Saturday, November 18, 2006

குரங்கு திங்கிங்!/ தடாலடிப்போட்டி

போட்டிக்கான கால அவகாசம் நிறைவடைய இன்னும் 3 மணி நேரமே இருக்கிறது, அதாவது இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணி..

இந்த வார தடாலடிப்போட்டி இந்தாங்க..

கும்னு குந்திக்கிட்டிருக்குற குரங்காருக்கு ஒரு மனசு இருக்குதுன்னு வச்சுக்கங்க. அந்த மனசுல என்ன 'திங்க் பண்ணிக்கிட்டிருப்பார்ங்குறதுதான் நம்ம போட்டி!

குரங்கா மாறி (ஆஹா, மனிதனில் இருந்து குரங்குக்கு மறுபடியும்!) சிந்திச்சு 'பன்ச் கொடுங்க பார்க்கலாம்..

ஒரே ஒரு பன்ச்சுக்கு மட்டும் முதல் பரிசு. தவிர ரசிப்புக்குரிய மற்ற பல பங்களிப்புகளுக்கு ஆறுதல் பரிசு!

என்ன 'மாற' ரெடியா?

184 comments:

ஆவி அண்ணாச்சி said...

குரங்கா பிறந்தாலும் குட்டிக்கரணம் போட்டுதான் காசு பார்க்க வேண்டியிருக்கு! மனுஷன் மாதிரி!

ILA (a) இளா said...

நான் மனுஷன் தோள் உக்காந்து போற மாதிரி, எந்த மனுஷனாவது குரங்கு தோள் மேல உக்காந்துகிட்டு போவமுடியுமா?

G Gowtham said...

முதல் மற்றும் ஆறுதல் பரிசுக்குரியவை அடுத்த வார குங்குமம் இதழில் வெளிவரவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே தோழர்களே.. பன்ச் அனுப்பும்போதே உடன் உங்கள் ஊரையும் குறிப்பிடவும். அதாவது உதாரணத்துக்கு.. 'பெங்களூரில் இருந்து இளா'
நன்றி

ஆவி அண்ணாச்சி said...

குரங்கா பிறந்தாலும் குட்டிக்கரணம் போட்டுதான் காசு பார்க்க வேண்டியிருக்கு! மனுஷன் மாதிரி!

ஆவியுலகிலிருந்து ஆவி அண்ணாச்சி!

Anonymous said...

interesting...very interesting...

ILA (a) இளா said...

மனிதா, திரும்பிப்பார்.
நீ கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

பொன்ஸ்~~Poorna said...

யோவ், உனக்குத் தான் ஒண்ணும் செட்டாக மாட்டேங்குது.. ஒரு ரெண்டு நிமிஷம் என்னை இறக்கிவிட்டா எதிர்ப்பக்கம் மரத்துல நிற்கிற பொண்ணுகிட்ட ஐ லவ் யூ மட்டும் சொல்லிட்டு ஓடியாந்திர மாட்டேன்!

(பெண்குரங்குன்னும் வச்சிக்கலாம், இல்லைன்னா கலப்புக் காதல்னும் ;) )

- சென்னையிலிருந்து பொன்ஸ்.. :))

பழூர் கார்த்தி said...

1.

அடுத்த எலக்ஷன்ல இலவச டிரஸ் எதுனா நமக்கு கொடுத்தாங்கன்னா, நல்லா இருக்குமே !!!!

- புனேயிலிருந்து 'பழூர் கார்த்தி'

<<>>

2.

யாரும் நம்மள கண்டுக்க மாட்டேன்றாங்க...நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிர வேண்டியதுதான் !!

- புனேயிலிருந்து 'பழூர் கார்த்தி'

Raghavan alias Saravanan M said...

"சும்மா உக்காந்தா
சோறு கெடைக்குமா தம்பி?"

Raghavan alias Saravanan M said...

"சும்மா உக்காந்தா
சோறு கெடைக்குமா தம்பி?"

-

Raghavan alias Saravanan M said...

"சும்மா உக்காந்தா
சோறு கெடைக்குமா தம்பி?"

- பெங்களூரில் இருந்து 'இராகவன் என்ற சரவணன் மு.'

Raghavan alias Saravanan M said...

"குரங்குமனசுன்னு சொல்றவன்லாம்
குரங்குக்கும் மனசு இருக்குன்னு நெனப்பானா?"

- பெங்களூரில் இருந்து 'இராகவன் என்ற சரவணன் மு.'

Raghavan alias Saravanan M said...

"பயந்தாலும், வியந்தாலும்
பாடுபட்டால் தான் 'பழம்'!"

- பெங்களூரில் இருந்து 'இராகவன் என்ற சரவணன் மு.'

லக்கிலுக் said...

"கொரங்கா பிறந்தா மனுஷன் கிட்டே கழுத்தே நீட்டிக்கணும்"


(குரங்கின் கழுத்து சங்கிலிகளால் கட்டப்படும் என்பதை கவனத்தில் கொள்க)

லக்கிலுக் said...

இன்னைக்காவது வாழைப்பழம் வாங்கி கொடுப்பானா? இல்லேன்னா நேத்து மாதிரி தோல் மட்டும் தானா? :-(

லக்கிலுக் said...

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே...

சந்தனமுல்லை said...

அதான் சென்னையில தண்ணி கஷ்டம் இல்லயே..இந்த ஆள் தலை குளிச்சா என்னவாம்..?!!!

சந்தனமுல்லை said...

ஹப்பா....தண்ணி தேங்கி சேரும் சகதியும் இருக்கற இந்த ரோட்ல நாம நடக்கவேணாம்..தோள் மேலயே உக்கார்ந்துக்கலாம்...!!!

சந்தனமுல்லை said...

ஹப்பா....தண்ணி தேங்கி சேரும் சகதியும் இருக்கற இந்த ரோட்ல நாம நடக்கவேணாம்..தோள் மேலயே உக்கார்ந்துக்கலாம்...!!!

சந்தனமுல்லை said...

இன்கம் டாக்ஸ் கட்ட கடைசி தேதி இன்னைக்கா..நாளைக்கா..மறந்து போச்சே...!!

சந்தனமுல்லை, சென்னை

சந்தனமுல்லை said...

மழை வரும்னு பேப்பர்ல போட்டதை நம்பி குடை எடுக்காம வந்துட்டமே...

லதா said...

நம்ப 'தல' என்ன நம்மளை ஃப்ரீயா உடாம சங்கிலி போட்டு கட்டிவுட்டதுமில்லாம தோளிலேயே புடிச்சி வச்சினிகினுகீறாரே அவர் தன் மனசுல என்னதான் (சிலேடை) நெனச்சுகினுகீறாரு ?

சென்னையிலிருந்து லதா

Anonymous said...

"போறது யாரு? நவீனா அது? கடங்காரன், பாக்காத மாதிரி போறாம்பாரு...."

சென்னையிலிருந்து தியாகராஜன்.

நாமக்கல் சிபி said...

ஏன்டா ஒரு நாளாவது ஷேம்பூ போட்டு குளிடானா கேக்கறயா?

கப்பு தாங்க முடியலைடா...

பாஸ்டனிலிருந்து பாலாஜி :-)

மாயவரத்தான் said...

கெளதம் அண்ணாச்சி.. உடனே ஒரு கரண்ட் சிச்சுவேஷன் அரசியல் கமெண்ட் தோணுது. அதை அப்படியே சொன்னா 'உங்க' பத்திரிகையிலே போட மாட்டீங்க. சென்சார் பண்ணிடுவீங்க. அதனால இதோ வேற ஒரு கமெண்ட்...

"முதல் பரிசுக்கு லக்கி லுக் வந்திட்டாரா இல்லையா?!"

ஹிஹி.. சும்மாவாச்சுக்கும் அது.. இதோ கமெண்ட்..

* "திரும்பவும் (இ)லங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த சொல்லுவாங்களோ?!"

* "தமிழ் வருஷ பிறப்புக்காவது தலைவர் படம் ரிலீஸாவுமா?!"

- மாயவரத்தான்...

சத்தியா said...

சங்கிலியும்
சலங்கையும் சுமந்து
கனக்கிறது என் கழுத்து!

வாயிருந்தும்
வார்த்தைகள் வராமல்
ஊமையான மனமொன்று
உள்ளிருந்து அழுவது
உன் காதில் விழுகிறதா...?

பிரான்சிலிருந்து
"சத்தியா"

மாயவரத்தான் said...

"யோவ்.. நமீதா டான்ஸ் அங்கே பாக்குறதை விட்டுட்டு அந்தப் பக்கம் திரும்பி பார்த்துகிட்டுருக்காரு பாரு என் எஜமானன்"

Anonymous said...

"இந்த போறாளே மினுக்கிக்கினு, இவ தலைய மேஞ்சு பாத்தா தெரியும் எத்தன பேனுன்னு"

- சென்னையிலிருந்து தியாகராஜன்.

பிரதீப் said...

வருங்காலத்தைப் பற்றியது உன் கனவு - உன்
இறந்தகாலத்தை பற்றியது என் நினைவு!
குரங்கிலிருந்து மனிதன்!

சென்னையிலிருந்து பிரதீப்!

பிரதீப் said...

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானாம்!
நான் எப்போது மனிதனாவது?

சென்னையிலிருந்து பிரதீப்!

Anonymous said...

"இராமநாராயணன் படமா அது? எந்த கொட்டாயில போட்ருக்கான்?"

- சென்னையிலிருந்து தியாகராஜன்.

tamizhppiriyan said...

அடுத்த‌ வாட்டியாது குற்றாலத்தில சீசனுக்கு போகனும்...

"சொர்க்கமே என்றாலும் அது..."

-ஃபிலடெல்பியாவில் இருந்து சங்கர்

பினாத்தல் சுரேஷ் said...

அந்தப்பக்கமே திரும்ப முடியலே.. நாறுதுன்னு நம்ம மொழிலே சொன்னா அவனுக்குப் புரியவும் மாட்டேங்குது!

துபாயிலிருந்து பினாத்தல் சுரேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

கொள்ளுத்தாத்தான்னு கொஞ்சமாவது மரியாதை இருக்குதா? சங்கிலியிலே கட்டி வச்சிருக்கான் பாரு!

துபாயிலிருந்து பினாத்தல் சுரேஷ்

tamizhppiriyan said...

வந்துட்டான்யா வந்துட்டான்யா!! ஆகா...அவனா நீ..??
போன‌வாட்டியும் காசு கொடுக்காமா குட்டிக‌ர‌ண‌ம் போட‌ வ‌ச்ச‌து நீ தானே..
டேய் நீ ஒருத்த‌ன் தானா இல்ல‌ ஒரு கூட்ட‌மாவே திரியிரீங்க‌ளா....?
என்ன‌ ம‌ட்டும் ஏன் டா??

-ஃபிலடெல்பியாவில் இருந்து சங்கர்

Anonymous said...

ஏ அங்கப்பார்ரா. இந்த மாட்டையெல்லாம் சோடி சோடியா ஓட்டினு போறானுவ. நம்மள மட்டும் இந்தாளு தனியாவே வச்சிருக்கானே.
ஹ்ம்ம்ம்ம் மாடா பொறந்திருக்கணும்.

இவன் தலைக்கும் குளிக்காம என்ன வேற தூக்கி தோள்ள போட்டுக்கிட்டு. தூதூ ஒரே கப்பு பா.

அவசரமா முச்சா வருதே. மெதுவா போயிருவமா அப்டியே. இவனுக்குதான் சொரணையே இல்லியே.

யாரா அது தூரத்துல எங்கியோ பாத்த மாதிரி இருக்கே. நம்ம கணேசனா அது? புடிச்சுட்டாங்களா அவனையும். ஹா ஹா ஹா.

சிட்லபாக்கத்திலிருந்து, ஜெயராமன்

Anonymous said...

குரங்கு மனசுன்னு சொல்றாங்க, அரசியல் வாதி மனசுன்னு மாத்தி வைங்கப்பா!

சென்னையிலிருந்து மரபூர் ஜெய.சந்திரசேகரன்

Anonymous said...

அட, கன்ப்யூஸ் பண்ற மாதிரி, என் நெத்தில பட்டைய குறுக்கவும் போட்டான், நெடுக்கவும் போட்டான், என்னை முறைச்சுப் பார்த்தா?

RBGR said...

"அவசரமாக உலக அழகிப் போட்டிக்கு போய்கின்னுகீறேன்! அப்பால வந்து கண்டுக்கிறேன் என்னா! ""


சென்னையிலிருந்து தமிழி.

RBGR said...

ஆமா! என்னை வைச்சு காமெடீ கீமடி பண்ணலயே!! ... ஆஹா!

சென்னையிலிருந்து தமிழி.

RBGR said...

என்னது ஜாக்கி சான் கூட பைட் சீனா!! ஆளவிடுங்கடா டேய்!
அப்புறம், யூனியனில் கம்பளெயண்ட் பண்ணிடுவேன்.

சென்னையிலிருந்து தமிழி.

RBGR said...

எப்படித்தான் இப்படியெல்லாம் இவனுக்குத் தோணுது. ரூம்பு போட்டுத் திங்க் பண்ணுவானோ!

சென்னையிலிருந்து தமிழி.

siva gnanamji(#18100882083107547329) said...

சும்மாவா சுமக்கிறான்?
முப்பாட்டனில்லே...!

siva gnanamji(#18100882083107547329) said...

சும்மாவா சுமக்கிறான்?
முப்பாட்டனில்லே....!

சென்னையிலிருந்து சிவஞானம்ஜி

siva gnanamji(#18100882083107547329) said...

என்னாலெ இவனா?இல்ல இவனாலெ
நானா...?

சென்னையிலிருந்து சிவஞானம்ஜி

siva gnanamji(#18100882083107547329) said...

என்னாலெ இவனா?இல்ல இவனாலெ
நானா....?


சென்னையிலிருந்து சிவஞானம்ஜி

அரை பிளேடு said...

குரங்கு இன்னா நினைக்கும்பா...

இன்னா ராங்கு இருந்தா நம்ப பர்மிஜன் இல்லாம, நம்மள போட்டோ புட்சி, அத பிளாக்கோ இன்னாமோ அதுல எயுதி, நாம இன்னா நினைக்கிறோம்னு போட்டி வேற வெப்பாங்க...

எங்கம்மா மேனகா காந்தி மட்டும் பவர்ல இருந்தாங்கன்னா, பட்டா அத்தினி பேரயும் அள்ளி உள்ளாற தள்ள மாட்டாங்கா...

அம்புட்டுதாம்பா நினச்சி இருக்கும்.

siva gnanamji(#18100882083107547329) said...

பசங்களா வாலை சுருட்டிட்டுப் போங்க; சும்மா சீண்டாதீங்க...


சென்னையிலிருந்து சிவஞானம்ஜி

RBGR said...

ஆமா! நேத்து என்னச் சாப்பிட்டோம்!
சரிதான் இன்னிக்கும் பீச் தானா!
இவன் வேற என் பேரை மாத்த மாட்டிங்கிறான்! ஆடறா ராமா அப்படின்னு ஒரே இம்சைப்பா!
ஏய்!பேனு! முதுகிலே கடிக்காதே!
எப்படியாவது இன்னிக்கு ரெண்டு வாழைப்பழமாவது வாங்கிடனும்!
என்ன இது ராமர்கோவிலுக்காப் போறாம்! இங்கே நான் குரங்காத்தவிக்கிறேன். ஏதாச்சும் திரும்பிப்பாக்கறனாப் பாரு!
ஏய்! இன்னிக்கு ரெண்டு வாழைப்பழமாவது வாங்கிடனும்!


-பின்குறிப்பு : நாங்களும் உங்க இனம் தானே ! நாங்களும் தாவறது மாதிரித்தான் நினைப்போம்! இப்ப என்னான்றே நீ!

சென்னையிலிருந்து தமிழி.

RBGR said...

மறக்காமல் முகம் கழுவிக்கூட்டிச்செல்
நாளைக்கு ரம்சானாம்.

சென்னையிலிருந்து தமிழி.

லக்கிலுக் said...

"நல்ல வேளை. கொரங்கா பொறந்துட்டேன். மனுஷனா பொறந்திருந்தா மதச்சண்டை, சாதிச்சண்டை அரசியல்னு இவனுங்க மாதிரி நானும் அடிச்சிக்கிட்டு செத்திருக்கணும்"

லக்கிலுக் said...

"யோவ் மொதலாளி பொங்கலுக்கு இலவச வேட்டி ஒனக்கு மட்டும்தான்யா. எனக்கு கொடுக்க மாட்டாங்க. அதுக்கு மனுஷனா பொறந்து தொலைக்கணுமே?"

லக்கிலுக் said...

"ம்... அருணாச்சலத்துலே தலைவர் நடிக்க வெச்சாரு. சிவாஜியிலும் நம்பளுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பாரா?"

லக்கிலுக் said...

எங்க முதலாளி தான் ஒரிஜினல் கம்யூனிஸ்ட்...
வேலைக்காரனை கூட தோளில்‌ தூக்கிட்டுப் போறார் பாருங்க‌

லக்கிலுக் said...

குங்குமம் இந்த வாரம்...
என் போட்டோவுக்கு வாசகர்கள் கமெண்ட்...
புதுசு கண்ணா புதுசு.....

லக்கிலுக் said...

கிங்காங் பாக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. இந்த மூதேவி கூட்டிக்கிட்டே போக மாட்டேங்கிறான்.

லக்கிலுக் said...

நான் கொழந்தையா இருந்தப்பவே இவன் கூட்டிக்கிட்டு வந்துட்டான். எங்கம்மாவை பாத்ததே இல்லே. அவங்களும் என்னை மாதிரி அழகா இருப்பாங்களா?

லக்கிலுக் said...

இன்னைக்கு விஜய் பாட்டுக்கு டேன்ஸ் ஆடணுமாம். எனக்கு அஜித் தான் புடிக்கும். நம்ம விருப்பத்தை எவன் கேட்குறான்? ஆடுறா ராமான்னா ஆடிட்டு போவ வேண்டியது தான்.

லக்கிலுக் said...

இந்த ஆளுக்கு வெச்சா குடுமி, செரச்சா மொட்டை. அடிஅடின்னு போட்டு அடிக்கிறான். குஷி வந்தா தோள் மேல தூக்கி வெச்சி கொண்டாடுறான். என்னாத்தை சொல்லுறது?

லக்கிலுக் said...

தலைவர் டாஸ்மாக்குக்கு போறார் போல இருக்கு. நமக்கும் ஒரு "பெக்" ஊத்தித் தருவாரு.

லக்கிலுக் said...

மழைக்காலம் ஆரம்பமாயிடுச்சி. எனக்கு ஒரு மங்கி கேப் வாங்கித் தரக்கூடாதா?

லக்கிலுக் said...

எனக்கு கட்சியும் வேணாம்
ஒரு கொடியும் வேணாம்
அட டாங்கு டக்கர டக்கர டக்கர‌
டாங்கு டக்கர டா...

லக்கிலுக் said...

தடாலடியா ஏதாவது திங்க் பண்ணச் சொன்னா எப்படி? ஏதாவது சப்ஜெக்ட் கொடுக்கணுமில்லே?

லக்கிலுக் said...

நீங்கள்லாம் என்ன மாதிரியே இருந்துருக்கலாம்யா. மனுஷனா மாறி என்னத்தைக் கிழிச்சீங்க?

லக்கிலுக் said...

சிம்புவுக்கும், நயந்தாராவுக்கும் "லவ்வு" இல்லியாமே? மெய்யாலுமா?

லக்கிலுக் said...

சதாம் உசேன தூக்குல போடுறதுக்கும் இவர் என்னை தூக்கிட்டு போறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க. சொன்னா நம்புங்க.

லக்கிலுக் said...

குரங்காய் மாறு
அரசியலில் அடிக்கும்
குட்டிக் கர்ணம் பழகும்

லக்கிலுக் said...

குரங்காய் மாறு
குட்டிக்கர்ணம் பழகும்

லக்கிலுக் said...

எனக்கொரு ரகசியம் தெரிஞ்சாகணும் சாமி. எனக்கேன் ராமான்னு மட்டுமே பேரு வெக்கிறாங்க.

லக்கிலுக் said...

நான் நெனைக்கிறதெல்லாம் இருக்கட்டும். நீங்க என்னப் பத்தி என்னா நெனைக்கிறீங்க. நான் பார்க்க ஷாருக்கான் மாதிரி இருக்கேனா?

லக்கிலுக் said...

இந்தாள மாதிரி தாடியும், மீசையும் மொளைச்சா நம்ப பர்சனாலிடிக்கு "கெத்தா" இருக்காது?

siva gnanamji(#18100882083107547329) said...

என்னப் புடிச்சு
சங்கிலி போட்டு
ஆடச் சொல்லுகிற
உலகம்....
எப்படி ஆடுவேனய்யா-நான்
எப்படி ஓடுவேனய்யா...?


சென்னையிலிருந்து சிவஞானம்ஜி

பகுத்தறிவு said...

தோளுக்கு மேலன்னா தோழன். அப்படின்னா இவர் என்னுடைய தோழரா.. நீங்களே சொல்லுங்க..

கார்மேகராஜா said...

எங்க முதலாளி ரொம்ப நல்லவரு.

அவரு அசிங்கமா இருந்தாலும் என்ன குளிக்க வச்சு தலைக்கு மருதாணி எல்லாம் பூசி விட்டாரு.

சென்ஷி said...

மனசு மந்திய சுமந்தா
தப்பா பேசுது நாக்கு.
உடம்புல உன்னய தூக்க...
மாருதின்னு சொல்லுது ஊரு..

டெல்லியிருந்து சென்ஷி

Anonymous said...

ஈவ் டீசிங் செய்ய மாட்டோம்
கொலை பண்ண மாட்டோம்.
கொள்ளையடிக்க மாட்டோம்
அடுத்தவன வாழ்க்கைய கெடுக்க மாட்டோம்
இப்டி எவ்ளோ நல்லவங்களா இருக்கற
எங்கள போயி மனசங்க கூட ஒப்பிட்டு
குரங்கு மனசுனு சொல்றாங்களே நியாயமா?
சே மனுசங்கள பாக்கவே பிடிக்கலப்பா. :(

நாமக்கல் சிபி said...

//சிம்புவுக்கும், நயந்தாராவுக்கும் "லவ்வு" இல்லியாமே? மெய்யாலுமா?
//

நாம கூடத்தான் இராம.நாராயணன் படத்துலயெல்லாம் நடிச்சோம்! நம்மைப் பத்தியெல்லாம் கிசு கிசு வரமாட்டேங்குதே!

நாமக்கல் சிபி said...

//சிம்புவுக்கும், நயந்தாராவுக்கும் "லவ்வு" இல்லியாமே? மெய்யாலுமா?//

ம்ஹூம்! நாம கூடத்தான் எத்தனையோ இராம.நாராயணன் படங்களில் நடிச்சோம்! நம்மைப் பத்தியெல்லாம் எதுவும் கிசுகிசு வரமாட்டேங்குதே!

கோவையிலிருந்து "நாமக்கல் சிபி"

அனுசுயா said...

ஈவ் டீசிங் செய்ய மாட்டோம்
கொலை பண்ண மாட்டோம்.
கொள்ளையடிக்க மாட்டோம்
அடுத்தவன வாழ்க்கைய கெடுக்க மாட்டோம்
இப்டி எவ்ளோ நல்லவங்களா இருக்கற
எங்கள போயி மனசங்க கூட ஒப்பிட்டு
குரங்கு மனசுனு சொல்றாங்களே நியாயமா?
சே மனுசங்கள பாக்கவே பிடிக்கலப்பா. :(

அனுசுயா, கோவை.
முதல் தடவை அனானியா போயிடுச்சு சாரி

SP.VR. SUBBIAH said...

"சொந்தம், பந்தம்னு எந்த விலங்கும் எஙகளுக்கு இல்லைங்கிறதுனாலதான் எங்களுக்கு விலங்குன்னுபேரு.
ஆனா அந்தமாதிரி விலங்குகளையே பிடிச்சு விலங்கு போட்டு வைக்கிறானுங்களே
இவனுங்களெல்லாம் விளங்குவானுங்களா? நிச்சயம் விளங்கமாட்டானுங்க!"

கோவையிலிருந்து SP.VR. சுப்பையா

நாமக்கல் சிபி said...

//அனுசுயா, கோவை.
முதல் தடவை அனானியா போயிடுச்சு சாரி
//

இது அழுகுணி அனானி ஆட்டம்!

:)))

We The People said...

கெட்டதை பார்க்காதே!
கெட்டதை கேட்காதே!
கெட்டதை செய்யாதேன்னு சொல்லி சொல்லி, இப்ப எது நல்லது, எது கெட்டதுன்னுனே புரியாத மாதிரி பண்ணிட்டாங்களே நம்மள??!!

சென்ஷி said...

என்னை சுமந்து
நீ
உன் பசியை ஆற்றினாய்.

மண்ணில்
பிறந்த உன்னால் தான்
தொடங்கியது
என் அரங்கேற்றம்.

குருதட்சணை செலுத்தியும்,
தாட்சன்யம் ஏன்
தரவில்லை.

தாயின் மடி
தேடிப் பார்க்க
தோள் இடம் தருது

டெல்லியிலிருந்து சென்ஷி

சென்ஷி said...

மனசுல மந்திய சுமந்தா
தப்பா பேசுது நாக்கு.
உடம்புல என்னய தூக்க...
மாருதின்னு சொல்லுது ஊரு..

டெல்லியிருந்து சென்ஷி

சென்ஷி said...

பெயர் தெரியா
கோபுரம் பாத்து
கன்னத்தில்
போட்டுக்குற...

ஊரறிய என்னய
நீயும்
சாமியா மாத்திப்புட்டே..

நடமாடும் சாமி நான்
ஏன் என்னை
கட்டி வச்சே?


டெல்லியிலிருந்து சென்ஷி

சென்ஷி said...

லட்சுமணன் கோட்டை
சீதை தாண்டினா,
உண்டாச்சு சுந்தர காண்டம்
ராமாயணத்துல...

இந்த சித்தன்
கோட்டை நானும்
தாண்டாட்டி
நான் பார்க்குறேன்
யுத்த காண்டம்
இந்த பாரதத்துல...

டெல்லியிலிருந்து சென்ஷி

Anonymous said...

தோள் கொடுத்தவனே!
தப்பாக நினைக்காதே
அவன் தோள்
இன்னும் அழகாய் இருக்கு!

பாபு

Anonymous said...

என்னது
எங்களுக்கும் கட்-அவுட்டா?
யோவ், நாங்க ஒண்ணும்
அரசியல்வாதியில்லை.

பாபு

Anonymous said...

குரங்குல இருந்து மனுஷன் வந்தான்னு சொல்றாங்க...
ஆனா இங்கே மனுஷன்ல இல்ல குரங்கு இருக்கு !!!

Anonymous said...

எங்கள வெச்சு வித்தைக்காட்டித் தான்
ஒங்களோட பொழப்பு ஓடுது
அரசியல்லயும்தான்!

பாபு

Unknown said...

இவனுக்காக உழைத்து நான்தான் இளைக்கிறேன்.
இவனும் ஏன் இளைக்கிறான்?.
நல்லா வாழ முடிந்தால் பார்.
இல்லையென்றால் என்னையாவது வாழ வழிவிடு.

துபையிலிருந்து சுல்தான்.

We The People said...

கெட்டதை பார்க்காதே!
கெட்டதை கேட்காதே!
கெட்டதை செய்யாதேன்னு சொல்லி சொல்லி, இப்ப எது நல்லது, எது கெட்டதுன்னுனே புரியாத மாதிரி பண்ணிட்டாங்களே நம்மள??!!

இதை மறந்துட்டேன் தல...

சென்னையிலிருந்து தடாலடிப்போட்டிக்காக நா.ஜெயசங்கர்.

We The People said...

நம்மள ஃப்ரீ பண்ணறதுக்கு வரறேன்னு சொன்ன மேனகா காந்திய இன்னும் காணலயே?

தடாலடிப்போட்டிக்காக சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

We The People said...

கொத்தடிமை முறை இன்னும் முடிவுக்கு வரலைன்னு என்னை கட்டி வெச்சிருக்கறத பார்த்தா தெரியலையா?

தடாலடிப்போட்டிக்காக சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

✪சிந்தாநதி said...

மனுச புத்தி வந்த குரங்கு
சிந்தித்தது:

"'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'னு
வள்ளுவரே சொல்லியிருக்கார். அது கூட தெரியாம
சங்கிலியால கட்டி கூத்தாட வைக்கிறானே?
இவனுக்கென்ன குரங்கு புத்தியா?'

G Gowtham said...

மன்னிக்கவும் நண்பர்களே,
ப்ளாக்கரில் ஏதோ ப்ராப்ளம்
வந்திருக்கும் பல பின்னூட்டங்களை பப்ளிஷ் செய்ய இயலவில்லை!
முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்..

✪சிந்தாநதி said...

குரங்கு சொன்ன கவிதை:

குரங்கு உடலில் மனுச மனசு
மனுச உடலில் குரங்கு மனசு

✪சிந்தாநதி said...

இந்தச் சங்கிலியை இவன் கழுத்தில் போட்டு குட்டிக் கரணம் போட வைக்கணும்னு ரொம்ப நாளா ஆசை!

✪சிந்தாநதி said...

[குறிப்பு:இது போட்டிக்கல்ல]

காலையில் ஜிபோஸ்ட் படிக்க ஆரம்பித்ததும் மின்தடை.5.55க்கு தான் மின்சாரம் வந்தது. உடனே இங்கே பின்னூட்டமிட்டால் பிளாக்கர் தடை!சுமார் 15 click waste.

We The People said...

ஆட்டம் முடிந்ததா தல??!! இல்ல இன்னும் xடெண்ட் பண்ணியிருக்கீங்களா? எப்ப தல ரீஸ்ட்??

Anonymous said...

எங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

சிறில் அலெக்ஸ் said...

"இந்த ஆளுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன்?
கழுத்துல சங்கிலி, சலங்கைன்னு வெறும் நகநட்டு மட்டுந்தேன்."

சிக்காகோவிலிருந்து சிறில் அலெக்ஸ்

மாயவரத்தான் said...

அட.. எங்கப்பா வலைப்பதிவர்கள் மீட்டிங்குக்கு கூப்பிட்டுட்டு ஒருத்தரையும் காணும்?!

Anonymous said...

எந்த கடைல குங்குமத்த வாங்கினானோ, நெத்தி இப்படி எரியுதே. நல்ல வேள குங்குமம் பத்திரிக்கைலேருந்து வந்தான் போடோ புடிக்க. 'தீச்சட்டி' பத்திரிக்கைலேருந்து வந்தாங்கன்னா நம்ம கத கந்தல் தான்டோய்.
சீக்கிரம் எடுடா நெத்திய கழுவணும்.

சிட்லபாக்கத்திலிருந்து, ஜெயராமன்

Anonymous said...

ஆவி வந்து போணி பண்ணினா யாவாரம் களை கட்டுதே!

-ஆவியுலகிலிருந்து ஆவி அம்மணி.

லக்கிலுக் said...

ரிசல்ட் எப்போ வாத்தியாரே?

ரவி said...

கொஸ்டின் பேப்பர் அவுட் :)

G Gowtham said...

தோழர்களே! தோழியரே!!
ப்ளாக்கரில் ஏதோ சிக்கல்.
ஒரு சில கமெண்ட்டுகளைப் போஸ்ட் செய்ய முடியவில்லை. comments moderation ஐ நம்பி in box ல் இருந்த கமெண்ட்டுகளை அழித்துக் காலி செய்துவிட்டதால் திரும்ப உயிர்ப்பிக்க இயலவில்லை. பொருத்தருள்க!
போட்டிக்கான ரிசல்ட்.. இன்னும் சில நிமிடங்களில்..

We The People said...

எத்தனை சில நிமிடங்கள்ன்னு சொல்லவே இல்ல??!!!!!!

Anonymous said...

//போட்டிக்கான ரிசல்ட்.. இன்னும் சில நிமிடங்களில்..

3:41 PM //

இந்த மனுஷன் இதைச்சொன்னப்போ மணி 3.45, இப்போ மணி 5.15.


கோயம்பேடு பஸ்டேண்டுலேர்ந்து டைம் கீப்பர் வரதராஜன்.

G Gowtham said...

ஐயா சாமி நண்பர்களே..
போட்டி ரிசல்ட்டும் பிரசுரத்துக்குரிய திங்க்கிங்குகளும் இந்த வாரமே குங்குமத்தில் வெளியாகப்போவதால், ஆசிரியர் குழுவின் அனுமதிக்காக காத்திருக்கிறேன்! இன்னும் கொஞ்சம் சில நிமிடங்கள் கொடுங்களேன்...

Anonymous said...

மேட்ச் பிக்ஸிங் செய்யவும்..

மாயவரத்தான் said...

ஒரு படத்திலே நம்ம கவுண்ட்ஸ் கேக்குற மாதிரி : 'கெடா எப்பய்யா வெட்டுவீங்க?!"

Anonymous said...

ஃபிக்ஸ் பண்ணிட்டாப் போச்சு!

நானும் ஆட்டைல கலந்துக்கலாமா?

G Gowtham said...

முதற்கட்ட வடிகட்டலில் பாஸ் ஆகியிருக்கும் கமெண்ட்டுகள் இங்கே! ஆசிரியர் குழுவின் கருத்துப்படி முதல் மற்றும் ஆறுதல் பரிசுக்குரிய கமெண்ட்டுகள் நாளைதான் தெரியவரும். காக்கவைப்பதற்கு ஸாரி நண்பர்களே..

குரங்கா பிறந்தாலும் குட்டிக்கரணம் போட்டுதான் காசு பார்க்க வேண்டியிருக்கு! மனுஷன் மாதிரி!
-சென்னையில் இருந்து ஆவி அண்ணாச்சி
--------------------------------------------------------------------------------
யோவ், உனக்குத் தான் ஒண்ணும் செட்டாக மாட்டேங்குது.. ஒரு ரெண்டு நிமிஷம் என்னை இறக்கிவிட்டா எதிர்ப்பக்கம் மரத்துல நிற்கிற பொண்ணுகிட்ட ஐ லவ் யூ மட்டும் சொல்லிட்டு ஓடியாந்திர மாட்டேன்!
- சென்னையில் இருந்து பொன்ஸ்.. :))
--------------------------------------------------------------------------------
"குரங்குமனசுன்னு சொல்றவன்லாம்
குரங்குக்கும் மனசு இருக்குன்னு நெனப்பானா?"
- பெங்களூரில் இருந்து 'இராகவன் என்ற சரவணன் மு.சரவணன்
--------------------------------------------------------------------------------
அதான் சென்னையில தண்ணி கஷ்டம் இல்லயே..இந்த ஆள் தலை குளிச்சா என்னவாம்..?!!!
-சென்னையில் இருந்து சந்தனமுல்லை
--------------------------------------------------------------------------------
ஏன்டா ஒரு நாளாவது ஷேம்பூ போட்டு குளிடானா கேக்கறயா?
கப்பு தாங்க முடியலைடா...
-பாஸ்டனிலிருந்து பாலாஜி :-)
--------------------------------------------------------------------------------
"திரும்பவும் (இ)லங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த சொல்லுவாங்களோ?!"
- தாய்லாந்தில் இருந்து மாயவரத்தான்...
--------------------------------------------------------------------------------
சங்கிலியும்
சலங்கையும் சுமந்து
கனக்கிறது என் கழுத்து!
வாயிருந்தும்
வார்த்தைகள் வராமல்
ஊமையான மனமொன்று
உள்ளிருந்து அழுவது
உன் காதில் விழுகிறதா...?
-பிரான்சிலிருந்து "சத்தியா"
--------------------------------------------------------------------------------
வருங்காலத்தைப் பற்றியது உன் கனவு - உன்
இறந்தகாலத்தை பற்றியது என் நினைவு!
குரங்கிலிருந்து மனிதன்!
-சென்னையிலிருந்து பிரதீப்!
--------------------------------------------------------------------------------
அந்தப்பக்கமே திரும்ப முடியலே.. நாறுதுன்னு நம்ம மொழிலே சொன்னா அவனுக்குப் புரியவும் மாட்டேங்குது!
-துபாயிலிருந்து பினாத்தல் சுரேஷ்
--------------------------------------------------------------------------------
கொள்ளுத்தாத்தான்னு கொஞ்சமாவது மரியாதை இருக்குதா? சங்கிலியிலே கட்டி வச்சிருக்கான் பாரு!
-துபாயிலிருந்து பினாத்தல் சுரேஷ்
--------------------------------------------------------------------------------
வந்துட்டான்யா வந்துட்டான்யா!! ஆகா...அவனா நீ..??
போனவாட்டியும் காசு கொடுக்காமா குட்டிகரணம் போட வச்சது நீ தானே..
டேய் நீ ஒருத்தன் தானா இல்ல ஒரு கூட்டமாவே திரியிரீங்களா....?
என்ன மட்டும் ஏன் டா??
-ஃபிலடெல்பியாவில் இருந்து சங்கர்
--------------------------------------------------------------------------------
அவசரமா முச்சா வருதே. மெதுவா போயிருவமா அப்டியே. இவனுக்குதான் சொரணையே இல்லியே.
-சிட்லபாக்கத்திலிருந்து, ஜெயராமன்
--------------------------------------------------------------------------------
அட, கன்ப்யூஸ் பண்ற மாதிரி, என் நெத்தில பட்டைய குறுக்கவும் போட்டான், நெடுக்கவும் போட்டான், என்னை முறைச்சுப் பார்த்தா?
-சென்னையில் இருந்து ஜெய.சந்திரசேகரன்
--------------------------------------------------------------------------------
சும்மாவா சுமக்கிறான்?
முப்பாட்டனில்லே....!
-சென்னையிலிருந்து சிவஞானம்ஜி
--------------------------------------------------------------------------------
"ம்... அருணாச்சலத்துலே தலைவர் நடிக்க வெச்சாரு. சிவாஜியிலும் நம்பளுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பாரா?"
-சென்னையில் இருந்து லக்கிலுக்
--------------------------------------------------------------------------------
எங்க முதலாளி தான் ஒரிஜினல் கம்யூனிஸ்ட்...
வேலைக்காரனை கூட தோளில் தூக்கிட்டுப் போறார் பாருங்க
-சென்னையில் இருந்து லக்கிலுக்
--------------------------------------------------------------------------------
நான் கொழந்தையா இருந்தப்பவே இவன் கூட்டிக்கிட்டு வந்துட்டான். எங்கம்மாவை பாத்ததே இல்லே. அவங்களும் என்னை மாதிரி அழகா இருப்பாங்களா?
-சென்னையில் இருந்து லக்கிலுக்
--------------------------------------------------------------------------------
இன்னைக்கு விஜய் பாட்டுக்கு டேன்ஸ் ஆடணுமாம். எனக்கு அஜித் தான் புடிக்கும். நம்ம விருப்பத்தை எவன் கேட்குறான்? ஆடுறா ராமான்னா ஆடிட்டு போவ வேண்டியது தான்.
-சென்னையில் இருந்து லக்கிலுக்
--------------------------------------------------------------------------------
மழைக்காலம் ஆரம்பமாயிடுச்சி. எனக்கு ஒரு மங்கி கேப் வாங்கித் தரக்கூடாதா?
-சென்னையில் இருந்து லக்கிலுக்
--------------------------------------------------------------------------------
மனசு மந்திய சுமந்தா
தப்பா பேசுது நாக்கு.
உடம்புல உன்னய தூக்க...
மாருதின்னு சொல்லுது ஊரு..
-டெல்லியிருந்து சென்ஷி
--------------------------------------------------------------------------------
என்னிய ஏன்டா அழகா படச்ச?, ஆஞ்சனேயா....
-சென்னையில்(?!) இருந்து திருமால்
--------------------------------------------------------------------------------
ஈவ் டீசிங் செய்ய மாட்டோம்
கொலை பண்ண மாட்டோம்.
கொள்ளையடிக்க மாட்டோம்
அடுத்தவன வாழ்க்கைய கெடுக்க மாட்டோம்
இப்டி எவ்ளோ நல்லவங்களா இருக்கற
எங்கள போயி மனசங்க கூட ஒப்பிட்டு
குரங்கு மனசுனு சொல்றாங்களே நியாயமா?
சே மனுசங்கள பாக்கவே பிடிக்கலப்பா. :(
-கோவையில் இருந்து அனுசுயா
--------------------------------------------------------------------------------
என்னய தூக்கி தோள்ள வச்சு, உன் ஈர மனச நீ காட்டுற..
உன் சட்டய நனைய வச்சு, என் ஈரத்த நான் காட்டுறேன்..
-சென்னையில்(?!) இருந்து திருமால்
--------------------------------------------------------------------------------
கெட்டதை பார்க்காதே!
கெட்டதை கேட்காதே!
கெட்டதை செய்யாதேன்னு சொல்லி சொல்லி, இப்ப எது நல்லது, எது கெட்டதுன்னுனே புரியாத மாதிரி பண்ணிட்டாங்களே நம்மள??!!
-சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.
--------------------------------------------------------------------------------
சிறில் அலெக்ஸ் said...
"இந்த ஆளுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன்?
கழுத்துல சங்கிலி, சலங்கைன்னு வெறும் நகநட்டு மட்டுந்தேன்."
-சிக்காகோவிலிருந்து சிறில் அலெக்ஸ்
------------------------------------------------------------------------------------------------------------

மாயவரத்தான் said...

அடேங்கப்பா... ஒரு வழியா முதல் கட்டம் தேறியாச்சு.. அடுத்த கட்டம் எப்படியோ?!

We The People said...

இன்னாபா இது நம்ம மேட்டர் கூட முதற்கட்ட வடிகட்டலில் பாஸ் ஆகியிருக்குது!! ஆச்சர்யமா இருக்குதே!!

Anonymous said...

அட! வடிகட்டலில் நம்ம அண்ணாச்சியோடதும் வந்திருக்கே!

அண்ணணுக்கும் வரவர பிரெயின் ஷார்ப்பாயிக்கினே வருது போல!

மூளைக்கறியெல்லாம் அவரே சாப்பிடுறாரில்லை! அதான்!

ஆமா! அதென்ன
//சென்னையில் இருந்து ஆவி அண்ணாச்சி//

ஊரு பேரையே மாத்திப்புட்டாங்களே!
சரி மாத்துனதுதான் மாத்தினீங்க!

கண்ணம்மா பேட்டையிலிருந்து ஆவி அண்ணாச்சி ன்னு போட்டிருந்தா ஒரு ஷோக்கா இருந்திருக்குமே!

Anonymous said...

பிக்ஸிங்க் முடிஞ்சுதுப்பா! எல்லாரும் கலைஞ்சி போயிட்டு அத்த்த தபா சொல்றப்போ வந்துக்குவீங்களாம்!

இந்த தபாவும் அதிர்ஷ்டக்காரருக்குத்தான்னு முடிவாகிப்போச்சாம்!

பின்னே இன்னாபா!
கருத்து ஒண்ணொண்ணும் சும்மா நச்சுன்னு புட்டு புட்டு வெச்சிருக்காரு!
அவருக்கில்லாமையா?

Anonymous said...

எனக்கென்னமோ மங்கி கேப் கான்செப்ட் வொர்க் அவுட் ஆயிடும்ணு தோணுது!

Anonymous said...

ஏன் இந்த வயத்தெரிச்சல் ?

We The People said...

வயத்தெரிச்சல் படுபவன்,

//ஏன் இந்த வயத்தெரிச்சல் ?//

இந்த கமெண்ட் யாருக்கு?? பலர் வந்து ஏதே தோ சொன்னாங்க தெளிவா சொல்லும் ஐயா?

Anonymous said...

அந்த பின்னூட்டம் ஆச்சர்யக்குறி போட்டு வயறு எரிந்தவருக்கு. !!!!!

Anonymous said...

மை டாடி ஈஸ் நான் இன் குதிரு....
இதுக்கு பேருதான் நான் போட்ட புதிரு..

நெஞ்சில தில்லிருந்தா நின்னு பாரு எதிரே !!
நெற்றிக்கண்ணு தொறந்தாலும் நீர் செஞ்சது தவறே !!!

சென்ஷி said...

please inform who is the winner?

senshe.

Anonymous said...

மண்டபத்திலே யாரோ எழுதிக் கொடுத்த கமெண்ட்டை எடுத்திட்டு வந்து இங்கே போட்டிருக்கேனே. ஆறுதல் பரிசாவது உண்டா? எப்போதான் அறிவிப்பீங்க?

We The People said...

//அந்த பின்னூட்டம் ஆச்சர்யக்குறி போட்டு வயறு எரிந்தவருக்கு. !!!!! //

எங்க பார்த்தாலும் ஆச்சர்யக்குறி இருக்கே?? கரீட்டா சொல்லுபா??

லக்கிலுக் said...

தடாலடி வெறியர் மன்றத்தின் சார்பில் தடாலடியாருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Anonymous said...

என்னங்க இது? சங்கத்து கவிதைப் போட்டில கூட ரிசல்ட் வந்துடும் போல இருக்கு! ஆனா தேறாது போல இருக்கே!

துளசி கோபால் said...

கெளதம்,

இது போட்டிக்கு இல்லை.

இந்தக் குரங்கும், அதன் சொந்தக்காரரும்
மகாபலிபுரத்தில் இருக்காங்களா?

G Gowtham said...

இறுதிவரை ஓட்டத்துக்கு வந்திருக்கும் பளிச் கமெண்ட்ஸ் இதோ.. முதல் பரிசுக்குரிய ஏதோ ஒன்று இதில்தான் இருக்கிறது! முதலில் குங்குமத்தில் பிரசுரித்து விட்டு அப்புறம் இங்கே சொல்கிறேனே!
-----------------------------------
"குரங்குமனசுன்னு சொல்றவன்லாம்
குரங்குக்கும் மனசு இருக்குன்னு நெனப்பானா?"
- பெங்களூரில் இருந்து 'இராகவன் என்ற சரவணன் மு.சரவணன்
-----------------------------------அதான் சென்னையில தண்ணி கஷ்டம் இல்லயே..இந்த ஆள் தலை குளிச்சா என்னவாம்..?!!!
-சென்னையில் இருந்து சந்தனமுல்லை
-----------------------------------
"திரும்பவும் (இ)லங்கைக்கு அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த சொல்லுவாங்களோ?!"
- தாய்லாந்தில் இருந்து மாயவரத்தான்...
-----------------------------------
எங்க முதலாளி தான் ஒரிஜினல் கம்யூனிஸ்ட்...
வேலைக்காரனை கூட தோளில்‌ தூக்கிட்டுப் போறார் பாருங்க‌
-சென்னையில் இருந்து லக்கிலுக்
-----------------------------------
இன்னைக்கு விஜய் பாட்டுக்கு டேன்ஸ் ஆடணுமாம். எனக்கு அஜித் தான் புடிக்கும். நம்ம விருப்பத்தை எவன் கேட்குறான்? ஆடுறா ராமான்னா ஆடிட்டு போவ வேண்டியது தான்.
-சென்னையில் இருந்து லக்கிலுக்
-----------------------------------
என்னிய ஏன்டா இம்புட்டு அழகா படச்சே ஆஞ்சனேயா....
-சென்னையில்(?!) இருந்து திருமால்
-----------------------------------
கெட்டதை பார்க்காதே!
கெட்டதை கேட்காதே!
கெட்டதை செய்யாதேன்னு சொல்லி சொல்லி, இப்ப எது நல்லது, எது கெட்டதுன்னுனே புரியாத மாதிரி பண்ணிட்டாங்களே நம்மள??!!
-சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்.
-----------------------------------
மேலே குறிப்பிடப்பட்டவையில் பரிசுக்குரிய அந்த ஒன்றைத் தவிர மற்றவை குங்குமத்தில் பிரசுரமாகத் தேர்வாகியுள்ள ஆறுதல் பரிசுக்குரியவை. அடுத்த கட்டமாக (ஆறுதல் பரிசு: பார்ட் டூ!!) லே அவுட் செய்யும்போது இடம் கிடைத்தால் பிரசுரிக்கத் தேர்வாகியுள்ள கமெண்ட்ஸ் இனி..
-----------------------------------
ஏன்டா ஒரு நாளாவது ஷேம்பூ போட்டு குளிடானா கேக்கறயா?
கப்பு தாங்க முடியலைடா...
-பாஸ்டனிலிருந்து பாலாஜி :-)
-----------------------------------
சலங்கையும் சுமந்து
கனக்கிறது என் கழுத்து!
வாயிருந்தும்
வார்த்தைகள் வராமல்
ஊமையான மனமொன்று
உள்ளிருந்து அழுவது
உன் காதில் விழுகிறதா...?
-பிரான்சிலிருந்து "சத்தியா"
-----------------------------------
கொள்ளுத்தாத்தான்னு கொஞ்சமாவது மரியாதை இருக்குதா? சங்கிலியிலே கட்டி வச்சிருக்கான் பாரு!
-துபாயிலிருந்து பினாத்தல் சுரேஷ்
----------------------------------
அட, கன்ப்யூஸ் பண்ற மாதிரி, என் நெத்தில பட்டைய குறுக்கவும் போட்டான், நெடுக்கவும் போட்டான், என்னை முறைச்சுப் பார்த்தா?
-சென்னையில் இருந்து ஜெய.சந்திரசேகரன்
-----------------------------------
சும்மாவா சுமக்கிறான்?
முப்பாட்டனில்லே....!
-சென்னையிலிருந்து சிவஞானம்ஜி
-----------------------------------
"ம்... அருணாச்சலத்துலே தலைவர் நடிக்க வெச்சாரு. சிவாஜியிலும் நம்பளுக்கு ஒரு சான்ஸ் கொடுப்பாரா?"
-சென்னையில் இருந்து லக்கிலுக்
-----------------------------------
மழைக்காலம் ஆரம்பமாயிடுச்சி. எனக்கு ஒரு மங்கி கேப் வாங்கித் தரக்கூடாதா?
-சென்னையில் இருந்து லக்கிலுக்
-----------------------------------
மனசு மந்திய சுமந்தா
தப்பா பேசுது நாக்கு.
உடம்புல உன்னய தூக்க...
மாருதின்னு சொல்லுது ஊரு..
-டெல்லியிருந்து சென்ஷி
-----------------------------------
ஈவ் டீசிங் செய்ய மாட்டோம்
கொலை பண்ண மாட்டோம்.
கொள்ளையடிக்க மாட்டோம்
அடுத்தவன வாழ்க்கைய கெடுக்க மாட்டோம்
இப்டி எவ்ளோ நல்லவங்களா இருக்கற
எங்கள போயி மனசங்க கூட ஒப்பிட்டு
குரங்கு மனசுனு சொல்றாங்களே நியாயமா?
சே மனுசங்கள பாக்கவே பிடிக்கலப்பா. :(
-கோவையில் இருந்து அனுசுயா
-----------------------------------
என்னய தூக்கி தோள்ள வச்சு, உன் ஈர மனச நீ காட்டுற..
உன் சட்டய நனைய வச்சு, என் ஈரத்த நான் காட்டுறேன்..
-சென்னையில்(?!) இருந்து திருமால்
-----------------------------------
சிறில் அலெக்ஸ் said...
"இந்த ஆளுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன்?
கழுத்துல சங்கிலி, சலங்கைன்னு வெறும் நகநட்டு மட்டுந்தேன்."
-சிக்காகோவிலிருந்து சிறில் அலெக்ஸ்
-----------------------------------
ஊர்/நாடு பெயர் தவறாக இருந்தால் உடனடியாக தகவல் தரவும். பிரசுரத்துக்குப் போகுமுன் திருத்திக்கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!

லக்கிலுக் said...

//இந்தக் குரங்கும், அதன் சொந்தக்காரரும்
மகாபலிபுரத்தில் இருக்காங்களா?//

ஆமாம் அக்கா. நீங்கள் இவர்களை நேரில் பார்த்திருக்கிறீர்களா?

இந்தப் படம் ஆகஸ்டு 1, 1992 அன்று லிண்ட்ஸே ஹெப்பர்டு என்ற புகைப்பட நிபுணரால் எடுக்கப்பட்டது.

15 வருடங்கள் கழித்தும் இவர்களை அங்கே சந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.....

லக்கிலுக் said...

ஹைய்யா... மறுபடியும் உள்ளே வந்துட்டேனே....

விஷ்... விஷ்....

என் வழி... தடாலடி வழி....

We The People said...

என்னுடையதுமா??!! என் கண்ணை என்னால நம்ப முடியவில்லை :O

இன்னாபா இது ஆச்சர்யமா இருக்கு?! நமக்கு கூட திங்கிங் பவர் இக்கீதா?? மக்கா உடாதே அமுத்தி புடி!!!

Raghavan alias Saravanan M said...

நன்றி கெளதம்..

இப்பொழுது தான் என்னுடைய பதிவும் தேர்வு பெற்றிருப்பதைப் பார்த்தேன்.. இதுவே நான் முதல் முறை கலந்துகொண்டது என்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது..

என் பெயரில் Copy-ப் பிழை இருக்கிறது! திருத்தி விடுங்களேன் ப்ளீஸ்...

நன்றி...
பெங்களூரில் இருந்து 'இராகவன் என்ற சரவணன் மு'.

மாயவரத்தான் said...

அடடடடடா.. சஸ்பென்ஸ் தாங்க முடியலப்பா சாமி.

We The People said...

நன்றி கெளதம் இதை சொல்ல மறந்துட்டனே!!

RBGR said...

ஒரு குரங்காக இருந்து சிந்தித்து வெல்ல முடியவில்லை எனில், இன்னும் நான் குரங்காகவே தகுதியில்லாதவானா?( அல்லது தகுதியில்லாததா?)

:) :) :)

வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

சத்தியா said...

என்னுடைய சிந்தனையும் கூட தெரிவாகி இருப்பதில் ஓர் மகிழ்ச்சி. ஆனால் தெரிவு செய்யப்பட்டபோது நான் எழுதியதிலிருந்து ஓர் சொல் விடுபட்டிருக்கின்றது. ஆகவே அதை மீண்டும் முழுமையாகத் தருகின்றேன்.

சங்கிலியும்
சலங்கையும் சுமந்து
கனக்கிறது என் கழுத்து!

வாயிருந்தும்
வார்த்தைகள் வராமல்
ஊமையான மனமொன்று
உள்ளிருந்து அழுவது
உன் காதில் விழுகிறதா...?

RBGR said...

கெளதம்ஜி.
இது சரியான்னு பாருங்க!

" கடவுள் பாதி மிருகம் பாதி!
கலந்து செய்த கலவை நான்!!"

:)

We The People said...

TAMIZI லேட்டா திங்க் பண்ணி வேஸ்ட் பண்ணிட்டயேமா??!

RBGR said...

என்னாங்க பண்றது குரங்கு புத்தி பின் புத்தியோ!

---அய்யா எனக்கு பரிசு வேண்டாம். :))

We The People said...

//---அய்யா எனக்கு பரிசு வேண்டாம். :))//

இதை சொல்லியே போனதபா பரிசை தட்டிக்கிட்டீரு!! இப்பவும் அதே டெக்னாலஜியா... நாங்க ஒத்துக்கமாட்டோம்.. ஹீ! ஹீ!!

Anonymous said...

மொத்தம் தெரிவு செய்யப்பட்டவை 18.
தெரிவு செய்யப்பட்ட கமெண்டுகளை எழுதியவர்களின் எண்ணிக்கை 14.

ஆண்கள் 11
பெண்கள் 3

பெண்களுக்கான ஒதுக்கீடு 21.5 %

மீதி 11.5% என்ன ஆயிற்று என்று கவுதம் விளக்குவாரா?

G Gowtham said...

ஆஹா! விஜயகாந்திடோய்!

Anonymous said...

//ஆஹா! விஜயகாந்திடோய்!//

இப்படி நகைச்சுவையாக மழுப்பி விட்டால் நாங்கள் விட்டுவிடுவோமா என்ன?

பதில் வந்தாக வேண்டும்.

- வைஜயந்தி ஐ.பி.எஸ்

We The People said...

//பெண்களுக்கான ஒதுக்கீடு 21.5 %
மீதி 11.5% என்ன ஆயிற்று என்று கவுதம் விளக்குவாரா?//

லல்லுவை கூப்பிட்டு பெண்ணுரிமை வாதியை ரவுண்டு கட்டுங்கபா!!!

siva gnanamji(#18100882083107547329) said...

ஆ!ஆ! எந்த தியேட்டர்? என்ன படம்?

லக்கிக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!

Anonymous said...

அப்போ எங்களுக்கு?

நாமக்கல் சிபி said...

சரி போட்டி முடிஞ்சிடுச்சி...
இருந்தாலும் ஒண்ணு...

இந்த படத்தை பாக்கறவங்க இவர்தான் நம்மல சுமக்கறாருன்னு நினைச்சிக்குவாங்க :-(

துளசி கோபால் said...

அட! அப்ப இது நம்ம குரங்கு:-))))

12/6/1994 லே மகாபலிபுரம் போயிருந்தப்ப இவரையும் இந்தக் குரங்காரையும்
வீடியோ எடுத்துருக்கோம். மகளுக்கும், எனக்கும் மிருகங்கள்ன்னாவே ரொம்பப்
பிரியம். அதுலெயும் நானாவது புது மிருகமுன்னா கொஞ்சம் பயப்படுவேன்( வளந்தவிதம்)

ஆனால் மகளுக்குப் பயமே கிடையாது. மலைப்பாம்பையெல்லாம் தோளுலே
போட்டுப் போட்டோ எடுத்துக்கிட்டு இருக்காள்.( அடுத்த போட்டுக்கு வேணுமுன்னா
அந்தப் படம் உங்களுக்கு அனுப்பவா?)

மகள், குரங்குக்குக் காசு நீட்டுனவுடன் அது அவள் காலைப் புடிச்சுக்கிட்டுச்
சரசரன்னு ஏறி அவள் கையிலே உக்கார்ந்துக்கிச்சு. நானும் அதோட தலையைத்
தடவிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன்( எனக்கு என் பூனை ஞாபகம்) இது எல்லாமே
வீடியோவில் பதிவாகி இருக்கு.

லக்கிலுக் said...

//துளசி கோபால் said...
அட! அப்ப இது நம்ம குரங்கு:-))))//

இந்தப் பதிவாலே பல விஷயங்கள் வெளிவரும் போல இருக்கே? :-)))))))

மாயவரத்தான் said...

//sivagnanamji(#16342789) said...
ஆ!ஆ! எந்த தியேட்டர்? என்ன படம்?

லக்கிக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!
//

ஆஹா.. இது என்னவோ கள்ள ஓட்டு சதி மாதிரி தெரியுது.

ரிசல்ட் வர்றதுக்குள்ளேயே பாராட்டா?!

மாயவரத்தான் said...

//இந்தப் படம் ஆகஸ்டு 1, 1992 அன்று லிண்ட்ஸே ஹெப்பர்டு என்ற புகைப்பட நிபுணரால் எடுக்கப்பட்டது.//

இந்த மேட்டரெல்லாம் எங்கே புடிச்சீரு லக்கியாரே?

ம்.. சொன்னா மாதிரி இந்த புகைப்பட ரிஷி மூலத்தை விசாரணை பண்ணினா பல விஷயங்கள் வெளி வரும் போலருக்கே!

மாயவரத்தான் said...

கெளதம்ஜி.. என்னோட காதிலே மட்டும் சொல்லுங்க சார்.. முதல் பரிசு பெற்ற கமெண்ட் எது?!

G Gowtham said...

குருட்டாம்போக்கில் சர்ச் என்ஞினில் தேடி எடுத்த ஒரு புகைப்படத்தையொட்டி அழகாக நிஜமான புள்ளிவிவரங்கள் தருகிறீர்களே! வலையுலகம் மறுபடியும் ஒருமுறை என்னை பிரமிக்க வைக்கிறது!!

Anonymous said...

//வாழும் அழுகை said... //

எண்ணத்தின் வெளிப்பாடு பெயர்களில்.
எண்ணத்தின் விருப்பம் பெயர்களில்.

எதை நீ விரும்புகிறாயோ உன் எண்ணத்தின் வலிமை அதை உமக்குக் கொடுக்கும்.

மாயவரத்தான் said...

//அழகாக நிஜமான புள்ளிவிவரங்கள் //

அழகாக.. ஓ.கே.. அது நிஜம் தானா?!

Anonymous said...

Are the comments published? Which date issue? Pls keep us informed thru this gpost :-)

G Gowtham said...

//மாயவரத்தான்... said...
கெளதம்ஜி.. என்னோட காதிலே மட்டும் சொல்லுங்க சார்.. முதல் பரிசு பெற்ற கமெண்ட் எது?!//

இதோ எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன்..
முதல் பரிசுக்குரிய இரண்டு கமெண்ட்டுகள்..

1."இன்னைக்கு விஜய் பாட்டுக்கு டேன்ஸ் ஆடணுமாம். எனக்கு அஜித் தான் புடிக்கும். நம்ம விருப்பத்தை எவன் கேட்குறான்? ஆடுறா ராமான்னா ஆடிட்டு போவ வேண்டியதுதான்."
-சென்னையில் இருந்து லக்கிலுக்

2."என்னிய ஏன்டா இம்புட்டு அழகா படச்சே ஆஞ்சனேயா...."
-ராஜபாளையத்தில் இருந்து திருமால்

இரு பளிச் கமெண்ட்டுகளும் வரும் வார குங்குமத்தில் வெளிவருகிறது. குங்குமம் நிர்வாக இயக்குநர் திரு.கலாநிதி மாறன் அவர்கள் கையொப்பம் இட்ட சிறிய சன்மானக் காசோலை பரிசாக வீடு தேடி வரும்!

தவிர, ஆறுதல் பரிசாக இதழில் பிரசுரமாகும் கமெண்ட்டுகளுக்குச் சொந்தக்காரர்கள்..
பெங்களூரில் இருந்து இராகவன் என்ற சரவணன்.மு, ஃபிரான்சிலிருந்து சத்தியா,
சென்னையில் இருந்து சந்தனமுல்லை, சென்னையிலிருந்து சிவஞானம்ஜி, மயிலாடுதுறையிலிருந்து மாயவரத்தான், சென்னையில் இருந்து லக்கிலுக், சென்னையில் இருந்து நா.ஜெயசங்கர், பாஸ்டனில் இருந்து பாலாஜி, துபாயில் இருந்து பினாத்தல் சுரேஷ், சென்னையில் இருந்து ஜெய.சந்திரசேகரன், கோவையில் இருந்து அனுசுயா, ராஜபாளைத்தில் இருந்து திருமால், சிக்காகோவில் இருந்து சிரில் அலெக்ஸ்.

நன்றி நண்பர்களே நன்றி!

G Gowtham said...

ராஜபாளையத்தில் இருக்கும் திருமலை அவர்கள் தங்கள் முகவரியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

siva gnanamji(#18100882083107547329) said...

முதற்பரிசு பெறும் லக்கிலுக்& திருமலை மற்றும் நண்பர்களுக்கு
வாழ்த்து(க்)கள்!

லக்கியாரே
பரிசு இங்கே...
பார்ட்டி எங்கே?

அனுசுயா said...

ஆறுதல் பரிசு கிடைச்சுடுச்சு :))))

நன்றி ! நன்றி !

சத்தியா said...

எனக்கும் ஆறுதல் பரிசு கிடைச்சிருக்கு.

நன்றி Gowtham.

லக்கிலுக் said...

nandri nandri nandri

Anonymous said...

கெளதம், ஆறுதல் பரிசு கிடைத்ததே பெரிய ஆறுதல் :-)நன்றி, குங்குமம் ஆசிரியர், மற்றும் குழுவினர்களே!

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வணக்கத்துடன்
ஜெய.சந்திரசேகரன்

Raghavan alias Saravanan M said...

நன்றி கெளதம் மற்றும் குங்குமம் ஆசிரியர் & நிர்வாகத்தினருக்கு.....

இது எந்த இதழில் வெளிவருகிறது..? ஆறுதல் பரிசு என்ன??

குங்குமம் இதழின் கடைசிப் பக்கத்தில் வரும் தங்களுடைய படைப்புக்கள் மிகவும் அருமையாக, சிந்திக்க வைக்கும் விதமாக இருக்கின்றன.. நாங்கள் இங்கே வலைப்பூவிலேயே படித்துவிடுவதால் சற்று சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது! ;-)

G Gowtham said...

இராகவன் (எ) சரவணன்,
குங்குமத்தில் பிரசுரமாகி ஒரு வாரமாவது ஆனபிறகே இங்கே பதிவு செய்கிறேன். ஆதலால் ஒரு வாரம் முன்னதாகவே படிக்க வேண்டுமானால் குங்குமம் வாங்கிப் படியுங்கள்.. (விளம்பரம்?!) ஹி ஹி!

ப்ரியன் said...

கடவுளே அடுத்த பிறவில இவன் குரங்கா பிறக்கனும் நான் மனுசனா பொறக்கணும்.

சென்னையிலிருந்தி ப்ரியன்

ப்ரியன் said...

கடவுளே அடுத்த பிறவில இவன் குரங்கா பிறக்கனும் நான் மனுசனா பொறக்கணும்.

சென்னையிலிருந்தி ப்ரியன்

ப்ரியன் said...

குரங்கிலிருந்து மனிதன் வந்தான்னு சொல்றாங்க!ஒருவேளை நானும் மனிசனாயிடுவேனோ?கடவுளே அந்த தண்டனை மட்டும் எனக்கு வேண்டாம்.

சென்னையிலிருந்து ப்ரியன்

ப்ரியன் said...

அணிலுக்கு கோடு போட்ட இராமன் ஏன் உசிரையே கொடுத்த எனக்கு மட்டும் ஏதும் தராம விட்டான்?

சென்னையிலிருந்து ப்ரியன்

ப்ரியன் said...

அந்த குச்சியை பாத்தாதான் ஆடணும்னு தோணுது.இவன் தூங்குற நேரமா பார்த்து குச்சியை ஒளிச்சு வெச்சிடணும்

சென்னையிலிருந்து ப்ரியன்

ப்ரியன் said...

நான் என்ன யோசிச்சிருப்பேன்னு கரெக்டா யோசிச்சு பின்னூட்டம் போடுறானுங்களே?ஒருவேளை இவனுங்க போன ஜென்மத்துல குரங்கா பொறந்திருப்பானுங்களோ?

சென்னையிலிருந்து ப்ரியன்

ப்ரியன் said...

இப்போ இவன் பாசியை சுட்டா கண்டுபிடிச்சுடுவானா?

*

இவன் சோத்துக்கும் நான் சேத்து ரோடு ரோடா ஆடுறேன்.

*

சென்னையிலிருந்து ப்ரியன்

Raghavan alias Saravanan M said...

நன்றி கெளதம்..

குங்குமம் பார்க்க... குங்குமம் படிக்க.... (ச்சும்மா நீங்க விளம்பரம்னு தட்டச்சுன ஒடனே ஞாபகம் வந்ததுங்கோ)..

சரி.. நம்ம குரங்கார் எந்த இதழில் வர்றாருங்கோ...?

G Gowtham said...

//இராகவன் (எ) சரவணன் said...
சரி.. நம்ம குரங்கார் எந்த இதழில் வர்றாருங்கோ...?//
வந்துட்டாருங்கோ.. கடைல தொங்கிட்டிருக்காரு!

அப்றம்.. உங்க முகவரி அனுப்பி வைங்க. செக் அனுப்பனும்.

Raghavan alias Saravanan M said...

நன்றி கெளதம்...

இதோ அனுப்புகிறேன்..

Raghavan alias Saravanan M said...

கெளதம்... முகவரியை அனுப்பும் முகவரி?

உங்கள் மின்னஞ்சல் முகவரி உங்கள் Profile-ல் இல்லையே? எப்படி அனுப்புவது?

G Gowtham said...

//முகவரியை அனுப்பும் முகவரி? //
editorgowtham@gmail.com

Anonymous said...

என்னை வைத்து இவன் காட்டினான் வித்தை!..

அதனால் நான் ஆகவில்லை சொத்தை!..

இவன் தோள்களே ஆகியது எனக்கு மெத்தை!..

இது எப்டி யிருக்கு

We The People said...

////இராகவன் (எ) சரவணன் said...
சரி.. நம்ம குரங்கார் எந்த இதழில் வர்றாருங்கோ...?//
வந்துட்டாருங்கோ.. கடைல தொங்கிட்டிருக்காரு!

அப்றம்.. உங்க முகவரி அனுப்பி வைங்க. செக் அனுப்பனும்.////

அப்போ எனக்கு செக் இல்லையா? :(

சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

G Gowtham said...

இந்த தடவை இல்லேன்னாலும் அடுத்த (இல்லேன்னா அதற்கடுத்த!) போட்டியில முதல் பரிசு வாங்காமலா போயிடுவாரு நம்ம இராகவன் (எ) சரவணன்! அந்த தொலை நோக்கத்துலதான் அவரோட அட்ரஸ் கேட்டேன். மத்தபடி ஆறுதல் பரிசு வாங்கினவங்களுக்கு செக் இல்லே. ஹிஹிஹி!

ஒரு வழியா ஸ்லிப் ஆஃப் தி ஃபிங்கை சமாளிச்சுட்டேன்னு நினைக்குறேன்!!
தனி மடலில் சுட்டிக்காட்டிய ஐயா சிவஞானம்ஜி, மற்றும் அப்பாவியாக சுட்டிக்காட்டிய நா.ஜெயசங்கர் இருவருக்கும் நன்றி.

இராகவன் (எ) சரவணனுக்கு ஒரு கோரிக்கை.
என்னோட சமாளிஃபிகேஷனுக்காகவாவது வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் தடாலடிப்போட்டியில் ஜெயிச்சு, என் மானத்தைக் காப்பாத்துங்க! :-(
தொந்தரவுக்கு மன்னிக்கணும்..

We The People said...

//அப்பாவியாக சுட்டிக்காட்டிய நா.ஜெயசங்கர் இருவருக்கும் நன்றி.//

அனாலும் நீங்க ரொம்ப உஷாரு தான் ;)

சமாளிஃபிகேஷன் ஓ.கே தான் சூப்பரா இல்லை :) இதுக்கு ஒரு போட்டி வைத்துவிடுங்க தடாலடியாய ;) என்ன நம்ம ஐடியா ஓ.கே வா?? அடுத்த தடவை யூஸ் பண்ணறதுக்கு ஏதுவா இருக்கும் :)))))