Monday, December 04, 2006

என்ன சிரீப்பு?! /தடாலடிப் போட்டி


ஸாரி, போன வெள்ளிக்கிழமை நடத்த முடியாமப் போன தடாலடி இன்று இங்கே!

படத்தில் சிரிக்கிறாங்க ஒரு அம்மணி. அவங்க எதைப் பார்த்துவிட்டு வேணும்னாலும் சிரிக்கட்டும். அல்லது எதைக் கேட்டுவிட்டு வேணும்னாலும் சிரிக்கட்டும். எதிரே யார் வேணும்னாலும் இருக்கட்டும்.

சிரிக்கும்போது ஏதாவது ஒருவரி கமெண்ட் அடிச்சுக்கிட்டே சிரிப்பாங்கள்ல! அந்த ஒருவரிதான் நீங்க சிந்திக்கப் போற பதில்..

இந்திய நேரப்படி இன்று இரவு 12 மணிதான் கெடு நேரம். பரிசு வழக்கம்போல்.

வாருங்கள் நண்பர்களே!

நம்ம குல வழக்கப்படி உங்கள் ஊர்/ நாட்டின் பெயரையும் சேர்த்தே பின்னூட்டமிடவும். உதாரணத்துக்கு.. 'பெங்களூரில் இருந்து இளா'

124 comments:

✪சிந்தாநதி said...

'ஐ லவ் யூ' ன்னு மூணு வார்த்தை சொல்லத் தெரியாம என்ன முழி முழிக்கிறான் பாருங்க...!

-தமிழ்நாட்டிலிருந்து சிந்தாநதி

விடாதுகருப்பு said...

எனது கமெண்ட்:-

உடலுக்குள் கடவுளை வைத்துக்கொண்டு உலகமெல்லாம் கடவுளைத் தேடுகிறானே முட்டாள் பார்ப்பனன்!!!

சிங்கப்பூரில் இருந்து விடாது கருப்பு(எ) சதீஷ்குமார்.

கார்மேகராஜா said...

ச்சீ போடா! நீ ரொம்ப மோசம்.

SP.VR.சுப்பையா said...

என்ன பெண்களுக்கு இட ஒதுக்கீடா - அதுவும் இந்திய மக்களவையில நிறைவேறப்பொகுதா?
சிரிப்புதான் வருகுது!"

கோவையிலிருந்து சுப்பையா

SP.VR.சுப்பையா said...

லக்கி லுக் மாதிரி நீங்களும் எல்லோருக்கும் நல்லவராகப் போறீங்களா ... சிரிப்புதான் வருது!

கோவையிலிருந்து சுப்பையா

SP.VR.சுப்பையா said...

லக்கி லுக் மாதிரி நீங்களும் எல்லோருக்கும் நல்லவராகப் போறீங்களா ... சிரிப்புதான் வருது!

கோவையிலிருந்து சுப்பையா

SP.VR.சுப்பையா said...

கடைசில பாருங்க ரெண்டு சினிமா டிக்கட்தான்.....பரிசுன்னு சொல்ல்ப்போறாரு மிஸ்டர் கெளதம்!

கோவையிலிருந்து சுப்பையா

Anonymous said...

sari sari enru thalai attivittu SS solla theriamma mulikkaran paru

dubailirunthu srinivas

லக்கிலுக் said...

ம்ம்ம்.... என் ட்ரெஸ் நல்லா இருக்கு. நான் அழகா இருக்கேன். அப்புறம்?

கார்மேகராஜா said...

ச்சீ போடா! நீ ரொம்ப மோசம்!


திருப்பூர்-கார்மேகராஜா

லக்கிலுக் said...

நான் சிரிச்சா தீபாவளியா? நல்ல கூத்து போ.....

லக்கிலுக் said...

தேங்க் காட்... சிம்பு-நயன்தாரா லவ்வு இல்லையாம்....

லக்கிலுக் said...

பக்கத்து வீட்டு அங்கிளுக்கு புதுசா கல்யாணம் ஆயிருக்கா. இன்னைக்கு காலைலே பால்கனில அவரும், அவர் புது ஒயிப்பும்.....

லக்கிலுக் said...

இப்பவும் சில்லறை கொட்டுதான்னு பாரு.....

லக்கிலுக் said...

கங்குலிய மறுபடியும் டீமுல சேர்த்துட்டாங்களா?

லக்கிலுக் said...

நான் ஜோக் அடிக்கவேயில்லையே? அதுக்குள்ள ஏண்டா சிரிச்சே?

✪சிந்தாநதி said...

நீயா? ஹீரோவா? இந்த மூஞ்சிய வச்சுகிட்டா? ஹா..ஹா...

✪சிந்தாநதி said...

நீயா? ஹீரோவா? இந்த மூஞ்சிய வச்சுகிட்டா? ஹா..ஹா...

லக்கிலுக் said...

மார்களி மாசத்தில் குடுகுடு கிளவன் வாலைப்பளத்தோல் வலுக்கி கீளே விளுந்தான். இன்னொரு வாட்டி சொல்லவா?

லக்கிலுக் said...

சிவாஜியிலே தலைவர் காலேஜ் ஸ்டூடண்டாமே?

லக்கிலுக் said...

ஹய்யோ... நான் பார்க்க ஐஸ்வர்யாராய் மாதிரியா இருக்கேன்?

லக்கிலுக் said...

என்னோடா பேரா? கருப்பாயி.....

லக்கிலுக் said...

டாடி என்ன சொல்றீங்க? இன்னைக்கு ஈவ்னிங் என்னை பொண்ணு பாக்க வர்றாங்களா?

லக்கிலுக் said...

ட்ரிங்.... ட்ரிங்.... ட்ரிங்... ட்ரிங்.... ட்ரிங்.... ட்ரிங்.... ட்ரிங்... ட்ரிங்....

....

....

....

....

....

(அந்தப் பொண்ணு கமெண்டு எதுவுமே சொல்லலை. சிரிக்கிறப்போ வர்ற சவுண்டு எஃபெக்டு இது)

லக்கிலுக் said...

இன்னொரு தபா சொல்லு பார்க்கலாம்.... ஐ... லவ்....... யூஊஊஊஊஊஊஊஊஊ......

லக்கிலுக் said...

நேத்து வரைக்கும் கருவாடு காயப்போட்டுக்கிட்டு இருந்த என்னை இந்த ட்ரெஸ்லாம் போட்டு இன்னிக்கு ஹீரோயினி ஆக்கிட்டானுங்கோ....

Anonymous said...

jippa podara vennai


dubailirunthu srinivas

லக்கிலுக் said...

ஹலோ... கால்சென்டர்லே வேலை பாக்க கால் இருந்தா மட்டும் பத்தாது... கொஞ்சமாவது மூளையும் வேணும்.....

லக்கிலுக் said...

கார்த்திகை தீபம் அன்னிக்கு நான் வீட்டுலே புடவை கட்டி, பொட்டு வெச்சு..... செம காமெடி போ....

லக்கிலுக் said...

இந்தியா கடைசியா எப்போ "வின்" பண்ணிச்சின்னு யோசிச்சுப் பாத்தா....

லக்கிலுக் said...

முட்டைக்கண்ணா உன் மூஞ்சிக்கு நான் கேக்குதா?

லக்கிலுக் said...

யு.எஸ்.க்கு விசா கெடைச்சிடுச்சா.. இதுக்கேண்டா அழுவுற?

லக்கிலுக் said...

ரேகாவுக்கு "ஆனி" மாசம் லாஸ்ட்ல மேரேஜாம்...

லக்கிலுக் said...

தாடி எடுத்தா மன்மோகன் சிங் எப்படி இருப்பார் தெரியுமா?

லக்கிலுக் said...

ஹலோ தடாலடி வெறியர்களே!

வேற யாராவது வந்து "கும்மி" அடியுங்களேன்....

நானே கமெண்டு போட்டு, போட்டு தாவு தீருது :-(

லக்கிலுக் said...

இதுக்கு மேல எப்படிப்பா விழுந்து விழுந்து சிரிக்கிறது?

லக்கிலுக் said...

இதுக்கு மேல எப்படிப்பா விழுந்து விழுந்து சிரிக்கிறது?

லக்கிலுக் said...

என்னது... எந்த காலேஜில படிக்கிறேனா? என் பொண்ணு எய்த் ஸ்டேண்டர்டு படிக்கிறா தெரியுமா?

ஆன்லைன் ஆவிகள் said...

பித்தானந்தருக்கு சிஷ்யை ஆகிட்டேனோ! இப்படி சிரிப்பா வருதே!

கண்ணம்மாப் பேட்டையிலிருந்து ஆவி அண்ணாச்சி!

நாமக்கல் சிபி said...
This comment has been removed by a blog administrator.
கார்மேகராஜா said...

இன்னிக்கு பற்பசை தீர்ந்துபோச்சு. அதான் இன்னிக்கு இப்படி சிரிக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

என்ன கேட்டீங்க? சமைக்கத் தெரியுமான்னா?

கோவையிலிருந்து நாமக்கல் சிபி.

We The People said...
This comment has been removed by a blog administrator.
We The People said...

என்ன நான் ஐஸ்யைவிட நான் அழகா! அனாலும் இது ரொம்ப ஓவர்டா!!

- சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

பாபு said...

அய, என் ஃபோட்டோவ வெச்சும் ஒரு போட்டி வெச்சுட்டீங்களா?

மாயவரத்தான்... said...

//சிங்கப்பூரில் இருந்து விடாது கருப்பு(எ) சதீஷ்குமார்.//

கையும் களவுமா மாட்டின அப்புறமும் கூட இப்படி கதை விடுறான் பாரு.

(இதான் அந்தப் பொண்ணு சிரிக்கிறதுக்கான காரணம்!)

மாயவரத்தான்... said...

என்னது..trisha குளியல் காட்சி மாதிரி மாதவன் சி.டி. ரிலீஸ் ஆகியிருக்காமா?!

மாயவரத்தான்... said...

என்னது சிவாஜிக்கு அப்புறம் தலைவரோட அடுத்த படத்துக்கு நான் தான் கதாநாயகியா?!

- மயிலாடுதுறையிலிருந்து மாயவரத்தான்...

மாயவரத்தான்... said...

என்னது... வெட்கப்படுற மாதிரி ஒரு தடவை நடிச்சு காட்டணுமா?!

கார்மேகராஜா said...

என்ன நம்ம G.கௌதம் என்ன லவ் பண்றாரா?

திருப்பூர்-கார்மேகராஜா.

கார்மேகராஜா said...

என்னது டாம் அண்ட் ஜெர்ரில, டாமுக்கு பதில் என்ன கூப்டாகலா?

திருப்பூர்-கார்மேகராஜா


(மாயவரத்தானின் படத்தை பார்த்ததின் விளைவு)

கார்மேகராஜா said...

பரவாயில்லையே, நீயும் தத்தியாதான் இருக்க!


திருப்பூர்-கார்மேகராஜா

கார்மேகராஜா said...

மீசையா? எனக்கா? சான்ஸே இல்லை.

கார்மேகராஜா said...

ஜீன்ஸ் படம் மாதிரி, விரல்ல ஐ லவ் யூ னு எழுதியிருக்கலாம்.

We The People said...

சிட்டி பொண்ணு,
கவிதைக்குயெல்லாம் கவிழாது கண்ணா ;)

We The People said...

சிட்டி பொண்ணு,
கவிதைக்குயெல்லாம் கவிழாது கண்ணா ;)

- சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

மாயவரத்தான்... said...

சன் டி.வி. 'பே சானல்' ஆன மாதிரி, இன்னொரு சானல் பிசாசு சானல் ஆகப் போவுதாமா?!

மாயவரத்தான்... said...

இந்த தடவை தடாலடிப் போட்டியிலே ஜெயிக்கிறவங்களுக்கு உம்மா கொடுக்கணுமா?!

மாயவரத்தான்... said...

என்னது... கேரளாவோட பேச்சு வார்த்தை நடத்த நான் போகணுமா?!

மாயவரத்தான்... said...

மந்த்ரா பேடிக்கு பதிலா அடுத்த உலகக் கோப்பைல நானா?!

மாயவரத்தான்... said...

என்னோட பொறந்த தேதி வேணுமா?!

மாயவரத்தான்... said...

என்னது... சமைக்க தெரியுமாவா?!

Anonymous said...

என்னது!! 33% சதவீதம் ஒதுக்கீடு ஆயிடுச்சா! பொய்தானே!!

சென்னையிலிருந்து தமிழி.

Anonymous said...

இப்பத்தானே ஒரு உம்மா தந்தேன்! அது சரி ! சன்டேன்னா ரெண்டா? ! ஆசை! தோசை ! அப்பளம்! வடை!

-சென்னையிலிருந்து தமிழி.

மாயவரத்தான்... said...

என்னது எனக்கு மட்டும் நூத்துக்கு இருநூறு மார்க்கா?!

Anonymous said...

கண்ணா! ரொம்பக் ஜோக் 'அடிக்காதே 'அப்புறம் அடிக்கிறார்னு கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவேன்.

-சென்னையிலிருந்து தமிழி.

மாயவரத்தான்... said...

பிரம்மனே (லவ்) அப்ளிகேஷன் போட்டுருக்காறா?!

மாயவரத்தான்... said...

சப்போட்டாவுக்கும், சல்பேட்டாவுக்கும் வித்தியாசம் சொல்லணுமா?!

Anonymous said...

டேய்! ரொம்ப வழியாதே!
அதெப்படி, உன்னை மாதிரி அறிவும்! என்னை மாதிரி அழகாகவும்! குழந்தை வேணும்னுதான் என்னை லவ் பண்றயா! அது சரி! கொஞ்சம் உல்டாவாக்கிப் பாரேன்! அப்புறம் உனக்கும் சிரிப்பு தான் வரும்! !

-சென்னையிலிருந்து தமிழி.

Anonymous said...

கும்பளே மனைவி கொடுத்து வைத்தவரா! எப்படின்னு கேட்டா அவன் சொல்றான்! அவர் அவங்கள கூட அடிக்கிறதே இல்லையாம்.

-சென்னையிலிருந்து தமிழி.

லக்கிலுக் said...

//அய, என் ஃபோட்டோவ வெச்சும் ஒரு போட்டி வெச்சுட்டீங்களா?//

இது அசத்தல் சாரே...

Anonymous said...

அய்யோ! அடிக்காம இருக்கிறது கங்குலி!
கும்பளேயில்ல!

-சென்னையிலிருந்து தமிழி.

சிறில் அலெக்ஸ் said...

1. என்னது? காலையிலேயே எழுந்து குளிச்சு கோலம் போட்டு காபி போட்டு சாப்பாடு ரெடி பண்ணணுமா?

2. என் மாமியாரப் பாத்து ஐ லவ் யூ செல்லம்னு சொல்லிட்டேன்

3. டாக்டர் நான் பைத்தியமில்ல டாக்டர்.

4. இப்டி தலைகீழா நின்னா ஃபோட்டோ எடுப்பீங்க?

5. நான் இன்னும் பல் துலக்கல்ல.

6. இருங்க. பல் செட்ட மாட்டினது ஃபோட்டோ எடுங்க.

7. வரதட்சண வேணுமா?

8. இந்தப் படத்தக் காட்டி போட்டி கீட்டி வைக்கமாட்டாங்களே?

9. இல்ல. கரும்பு விலை என்னாலத்தான் உயர்ந்துச்சு.

சிகாகோவிலிருந்து சிறில் அலெக்ஸ்.

சிறில் not சிரில். :)
நான் கொஞ்சம் அழுத்தமான ஆழுங்க..ஹி ஹி.

Anonymous said...

என்னது! சலவைக்காரி ஜோக் சொல்லப் போறிய்யா! சீ.போப்பா! நீ ரொம்ப மோசம்!

-சென்னையிலிருந்து தமிழி.

மாயவரத்தான்... said...

//கும்பளே மனைவி கொடுத்து வைத்தவரா! எப்படின்னு கேட்டா அவன் சொல்றான்! அவர் அவங்கள கூட அடிக்கிறதே இல்லையாம்//

கங்கூலின்னு இருக்கணுமோ?!

Anonymous said...

ச்சீ.. போடா.. உன் செல் போன் ரெம்ப பெருசு..

துபாயிலிருந்து ஸயீத்...

Anonymous said...

அது கடுக்கண் வருங்கால் நகுக! இல்லை!
இடுக்கண் வருங்கால்-பா!


-சென்னையிலிருந்து தமிழி.

We The People said...

என்னது குங்குமம் அட்டையில் என் போட்டோவா!!
மக்கள் தாங்குவாங்களா??

சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

We The People said...

புன்னகை எல்லாம் என்னால முடியாதுன்னு உனக்கு தெரியாதா?

சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

Anonymous said...

\\அய்யோ! அடிக்காம இருக்கிறது கங்குலி!\\

ஏன் உங்களுக்கு இந்த வம்பு, நம்ம "இந்த வார நட்சத்திரத்துக்கு கோபம் வரப்போவுது" சொல்லிப்புட்டேன்.

மாயவரத்தான்... said...

என்னது..பையன் பார்க்க போகணுமா? பஜ்ஜி, சொஜ்ஜிக்கு பதிலா பிட்சா, பர்கர் இருக்குமா?!

மாயவரத்தான்... said...

சின்னகவுண்டர் படத்திலே வர்ற மனோரமா ஆச்சி மாதிரி போஸ் கொடுக்கணுமா?

Anonymous said...

ஹேய் ! இந்த ஜோக் கேட்டால் சிரிப்பே!

நம்ம சர்தார்ஜி சாகிற நிலமையில் மனைவியௌ அருகில் கூப்பிட்டு, நான் செத்த பிறகு நீ நம்ம பக்கத்து வீட்டு கோபாலை கல்யாணம் செய்துக்கணும் அப்படின்னு சொன்னானாம். அதுக்கு அவன் மனைவி ஏங்க அவர் தான் உங்க பரம விரோதியாச்சே அப்படின்னு கேட்டதுக்கு சர்தார்ஜி சொன்னாராம் இதைவிட்டால், அவனை நான் பழிவாங்கறதுக்கு வேற யோசனையே இல்லைன்னாம் !

இதெப்படியிருக்கு,...

sivagnanamji(#16342789) said...

என்னா? மாமா போடும் காபிதான் மாமிக்குப் பிடிக்குமாமா?

சிவஞானம்/சென்னை-4

sivagnanamji(#16342789) said...

ச்சீய்...இந்த ட்ரெஸ்லேயா...
பீச்சுக்கா...நா மாட்டேன்பா...

(நகரத்தில் வாழ்க்கைப்பட்ட கிராமத்துப் புதுப்பெண்)


சிவஞானம்ஜி/சென்னை-4

பாபு said...

//luckylook said...
//அய, என் ஃபோட்டோவ வெச்சும் ஒரு போட்டி வெச்சுட்டீங்களா?//

இது அசத்தல் சாரே...//

Thanks Lucky!
ஜனாதிபதி அவார்டு கெடைக்காட்டாலும் (உங்கள மாதிரி) ஜனங்களோட அவார்டு கெடச்சா போதும் சாரே!

பாபு said...

என்னதிது! லக்கிலுக் எல்லாருக்கும் நல்லவராவப் போறாராமா? ஹா! ஹா!

பாபு said...

"என்னாத்துக்கு சிரிக்கிறேன்னு கேக்கறீங்களா!
அடப் போங்கப்பா!...எனக்கு வெக்கமாருக்கு ...."

Sumathi said...

என்னது ஜெயமாலா திரும்ப சபரிமலைக்கு போறாங்களா?

பெங்கலூரிலிருந்து சுமதி

Sumathi said...

என்னது உனக்கு குங்குமத்திலிருந்து பரிசா....! அதுவும் உனக்கா?

பெருசு said...

ஐய்யோ ! நம்பவே முடியலேப்பா, நீங்கதான் பெருசா???

பெருசு said...

பெருசு ! எனக்கு ட்ரீட் குடுத்தது தங்கமணிக்கு தெரிஞ்சு போச்சா???

sivagnanamji(#16342789) said...

ச்சீய்....பொறுக்கி! பொறுக்கி!...
புத்தி போறதைப் பாரு....!

Anonymous said...

என்னது சேலைல பாக்கெட் வெச்ச மாதிரி வேட்டிலயுமாஆஆஆஆ!

Anonymous said...

(மனசுக்குள்) டேய் ஜொள்ளு விடறது சரி, முதல்ல பேன்ட் ஜிப்பை போடுடா!

Anonymous said...

என்னது அரேஞ்ட் மாரேஜ் பண்ணிட்டு, லவ் பண்லாமா?

Pradeep said...

என்னது இன்னைக்கு திங்கக் கிழமையா? சும்மா இருங்க சிரிச்சி சிரிச்சி வயித்த வலிக்குது!

[பெண்கள் எதற்குத் தான் சிரிப்பதில்லை]

சென்னையிலிருந்து பிரதீப்

Saran D said...

என்னது, வலைப்பதிவர்கள் எல்லாம் office- ல ஒழுங்கா வேலைப் பண்றாங்களா?

- அடியேனும் தான்..

We The People said...

ஆட்டம் முடிஞ்சிடுச்சா? இல்ல இன்னும் இருக்கா??

மாயவரத்தான்... said...

//தமிழ் மகன் said...
என்னதிது! லக்கிலுக் எல்லாருக்கும் நல்லவராவப் போறாராமா? ஹா! ஹா!
//

இது ரொம்பவே அசத்தல் சாரே

மாயவரத்தான்... said...

இந்தப் போட்டிக்கான நேரம் முடிவடைந்து விட்டதா கெளதம்ஜி?

தமிழன் said...

என்ன இந்தியன் டீம் வென்றுவிட்டதா?
கொழும்பிலிருந்து வந்தியத்தேவன்

தமிழன் said...

என்ன இந்தியன் டீம் ஜெயித்துவிட்டார்களா?

லக்கிலுக் said...

//ச்சீய்....பொறுக்கி! பொறுக்கி!...
புத்தி போறதைப் பாரு....!//

சிவஞானம்ஜி சார்!

சத்தியமாகச் சொல்லுகிறேன். தடாலடிப் போட்டி ஆரம்பித்ததிலிருந்தே எனக்கு கடுமையான போட்டியாளர் நீங்க தான்.... உங்கள் வயதில் என்னால் இவ்வளவு இளமையாக சிந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.

"என்றும் மார்க்கண்டேயன்" பட்டத்துக்கு பொருத்தமானவரே நீங்கள்....

Anonymous said...

////மாயவரத்தான்... said...
//தமிழ் மகன் said...
என்னதிது! லக்கிலுக் எல்லாருக்கும் நல்லவராவப் போறாராமா? ஹா! ஹா!
//

இது ரொம்பவே அசத்தல் சாரே ////
Thanks Mayu!
ஹையா! என்ன மாய வரமோ எனக்கு! லக்கிசார், மாயாசார் ரெண்டுபேருமே என்னப் பாராட்டிட்டாங்களே!


தமிழ் மகன்

பாபு said...

"அடப்பாவமே! மாயாண்ணன் இப்பவும் தோத்துட்டாரா?! ஹா!ஹா! ஹா!"

We The People said...

கைப்புள்ளக்கும் எனக்கு லவ்வா, இது ரொம்ப ஓவர்பா!

சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

We The People said...

Cho chweet!!!

சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்

G Gowtham said...

போட்டி முடிவுகள் இதோ..
வழக்கம்போலவே முதல் பரிசைப் பங்கு போட்டுக் கொள்ளும் இருவர்:
1.
"சிவாஜியிலே தலைவர் காலேஜ் ஸ்டூடண்டாமே?"
-சென்னையில் இருந்து லக்கிலுக்
---------------------------
2.(சின்ன வார்த்தை மாற்றலுக்குப் பிறகு)
ஜிப்பைப் போடுடா லூசு!
-துபாயில் இருந்து ஸ்ரீனிவாஸ்
--------------------------
ஆறுதல் பரிசாக இதழில் பிரசுரமாகும் பளிச் கொடுத்தவர்கள் இனி:


'ஐ லவ் யூ' ன்னு மூணு வார்த்தை சொல்லத் தெரியாம என்ன முழி முழிக்கிறே போ!
-தமிழ்நாட்டிலிருந்து சிந்தாநதி
-----------------------
ம்ம்ம்.... என் ட்ரெஸ் நல்லா இருக்கு. நான் அழகா இருக்கேன். அப்புறம்?
-சென்னையில் இருந்து லக்கிலுக்
------------------------
கார்த்திகை தீபம் அன்னிக்கு நான் வீட்டுலே புடவை கட்டி, பொட்டு வெச்சு..... செம காமெடி போ....
-சென்னையில் இருந்து லக்கிலுக்
---------------------
என்னது... எந்த காலேஜில படிக்கிறேனா? என் பொண்ணு எய்த் ஸ்டேண்டர்டு படிக்கிறா தெரியுமா?
-சென்னையில் இருந்து லக்கிலுக்
----------------------
என்ன கேட்டீங்க? சமைக்கத் தெரியுமான்னா?
-கோவையிலிருந்து நாமக்கல் சிபி.
---------------------
என்னது... வெட்கப்படுற மாதிரி ஒரு தடவை நடிச்சு காட்டணுமா?!
-மயிலாடுதுறையில் இருந்து மாயவரத்தான்
---------------------
மீசையா? எனக்கா? சான்ஸே இல்லை.
- கார்மேகராஜா
---------------------
சிட்டி பொண்ணு,
கவிதைக்குயெல்லாம் கவிழாது கண்ணா ;)
- சென்னையிலிருந்து நா.ஜெயசங்கர்
--------------------
என்னது எனக்கு மட்டும் நூத்துக்கு இருநூறு மார்க்கா?!
-மயிலாடுதுறையில் இருந்து மாயவரத்தான்
-------------------
என் மாமியாரப் பாத்து ஐ லவ் யூ செல்லம்னு சொல்லிட்டேன்
-சிகாகோவிலிருந்து சிறில் அலெக்ஸ்.
---------------------
ச்சீய்....பொறுக்கி! பொறுக்கி!...
புத்தி போறதைப் பாரு....!
- சென்னையில் இருந்து சிவஞானம்ஜி
----------------------
இப்பவும் சில்லறை கொட்டுதான்னு பாரு..
-சென்னையில் இருந்து லக்கிலுக்
----------------------
உடலுக்குள் கடவுளை வெச்சுக்கிட்டு உலகம் பூரா கடவுளைத் தேடுகிறானே!!!
-சிங்கப்பூரில் இருந்து விடாது கருப்பு
------------------------

G Gowtham said...

போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் நன்றி நண்பர்களே!

We The People said...

நன்றி ஜி!

இந்த தடவையும் ஆறுதல் பரிசு தானா?? :(

வெற்றிப்பெற்ற அனைவருக்கு வாழ்த்துக்கள்...

சிறில் அலெக்ஸ் said...

தொடர்ந்து ஆறுதல் தரும் போட்டிகளுக்காக நன்றி கௌதம்.

:)

sivagnanamji(#16342789) said...

பரிசு பெறும் அனைவருக்கும்
வாழ்த்துகள்...

sivagnanamji(#16342789) said...

மு.ப.மொ.கு லக்கியாரே
***********************
உங்கள் பாராட்டுக்கு நன்றி!

லக்கிலுக் said...

நன்றி! நன்றி! நன்றி!

தடாலடிப் போட்டினாலே சீரியஸா அசுரவெறியோடு கலந்துகொள்கிறேன். அதனாலேயே என்னமோ பலமுறை எப்படியாவது வென்று விடுகிறேன் என்று நினைக்கிறேன்.

சகப்போட்டியாளர்களான சிவஞானம்ஜி ஐயா, நண்பர் மாயவரத்தான் மற்றும் சிந்தாநதி, வீ தி பீப்பிள் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்!!!!

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!!!!

போட்டி அமைப்பாளரான தடாலடியாருக்கு நன்றிகள்!!!!

லக்கிலுக் said...

//ச்சீய்....பொறுக்கி! பொறுக்கி!...
புத்தி போறதைப் பாரு....!//

என்னை ரொம்பவும் கவர்ந்த கமெண்டு இது. இதற்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று நினைத்தேன்.

இனிவரும் தடாலடிப் போட்டிகளில் வெற்றி பெற ஒரு தடாலடி ரகசியம் :-)

தலைவர் தடாலடியார் சூப்பர் ஸ்டார் ரசிகர். எனவே சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட கமெண்டு அடித்தால் வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் :-)))))))

G Gowtham said...

//இனிவரும் தடாலடிப் போட்டிகளில் வெற்றி பெற ஒரு தடாலடி ரகசியம் :-)

தலைவர் தடாலடியார் சூப்பர் ஸ்டார் ரசிகர். எனவே சூப்பர் ஸ்டார் சம்பந்தப்பட்ட கமெண்டு அடித்தால் வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் :-))))))) //
ஹா ஹா ஹா!
அப்படி இல்லை லக்கிலுக்.
இடம்-பொருள்-சூழலுக்கான அளவீடு அது!
குங்குமம் வெகுஜனப் பத்திரிகை. சூப்பர் ஸ்டார் வெகுஜன விரும்பி. இதுதான் ரகசியம்!

அப்புறம்.. கட்டக் கடைசி தடாலடி போட்டியில் நாளை கலந்து கொள்ள மிஸ் பண்ணிடாதீங்க!!!!

Anonymous said...

Thanks Gowtham

I am participating for the first time in the competition and I am happy to see that my first effort got the first price.

Congrats for all other who won.

Srinivas from dubai

தமிழி said...

தடாலடியாரே! தடாலடியாக, தடாலடிப்போட்டிகள் கட்டங்கடைசி என சொல்லி வருத்தத்தை தருகிறீர்கள்.


என்னவோ போங்க இந்த வாரம் விடைபெறும் வாரம் போலிருக்கிறது.
சில பேர் விடைபெறுகிறார்கள். சிலர் விடைகொடுத்து அனுப்பப்படுகிறார்கள்..

தடாலடியாக வேறு போட்டிகள் உண்டா!
தடாலடியாக சொல்லாட்டியும் சீக்கிரமாக சொல்லுங்க!

We The People said...

லக்கி,

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

//சகப்போட்டியாளர்களான சிவஞானம்ஜி ஐயா, நண்பர் மாயவரத்தான் மற்றும் சிந்தாநதி, வீ தி பீப்பிள் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்!!!!//

எங்களை வாழ்த்தியதற்க்கும் நன்றி, சூப்பர் ஸ்டார் ஐடியாவுக்கும் நன்றி ;) இந்த ஐடியாவை நீங்க சொன்னதினால தானோ என்னவோ தடாலடியார் கட்டக் கடைசி போட்டி நாளைக்குன்னு சொல்லிட்டாரு?!! கெளதம் ஜி உண்மையா??

நாமக்கல் சிபி said...

// கட்டக் கடைசி தடாலடி போட்டியில் நாளை கலந்து கொள்ள மிஸ் பண்ணிடாதீங்க!!!!
//

என்ன இது! தேன் கூடு கடைசி போட்டி! தடாலடி கடைசி போட்டி!

என்ன இந்த வாரம் ஒரே அறிவிப்பு வாரமா இருக்கு!

செந்தழல் ரவி said...

இவன் வழியுற வழிசல்ல சுனாமியே வந்திரும்போலிருக்கே...

பெங்களூரில் இருந்து ரவி

செந்தழல் ரவி said...

நேத்துதான் ப்ரபோஸ் பண்ணான்...ஓக்கே சொன்னோம்...இவன் இன்னைக்கும் வந்து ப்ரபோஸ் பண்றானே ? அறிவியல் ப்ரொபஸர்னா செலக்டட் அம்னீஷியாங்கறது கரெக்டாதான் இருக்கு...

manjoorraja said...

ஷேம் ஷேம் பப்பி ஷேம்....!

குவைத்திலிருந்து மஞ்சூர் ராசா