Monday, August 04, 2008

திரையுலகம் வரவேற்கிறது!

இன்றைக்கு திரையுலகம் ஆரோக்கியமானதாகவே இருக்கிறது. நிஜமாகவே சரக்குடன் வரும் புதியவர்களுக்கு ரெட் கார்ப்பெட் விரிக்கத் தயாராக இருக்கிறார்கள் ரசிக மகா ஜனங்கள். என்றாவது ஒருநாள் திரையுலகுக்குள் நுழையலாம் என நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இதுவே நல்ல காலம்!

அருமையான ப்ராஜக்ட் ஒன்று என் கவனத்துக்கு வந்திருக்கிறது. இரையைப் பங்கு போட்டுக் கொள்ளக் கரையும் காகம் போல இதோ உங்கள் கவனத்துக்கும் எடுத்து வைக்கிறேன்.

தமிழில் மிகப் பெரிய வெற்றியடைந்த சமீபத்திய திரைப்படம் அது. மீடியாக்களாலும் மக்களாலும் திரைப்பிரமுகர்களாலும் பாராட்டப்பட்ட படமும்கூட(நிச்சயம் நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்)! படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியிருக்கிறார் என் நண்பர் ஒருவர். யானைக்கு முன்னே வரும் மணியோசையாக முதலில் பாடல்களைக் களமிறக்கப் போகிறார். தமிழில் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட். தெலுங்கிலும் அதுவே நடக்கும் என நம்புகிறார். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. இரண்டே மாதங்களில் படத்தை டப் செய்து வெளியிடப் போகிறார்.

ப்ராஜக்ட்-டின் மொத்த செலவு எழுபது லட்சம். வரவுக்கு மினிமம் கியாரண்டி ஒரு கோடி! தெலுகு தேசத்தில் இருக்கும் நண்பர்கள்(திரையுலகப் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்) வட்டாரத்தில் ஒரு ரவுண்டு விசாரித்தபோது படம் சூப்பர் ஹிட் ஆகும் என்றுதான் தோன்றுகிறது. நம்பிக்'கை' கொடுக்கும் முதலீட்டாரைத் தேடி என்னிடம் வந்தார் நண்பர். WIN WIN பார்முலா வைத்திருக்கிறார் (ஐந்து லட்சம் - நூறு நாட்கள் - ஆறு லட்சம் மினிமம் கியாரண்டி). பங்குதாரராக அல்லது மினிமம் கியாரண்டியுடன் முதலீட்டாளராக விரும்பினால் வாருங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பிவையுங்கள் (presidentgowtham@gmail.com). முழுமையான விவரம் அனுப்புகிறேன்.

தடபுடல் விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது.. நான் சாப்பிடப் போகிறேன். உங்களுக்கும் வேண்டுமெனில் ஓடிவாருங்கள்!

8 comments:

Anonymous said...

thanks for sharing..

www.izmirmatbaa.com

Anonymous said...

thank you
bilgi@ozmarmaralpg.com

Anonymous said...

thanks..
bilgi@ozmarmaralpg.com

Anonymous said...

thanks..

Cable சங்கர் said...

’ஆஞ்சாமல்’ இண்வெஸ்டர்ஸ் தேடும் இந்த வழி நன்றாக இருக்கிறது.

உண்மைத்தமிழன் said...

'அஞ்சாத' திரைப்படமா..? என் மனதைக் கொள்ளை கொண்ட படமாச்சே..

ஐயோ சொக்கா.. ஆறு லட்சத்துக்கு இப்ப நான் எங்க போவேன்..?

என் கிட்னியை வேண்ணா தர்றேன்.. எடுத்துக்கிட்டு பார்ட்னரா சேர்த்துக்குங்க..

மாயவரத்தான் said...

????

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx