நன்மைகள் இல்லாமல் போய்விடுவதால் முழுவதுமாக இல்லாமல் போய்விடாது. யாரோ சொன்னதைப் போல் வெளிஉலகிற்கு தெரியவேண்டியது தெரிந்தே தீரும். நல்லதோ கெட்டதோ.
......................................................................................................................................................................................................
சார் உடனே உடனே பின்னூட்டம் போட்டு தங்களின் எழுத்தின் விமர்சனம் உடனடியாக கிடைப்பதைப் போன்ற மேஜிக்கல் ரியலிசம்(மையக்குத்து) பிளாக் உலகத்தில் உண்டு. அது உண்மையல்ல, எங்களுக்கு சில ஆண்டுகளில் தெரிந்தது ஒரிறு மாதங்களில் தெரிந்தது உண்மையில் நல்லதற்கே.
போங்க சார் போய் வேலையைப் பாருங்க, வேலையில் படிப்பைப் போட்டால், தேவர்மகன் வசனம்.
அதே பழைய அனானி.//
மன்னிக்க வேண்டும் அனானி நண்பரே!
தங்கள் பின்னூட்டத்தில் வேறு சில வலைப்பதிவாளர்களைக் குறிப்பிட்டு விமர்சித்திருந்த பகுதிகளை இங்கே நீக்கியிருக்கிறேன்.
இப்போதைக்கு முகம் காட்டாவிட்டாலும் நீங்கள் எனக்குத் தெரிந்த நண்பர் எனவே தோன்றுகிறது.
அதனால் நீங்கள் என்னைக் குறிப்பிட்டு எழுதிய பகுதிகளை மட்டும் பப்ளிஷ் செய்துள்ளேன்.
மற்றவர்களை இங்கே காயப்படுத்தி, இன்னும் ஒரு வி(வ)காரத்தை ஆரம்பித்து வைக்க வேண்டாமே.. ப்ளீஸ்!
//நான் அந்த பதிவிலேயே இது யார் மனதையும் புண்படுத்துமானால் என்னை மன்னிக்க பொன்ஸ் அவர்களை கேட்டுவிட்டேன். இதை நீங்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை போலிருக்கிறது.
என் கருத்துக்களுக்கு நான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால், இந்த கருத்துக்களை நான் யாரிடம் இந்த சூழலில் விவாதிக்க விரும்பவில்லை.
இதை தாங்கள் இன்னும் பெரிது படுத்த வேண்டாம்
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை//
இதுக்கெல்லாம் என்னா சார் அர்த்தம் தான் சொன்னத எல்லாரும் உட்றுங்கன்னுதான? ஒன்னு சொன்னது சரிதான்னு சொல்லத் தெரியனும் இல்ல சொல்றத ஒழுங்கா சொல்லனும் இந்த மாதிரி ரெண்டும்கெட்டான் ஆளுங்களுக்காக நீங்க வலைப்பதிவ விட்டு போறேங்கறது அவ்வளவு சரியா படல. இதத்தான் உங்களுக்கு விகடன்ல சொல்லிக் கொடுத்தாங்களா? நீங்க இப்ப வலைப்பூவ விட்டு போனா இந்த மாதிரி ஆளுங்களுக்கு இன்னும் எதாவது சொன்னா நாம தைரியசாலின்னு இன்னும் கருத்து வன்முறைகளை பதிவாங்க நல்லா யோசனை பன்னுங்க நீங்க போறதால யாருக்கும் லாபமோ நஷ்டமோ இல்ல ஆனா நீங்க ஒரு தவறான முன்னுதாரனமா ஆயிடுவிங்க
எப்பவோ உங்கள் ஜூனியர் ல படிச்சது ஞாபகம் வருது சார்
மாலைக்குள் மதிப்பிழக்கும்
காலைப் பத்திரிகை இல்லை
உனது கம்பீரம்
ஒரு மூன்று கோட்டு அணிலை விடவா
முள்ளந்தண்டுள்ள
நீ பலவீணம்
அவன் அப்படிச் சொன்னதற்க்காக
தலையை குதியில் குதியை விதையில்
என்றும் வைக்காது அது
கொய்யா
மரப் புலவானது நெடு நாளாய்
நல்லா யோசிச்சி முடிவெடுங்க
மரங்களை அதன் கனிகளில் இருந்து பிரித்தறியக் கற்றுக்கொள்
நல்ல மரங்கள் நல்ல கணிகளைத் தரும்
சம்மந்தப்பட்ட நபர் எந்தவகை மரம்னு நீங்களே முடிவெடுங்க
கௌதம்,
உங்களைப் போலவே நானும் வலைப்பூவிற்குள் பலவிதமான கனவுகளுடன் வந்தேன்.
ஏதோ ஒரு பதிவில் குழலியை 'வன்னியர்' என்று யாரோ திட்ட, எனக்கு அப்போது தான் உரைத்தது நான் வெளியே பார்க்கும் உலகத்தை விட வலைப்பதிவுலகத்திற்கு ஒரு மோசமான மறுபக்கம் உள்ளது என்று.
நானும் சாதியில்லை, மதம் இல்லை, நீங்கல்லாம் படிச்சவங்க தானே என்றெல்லாம் கேட்டேன். ஊகும், ஒன்றும் நடக்கல.
எனக்கும் புரிந்தது ஒன்று மட்டும் தான்.
யாராலும் இதனை நிறுத்த முடியாது, அவரவர் நினைத்து உணர்ந்தாலொழிய.
எனவே எனக்கென்று ஒரு கோட்பாடு, ஒரு எழுத்துத் தளம் உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறேன். பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ என் திருப்திக்காக வலைப்பதிகிறேன் என்று திரும்பி விட்டேன்.
நல்ல எழுத்துக்களைப் படிப்பது, நல்ல படங்களைப் பார்ப்பது நல்ல பதிவுகளுக்குப் பின்னுட்டம் இடுவது அவ்வளவே.
இவர்கள் போட்டுக் கொள்ளும் சண்டைக்காக நம்மை வருத்திக் கொண்டு எழுத வேண்டியது இல்லை, சண்டை போட்டு என் மன அழுத்தம் அதிகமானதேயன்றி வேறொன்றும் இல்லை.
எனவே நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தொடர்ந்து நல்ல விசயங்களை வலைப்பதியுங்கள் என்பதே.
நானும் போட்டி முடிவுகள் அறிவிககப்படும் வரை லிவிங் ஸ்மைலின் கவிதையைப் படிக்கவில்லை.
முடிவு அறிவிக்கப்பட்டவுடன் "அனுதாப ஓட்டு குத்திட்டாங்கய்யா" என்று தான் நினைத்தேன். கவிதையைப் படித்தவுடன் நமக்குத் தெரியாத மூன்றாவது உலகத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார் என்று நினைத்தேன்.
முன்பே படித்திருந்தால் என் வாக்கை
அவருக்கே தந்திருப்பேன்.
நான் நினைப்பது என்னவெனில் ஜயராமன் போட்டி முடிவுகளை மட்டும் பார்த்துவிட்டுக் கருத்துச் சொல்லிவிட்டாரோ என்று தான்.
அட... இது என்னங்க நீங்க?
உலகத்துலே நாலு பேர் நாலுவிதமாச் சொல்வாங்கதான். அதுக்காக....?
இங்கிருந்து போறேன்னுட்டா............?
எங்கே போறது? திருப்பித்திருப்பி இங்கே இந்த உலகத்துலேதானே சுத்தி வரணும்?
பின்னூட்டம் போட்டாத்தானா? மனசுலே மறுப்புக் கருத்து தெரிவிச்சா என்ன செய்ய
நம்மாலே முடியும்?
பேசாம, நாம் எப்படி இயல்பா இருக்கமோ, எழுதறமோ அப்படியே இருந்துட்டுப் போகணும்.
எதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்.
இப்படிக்கு,
வலை உலக அக்கா
கெளதம் என்னாச்சு உங்களுக்கு.....???
விமர்சனமில்லாத பத்திரிக்கை உலகத்திலேயா நீங்கள் இருக்கீறீர்கள்.
ஏதோ இல்லாத பிரச்சனையை ஆரம்பிச்ச குற்ற உணர்ச்சியுடன் நீங்க வெளியேறுவதை நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன்..
பொன்ஸ் சொன்ன அதே வார்த்தைகளை திரும்ப சொல்லுகிறேன்.
கௌதம், நீங்க எடுத்த முடிவு சட்டுன்னு எடுத்ததுன்னு நினைக்கிறேன்.
வருஷா வருஷம் கடல்ல தூக்கி போடுறாங்களேன்னு ஊரிலுள்ள பிள்ளையாரெல்லாம் ஒடி ஓளிஞ்சிக்கிட்டாரா?
தூக்கி எல்லாத்தையும் கிடப்பில போட்டுட்டு, தொடருங்க உங்க எழுத்தை.
Post a Comment