சென்னைவாழ் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு தடாலடி பரிசுப்போட்டி!
மத்தவங்களும் இதில் கலந்து கொள்ளலாம். ஆனால்.. வெற்றி பெற்றால் அவர் சார்பாக இங்கே சென்னையில் பரிசைப் பெற்றுக் கொள்ள வேறு யாரேனும் ஒரு வலைப்பதிவாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்!
என்ன சரியா?
போட்டி இதுதான். இந்தப் படத்துக்கு நச்னு ஒரு வரி (ஒரே ஒரு வரி மட்டுமே!) கமெண்ட் அடிக்க முடியுமா?
மணி இப்போ இந்திய நேரப்படி பகல் ஒன்று முப்பது. மாலை நான்கு மணிதான் கொடுக்கப்படும் அவகாசம். அதற்குள் பரிசுக்குரிய கமெண்ட்டை அடிப்பவர்களுக்கு இன்று மாலை ஆறு மணிக்கே பரிசு வழங்கப்படும்!
பரிசு என்னன்னு சொல்றேன். சினிமா பிடிக்காதவங்க திட்டாதிங்க. ஒருவேளை நீங்க ஜெயிச்சா உங்க நண்பரான வேறு வலைப்பதிவாளருக்கு பரிசை மாத்திவிட்ருங்க!
பரிசு.. இன்றைக்கு மாலையே சூர்யா-ஜோதிகா கல்யாணத்தைப் பார்க்க வாய்ப்பு! அதாவது அவங்க கல்யாணக்காட்சி இடம்பெறும் 'சில்லுனு ஒரு காதல்' படம் பார்க்க வாய்ப்பு!! (படம் எட்டாம் தேதிதான் உலகத்துக்கு ரிலீஸ்!)
கால அவகாசம் குறைவா இருக்கதால பரிசைத் தீர்மானிக்க ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
என்ன ரெடியா? ஜூட்!
வெற்றியாளர் இங்கே.
125 comments:
இப்பவே கண்ண கட்டுதே சாமி ...
உடலுக்கொரு ஜோடி மனசுக்கொரு ஜோடி !
"காதலி நீயெனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி"
Thts a nice initiative Gowtham :)
Here's my try
பார்வை ஒன்றே போதுமே !!!!
முக்கியமா ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். ஒருவரே எத்தனை எண்ட்ரி வேணும்னாலும் கொடுக்கலாம்! ஆனா பரிசு ஒரே ஒருத்தருக்குத்தான்!
கண்ணால் காண்பதுவும் மெய்
அழகான (நிஜ) ராட்சசி...!
பேதை கண்கள் மீண்டும் ஏமாற்றியதென்னை வித்தியாசம் என்னவெனில் இந்த முறை முதல் பார்வையிலேயே.
கண்ணே...நீ என்னை கொன்னே...!
இந்த படத்த பார்த்ததும் நல்ல தலைவலி :(
எனக்கு தோன்றிய தலைப்புகள்
ஒரு தலை இரு முகம்
இரண்டு
வேற்று முகம்
மயங்க வைக்கும் மங்கை
பார்க்கும்ப்போதே போதை ஏறுது!
அதனாலதா ஒன்று இரண்டாகிறது!
ஒண்ணும் ஒண்னும் சேந்தா ரெண்டு, இது புரிஞ்சா நீயும் என் பிரண்ட்டு
மயக்குகிறாள் ஒரு மாது
லக்கலக்க யக்கா... தந்திரமுகியா நீயு?
கண்களால் கைது செய்... இதழ்களால் வழக்காடு...
இரண்டு இதழ்களும் எனக்கே எனக்கா?
பார்வைகள் பலவிதம்
இரண்டு ஜோடி இடிமின்னல்
எனக்குள் ஒருவள்
தாயும் சேயும்
ஒரு பொண்ணு.. அவளுக்கு நாலே நாலு கண்ணு..
(காதலிக்க நேரமில்லை நாகேஷ் மாதிரி படிக்கவும்..
பாலையா: நாலு பொண்ணுள்ள கண்ணா?, சீ.. நாலு கண்ணுள்ள பொண்ணா..)
பிரம்ம தேவன் கொடுத்த "டாஸ்மார்க்"
செவ்விதழிரண்டும் செவ்வாய் நான்கும் செய்வினையானதடி !
இரட்டை அழகு
நீ குவளைக்குமரியா..இல்ல குவாட்டர் குமரியா ?
கண்கள்
கள்ளடித்துவிட்டதா என்ன?
எல்லாமே நாலு நாலு;நம்மகிட்டே ரெண்டு ரெண்டு;என்னா செய்றது...
சுர்ர்ர்ர் என்று போதை ஏற்றும் சுண்டக்கஞ்சியே...
(( சென்னைக்கு மட்டும்னு சொல்லிட்டீங்க் - அதான் ஒரு நேட்டிவிட்டி ))
உன்னைப் பார்த்(த)தாலே இப்*போதை*க்கு இரண்டிரண்டாய்த் தெரிகிறாய்
நீ தலைவியா? தலைவலியே?
கண்கள் கள்ளடித்துவிட்டதா என்ன?
கண்கள் நோகுதடி...அகல மறுக்குதடி!!
ஐயோ, ஒரு பொம்பளைக்கு ரெண்டு வாயா............?
எந்த திருவள்ளுவனின் படைப்பு நீ?
பெண்ணே
உன் கண்ணே
என்னை ஏமாற்றுதடி
பார்த்தீபன் ரம்பாவுக்கு சொன்ன புதுக்கவிதை மாதிரி படிக்கவும்.
முன்னால் எழுதியதை சற்றே எடிட் செய்து கீழே.
பேதை கண்கள் மீண்டும் ஏமாற்றியதென்னை இம்முறை முதல் பார்வையிலேயே.
கேமராவுக்கே போதையா?
பாவை போதும்; படம் வேண்டாம்
// sivagnanamji(#16342789) said...
பிரம்ம தேவன் கொடுத்த "டாஸ்மார்க்"
//
இதற்கும் பாஸ்மார்க் போட்டுட்டீங்களா ?
டாஸ்மாக் என்றுதானே சொல்லவந்தீர்கள் ? :-)))
நெற்றிக்கண்ணால் இடஒதுக்கீடு வாங்கிவிடுவாயோ?
"கிர்ர்ர்ருன்னு ஒரு காதல்"
ஜப்பானின் லேட்டஸ்ட் Invention..!
"ஜில்லுன்னு ஒரு காதல்" பார்ப்பதற்கு முன்பே போதையா?
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்?
நமக்கு போதை வந்தா இப்படி தெரியும், இந்த பொண்ணுக்கே.........போதை வந்தா?
1.நான்குவிழியால் காதல்கொலை.
2. தலைசுற்றவைத்து,பின்இதயம்சுற்றச்செய்பவள்.
ஐ எகிறுதுங்கோ ஐ ஐ எகிறுதுங்கோ...அப்படி என்னைப் பார்க்காதீங்கோ
பிரம்மனின் சிஸ்டத்தில் வைரஸ் அட்டாக்.....
சார்! டிக்கெட்ட யார்க்குவேணா அனுப்புங்க..ஆனா அந்த பொண்ணோட ஜாதகத்த மட்டும் எங்க அம்மாவுக்கு அனுப்புங்க....
கிரிப்ஸ் கிரகத்தின் கிளியோபாட்ரா
மவனே சிக்குனே தனியா அவ்வளவு தான் சிக்கன் குன்யா
இவளிடம் "லிப்-டு-லிப்" கிஸ் அடிப்பது எப்படி? :-)
நீ தூங்கும் நேரத்தில் நீ முழிப்பாய்
"சும்மா நச்சுன்னு இருக்கு" :-)
போதையூட்டும் பேதை!
ஐய்யோ ரெண்டு
போதை மருந்து பிடிபட்டது - இப்படிக்கு - இதய இலாகா
எக்ஸ்ட்ரா அண்டு எக்ஸ்செலண்ட் ஸ்வீட்டி
இரண்டும் நீயாக இரண்டு காதலி வேண்டும்
புதுசா போட்டிருக்கேன் கண்ணாடி
இப்போ வந்து நில்லு என் முன்னாடி
ஓபியம் சாப்பிட்டேன் ஓவியம் தெரிந்தது
லிதகா னிவக ல்நி
அவள் போல் இவளுக்கும் இதயமும் இரண்டோ?
இது சொந்தச் செலவுல்ல சூனியம்ங்கோ
ஒன்றும் ஒன்றும் ஒன்று
மாயா மாயா எல்லாம் மாயா
கோடீசுவரியா? கேடீசுவரியா?
எடுத்தது நீயோ!எண்ணிரெண்டு கண்களை காணவில்லை !!
ரெண்டும் ரெண்டும் நாலு...இது ரெண்டுங்கெட்டான் ஆளு
'ட்வின்'கிள் 'ட்வின்'கிள் லிட்டில் ஸ்டார்ஸ்....
கன்னியிவள் நாற்கண் வேதமோ?
எல்லாமே ரீப்பிட்டு.... வந்தவன் எல்லாம், சொல்லாம அப்பீட்டு
1) இவள் கண்ணடித்து சிரித்தாள்!
2) இவள் கண்ணடித்து சிரித்தால்?
எல்லாம் மாயை
காத்திருந்தக் கண்கள்.. பூத்திருந்த இதழ்கள்...
பாவையால் என் பாவையில் வலி
நீ இறைவனின் இலக்கணப்பிழையா? தலை கண பிழையா?
ஐ ஐ லவ் லவ் யூ யூ
//புதுசா போட்டிருக்கேன் கண்ணாடி
இப்போ வந்து நில்லு என் முன்னாடி//
லக்கி! சூப்பரு!
கண் தானம் செய்வீர் - இரு இதழ் பேசும் ஒரே மொழி இதுவோ
விழி முடு ! தாங்காதடி நான்முனைத்தாக்குதல்!
Error 404!
//இவள் கண்ணடித்து சிரித்தாள்!
2) இவள் கண்ணடித்து சிரித்தால்? //
ராசுக்குட்டி! இதுவும் சூப்பர்!
சாப்ட்வேர் சாத்தான்களின் சாபமா நீ?
வழி மேல் வைப்பதற்கு
இரு விழி உபரி!
கண்ணா! கூட்டிக் கழிச்சிப் பாரு கணக்கு சரியா வரும்!!
மாமன் பொண்ணுக்கு கண்ணு நாலு...
மச்சானைக் கட்டிக்கப்போறது எந்நாளு?
கன்னாபின்னான்னு காதலிக்கலாம் வாடா
4 கண் + 4 உதடு = 4 கண்'கள்'??
4 மணி வரை காதலி
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லையாமே
தலைவலி மருந்தே தலைவலியானால்?
காட்சி பிழையா என் கண்கள் பிழையா?
ஒரு வாய் போதுமே.... அதுவே எனக்குத் தாங்காது.... :-)
பெண்ணையும் நம்பாதே இத கண்னையும் நம்பாதே
ஆச்சர்யம் - ஒரே வானம் இரண்டு நிலவு
முத்தம் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் - 'அம்பு'டன் 4 கண்கள்!
கிராப்பிக்ஸ் பெண்ணே நீயாரோ....
பேதை நீ பார்க்க போதை எனக்கா?
இது ஒரு ஜெனிடிக்கெல் போட்டோ ஆக்சிடெண்ட்
கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்..
புதிய பா(ர்)வை... இதழில் இதழைப் பார்த்து வை!
விழிகள் விமர்சனமாகின்றது
கண்ணும் கண்ணும் நோக்கியா, நீ கொள்ளைகொள்ளும் மாஃபியா..
என் கண்ணுக்கே கண் பட்டு விட்டதே!
வேணாம் தலைவலிக்குது அழுதுருவேன்...அவ்வ்வ்வ்வ்வ்
ஆமா என்னிய வச்சு இந்தக் கௌதம் காமெடி கீமெடி பண்ணலீயே
காதலோ - கள்ளோ?
கண்ணும் கண்ணும் நோக்கியா.. அப்படியும் ரெண்டு கண்ணு பாக்கியா :)
4 மணி ஆயிட்டு அழுவாதே கண்ணே
என் கண்ணும் இதழும் உனக்கு - உன் இதயம் மட்டும் எனக்கு!
கண்ணே வாயாடி னு சொன்னதுக்காக இப்படியா??? :((
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்
கண்னோ இரண்டு
கண்பதோ நான்கு
முத்தான பரிசோ ஒன்று
கௌதம்ஜி ஆட்டம் க்ளோஸா இல்ல இன்னும் இக்குதா?
ஆஆஆஆட்டம் முடிஞ்சது!!!!!!
சில நிமிடங்களில் ரிசல்ட்!
(யப்பாவ்! பின்னிப் பெடலெடுத்துட்டிங்களே சாமிகளா!*!@#*)
முதல் பரிசு எங்கள் தலைக்குத்தான் தர வேண்டுமென செல்ல எச்சரிக்கை
அண்ணன் லக்கியார் தற்கொலைப்படை
வவுனி
சிரிலங்கா
//Error 404!//
ஒத்தை வார்த்தையில் நெத்தியடி - மின்னல்!
double trouble
இதென்ன ஆடித் தள்ளுபடியா..எதைவிடுவது எதை எடுப்பது?
உன்னைத் தான் பிடிச்சிருக்கு..இல்லை உன் தங்கையை..இல்லை உன்னை..இல்லை உன்...
chummaa!
சுனாமி கிளப்பிய நில அதிர்வில் நின்று சிரித்தவளொ ?
கேத்ரீனா புயலைக் கண்டு கலங்கி நின்றவளோ?
மதிய தூக்கத்தில் இந்த ஜிக்-ஜாக் புதிரை மாற்றிப் போட்டானோ படைப்பாளி?
"நல்லவேளை மூக்குத்தி ஒன்னு வாங்கினா போதும்..."
I know the competition is closed...still couldn't resist this ;P
இந்தப் பதிவை தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் :) நன்றி.
http://www.desipundit.com/2006/09/06/thadaladipotti/
லக்கிலூக்குக்கு வாழ்த்துக்கள்..
மொழிகளுக்கும் மறூமொழிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அடுத்த போட்டி விரைவில்!!!!!!!!!!!
Post a Comment