Wednesday, November 08, 2006
Thaடாlaடி போட்டி!
யார் சொன்னது நம்ம 'தடாலடி போட்டி'ன்னா அது வெள்ளிக்கிழமைதான் இருக்கும்னு?!
இங்கே சென்னையில் மழை. அதான் டாபிகலா போட்டியப் போட்டுரலாம்னு முடிவு பண்ணிட்டேன். தோ.. வந்துட்டேன்!
என்னை வெளியே போகவிடாமல் இருக்கையிலேயே கட்டிப்போட்டிருக்கும் சென்னை மழை எப்ப முடியும்னு தெரியல. நீங்க 'மழை' என்று முடியும்படியாக எதையாவது எழுதுங்கள். அது கவிதை, குட்டிக்கதை, ஜோக்கு, கடி, கமெண்ட்.. எதுவா வேணும்னாலும் இருக்கலாம்.
ஆனா என் பரிசு ரெண்டு பேருக்கு மட்டுமே. என்ன பரிசுன்னு இப்ப முடிவு பண்ணல. (நிச்சயமா குடை இல்லிங்கோ) போட்டிக்கான அவகாச நேரம் 8.11.2006 இந்திய நேரப்படி மாலை 5 மணி வரை. அதுக்குள்ள என்ன பரிசுங்குற முடிவோட வந்துடறேன் வலை மக்களே!
போட்டி முடிவுகள்: இங்கே!
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
வானுயர் கட்டிடங்களுக்கான இலவச வாட்டர் வாஷ்
வானுயர் கட்டிடங்களுக்கான இலவச வாட்டர் வாஷ் - மழை
கடவுளின் அழுகை - மழை
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம் செய்ததால்
வந்தது மழை :-)
ஜி போஸ்டில் வந்தது
என் இல்லம் தேடி
மாலை நேரத்தில்
ஒரு மழை!
ஈரெழுத்துக் கவிதை
"மழை"
கௌதமின் தடாலடிப்போட்டியின் பின்னூட்டங்களைவிடக் குறைவாகத்தான் பெய்கிறது - மழை
அங்கு, அவள் ஊதிவிட்ட மேகம்தான்
இங்கு மழையாய்ப் பொழிகிறதா?
என்னை இப்படி நனைக்கிறதே மழை!
துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை.
காரணம் இல்லாம இதை எழுதலைங்க, அர்த்தம் புரிஞ்சவங்களே இதைச் சொல்லுவாங்க.
"எத்தினி வாட்டி சொன்னேன். கேட்டியா? இப்போ பாரு என்னாச்சின்னு"
"நான் எப்பவோ பண்ணுனதுக்கு இப்போ ஏம்மா திட்டுறே"
"எப்பவோ பண்ணாலும் அவஸ்தை இப்போ தானேடி"
"அம்மா... ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்க... நான் செஞ்சது தப்பு தான்"
"இதே தப்பை உனக்கு பொறக்கப் போறதும் செஞ்சுத் தொலைக்கப் போவுது... கவனமா இரு"
"சரிம்மா"
"சனியனே.. எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன். அரிசி தின்னாதே... அரிசி தின்னாதேன்னு... இப்போ பாரு தாலி கட்டுற நேரத்துக்கு கூட மாப்பிள்ளை வீட்டுக் காரங்க வர முடியலை"
---- வெளியே செம மழை.....
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு
துப்பாய தூவும் மழை
:)
சென்னையில் எப்போழுதாவது பெய்யும் மழை
உன்வீடு போனாலென்ன
என்வீடு போனாலென்ன
மழைநீருக்கோ இடம் வேண்டும்!
அடித்த பண மழையில்
ஏரி, குளங்களெல்லாம்
குடியிருப்பானது!
இப்போது குடியிருப்புகளெல்லாம்
குளங்களாகிவிட்டன
அவ்வப்போது அடிக்கும் மழையால்!
பதிலுக்குப் பதில்
உனக்கு மட்டும்தான் தெரியுமா?
இல்லை-
இயற்கைக்கும் அது தெரியும்!
என் வீட்டு திண்ணையில்
தொப்பலாய் நனைந்துவிட்ட
என் காதலி,
ஒதுங்கியிருக்கிறாள்
மழைக்காகவும்.
என் ஜன்னல் பார்த்து
சிரித்துவைத்தாள்,
சாரலடித்தும் மூட
முடியவில்லை
என் ஜன்னலையும், கண்ணையும்.
தினமும், நிதமும் இப்படி பெய்துகொண்டே
இருக்க வேண்டும்
மழை!
(வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதியது எனினும் இங்கே பொருத்தமாக இருப்பதால் இதோ)
மேகப்படைகளின் மோதலில்
சிதறிய ரத்தத் துளிகள்
-மழை
வராமல் கொல்கிறது...
வந்தும் கொல்கிறது...
-மழை
'ஷாட்டுக்கு நேரமாச்சு எங்கய்யா அந்த வாட்டர் சர்வீஸ் காரன்?'
டைரக்டர் டென்ஷனில் கத்திக் கொண்டிருந்தார்.இன்று ஹீரோவும் ,ஹீரோயினும் மழையில் நனைந்து ஆடிப்பாடும் காட்சி எடுக்க வேண்டும்.
கேட்டது கிடைக்க வில்லையெனில் டைரக்டர் அன்று பேட்டாவை கட் பண்ணச் சொல்லி விடுவார் அஸிஸ்டண்ட் டைரக்டர்கள் அங்குமிங்கும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தனர்.
'ஹெராயின்' மன்னிக்க ஹீரோயின் மமீதா எப்படா மழை பெய்யும்..எப்படா ஒல்லியான ஹீரோவுடன் டான்ஸ் போடலாமென யோசித்துக் கொண்டிருந்தார்.
ஹீரோக்கு மட்டுமென்ன சந்தோமில்லாமல் இருக்குமா?, மமீதா கூட நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் வாழ்க்கை லட்சியம் என்று
கடந்த வார 'குங்குமத்தில்' பேட்டி வேறு கொடுத்திருந்தார்.
நடக்கும் எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது மழை.சரி எல்லாருடைய ஆசையயையும் பூர்த்தி செய்து விடலாம் என எண்ணி சொரேலென பெய்ய
ஆரம்பித்தது .
'சே சனியன் மழை.. இப்படி ஷீட்டிங் நடத்த விடாம கெடுத்து விட்டதே மழை என டைரக்டட் பேக் அப் சொல்ல..சரியாக அந்த சமயம் வந்து சேர்ந்த வாட்டர் சர்வீஸ் காரன் தன் பொழைப்பு நாறியதற்காக மழையை திட்ட..அஸிஸ்டண்ட் டைரக்டர்கள் தங்கள் பேட்டா போய் விட்டதே என மழையை சபிக்க ..வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது மழை.
இரவில் மின்சாரம் தடைபடும்
கொசுக்கள் காதுகளில் ரீங்காரமிடும்
தவளைகள் பாம்புகளை வம்புக்கிழுக்கும்
குழந்தைகள் அழுகுரல் ஓயாது ஒலிக்கும்
தூங்கிப் போன பின்னரவில்
திடீரென வரும் மின்சாரம்
முழிப்பு தட்டிய நிமிடங்களில்
நீர்ச் சொட்டும் ஜன்னல்களின் வழியே
தெருவை பார்க்கும் போது
யாருமில்லாமம் தனியே பெய்துக் கொண்டிருக்கும் மழை
மழைக்கு எனக்கும் மட்டும் தெரிந்த ரகசியம்:
பெருமழைக் காலங்களில்
உன் வீட்டு வாசலிலமர்ந்து
நீ விடும் காகித கப்பல்களை
என் வீட்டு வாசலை கடக்கும்
போது நான் கவர்ந்து விடுவேன்
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
அந்தக் கப்பல்கள் ஒரு போதும்
என் வீட்டைத் தாண்டிப்
போனதில்லை என்று
அது எனக்கும் மழைக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம்.
மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வதென்?
மையார் இருங்கூந்தல் பைந்தொடி ! எக்காலும்
செய்யார் எனினும் தமர்செய்வர் 'பெய்யுமாம்
பெய்யா தெனினும் மழை'.
அரசியல் வானில் "சோ"வென மழை !
அடைமழைக்காக அவளருகே நான்
என் குடைக்குள் மழை!
எல்லா சேனல்களிலும் ரமண மழை!
வறட்சி! பசி! சுனாமி! மழை!
நனையாத சூரியன் !!
நல்லவரா! கெட்டவரா? இந்த மழை!?
தடாலடி
போட்டியில்
வெற்றிபெற
ஒரே
ஔஐஸ்
மழை..!!
தடாலடி போட்டியில்
வெற்றிபெற
ஒரே
ஐஸ்
மழை..!
ennai kavarwdha varigaL
mukilinanggaL alaiwdhanavee
mugavarigaL tholaiwdhadhuvoo
mugavarigaL tholaiwdhadhanaal
azhudhidudhee adhu mazhai...
குடையுடன் அவள்
குடையில்லாமல் நான்
வருவாயா மழையே!
boss enna achu results
மாரி மாரி
அடிக்குது மாரி
இன்னிக்காவது குளிடா
சோமாரி
(குறிப்பு : மாரி என்றாலும் மழை என்றே பொருள். மாரி என இந்த மரபுக் கவிதையை முடித்திருப்பதால் இதையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்)
நீரின்றி அமையாது வாழ்க்கை - தடாலடியாரே
நீரின்றி பொழியாது பரிசுமழை ;-)
கருப்போ
சிவப்போ
குண்டோ
ஒல்லியோ
படித்தவனோ
பாமரனோ
இந்துவோ
இஸ்லாமியனோ
ஏழையோ
ஏலியனோ
மரமோ
மதில்சுவரோ
குடிசையோ
கோபுரமோ
குங்குமமோ
குமுதமோ
சதாம் உசேனோ
சங்கராச்சாரியாரோ
இந்தியாவோ
இலங்கையோ
இத்துப்போனவனுக்கும்
இடிஅமீனுக்கும் கூட பொதுவாக
பெய்யெனப் பெய்யுமாம்
பேய் மழை.
இன்னும் 48 மணி நேரத்துக்கு மழை பொழியும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்திருப்பதால் வாய்ப்பை பயன்படுத்தி வலைப்பதிவாளர் அனைவரும் இந்த சந்தர்ப்பத்திலாவது குளித்தும் சுத்தபத்தமாக இருக்குமாறு லக்கிலுக் மழைநீர் சேகரிப்பு பாசறையின் சார்பில் வேண்டி, விரும்பி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். வாய்ப்பைத் தவறவிடாதீர். மறந்தும் இருந்து விடாதீர்.
மழை.... மழை....
மிஸ் செய்தால்
மீண்டும் வராது
மழை... மழை...
தூறல்களால்கூடத்
துரத்தப்படாதவள்
முதிர்கன்னி.
*********
ஷைலஜா
மழைக்கு ஒதுங்கியவர்கள்
********************ஷைலஜா*************
'நாளைக்குப் புள்ளைங்கள
பள்ளிக்கூடம் அனுப்போணும்'
எண்ணுகிறாள்
ஏழைத்தாய் ஒருத்தி
மழைவெள்ளம்புகுந்த
குடிசையில்...
உலை பொங்கவே
உத்தரவாதமில்லாத நிலையில்
இலை போட்டுப்
பரிமாறியதுபோல்
இசைவாகவருகிறது
மழை!
கிளைகளுக்குமட்டுமே
தலைசீவி விட்டமழை
வேரோடு உறவாட
விரைந்தோடிவருகிறது!
வற்றிய ஆறெல்லாம்
வெறும் மணலான நிலைதன்னில்
பற்றிஅதன்மீதே
பரவசமாய்த்தழுவிக்
கொட்டிக்கொண்டிருக்கிறது
மழை!
ஷைலஜா
கலைஞரின் பொருமைக்கு(வெற்றிக்கு)
அம்மாவின் வாழ்த்துக்கள் (வயிற்றெரிச்சல்)
இந்த மழை...!.
நீ நகர்ந்த பின்னும் நீங்காத
உன் வாசம் போல்
மேகம் நகர்ந்த பின்னும் மரத்தடியில்
பெய்கிறது மழை
பல நாட்களுக்கு பின்
உன்னை நான் பார்த்த போது
விண்ணிலும் என்
கண்ணிலும் மழை
கொடுக்கும் மழை
கெடுக்கும் மழை
ஆக்கும் மழை
அழிக்கும் மழை
விடுக்கும் மழை
தடுக்கும் மழை
ஆதாரம் மழை
சேதாரம் மழை
மொத்தத்தில்-
நன்மையும் மழை
தீமையும் மழை
சான்சே இல்லை! லக்கி UR லக்கி
நீரின்றி அமையாது வாழ்க்கை - தடாலடியாரே
நீரின்றி பொழியாது பரிசுமழை ;-)
டாபிக்கல் டைமிங்!
ஆண் - கோபம் - வெய்யில்
பெண் - அழுகை - மழை
சுட்டெரிக்கும் சூரியனையும்
மறைத்து குளிர வைக்கும் மழை
ஆம்
நீ பெண்ணாகத் தான் இருக்க வேண்டும்
ஏனெனில்
எல்லோருக்கும் பிடிக்கும் மழை
\ \ \ \ \ \ \
\ \ \ \ \ \ \ \
\ \ \ \ \ \ \ \
\ \ \ \ \ \ \ \ \
\ \ \ \ \ \ \ \ \ \ \
.................................................மழை.
பெய்யாமல் கொல்லும்;
பிறகு
பெய்தும் கொல்லும்...
மழை!
விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்
பெண்ணல்ல........
மழை!
மழை - ஓர் அனுபவம்!!!
விடிந்தும் விடியாத இன்றைய அதிகாலைப் பொழுது.
இரவு முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த என்னறை மின்விசிறி மெல்லத் தன் சுழற்சியை நிறுத்தியது.
எப்போதும் அதன் “விர்ர்ர்ர்ர்ர்ர்” சத்தத்திற்குப் பழகிப் போன என் தூக்கம் மெல்லக் கலைகிறது.
அணைத்துக் கொண்டு படுத்திருந்தக் காதலைக் கொஞ்சம் தள்ளி விட்டு போர்வையை விலக்கி பார்க்கிறேன்.
முழுவதுமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது மின்விசிறி.
எங்கும் மின்சாரம் இல்லாததால் ஒரு அசாதாரண அமைதி நிலவுகிறது.
அப்போது கொஞ்சம் கொஞ்சமாக காதுக்குள் ஒரு மெல்லிய இசை நுழையப் பார்க்கிறது.
“சில்…சில்…சில்…”
நானும், நன்றாக உற்றுக் கேட்கிறேன்.
ஒன்றும் பிடிபடவில்லை.
பிறகு,மெல்ல எழுந்து கதவைத் திறந்து பால்கனி செல்கிறேன்.
அங்கு,ஒரு குளிர்ச்சி உடல் முழுவதும் படர்கிறது.
வெளியே மழை!
அது, சட சட வெனப் பொழியும் பேய் மழையும் இல்லை.
இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் இல்லை.
காற்றோடு போராடி சுழன்றடிக்கும் புயல் மழையும் இல்லை.
எங்கே நிலத்துக்கு வலிக்குமோ என வானத்தில் இருந்து மெது மெதுவாய் இறங்கும் காதல் மழை!.
கொஞ்ச நேரம் கண்மூடி மழையை செவிக்குள் சேமிக்கிறேன்.
குளிர் தாங்காமல் மீண்டும் வந்து படுத்துக்கொள்கிறேன்.
தூங்கினேனா, இல்லைப் படுத்தேக் கிடந்திருந்தேனாத் தெரியவில்லை.
மறுபடியும் எழுந்து பார்த்தபோது அறைத்தோழர்கள் எல்லாம் அலுவலகம் போயிருக்க, மழை மட்டும் எனக்காகக் காத்திருந்தது.
காதலுக்கு ஏற்ற அந்த ரம்மிய நேரத்தில் பால்கனியில் அமர்ந்து காதல் பயணத்தின் ஒன்பதாவது பகுதியை எழுதுகிறேன்.
முடித்தவுடன் மழை நின்றது.
குளித்துக் கிளம்பி அலுவலகத்தை இணைக்கும் அந்த முக்கியசாலைக்கு வந்து சேர்கிறேன்.
அந்த இடத்தில் இருந்து அலுவலகத்துக்கு எப்போதும் ஆட்டோவில் செல்லும் நான் , இன்று மட்டும் ஏன் நடந்தே வந்தேன் என்று இப்போது கூட எனக்குத் தெரியாது!
எல்லோரும் கார்களில் வழுக்கிக் கொண்டு செல்லும் அந்த சாலையில் நான் மட்டும் காதலில் வழுக்கிக் கொண்டு செல்கிறேன்.
அலுவலகத்துக்குள் நுழைந்துவிட்டு திரும்பி வெளியே எட்டிப்பார்க்கிறேன், மறுபடியும் ஆரம்பித்து இருந்தது மழை!
நன்றி நண்பர்களே!
'மழை'ப்போட்டியில் கலந்து கொள்வதற்கான நேரம் முடிவடைந்து விட்டது.
முடிவுகள் இன்னும் சில நிமிடங்களில்... பெய்யும்!
Post a Comment