27.08.2006 தேதியிட்ட, அதாவது அடுத்த வார, அதாவது 20.08.2006 அன்று கடைக்கு வரும் குங்குமம் இதழில்..
‘வலைப்பூவாளி’ பகுதியில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் வலைப்பதிவாளர்கள்:
மழலை / mazhalaitalk.blogspot.com
கென் / thiruvilayattam.blogspot.com
ஜெஸிலா ரியாஸ் / jazeela.blogspot.com
கார்த்திக் பிரபு / bharathi-kannamma.blogspot.com
குங்குமத்துக்காக பிரத்தியேகப் படைப்பளித்த வலைப்பதிவாளர்கள்:
சிறுகதை - நிலா
ஐந்து பேருக்கும் வாழ்த்துக்கள். ஆர்வத்தோடு பங்களிப்பைச் செய்து அடுத்தடுத்த வாரங்களில் குங்குமத்தில் இடம்பெறப் போகும் மற்ற நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
இந்த 5 பேரும் தங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும். இதழ் விற்பனைக்கு வந்ததும் உங்கள் படைப்பு வெளியான பக்கங்களை HIGH RESOLUTIONல் ‘பொம்மை’யாக்கி அனுப்பி வைக்கிறேன். படைப்புகளுக்கான சன்மானத்தை இந்திய முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்க இயலும். எந்தப் பெயரில் காசோலை எடுக்கப்பட வேண்டும், எந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதை உடனடியாக மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.
நன்றியுடனும் நட்புடனும்
ஜி.கௌதம்
27.08.2006 தேதியிட்ட இதழில் இடம்பெறும் ஒருசில பகுதிகளுக்கான முன்னோட்டம் இதோ..
- 'மனித மாமிசம் சாப்பிடும் காட்டுமிராண்டிகள் உலகின் எந்த மூலையிலாவது இருக்கிறார்களா?' என்று உங்கள் குழந்தைகள் கேட்டால், தயங்க வேண்டியதில்லை. 'இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் இலங்கையிலும் பெரிய தலைவர்களாக ஆட்சி புரிந்து கொண்டிருக்கிறார்கள் மனிதக் கறி, அதிலும் குழந்தைகளின் கறி என்றால் அவர்களுக்குத் தின்னுவதற்கு மிகவும் பிடிக்கும்' என்று தயங்காமல் பதில் சொல்லுங்கள்.
கிருஷ்ணா டாவின்ஸி எழுதும் சிறப்புக் கட்டுரை: குழ்ந்தைகளைத் தின்னும் மனிதர்கள்!
கூடவே,
- 'நின்னு விளையாட'ப்போகும் 'வேட்டையாடு விளையாடு'
- சோனியா அகர்வாலுக்கு ரஜினி வாழ்த்து!
- சூர்யா-ஜோதிகா களை கட்டும் கல்யாணம்! கடைசி நேர திருப்பங்கள்!
- மதன் எழுதும் மாவீரன் நெப்போலியன் தொடர்
- சென்னை தோசைக்கு லண்டனில் கிராக்கி! ஒரு சக்சஸ் ஸ்டோரி
- அனாதை இல்லங்களுக்கு கோடிகள் தருவதாகக் கூறி பகீர் மோசடி!
- மேக் அப் இல்லாத நயன்தாரா!
- பாகிஸ்தான் வானில் பதறவைத்த நிமிடங்கள்! ஒரு கமாண்டரின் அனுபவம்!
- பா.விஜய் எழுதும் தேவதைகளின் தேசத்தில் 'அலுவலகக் காதல்'
- வ.உ.சி. பற்றி பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
- கடலைக்காதலிக்கும் முதல் இந்தியப் பெண்!
- 'எம்டன் மகன்' படத்துக்காக இயற்கையே இசையமைத்த புதுமை!
- பெங்களூருக்கு ஆபத்து! என்.சொக்கனின் அபாய அறிவிப்பு
8 comments:
உங்கள் ஆக்கமான பணிக்கு வாழ்த்துக்கள்!
கடந்தவாரம் எனது பதிவை வெளியிட்டமைக்கு நன்றிகள்!
பெங்களூருக்கு ஆபத்தா? சொக்கா சீக்கிரம் சொல்லுங்கைய்யா
////மேக் அப் இல்லாத நயன்தாரா!///
வலைப்பதிவர் ஒருவர் வருத்ததில் தாடி வளக்க போறார்..
நல்ல முன்னோட்டம் கெளதம்.
விவ் ஒன்னும் பயப்படாதீங்க.... பெங்களுர்க்கும் நீங்க இருப்பதை விட வேற பெரிய ஆபத்து என்ன வந்து விட போகிறது. இது ஏதும் தம்மாதுண்டு மேட்டரா இருக்கும்.
:)
Free items illame, kungumam waste.
At least Ananda Vikatane caapy adikalaam illaeya?
-V
என்னங்க புத்தகம் வெளிவருவதற்குள்ளாக சொல்லி விடுகிறீர்கள்? ஒரு எதிர்பார்ப்பு இருக்காதே!
இது வரவேற்கப்படவேண்டிய விசயம்.
"குங்குமம்" ட்ரெய்லர் வலைப்பூவில்...
நன்றி கெளதம் :)
Post a Comment