Friday, September 08, 2006

மகிழ்ச்சிக்குரிய இரண்டு சேதிகள்!

செய்தி ஒன்று!

திண்டுக்கல்லில் இருந்து பழனி போகும் வழியில் இருக்கிறது பி.எஸ்.என்.ஏ. பொறியியற் கல்லூரி. பஸ்ஸிலோ ரயிலிலோ அந்தப்பக்கம் போகும்போது கவனித்திருக்கிறீர்களா.. பிரம்மாண்டமாய் கடந்து போகும்! அங்கேதான் நான் படித்தேன்!

நான் படிக்கும் காலத்தில் வெறும் பொறியியற் கல்லூரி மட்டுமே. இன்று அசத்தலான ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. எம்.ஈ., எம்.பி.ஏ., பி.டெக்., என நிறைய கோர்ஸ்கள் கற்றுத்தரும் மெகா கல்வி நிறுவனமாக உயர்ந்திருக்கிறது.

கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் செகரட்டரி அடியேன்தான். தமிழ் மன்றத்துக்கு முதல் செயலாளரும் நானே!

அந்தக் கல்லூரியில் இந்த வருடம் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப் சார்பாக பெரிய அளவில் கலை விழா நடந்து கொண்டிருக்கிறது. க்ளைமாக்ஸ் நிகழ்ச்சியில் CHIEF GUEST ஆக மேடையேறி சிறப்புரை(?!) ஆற்றி பரிசுகளை வழங்கப்போவது உங்கள் நண்பன் ஜி.கௌதம்!!!!

கூடப்படித்த இரண்டு சகாக்களையும் கூட்டிக் கொண்டு கல்லூரிக்குப் போகிறேன். 'ஹ்ம்ம்ம்.. ஆட்டோகிராப்'தான்!

இது எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.

அடுத்தது உங்களுக்கு மகிழ்ச்சி தரும்!

தொடர்ந்து சில நாட்களுக்கு பயணத்திலேயே இருக்கப்போவதால் தடாலடி பரிசுப் போட்டியோ, அடாவடிப் பதிவுகளோ இன்னும் ஒரு வாரத்துக்காவது உங்களைத் தொந்தரவு செய்யாது!

போய்ட்டு வரேன் நண்பர்களே!

ஏதாச்சும் உருப்படியான செய்திகளை எதிர்பார்த்து இந்தப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை சுயபுராணத்தோடு திருப்பி அனுப்ப மனசு வரலை. அதனால் சூடாக இரண்டு சினிமா விமரிசனங்கள் தருகிறேன்.

இன்னும் சில நிமிடங்களில் பெட்டியைத் தூக்க வேண்டும் என்பதால் கொஞ்சமே கொஞ்சம் மட்டுமே எழுத அவகாசம்.

படம் : 1. சில்லுனு ஒரு காதல்
  • நமது உடல் உறுப்புதான் என்றாலும் நகத்தை வெட்டுவதில்லையா.. அப்படி ஒரு இருபது நிமிடத்தை படத்திலிருந்து வெட்டிக் கடாசினால் இன்னொரு மௌனராகமாக ஆகி இருக்க வேண்டிய படம்! குப்பாச்சு குழப்பாச்சு வரிசையில் சேர்ந்துவிட்டது. குறிப்பாக பூமிகா திரும்ப வரும் முழுநீளமும் கொட்டாவிக்கு டிக்கெட்!

படம் : 2. எம்-டன் மகன்

  • 'ஆஹா ஓஹோ' என படம் வருவதற்கு முன்னரே படா படா பில்ட்-அப்கள் கொடுக்கப்பட்டது. சேரன் இழுத்து இழுத்துச் சொன்ன தவமாய் தவமிருந்துவை நச்னு சொல்லி இருக்காங்களாம் என பேச்சைப் பரப்பினார்கள். படம் பார்த்துவிட்டு வருபவர்கள் தங்கள் அப்பாவைத் தேடி ஓடுவார்கள் என்றார்கள். இந்தப் பேச்சுக்களையெல்லாம் நம்பிப் படம் பார்க்கப் போனால் எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும் அப்பா நாசர் மீது கடும் கோபத்தோடுதான் வெளிவருவீர்கள்!

15 comments:

துளசி கோபால் said...

சென்று வருக............

வென்று வருக..............(?)

ILA (a) இளா said...

வெகு சிலருக்கே கிடைக்கும் வாய்ப்பு இது. வாழ்த்துக்கள்...

நாமக்கல் சிபி said...

இரண்டாவது செய்தி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான்!

:-)

நீங்கள் படித்த கல்லூரிக்கு நீங்களே சிறப்பு விருந்தினராகவா! பெருமைப்படக் கூடிய விஷயம்!
வாழ்த்துக்கள்!

G Gowtham said...

"டேய் பழைய நெனப்புல மேடையேறி காமெடி கீமெடி பண்ணிடாதே! இப்ப நீ எண்டர்டெய்னரா இல்ல, சீஃப் கெஸ்டா போறே" என எச்சரிக்கை கொடுத்த என் இரு நண்பர்கள் ஒரு பாதுகாப்புக்காக என்னுடன் வரப்போகிறார்கள்! எம்மேல அவனுகளுக்கு அவ்ளோ நம்பிக்கை! ஏதாச்சும் உளறிடப்போறானோங்குற அவ நம்பிக்கை!!

லக்கிலுக் said...

////CHIEF GUEST ஆக மேடையேறி சிறப்புரை(?!) ஆற்றி பரிசுகளை வழங்கப்போவது உங்கள் நண்பன் ஜி.கௌதம்!!!!/////

வாழ்த்துக்கள் அண்ணே.... கலக்குங்க....

G Gowtham said...

துளசியக்காவுக்கு நன்றி சொல்றதுக்காக போட்ட முந்தைய பின்னூட்டத்தில் அக்கா பெயரும் அந்த நன்றியும் மிஸ்ஸ்ஸ்ஸ்!
ஸாரிக்கா,
அப்றம் தேங்க்ஸ்க்கா!

RAANA MONAA said...

இன்னா வாத்யாரே

சொந்த ஊர்ல வூடு கட்றது சும்மா சமாச்சாரமில்ல,அப்டியே அண்ணியையும் இட்குனு போ ! அதான் மெய்யாலுமே ஆட்டோகெராப்பு....

RAANA MONAA said...

இன்னா வாத்யாரே

சொந்த ஊர்ல வூடு கட்றது சும்மா சமாச்சாரமில்ல,தூள் மேட்டர்தான்,வாய்த்துக்கள்...அப்டியே அண்ணியையும் இட்குனு போ ! அதான் மெய்யாலுமே ஆட்டோகெராப்பு....புர்தா...!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கௌதம்!
கலக்கலான உரை ஒன்று! "தமிழ்மணத்துடன்" கொடுங்கள்! ; சந்தோசத்துடன் பெருமைக்குமுரியது.
வாழ்த்துககள்!
யோகன் பாரிஸ்

ALIF AHAMED said...

ரெண்டும் செய்திதான் நமக்கு ..
அங்கையும் போயி தடாலடி போட்டி வைங்க..

Anu said...

ALL THE BEST AND HAPPY JOURNEY TO CHEIF GUEST.

வல்லிசிம்ஹன் said...

திண்டுக்கல் நிறைய மாறித்தான் இருக்கிறது.
நாங்கள் படிக்கும்போது அங்கு கல்லூரி கூட(1964) கிடையாது.
வாழ்த்துக்கள் கௌதம்.
இன்னும் மேலும் வெற்றிகள் வர வாழ்த்துக்கள்.

Anonymous said...

அண்ணே!

எம்டன் மகன் நல்லா தான் இருக்கு! நைட் ஷோ தெளிவா பார்த்துட்டீங்க போலிருக்கு!

2 ரவுண்டு சாப்பிட்டுவிட்டு பாருங்க!

பரத், சரண்யா, வடிவேலு, சாவு சீன் சூப்பரா இருக்குண்ணே!

லக்கிலுக் said...

//அண்ணே!

எம்டன் மகன் நல்லா தான் இருக்கு! நைட் ஷோ தெளிவா பார்த்துட்டீங்க போலிருக்கு!

2 ரவுண்டு சாப்பிட்டுவிட்டு பாருங்க!

பரத், சரண்யா, வடிவேலு, சாவு சீன் சூப்பரா இருக்குண்ணே!///

இந்த ரெண்டாவது அண்ணே நான் அல்ல... கவிஞராக இருக்கலாம் :-)))

மதுமிதா said...

///'ஹ்ம்ம்ம்.. ஆட்டோகிராப்'தான்!///

நன்று கௌதம். மகிழ்ச்சியான விஷயம்.
அசைபோட வைக்கும் நினைவுகளோடு போய் வந்திருப்பீர்கள்.

மகிழ்ச்சியாய் போய் வந்தகதையை எப்ப போடப்போறீங்க:-)