Monday, September 27, 2010

எந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா? :-)

ராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்(?!) பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திரன் என்னைப் பாடாய்ப்படுத்துகிறானே!

ஆகவே தோழர்களே.. இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்தோ அல்லது எதிர்பார்க்காமலோ இருந்த தடாலடி போட்டி - எந்திரன் எடிஷன்!

போட்டியில் வெற்றி பெறும் முதலாம் நபருக்கு எந்திரன் படத்தை முதல் நாள் - 1.10.2010 முதல் ஷோ சென்னை அபிராமி தியேட்டரில் பார்க்க டிக்கெட் பரிசு!

இரண்டாம் நபருக்கு அன்று மாலையே - 1.10.2010 அதே அபிராமி தியேட்டரில் எந்திரன் பார்க்க டிக்கெட் பரிசு!

மூன்றாவது நபருக்கு அடுத்த நாள் - 2.10.2010 அன்று மாலை அதே அபிராமி தியேட்டரில் எந்திரன் பார்க்க டிக்கெட் பரிசு!

அதற்காக சென்னைக்காரர்கள் மட்டும்தான் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் கலந்து கொள்ளலாம். வெளியூர் அல்லது வெளிநாட்டுக்காரர்களுக்கு பரிசு கிடைக்குமானால் தங்கள் சார்பாக பரிசை அனுபவிக்க சென்னைக்காரர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


போட்டி இதுதான்..


முக நூல் நண்பர் அழகிரி என்ஃபீல்டர் க்ளிக்கி இருக்கும் இந்த அருமையான புகைப்படத்துக்கு அட்டகாசமாக ஒரு கவிதையை இங்கே பின்னூட்டமாகக் கொடுங்கள் பார்க்கலாம்!
படம் : அழகிரி என்ஃபீல்டர்ன் - http://www.facebook.com/Azhagiri



நச் என ஓரிரு வரிகளுக்குள் இருக்கட்டும் உங்கள் கவிதை. நவரசத்தில் எந்த ரசத்திலும் இருக்கலாம்!.  


அல்லது..


கவிதை வேண்டாம் என்பவர்களுக்காக இன்னொரு வாய்ப்பு. கீழ்க்காணும் படத்துக்கு குறும்பு கொப்பளிக்க ஒரு கமெண்ட் கொடுங்கள். ஓரிரு வரிகளுக்குள் இருக்கட்டும் உங்கள் கமெண்ட்!

படம் : நன்றி - ராஜசேகரன் சீதாராமன் - 



போட்டிக்கான கெடு நேரம் (இந்திய நேரப்படி) 30.9.2010 காலை 11 மணி.. ரெடி ஜூட்.. போலாம் ரைட் நண்பர்களே!




37 comments:

butterfly Surya said...

இதுவரை கலந்துகறதா ஆட்சேபணை இல்லை. ஆனா நாம கலந்துகிட்டா ஏகப்பட்ட எழுத்தாளர்கள் ஏமாந்துருவார்களேன்னு நினைச்சு அமைதியா இருக்கேன்..

Anonymous said...

குரங்குப் படத்துக்கு என்(?) கமென்ட்:

‘இந்த ஜிபோஸ்ட் பார்ட்டி இந்தவாட்டியாவது போட்டியில ஜெயிக்கறவங்களுக்கு பெங்களூர்ல டிக்கெட் தருவாரா? ம்ஹூம், சான்ஸே இல்லை!’

;)))))))

- என். சொக்கன்,
பெங்களூரு.

ViNo said...

"enna da hand-writing ithu?? ivan homework'a copy adikkirathukkulla en thaali arunthudum pola irukke"

TCTV said...

g...............enathu ithu

உண்மைத்தமிழன் said...

முதல் புகைப்படம் :

கண்ணா.. கலர், கலர் கனவோட கல்யாணம்ன்றது இதுதானா..?

செந்தில் என்கிற சிறுவன் said...

ஆமா, நான்தான் காமன்வெல்த் போட்டி செலவு கணக்கு பார்க்குறேன்!

உண்மைத்தமிழன் said...

இரண்டாவது புகைப்படம் :

1. என்னது? எனக்குக் காய் வாங்கிப் போட்ட வகைல ரெண்டு கோடி ரூபாய்க்கு கணக்கு எழுதியிருக்கானுங்க கபோதிங்க..!

2. இன்னாடா இது எனக்கு வந்த சோதனை? ஏர்டெல்காரன் எனக்கு போன் பில் அனுப்பியிருக்கான்..!

Guru said...

1) எந்த கலராவது கிடைக்காதா
என ஏங்கியிருந்த எனக்கு ;
இன்று வானவில்லே கிடைத்தது !

2) பத்து பக்க பதிவ படிக்கறதுக்குள்ள மண்ட காயுது. யாராவது படிச்சு சொல்லுங்கப்பா.

Anonymous said...

Enthiran padathukku Free ticket-aa... LOL. Matchi, nee 100 roopaa kaila koduthu, 'ticket' koduthaalum, antha kodumai-ya paakka mudiyaathudaa saamy...

மாயவரத்தான் said...

எந்திரன் படம் எந்த எந்த தியேட்டரிலே ரிலீஸ் ஆகியிருக்குன்னு லிஸ்ட்டை படிக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும் போலருக்கே!

மாயவரத்தான் said...

முதல் புகைப்படத்துக்கான கவிதை (?!)

கண்ணே..

இவ்வளவு
நாட்கள்
நான்
’கலர்’களை
சுற்றிக்
கொண்டிருந்தேன்.
இன்று
நீ
வந்த
நேரம்
கலர்கள்
என்னைச்
சுற்றுகின்றன!

(வரியை பிச்சு பிச்சு போட்டா கவிதை தானே?!)

மாயவரத்தான் said...

குரங்கு புகைப்படம் :

என்னோட புள்ளையாண்டான் கையெழுத்து வர வர மனுஷனுங்க கையெழுத்து மாதிரி படு கேவலமா ஆகிட்டு வருது!

மாயவரத்தான் said...

குரங்கு பட கமெண்ட்..

”ஹும்.. இத்தனை பேரு கமெண்ட் அனுப்பினா எப்படி செலக்ட் பண்ணுறதாம்? கெளதம் ரொம்ப ஜாக்கிரதையா பொறுப்பை நம்ம தலையில கட்டிட்டு நழுவிட்டாருய்யா!”

gulf-tamilan said...

2வது படத்துக்கு

ஒழுங்கா படிக்கிற காலத்தில் படிச்சிருந்தா இப்ப இப்படி ஒரு நிலைமை வருமா?

gulf-tamilan said...

2 வதுக்கு

என்னப்பா இது பரப்பிசை,பரப்பியல்,பப்பரப்பா என புரியாத கோட்வேர்ட்ஸ்ஸா இருக்கு?

gulf-tamilan said...

2 வது படத்துக்கு

என்னது எந்திரன் படம் பார்க்கலைன்னா சாப்பாடு கிடையாதா!!!

மாயவரத்தான் said...

குரங்கு பட கமெண்ட்..

“என்னாது.. மேலே கல்யாணம் கட்டினவங்களுக்கு உண்மைத் தமிழன் வாழ்த்து அனுப்பிருக்காரா? இதிலே ஏதோ சதி இருக்குது! இதை படிச்சு முடிக்கிற்துக்கே அவங்களுக்கு 2 நாள் ஆகிடுமே. அப்புறம் தேர்ட் நைட் தான் கொண்டாட முடியும்டோய்!”

மாயவரத்தான் said...

குரங்கு பட கமெண்ட்..

எல்லாம் சரி. கெளதம் கூடவே * போட்டு சின்னதா ‘வெற்றி பெறும் ஒவ்வொருவருக்கும் மன்மதன் அன்பு படத்துக்கு 50 டிக்கெட் இலவசம்’ அப்படீன்ற மாதிரி விதிமுறை எதுனாச்சும் போட்டுருக்காரான்னு செக் பண்ணிடுவோம். சொந்த செலவுல சூனியம் எதுக்கு?!

Athisha said...

குரங்கு கமென்ட் - 1

இரண்டாயிரம் பக்கம் எழுதிட்டேன்.. ம்ஹூம் ஜெயமோகன பீட் பண்ணவே முடியாது போலருக்கே!

குரங்கு கமென்ட் - 2

மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்லனு எழுத முடியாதா.. அத ஏற்கனவே கமல் எழுதிட்டாரா.. ச்சே வட போச்சே!

குரங்கு கமென்ட் - 3

எழுத்தாளனோட நிலைமைய பாருங்கப்பா.. வெறும் வாசகர் கடிதம் மட்டும் நல்லா வக்கனையா எழுதறானுங்க.. எந்திரன் டிக்கட் கேட்டு ஒரு வாரமாச்சு ..ச்சே சுனாபான கேரளாவுக்கு கிளம்புடா!


**********

ஐயா மூணு கமென்ட் போட்டிருக்கோம் ஏதோ பார்த்து பண்ணுங்க

Athisha said...

குரங்கு கமென்ட் - 4

புனைப்பெயரா பெண் பேர் வச்சுகிட்டது எவ்ளோ பெரிய தப்பு.. ச்சே நான் எழுதின கதைய பத்தி ஒரு லெட்டர் கூட இல்ல.. எல்லாமே லவ்லெட்டர்ஸ்

மாயவரத்தான் said...

குரங்கு பட கமெண்ட்..

என்னாது.. தலைவர் அறுபதாம் கல்யாணத்துக்கு ரசிகர்களை கூப்பிடலைன்னு வாரமிருமுறை பத்திரிகையில கட்டுரை எழுதியிருக்காங்களா?!

மாயவரத்தான் said...

குரங்கு பட கமெண்ட்..

‘எந்திரன்’ படக் கதை இது தான்னு அவனவன் எழுதினது எல்லாம் சரியான்னு செக் பண்றதுக்குள்ள ஒரு நூறு படத்துக்கு கதை தேறிடும் போலருக்கே!

மாயவரத்தான் said...

குரங்கு பட கமெண்ட்..

எந்திரன் படம் ஜப்பானில் ரிலீஸ் ஆவுதான்னு ஒரு நியூஸையும் காணுமே!

காலப் பறவை said...

கவிதை 1

எத்தனை கலர்கள்
என்மேல் விழுந்தாலும்
இனிமேல்
இவள்தான்
எனக்கு கலர்............

காலப் பறவை said...

கவிதை 2

உனக்கு புன்னகைக்க
சொல்லி கொடுத்த
உலகம்
எனக்கு மட்டும்
வெட்கப்பட
சொல்லிகொடுத்தது ஏனோ?

காலப் பறவை said...

குரங்கு பட கமெண்ட் 1.........

டெல்லி பக்கம் வந்தது எவளவு துரதிஷ்டமா போச்சு !!!
கலைஞர் கடிதம் எல்லாம் வாசிக்க வேண்டி இருக்கு

Xavier said...

ஒரு மனம் கொத்திப் பறவையின்
மௌனச் சிரிப்பில்
இத்தனை நிறம் கொத்திப் பறவைகளா ?

----------------------------

குரங்கு கைல பூமாலை… ஹி..ஹி.. நான் படிக்கிற பத்திரிகை பேரு “பூ மாலை”

---------------------------

G Gowtham said...

முதல் கட்ட தேர்வில் பாஸ் ஆனவை..


செந்தில் என்கிற சிறுவன் said...
ஆமா, நான்தான் காமன்வெல்த் போட்டி செலவு கணக்கு பார்க்குறேன்!
மாயவரத்தான்.... said...
குரங்கு புகைப்படம் :

என்னோட புள்ளையாண்டான் கையெழுத்து வர வர மனுஷனுங்க கையெழுத்து மாதிரி படு கேவலமா ஆகிட்டு வருது!
மாயவரத்தான்.... said...
குரங்கு பட கமெண்ட்..

என்னாது.. தலைவர் அறுபதாம் கல்யாணத்துக்கு ரசிகர்களை கூப்பிடலைன்னு வாரமிருமுறை பத்திரிகையில கட்டுரை எழுதியிருக்காங்களா?!
காலப் பறவை said...
கவிதை 2

உனக்கு புன்னகைக்க
சொல்லி கொடுத்த
உலகம்
எனக்கு மட்டும்
வெட்கப்பட
சொல்லிகொடுத்தது ஏனோ?
காலப் பறவை said...
குரங்கு பட கமெண்ட் 1.........

டெல்லி பக்கம் வந்தது எவளவு துரதிஷ்டமா போச்சு !!!
கலைஞர் கடிதம் எல்லாம் வாசிக்க வேண்டி இருக்கு

Xavier said...
ஒரு மனம் கொத்திப் பறவையின்
மௌனச் சிரிப்பில்
இத்தனை நிறம் கொத்திப் பறவைகளா ?

அதிஷா said...
குரங்கு கமென்ட் - 1

இரண்டாயிரம் பக்கம் எழுதிட்டேன்.. ம்ஹூம் ஜெயமோகன பீட் பண்ணவே முடியாது போலருக்கே!

மாயவரத்தான்.... said...
முதல் புகைப்படத்துக்கான கவிதை (?!)

கண்ணே..

இவ்வளவு
நாட்கள்
நான்
’கலர்’களை
சுற்றிக்
கொண்டிருந்தேன்.
இன்று
நீ
வந்த
நேரம்
கலர்கள்
என்னைச்
சுற்றுகின்றன!

ViNo said...
"enna da hand-writing ithu?? ivan homework'a copy adikkirathukkulla en thaali arunthudum pola irukke"

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. பரிசு பெறப்போகிற மூவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

G Gowtham said...

இதோ இரண்டாம் கட்ட வடிகட்டலுக்குப் பிறகு..


செந்தில் என்கிற சிறுவன் said...
ஆமா, நான்தான் காமன்வெல்த் போட்டி செலவு கணக்கு பார்க்குறேன்!

மாயவரத்தான்.... said...
குரங்கு பட கமெண்ட்..
என்னாது.. தலைவர் அறுபதாம் கல்யாணத்துக்கு ரசிகர்களை கூப்பிடலைன்னு வாரமிருமுறை பத்திரிகையில கட்டுரை எழுதியிருக்காங்களா?!

காலப் பறவை said...
டெல்லி பக்கம் வந்தது எவளவு துரதிஷ்டமா போச்சு !!!
கலைஞர் கடிதம் எல்லாம் வாசிக்க வேண்டி இருக்கு

Xavier said...
ஒரு மனம் கொத்திப் பறவையின்
மௌனச் சிரிப்பில்
இத்தனை நிறம் கொத்திப் பறவைகளா ?

அதிஷா said...
இரண்டாயிரம் பக்கம் எழுதிட்டேன்.. ம்ஹூம் ஜெயமோகன பீட் பண்ணவே முடியாது போலருக்கே!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மென் நகையில் என்னருகில்,
பெண்ணிருக்கும் புது-மணத்தில்,
புன்னகையில் தவழு முகம்!
புதுவாழ்வின் வண்ணங்கள் !

------------------------

குரங்கு கமெண்ட்:

இத்தனை பேரு பின்னூட்டினா யாருக்குப்பா டிக்கெட் கொடுக்கிறது?

------------------------

கமெண்ட் இரண்டு:

இந்தக் காமன்வெல்த் செலவு கணக்கையெல்லாம் ஒரு வழி பண்ணனுமாம்..பூமாலை மாதிரு நினைச்சுக்கோன்னு கல்மாடி சொல்லிட்டுப் போயிருக்காரு..
என்ன பண்ணலாம் ?

G Gowtham said...

கட்டக்கடைசி..

மூன்றாம் பரிசு
செந்தில் என்கிற சிறுவன் said...
ஆமா, நான்தான் காமன்வெல்த் போட்டிக்கு வரவு செலவு கணக்கு பார்க்குறேன்!

இரண்டாம் பரிசு
காலப் பறவை said...
டெல்லிப் பக்கம் வந்தது எவளவு துரதிர்ஷ்டமா போச்சு !
எம்புட்டு கலைஞர் கடிதங்களை வாசிச்சுத் தொலைய வேண்டி இருக்கு!!

முதல் பரிசு..
Xavier said...
ஒரு மனம் கொத்திப் பறவையின்
மௌனச் சிரிப்பில்
இத்தனை நிறம் கொத்திப் பறவைகளா ?!

பரிசுக்குரிய படைப்புகளைக் கொடுத்தவர்கள் மூவரும் என் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 95000 97787. இப்போது நான் சென்னையை விட்டு வெகு தூரத்தில் இருப்பதால் சிக்னல் கிடைக்காவிட்டல் குறுஞ்செய்தி அனுப்பவும். டிக்கெட்டினை எப்படி – எங்கே பெற்றுக்கொள்வது என்ற விவரத்தைத் தெரிவிக்கிறேன்.
ஒரு டிக்கெட் மற்றும் கூடவே ஸ்னோ வேர்ல்டு நுழைவுக்கூப்பன் (10.10.2010-க்குள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாமாம்) இரண்டுமே பரிசாகக் கிடைக்கும்.

ஆறுதல் பரிசுக்குரியவர்களாக (நாங்க சொன்னதையும் செய்வோம்.. சொல்லாததையும் செய்வோம்ல!) இரண்டு பேரை தேர்ந்தெடுத்துள்ளேன்.

அதிஷா

மாயவரத்தான்....

இருவருக்கும் 1.10.2010 அல்லது 2.10.2010 அல்லது 3.10.2010 இந்த மூன்று நாட்களில் (சப்ஜெக்ட் டு அவைலபிலிடி) ஏதாவது ஒரு நாளில் – ஒரு காட்சிக்கு – ஒரு டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்து தரப்படும். ஆனால் சொந்த செலவில்தான் சூனியம்(?!) வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது நான் சொல்லும் இடத்தில் டிக்கெட்டுக்கான பணத்தைக் கொடுத்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்!

போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கிரி said...

குரங்கு:

1. கல்மாடி கணக்கு புரியலைன்னு எல்லோரும் என்கிட்டே கொடுத்துட்டாங்க.. அது தான் ஏதாவது புரியுதான்னு பார்க்கிறேன்.

2. எந்திரன் பட கதை அப்படி இப்படின்னாங்க.... கடைசில பார்த்தால் எங்க பாட்டன் காலத்துலயே இதை சொல்லி இருக்காரு.. இப்ப அதைத்தான் தயார் பண்ணிட்டு இருக்கேன்.. என்னது எதுக்கா! பல வலைபதிவர்கள் இதை வைத்து பல பதிவு எழுத என்கிட்டே டீல் போட்டு இருக்காங்க. கோவி கண்ணன் இப்பவே தலைப்பு கூட தயார் செய்து இதுக்காக காத்து இருக்கேன்னு முப்பது முறை SMS அனுப்பிட்டாரு

மாயவரத்தான் said...

ஹும்.. போட்டி முடிவு 11 மணியைத் தாண்டின அப்புறம் அனுப்பினதுக்கு (11.48க்கு) எல்லாம் முதல் பரிசு! என்னாத்த சொல்ல! விதிமுறைய மீறிட்டீங்கக்க்க்க்க்க்கோவ்!

மாயவரத்தான் said...

இரண்டாம் பரிசும் போட்டி முடிந்த மூன்று நிமிடங்களுக்குப் பிறகு வந்தது தான் (11.03 AM).

:)

மாயவரத்தான் said...

ஆனாலும் முதல் மூன்று பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டவையும் ‘நச்’. சூப்பர். குறிப்பாக டெல்லி குரங்கு கமெண்ட். :)

Xavier said...

Oh My God.. Enakku first Price aa ... Thank You .. Thank You... But ungala reach panna mudiyala.. My number.... 98419-74980

Sukumar said...

டெல்லி குரங்கு கமெண்ட் சூப்பர்... போட்டி ஆர்கனைசருக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்....