மூன்று பதிவுகளுக்கு முன்பே போஸ்ட் செய்திருக்கவேண்டிய பதிவு இது. அதனாலென்ன, ரிவர்ஸ் கியர் எடுத்து கொஞ்சம் பின்னாடி போயி அப்புறம் முன்னாடி வாங்க தோழர்களே, தோழியரே...
‘டேய் நான் தெரியாமத்தான் கேக்குறேன். உன் மனசுல உன்னப்பத்தி என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கே?’
“யார் பேசுறது?”
‘நீதாண்டா பேசுறே கய்தே!’
“வாணாம். விதண்டாவாதம் பேசாத. இதெல்லாம் நாங்க பார்த்திபன் - வடிவேலு காம்பினேஷன்ல எப்பவோ தமிழ் சினிமாவுல பார்த்தாச்சு. நீ தைரியமான ஆம்பளைன்னா டகல் காட்டாம நேர்ல வந்து நின்னு பேசு பார்க்கலாம்”
‘சரி வரேன், வாயத்தொற!’
“நீ வர்றதுக்கும் நான் வாயத்தொறக்குறதுக்கும் என்ன சம்பந்தம்?!”
‘அடங்கொக்கமக்கா... நாந்தான்டா உன் மனசாட்சி. உள்ள இருந்து வெளிய வர வேணாமா..’
“ஓஹோ.. வாய் வழியாதான் வருவிங்களோ?!”
‘அப்டினு இல்ல, உடம்புல இருக்க ஒன்பது ஓட்டைகள்ல எதுனாச்சும் ஒண்ணு வழியா வரமுடியும். என் சாய்ஸ் வாய். உனக்கெப்படி வசதி?’
“அடக்கஷ்டமே! வாய் வழியாவே வந்துடு. மத்ததெல்லாம் நினைச்சுப் பார்க்கவே கொடூரமா இருக்கு மை டியர் மனசாட்சி”
‘சரி ஜீ பூ ம் பா’
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... ப்ளக்! (மனசாட்சி வெளியேவருவதற்கான சவுண்ட் எஃபெக்ட்டுங்க!)
‘தோ.. வந்துட்டேன்! நல்லா பார்த்துக்க, எப்டி இருக்கேன்.. உன்னைவிட அழகா இருக்கேனா?’
“கிழிஞ்சது போ! அழகப்பத்தியெல்லாம் நாம பேசக்கூடாது. மேட்டருக்கு சட்னு வா. இப்ப எதுக்காக இந்த குபீர் விஜயம்?”
‘வலையைவிட்டுப் போறதா ஃபிலிம் காட்டி இருக்கியே, அதுபத்தி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்’
“ம்ம்”
‘யார்ரா நீ?’
“ஹேய்.. கிவ் ரெஸ்பெக்ட். அண்ட் டேக் ரெஸ்பெக்ட். நான் கௌதம், ஜி.கௌதம்”
‘ம்க்கும். ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைல்ல பேரச் சொல்லிக்கிட்டா பெரிய ஆள்னு நினைப்பாக்கும்! கௌதம்ங்குறது உன் பேரு. நீ யார்டா?’
“இந்தப் பழைய கதையெல்லாம் இங்க விடாத மகனே. அது ராமகிருஷ்ணரோட பாப்புலர் கதை. சொந்தக்கதையா எடுத்து விடு!”
‘ஓ.கே. கூல். ஸேம் ஸைடுல கோல் போட்டுக்க வேண்டாம். மேட்டருக்கு வரேன். ஜூன் மாசம் 29ம் தேதி வலைப்பூ ஆரம்பிச்சவன் நீ. ஒரே மாசத்துல ஐயாயிரம் ஹிட்ஸ் கொடுத்திருக்காங்க வலைத்தமிழ் மக்கள் உன்னயும் ஒரு பொருட்டா மதிச்சு. ஆனா பாரு.. பழம் தின்னு கொட்டை போட்ட, கொட்டை தின்னு பழம் போட்டவங்க எல்லாம் அமைதியா இருக்கப்ப நீ என்னடான்னா வீடு கட்டிக்காட்டுறே? உன்னையெல்லாம் பொருட்டா மதிச்சவங்களை நீ மதிக்கக் கத்துக்க முதல்ல’
“ஆக்சுவலி நான் ஏன் கோபப்பட்டேன்னா..”
‘அடச்சீ நிப்பாட்டு. அதான் ‘யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. பெரிது படுத்த வேண்டாம்’னு ஜயராமன் சொல்லிட்டார்ல. அப்புறம் எதுக்கு விளக்கம்ங்குறேன்?’
“அப்படிங்குறே?!”
‘ஆமாம்ங்குறேன். கோவாலு, லிவிங் ஸ்மைல் வித்யா, கார்த்திக் பிரபு, நன்மனம், கோவி.கண்ணன், வவ்வால், சிறில் alex, உங்கள் நண்பன், நிலா, மாயவரத்தான், தருமி, பொன்ஸ், ஹரிஹரன், மகேந்திரன்.பெ, மகேஸ், துளசி கோபால், ராம், கஸ்தூரிப்பெண், அப்புறம் அந்த அனானி எல்லார் சொன்னதையும் கவனமா கேட்டியா?’
“ஓ.. பரவாயில்ல. நமக்கும் நல்லது கெட்டது சொல்ல ஒரு பத்தொன்பது பேர் இந்த வலை உலகத்துல இருக்காங்கன்னு தோணுச்சு. மகிழ்ச்சியா இருந்தது.”
‘மடையா. நல்லா பாரு இருபது பேர். ஜயராமனையும் கணக்குல சேர்த்துக்கோ’
“வேண்டாம்னு நினைக்குறேன்”
‘நீ என்ன வேணாலும் நினைச்சுக்கோ. அது உன் இஷ்டம். ஆனா நினைக்குறதுக்கு முன்னாடி நான் சொல்றதயும் கொஞ்சம் கேட்டுக்க’
“ம்ம் சொல்லு”
‘குழந்தை, ஞானி, பைத்தியம்னு மனுஷனுக்கு மூணு மனநிலை. இடம், பொருள், சூழலுக்கு ஏற்ப ஏதாச்சும் ஒரு மனநிலையை மனிதன் அடைவான். அந்த நேரத்தில் அவனோட பேச்சும் செயலும் அந்தந்த மனநிலையைத்தான் பிரதிபலிக்கும். வலையுலகத்துல என்ன சிக்கல்னா.. இந்த மனநிலை சமாச்சாரம்தான்.’
“புரியல?”
‘கவனமா கேளு.. ஒரு ஆள் எந்த மன நிலைல இருக்காரோ அந்த மனநிலைலயே ஊட்டமோ பின்னூட்டமோ போட்டுடலாம் இங்கே. அடுத்த நிமிடமே அதும் பப்ளிஷ் ஆகிடும்! அதே ஆள் கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து யோசிச்சார்னா, அப்ப வேற மனநிலைகூட ஏற்படலாம்.’
“இப்ப புரியுது நீ எங்கே வரேன்னு.”
‘குட். எனக்கு முன்னாடியே தெரியும் உனக்குப் புரிஞ்சுடும்னு. இதுக்காக 'வலை வேண்டாம் போ'னு சொல்றது எவ்வளவு பெரிய குழந்தைத்தனம்னு இப்ப தெரியுதா. இன்னொரு சேதி அந்த ஜயராமனேகூட ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்தான் உனக்குத் தெரியுமா ’
"ஓஹோ"
'தப்ப தப்புன்னு சொல்லு, தப்பே இல்லை. உன்னால முடிஞ்ச வரை வலை உலகத்துல நிறையப்பேரை உற்சாகப்படுத்து. ஏதோ தப்பு செஞ்சவன் மாதிரி நீ வெளியேறினா அது பெரிய தப்பு'
“ ஒரு வாரம் ஒரே ஒரு வாரம்தான் போஸ்ட் எதுவும் போடலை. ஆனா செம டென்ஷனாயிடுச்சுப்பா.”
‘அதத்தான் அந்த அனானி கொஞ்சம் முன்னெச்சரிக்கையோட சொல்லியிருக்கார். உள்குத்து, வெளிக்குத்து இதிலெல்லாம் போய் மாட்டிக்குவேனு’
“அவருக்கு நான் வலைல எழுதுறதுல விருப்பம் இல்லை. அந்த நேரத்துல வேற ஏதாச்சும் தமிழ் இலக்கிய உலகத்துக்கு செய்னு சொல்றாரு”
‘விட்டா சந்துல சிந்து பாடிக்குவியே! அவர் ‘இலக்கிய’னு சொல்லலை. அதை நீயா சேர்த்துக்கிட்டே..’
“சரீ சரீ... ஸ்லிப் ஆஃப் த டங். போதுமா”
‘பத்தாது, மேலே சொல்லு’
“அந்த அனானி சொன்னமாதிரி இங்கே வெறும் ஆயிரம் பேர் மட்டும் இருக்கலாம். என் எழுத்தைப் படிக்கலாம். ஆனா இவங்க ஒவ்வொருத்தரும் ஆயிரம் பேருக்குச் சமம்னு நான் நினைக்கிறேன். ரொம்ப முக்கியமா ஒரு ரகசியம்.. என் வாழ்க்கையில ஒரு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்காங்க இந்த வலைப்பூ நண்பர்கள். அது என்னன்னு நேரம் வர்றப்ப சொல்றேன். அதுக்காகவாச்சும் நான் இந்தப் புதிய நண்பர்கள் எல்லோருக்கும் விசுவாசமான நண்பனா இருந்தே ஆகணும்”
‘யேய் யேய்.. போதும் நிறுத்து. பத்து ரூபா வாங்கிக்கிட்டு அம்பது ரூபாய்க்கு ஆக்ட் குடுக்காதே! அதெல்லாம் ‘அவர்’ ஒருத்தராலதான் முடியுங்கறேன்!’
“அவர்தான் இப்ப இல்லியே, அந்த எடத்த நான் புடிக்கக் கூடாதா?”
‘ஓ.. மனசுக்குள்ள அப்டி ஒரு நெனப்பா! ‘இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டிங்களே’னு ஒரு ரசிகர் சொன்னதா நம்ம சூப்பர் ஸ்டாரே சொல்லிட்டார். அத்தோட நிறுத்திக்கோ’
“ஓகே. ஓகே. காம்ப்ரமைஸா போயிடலாம். முடிவா என்னதான் சொல்ற நீ?”
‘இன்னும் உன்கிட்ட பேச என்ன இருக்கு?! ஸ்டார்ட் த மியூசிக்.. த்டுங்கு டுங்கு.. த்டுங்கு டுங்கு.. த்டுங்கு டுங்கு..’
“ஸ்டாப் த மியூசிக்!”
‘என்னாத்துக்கு?!’
“ஏதொ ஒரு படத்துல ‘பூ மிதிக்க வாங்க’னு கூப்பிட்டு நம்ம கவுண்டமணியை நெருப்புக்குள்ள எறக்கி விடுறப்ப பேக்கிரவுண்டுல இதே மியூசிக்தான் போடுவாங்க!”
‘அப்ப உனக்குப் பிடிச்ச மியூசிக்க நீயே ப்ளே பண்ணிக்க’
“அதுவும் சர்தான். இதெப்படி இருக்கு பாரு.. டகடக் டக்டக்.. டகடக் டக்டக்.. டகடக் டக்டக்..”
‘ம்.. நடத்து’
“டகடக் டக்டக்.. டகடக் டக்டக்.. டகடக் டக்டக்..
ஹே... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..”
15 comments:
பேக்ரவுண்ட் மியூசிக் எதுவும் இல்லாம பேசுவது பொன்ஸின் மனசாட்சி: அம்மணி.. இனிமே பதினெட்டு பேர் யாரையாவது ப்ளாக்கை விட்டுப் போகாதேன்னு சொன்னா நீயும் போய் கருத்து சொல்லுவ? மவளே.. பின்னிபுடுவேன் பின்னி..
பொன்ஸ்: என்னத்தச் சொல்ல..
இன்னா வாத்யாரே... நல்லாதானே இருந்தீரு?!
ayyo yaravathu uthavikku vaangalen. ponsoda manasatchi vanthu ennayum pinnuthee!
mumbaila, hyderabadla vellamnalum ingee chennaila konjam veyil jasthi mayavaraththaare!
நீங்க ரொம்ப அதிர்ஷ்டக்காரர் தான் -ஒரு நேர்மையான மனசாட்சிய கூடவே வச்சிருக்கீங்க. என்னோட மனசாட்சியோ படுமோசம். கோயிலுக்கு போக கால் எடுத்து வச்சா, நேரா டாஸ்மார்க் தள்ளிட்டு போயிருது. உங்க மனசாட்சிய, என்னோட மனசாட்சிக்கு பழக்கப்படுத்திவிடனும். அப்போதாவது, திருந்துமோ என்னவோ?
PONNS GAUTHAMODA ULKUTHA NINGA SARIYA IDENTIFY PANNALAYONU THONRATHU. AVAR IPPAVUM VEEDU KATTIKKONDUTHAN IRUKKARNU ENAKUP PADUTHU. NADANTHATHA MARANTHUTU NORMAL AGUNGA GAUTHAM.
BY 21
பை 21,
அவர் வீடு கட்றதைப் பார்த்துத் தானே நான் என் செங்கல்லை எடுத்துட்டு ஓடிகிட்டிருக்கேன்.. நீங்க வேற..
ஆனா, LSV ப்ளாக்லயும் ஒருத்தர் சற்றும் மனம் தளராம வீடு கட்டிகிட்டிருக்காரே.. அதைப் பார்க்கும் போது இதெல்லாம் ஒரு உள்குத்தான்னு தோணுதே..
//கோவாலு, லிவிங் ஸ்மைல் வித்யா, கார்த்திக் பிரபு, நன்மனம், கோவி.கண்ணன், வவ்வால், சிறில் alex, உங்கள் நண்பன், நிலா, மாயவரத்தான், தருமி, பொன்ஸ், ஹரிஹரன், மகேந்திரன்.பெ, மகேஸ், துளசி கோபால், ராம், கஸ்தூரிப்பெண், அப்புறம் அந்த அனானி...//
என்னை பட்டியலில் காலி பண்ணீட்டீங்களே அண்னா.. நாயமா இது?
//அண்னா.. //
மூனு சுழி "ணா" போடறவங்களுக்கு தான் பட்டியல்ல இடம் :-)
வாழ்த்துக்கள் இது உமக்கு அல்ல உண்மை பேசும் உன் மனசாட்சிக்கு...
அன்புடன்...
சரவணன்.
//ஹே... நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா..”//
எங்கயும் ஓடாத ராஜா!
(வலைஉலக) உள்ளேயே இரு.
இப்படிக்கு,
மறுபடியும் மனசாட்சி.
அந்த by 21,
என் மனசாட்சிக்குப் பிடிச்ச புதுமை விரும்பி,
என்னை வலைக்குத் தள்ளிவிட்ட எனதருமை தம்பி இந்த அண்ணாவின் இதயக்கணி யெஸ்.பாலபாரதி,
என் மனவானில் சிறகு விரிக்கும்
(துபாய்)ராஜா..
இவர்களோடு சேர்ந்து இருபத்தி நாலானேன் இப்ப!
அண்ணாத்த, 24லாடா சேர்த்து 25ஆ என்னையும் சேர்த்துக்கோங்க. நீங்க அநியாயத்துக்கு பீல் பண்ணி அந்த பதிவு போட்டவுடன் எனக்கு நல்ல சிரிப்பு தான் வந்தது. அப்படி நான் சிரித்ததை அந்த 19 பெயரில் ஒருத்தரிடமும் சொன்னேன். அப்படி எல்லாம் பீல பண்ணாதீங்க வாத்தியாரே. அத மாதிரி யாரும் ஏதும் சொன்ன நல்லா மனம் விட்டு சிரிக்கனும். எங்க சிரிங்க பாக்கலாம்.
இல்ல வேணாம் நீங்க சிரிப்பதற்கு பீல் பண்ணுவ்தே பெட்டருனு நினைக்கிறேன்
அப்ப நம்ம புலியோட சேர்த்து 25.
அழுகை வந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணீக்கங்க, உங்களுக்காக நான் இப்ப ஒருதரம் சிரிக்கப் போறேனாக்கும்.. :-)))))))))))))))))
count one more.26!Continue writing :)
கெளதம்..
மனசாட்சி சொல்வதைக் கேட்டு நடப்பவர்களும் இருக்கிரார்கள் என்பதில் மகிழ்ச்சி.
பின்னூட்ட உளவியலை நல்லா சொல்லியிருக்கீங்க. இங்கெ அடித்துக்கொள்ளும் பதிவர்கள் நேரில் சந்தித்தால் நண்பர்களாயிருக்க வாய்ப்பு அதிகம்.
தொடர்ந்து பதியுங்கள் உங்கள் பதிவாளர்கலெல்லாம் பத்திரிகைக்கு மாறத் துடிக்கும்போது பத்திரிகையாளர்கள் இங்கே வரும்போது இன்னும் பெருமைதான்.
Post a Comment