Friday, August 11, 2006

குளிக்குறப்ப ஒளிஞ்சிருந்து பார்த்தியா? - காதல் பால்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
- அறத்துப்பால், அதிகாரம்: கள்ளாமை, குறள்: 282
பிறரது பொருளை அவர் அறியாதபடி வஞ்சித்துக் கொள்ள நினைப்பதுகூட பாவம்தான்.

லோ...”

“ஹாய்! ஹலோ! உனக்கு இருநூறு வயசு.. இப்பத்தான் உன்னை நினைச்சுக்கிட்டே இருக்கேன்!!”

“சும்மா கதை விடாதே.”

“இல்லடா, நிஜம்”

“தொலைஞ்சு போ! ஆமா அதென்ன இருநூறு வயசு?!”

“என் நூறையும் சேர்த்துக் கூட்டின கணக்கு அது. சரி மேடம் போன் பண்ணிய நோக்கம்?”

“விளையாடாதே. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நாம இப்படியே பார்க்ல உட்கார்ந்து புல்லைப் பிடுங்கிகிட்டே காதலிக்கிறது? போரடிக்கலை உனக்கு?”

“ஓ.கே. அப்ப இனிமே செடி நட்டு வச்சுக்கிட்டே காதல் பண்ணலாம்!”

“இப்பத்தானே சொன்னேன் விளையாடாதேன்னு. கேட்ச் மை பாயிண்ட்”

“பிடிச்சாச்சு டார்லிங். சொல்லு.. சொல்லு..”

“நாம கொஞ்சம் சீரியஸா உட்கார்ந்ந்து பேசியாகணும். இன்னிக்கே. இப்பவே!”

“உத்தரவு தாயி! எங்க வரட்டும்? இல்ல நீ வரியா?”

“சட்னு கிளம்பி எங்க வீட்டுக்கு வந்துசேர். இன்னும் அரை மணி நேரம்தான் உனக்கு நான் கொடுக்குற டைம்”

“ஹே! என்னாச்சு உனக்கு இன்னிக்கு.. தைரியமா உன் காதலனை, அதுவும் அழகான இளம் வாலிபனை வீட்டுக்கே கூப்புடறே? யாரும் இல்லியா அக்கட?!”

“ வீட்ல எனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுட்டாங்க! குரோம்பேட்டை வரை போயிருக்குது பெரிசுங்க எல்லாம். எவனோ ஒரு ஜோசியனப் பார்க்கணுமாம். கைல பத்து ஜாதகத்தோட இப்பத்தான் புறப்பட்டது படை. நல்லா சாப்டுட்டு, தூங்கி எழுந்து, ஜம்னு ரெடியா இருக்கணுமாம் நான். சாயந்திரம் அடையாறுல இருந்து ஒரு அசடு என்னைப் பெண் பார்க்க வருதாம். அதிரடியா இதைச் சொல்லி, ஆபிஸுக்கு லீவ் போட வச்சுட்டாரு எங்கப்பா”

“அச்சச்சோ.. மேட்டர் நிஜமாவே ரொம்ப சீரியஸ்தான்!”

“அதான் சொல்றேன்..”

“தோ.. அரை மணி நேரம்!”

மொபைல் போனைக் கட் பண்ணிவிட்டு பைக்கை உதைத்த அவனுக்கு வயது முப்பதுக்கு மூன்று கம்மி. அந்தப்பக்கம் இருந்த அவளுக்கு அதைவிட மூன்று கம்மி.

இருவரும் மூன்று வருடமாக காதலர்கள்.

அடிக்கடி பார்த்துக் கொள்வதில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் சரியானபடி புரிந்து கொண்டிருந்ததால் காதல் ஆழமாகவே வளர்ந்திருந்தது. அதாவது ஆழமாக வளர்ந்திருப்பதாகவே இருவரும் நம்பினர்!

சரி, வாங்க. நாமும் வீட்டுக்குப் போவோம்!

காலிங் பெல்’ அடித்த அவனுக்கு கதவு திறந்தாள் அவள்.

விளையாட்டுப் பேச்சு இப்போதும் அவனிடத்தில்... “சொல்டா என்ன பண்ணலாம்.. ஓடிப்போயிடலாமா?” என்றான் கண் சிமிட்டியபடியே!

“அடி பின்னிடுவேன் ராஸ்கல்.” என்று அதட்டுப் போட்டாள் அவள். “இப்டி பத்து நிமிஷம் உட்காரு. டி.வி. பார்த்துட்டு இரு. குளிச்சுட்டு வரேன்” என்றவாறே ஓடினாள்.

சோபாவில் சாய்ந்தான் அவன். ரிமோட்டை எடுத்தான்.

‘ப்ளக்!’

உயிர்த்தெழுந்த டி.வி. பெட்டியில் காலைக்காட்சியாக ஏதோ ஒரு சினிமா ஓடிக்கொண்டிருந்தது.

அசுவாரசியத்துடன் பார்த்தவன் சேனலை மாற்ற முயற்சிக்கும் நொடியில் திரரயில் காட்சி மாறியது. தள தள ஹீரோயின் ஒருத்தி ஹிட்டான சினிமா பாடல் ஒன்றை முணுமுணுத்தபடியே குளிக்க முயன்று கொண்டிருந்தாள்! குளீயலறைக் காட்சி!!

அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு பக்கவாட்டில்தான் அந்த வீட்டின் குளியலறையும் இருந்தது. உள்ளேயிருந்து கேட்ட ஷவர் சத்தமும் டி.வி. திரையில் ஓடிக்கொண்டிருந்த குளியல் காட்சியும் சாத்தனை அவன் பக்கம் இழுத்து வந்தது நொடிப் பொழுதில். அவன் மனக்கண்ணுக்கு அவள் குளிப்பதை கற்பனை பண்ணிக் காட்டினான் சாத்தான்!

'வீட்டில் வேறு யாரும் இல்லை. போடா.. போய் அவ குளிக்குறத சாவித்துவாரம் வழியா பார்த்து ரசிச்சுக்கோ. அவ என்னிக்குன்னாலும் உன் ஆளுதான்!’ என ஜால்ரா போட்டான் சாத்தான்.

திருட்டுத்தனத்துடன் எழுந்தான் அவன்.

அவன், அவள், காதல், இடம், பொருள், சூழல் எல்லாம் மங்கலானது அவனுக்குள்! கருமம் பிடிச்ச காமம்!

டி.வி. வால்யூமை கூட்டினான். மெதுவாக நடந்தான். ஷவரில் இருந்து நீர் கொட்டும் சத்தம் நின்றுவிட்டிருந்தது இப்போது.

குளியலறைக்கதவின் சாவித்துவாரம் தேடினான். குனிந்து, கால்களை மடக்கி, ‘ஆஹா என்ன ஒரு சுகந்தமான வாசம்!’ என சிலிர்த்தபடியே சாவித்துவாரத்துக்கு கண்களைக் காட்டியபோது... கதவு திறந்தது!

வெலவெலத்துப் போனான் அவன். அவள் முகத்திலும் கரும்கும்!

“ச்சே! போயும் போயும் உன்னப்போய் காதலிச்சேனே! என் புத்திய செருப்பால அடிக்கணும்!”

“சரி விடு. இப்ப என்ன நடந்து போச்சுன்னு இந்தக் குதி குதிக்குறே? சத்தியமா நான் எதையும் பார்க்கல. போதுமா?”

“உனக்கொண்ணு தெரியுமா.. அடிக்கிறவனை விட அடிக்க முயற்சி செய்றவனுக்குத்தான் பெரிய தண்டனை. அந்த அடி படாத இடத்துல பட்டுச்சுன்னா அது கொலையாக்கூட முடிஞ்சுடலாம்.”

“ஒரு சின்ன மேட்டர். அதப்போயி கொலை கிலைனு கம்பேர் பண்ணி ஏன் கன்ஃப்யூஸ் பண்றே? நீ எனக்குப் பொண்டாட்டியா ஆகப்போறவதானேங்குற உரிமைல அப்படி செஞ்சுட்டேன். ஏன் எனக்கு அந்த உரிமை இல்லையா?”

“இல்லை!”

“என்ன சொல்றே நீ?!”

“லுக் மிஸ்டர். நீ என்னதான் சாக்கு சொன்னாலும் இது கடைஞ்செடுத்த பொறுக்கித்தனம். நான் இப்ப உனக்குச் சொந்தமானவ இல்லை. இன்னும் எங்க அப்பாவோட பொண்ணுதான். என்னிக்கு நீ என் கழுத்துல தாலி கட்றியோ அன்னிக்குதான் நான் உனக்குச் சொந்தம். அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை திருட்டுத்தனமா பார்க்கணும்னு நீ நினைச்சதே என்னைப் பொறுத்தவரை கொலைக்குச் சமம்.”

“... ... ”

“இந்த மூணு வருஷத்துல என்னால உன் சுயரூபத்தைக் கண்டுபிடிக்க முடியாமப் போயிடுச்சேனு வெட்கப்படுறேன். நல்லவேளை இப்பவாச்சும் முடிஞ்சதேனு சந்தோஷப்படுறேன்.”

“... .. ..”
“நமக்குள்ள நடந்ததா நாம நினைச்சுக்கிட்டிருந்த காதலை இத்தோட மறந்துடு. குட் பை!”

கையெடுத்துக் கும்பிட்டாள் அவள். எதிர்த்தோ குறுக்கே புகுந்தோ எதுவும் பேசத் திராணியில்லாத குற்ற உணர்ச்சியுடன் பிணம் போல வெளியேறினான் அவன்.

இன்னும் எத்தனை நாளாகுமோ அவள் கோபம் தணிய...

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல், அடேய் காதலா!

4 comments:

Jazeela said...

உங்க சிந்தனை குதிரை ரொம்ப வேகமாத்தான் ஓடுது. அலுப்பில்லாமல் போச்சு. பொழுதுபோக்கான கதை.

ILA (a) இளா said...

//இன்னும் எத்தனை நாளாகுமோ அவள் கோபம் தணிய...//
இந்த பாலில் கொஞ்சம் காமத்துப்பாலும், கயமைப்பாலும் கலந்தே சொல்லி இருக்கீங்க.

காதல் பால் கொண்ட
நம்பிக்கையினால்
கயமைப்பால் குடித்த
தலைவன் பால்
தவறென்றால்
அவள் வைத்திருந்த
காதல் பாலில்
ஒரு துளி நஞ்சு..

கார்த்திக் பிரபு said...

சார் எந்த காதலியும் இந்த அளவுக்கு கோப பட்டு அவசர முடிவெடுக்க மாட்டார்கள்..
ஒருவேளை நம்ம காதல் கைகூடாது ,மாப்பிளை வேற பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க
ஆதாலால் இவனை வீட்டுக்கு யாருமில்லா சமயம் கூப்பிடுற மாதிரிக் கூப்பிட்டு வேனும்னே குளிக்கப்
போறேன் சொல்லி ,அவனை இவள் குளிப்பதைப் பார்க்க தூண்டி விட்டு,அதைச் சாக்காக வைத்து
அவனை கலட்டி விட்டு!

சே சே கவுதமோட கதைக் காதலி அப்படி எல்லாம் இருக்க மாட்டாள் என நம்புவோமாக!!

Anonymous said...

total bore, thookam vandithichchu.

As ta la vista, Siesta! baby!

-V